Class 4th Tamil Book Solution for CBSE | Lesson.17 – பசுவுக்குக் கிடைத்த நீதி

பாடம் 17. பசுவுக்குக் கிடைத்த நீதி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 17 – பசுவுக்குக் கிடைத்த நீதி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 4 Tamil Chapter 17 "பசுவுக்குக் கிடைத்த நீதி" solution for CBSE / NCERT Students

Class 4 Tamil Text Books – Download

வாங்க பேசலாம்

நீங்கள் மனுநீதிச் சோழனாக இருந்தால், பசுவின் துயரத்தை எப்படிப் போக்குவீர்கள்?

நான் மனுநீதிச் சோழனாக இருந்தால் கன்றை இழந்த பசுவை அரண்மனையில் வைத்து பாதுகாப்பேன். அப்பது கன்றை இழந்த கவலையின்றி இருக்க நிறைய பசுக்களையும் கன்றுகளையும் சேர்த்து வளர்ப்பேன்.

சிந்திக்கலாமா!

வீட்டிற்குப் போகும் வழியில் ஓணான் ஒன்றைச் சிறுவர்கள் சிலர் துன்புறுத்துகின்றனர். அவர்கள் செய்தது சரியா அந்தச் செயலை நீங்கள் எப்படித் தடுப்பீர்கள்?

அவர்கள் செய்தது சரியல்ல

சிறுவர்களிடம் ” நீஙகள் செய்யும் செயல் தவறானது. நாம் உயிர்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும்” என்று கூறி அச்சிறுவர்கள் ஓணானைத் துன்புறுத்துவதைத் தடுப்பேன்.

1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “இன்னல்” – இச்சொல்லிற்குரிய பொருள்?

  1. மகிழ்ச்சி
  2. நேர்மை
  3. துன்பம்
  4. இரக்கம்

விடை : துன்பம்

2. “அரசவை” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. அரச + அவை
  2. அர+அவை
  3. அரசு + அவை
  4. அரச + வை

விடை : அரசு + அவை

3. “மண்ணுயிர்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________

  1. மண்+ணுயிர்
  2. மண்+உயிர்
  3. மண்ண +உயிர்
  4. மண்ணு+உயிர்

விடை : பொறையுடைமை

2. வினாவிற்கு விடையளிக்க

1. மனுநீதிச் சோழன் ஆராய்ச்சி மணியை அமைத்ததற்கான காரணம் என்ன?

மனுநீதிச் சோழன் தன் ஆட்சியில் குடிமக்கள் யாரும் துன்பப்படக் கூடாது என்று நினைத்தார். அதற்காக அவர் ஆராய்ச்சி மணியை அமைத்தார்.

2. பசு ஆராய்ச்சி மணியை ஏன் அடித்தது?

அரசனின் மகன், தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும்போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று, எதிர்பாராத வகையில் தேர்க்காலில் மாட்டி இறக்கிறது. அதனால் பசு ஆராய்ச்சி மணியை அடித்தது.

3. பசுவின் துயரை மன்னன் எவ்வாறு போக்கினான்?

பசுவின் துயரை துடைக்க எண்ணிய மன்னன் தன் மகனை அதே
தேர்க்காலிலிட்டுக் கொன்று பசுவின் துயரை போக்கினான்

3. அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக

  1. ஆற்றொணா – தாங்கமுடியாத
  2. வியனுலகம் – பரந்த உலகம்
  3. செவி சாய்த்தல் – கேட்க விரும்புதல்
  4. கொடியோன் – துன்புறுத்துபவன்
  5. பரம்பரை – தொன்றுதொட்டு

4. சொல்லக் கேட்டு எழுதுக

1. அரங்கம்2. ஆராய்ச்சி மணி
3. மனக்குறை4. விலங்குகள்
5. வாழ்நாள்

5. சொல் உருவாக்குக

Class 4 Tamil Solution - Lesson 17 சொல் உருவாக்குக

இனிமைதேர்தீகண்
தீமைமாலைகலைமலை
வலைநேர்மைசோலைபெண்
தீமைமண்வலிபுலி

அறிந்து கொள்வோம்

மாநகரம், மாமலை, மாமதுரை, மாமுனி, மாதவம் என்று ஒன்றை சிறப்பித்து கூறுவதற்கு “மா “என்ற சொல் வழக்கத்தில் உள்ளது.

 

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment