பாடம் 8. விடியும் வேளை
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 8 – விடியும் வேளை to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
வாங்க பேசலாம்
உமது ஊரின் மாலை நேரக் காட்சிகளை வருணித்துக் கூறுக.
மாலை நேரத்தில் சூரியன் தன் சிவந்த கதிர்களை வீசிக் கொண்டிருந்தான். அந்தக் கதிர்கள் குளத்து நீரில் படவே, குளத்து நீர் தகதகவென மின்னியது. சூரியனை மறைக்க கருமேகங்கள் படையெடுத்து வந்தன. சூரியனும் தன் கதிர்களை மறைத்துக் கொண்டிருந்தான். பறவைகள் தங்கள் இருப்பிடம் தேடி பறந்த வண்ணமாய் இருந்தன. பறவைகளின் கூச்சல் பழைய இசைகளை எழுப்பின. வண்டுகள் ரீங்காரமிட்டு பறந்தன. இளந்தென்றல் வீசிக் கொண்டிருந்தன. மககளும் மாக்களும் தங்கள் இருப்பிடங்களை நோக்கி நகர ஆரம்பித்தன. நிலவும் கண்ணில் பட தொடங்கியது. ஊரே அமைதி காத்தது. மாலைகள் கரு நிறத்தில் தோன்ற ஆரம்பித்ததது. மரங்கள், செடிகள், கொடிகள் பூக்கள் தென்றலின் போக்கிற்கு ஏற்ப நடனமாடின. இப்படியாக இனிய இரவும் வந்து சேர்ந்தது.
சிந்திக்கலாமா?
இவற்றில் எந்த கிராமத்தில் நீ வாழ விரும்புகிறாய் ஏன்? உனது ஊரை சுத்தமாக்க என்ன செய்யலாம்? திட்டமிடுக.
இவற்றில் பசுமையான கிராமத்தில் வாழ விரும்புகிறேன்.
நம் முன்னோர்கள் பசுமையான கிராமத்தில் வாழ்ந்ததனால், இயற்கைேயாடு இணைந்த வாழ்வு வாழந்தனர். பருவ மாற்றங்களையும் முன் கூட்டியே அறிந்து எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். சுத்தமான காற்றையே சுவாசித்தனர். இய்கையை மிகவும் நேசித்தனர் இயற்கையும் அவர்களை நேசித்தது. கூட்டு வாழ்வு வாழ்ந்தனர். இல்லங்களிலும், ஊர்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவின. சத்தான உணவுகளையே உண்டனர். இயற்கை உரங்களையே பயன்டுத்தினர். மரங்களையும் செடி கொடிகளையும் அதிகம் வளர்த்தனர். இத்தகைய கிராமத்தில் வாழவே நான் விரும்புகிறேன்.
எனது ஊரைச் சுத்தமாக்க மக்களுக்குத் தேவையான விழிப்புனர்வை முதலில் கொடுக்க வேண்டும். சுத்ததத்தின் மேன்மையை உணர்த்த வேண்டும். சுத்தம் உள்ள இடத்தில் தான் சுகம் இருக்கும் என்பதை கடைபிடிக்க வழி வகை செய்ய வேண்டும். தெருக்கள் தோறும் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். அதிலேயே குப்பைகளை போட அறிவுறுத்த வேண்டும். மக்கள் ஊரை நோக்கிச் செய்தாேல ஊர் சுத்தமாகி விடும்.
1. சரியான பலூன்களை எடுத்துப் பொருத்துக.
(தாமதப் படுத்துதல், முதிர்ந்த இலை, இளம் இலை, வேலை, நேரம், மெதுவாக, மூட்டை, தயார் செய்தல், பக்க அடுப்பு)
- வேளை – நேரம்
- பொதி – மூட்டை
- ஆயத்தப்படுத்துதல் – தயார் செய்தல்
- துளிர் – இளம் இலை
- கொடியடுப்பு – பக்க அடுப்பு
2. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “சாலையெங்கும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________
- சாலை + யெங்கும்
- சாலை + எங்கும்
- சால + எங்கும்
- சால + யெங்கும்
விடை : சாலை + எங்கும்
2. “சுண்டியிழுக்கும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- சுண்டி + யிழுக்கும்
- சுண் + டியிழுக்கும்
- சுண்டு + இழுக்கும்
- சுண்டி + இழுக்கும்
விடை : சுண்டி + இழுக்கும்
3. “ஓடி + ஆடி” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________________
- ஓடிஆடி
- ஓடியோடி
- ஓடியாடி
- ஒடியடி
விடை : ஓடியாடி
4. “காலை + பொழுது” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________
- காலைபொழுது
- கால்பொழுது
- காலைப்பொழுது
- காலப் பொழுது
விடை : காலைப்பொழுது
5. “வரகு + அரிசி” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________
- வரகரிசி
- வரகுஅரிசி
- வரக்கரிசி
- வரகுகரிசி
விடை : வரகரிசி
6. “உணவு + அளிக்க” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
- உணவுஅளிக்க
- உணவளிக்க
- உணவுவளிக்க
- உணவ்வளிக்க
விடை : உணவளிக்க
3. வினாக்களுக்கு விடையளி
1. அழகிய மலைக்கிராமத்தின் பெயர் என்ன?
அழகிய மலைக்கிராமத்தின் பெயர் மன்னவனூர் ஆகும்
2. கிராமத்தில் உனக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளை எழுதுக.
மழைபெய்து ஓய்ந்திருந்தது, சாலையில் எங்கும் தண்ணீர்
நிறைந்திருந்தது. மரங்கள் நனைந்து கிளைகள் இலைகள் முழுக்க நீர்த்திவலைகள் தெரிந்தன பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள்.
3. பிள்ளைகள் காலை உணவாக என்ன உண்டார்கள்?
பிள்ளைகள் காலை உணவாக, வரகரிசிச் சோறும் பருப்புக் கடையலும் பிரண்டை துவையலும் சாப்பிட்டனர்.
4. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக
எ.கா: பச்சைப்பசேல் என்ற வயல்வெளி
- கருத்த மண்சட்டியில் வெள்ளை வெளேரென வரகரிசிச்சோறு கொதித்துக் கொண்டிருந்தது.
- வாய்க்காலும் வரப்பும் நிறைந்த வயல்.
- சிலுசிலுப்பான காற்ற கூடவே எழுந்தது.
5. உரைப் பகுதியை படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
சிறு தானிய உணவுகளே நம் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. குதிரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, போன்றவை சிறு தானியங்கள் ஆகும். இந்தச் சிறு தானியங்களைக் கொண்டு பல உணவு வகைகளை மண் பானைகளில் தயாரித்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நாம் உண்ட உணவு முழுமையாகச் செரித்தபிறகுதான் அடுத்த வேளை உணவை உண்ணவேண்டும். இதைத் தான் நம் முன்னோர்” பசித்துப் புசி” என்றனர். இவற்றைத் தவிர்த்துவிட்டுத் துரித உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியதே பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.
சிறு தானிய உணவுகளை உண்போம்!
ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்!
1. எவ்வகை உணவு முறை நமக்கு ஏற்புடையது?
சிறு தானிய உணவுகளே நமக்கு ஏற்புடையது
2. சிறு தானியங்களுள் ஏதேனும் நான்கினை எழுதுக.
ரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி
3. துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது, ஏன்?
துரித உணவுகளைச் சாப்பிடுவதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது.
அறிந்து கொள்வோம்
நேரிணை
இரண்டு சொற்கள் ஒரே கருத்தினை வலுப்படுத்துவது நேரிணை.
எ.கா: சீரும் சிறப்புமாக, ஓங்கி உயர்ந்த.
எதிரிணை
இரண்டு எதிர்ச்சொற்கள் கருத்தினை வலுப்படுத்துவது எதிரிணை.
எ.கா: இரவு பகல், மேடு பள்ளம்