பாடம் 20. மாசில்லாத உலகம் படைப்போம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 20 – மாசில்லாத உலகம் படைப்போம் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
வாங்க பேசலாம்
நீர் எதனால் மாசடைகிறது? நீர் மாசு ஏற்படுவதை எப்படித் தவிர்க்கலாம்? குழுவில் கலந்துரையாடுக.
- கழிவுநீர் நிலத்திலும் நீரிலும் கலப்பதனால்.
- தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுநீர் குடிநீரில் கலப்பதால்
- அதிகமான நச்சுப்புகை காற்றில் கலப்பதால் மழைநீர் மாசடைகிறது.
- நெகிழி போன்ற மக்காதக் குப்பைகளால் நிலத்தடி நீர் மாசடைகிறது.
இவற்றை நாம் தவிர்த்தால் நீர் மாசடையாமல் தடுக்க முடியும்.
சிந்திக்கலாமா!
உன் பள்ளியில் நடைபெறப்போகும் அறிவியல் கண்காட்சிக்காக நீ புதுமையாகச் செய்ய விரும்புவது என்ன?
எனது பள்ளியில் நடைபெறப்போகும் கண்காட்சிக்காக நான் புதுமையாகச் செய்ய விரும்புவது யாதெனில் தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையை எவ்வாறு சுத்திகரித்து வெளியேற்றுவது என்பதைப் பற்றியான ஒரு விளக்கப்படம் ஆகும்.
1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘மாசு‘ – என்னும் பொருள் தராத சொல் ?
- தூய்மை
- தூய்மையின்மை
- அழுக்கு
- கசடு
விடை : தூய்மை
2. ‘மாசு + இல்லாத‘ – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?
- மாசிலாத
- மாசில்லாத
- மாசிஇல்லாத
- மாசுஇல்லாத
விடை : மாசில்லாத
3. ‘அவ்வுருவம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது …………
- அவ் + வுருவம்
- அந்த + உருவம்
- அ + உருவம்
- அவ் + உருவம்
விடை : அ + உருவம்
4. ‘நெடிதுயர்ந்து’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது …………..
- நெடிது + உயர்ந்து
- நெடி + துயர்ந்து
- நெடிது + துயர்ந்து
- நெடிது + யர்ந்து
விடை : நெடிது + உயர்ந்து
5. ‘குறையாத’ என்ற சொல்லின் எதிர்ச்சொல் …………
- நிறையாத
- குறைபாடுடைய
- குற்றமுடைய
- முடிக்கப்படாத
விடை : நிறையாத
2. வினாக்களுக்கு விடையளிக்க
1. ஆசிரியர் வைத்திருந்த அழைப்பிதழில் என்ன செய்தி இருந்தது?
ஆசிரியர் வைத்திருந்த அழைப்பிதழில் நமது மாவட்டக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் “அறிவில் திருவிழா” அழைப்பிதழ் செய்தி இருந்தது
2. அறிவியல் விழாவில் கலந்துகொள்வதற்காக மாணவர்களை ஆசிரியர் எவ்வாறு ஊக்கப்படுத்தினார்?
,“வழக்கமான ஆய்வுகள் போல் அல்லாமல், புதுமையாக முயற்சி செய்யுங்கள். பரிசு பெறுவதனை விட, உங்களுடைய மாறுபட்ட சிந்தனைக்கு முன்னுரிமை தாருங்கள். அதனையே செயல்படுத்துங்கள்” என்று மாணவர்களுக்கு ஊக்கமூட்டினார்.
3. அறிவியல் விழாவில் காணப்பட்ட நெடிதுயர்ந்த உருவத்தை எப்படி உருவாக்கினர்?
அறிவியல் விழா அரங்கின் வாசலில் நெடிதுயர்ந்து நின்றது ஓர் உருவம். முழுவதும் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட மின்னணுக் கழிவுகளால் அவ்வுருவம் செய்யப்பட்டிருந்தது.
4. சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றன?
ஒவ்வொரு நாளும் உங்களால் தூக்கி எறியப்படும் மின்னணுக் கழிவுகள் நிலத்தையும், சுற்றுச் சூழலையும் பெரிதும் சீர்கேட்டிற்கு உள்ளாக்குகின்றன.
5. நாம் பயன்படுத்திய மின்பொருள்களை என்ன செய்யவேண்டும்?
மின்னணுப் பொருள்களைத் தேவைக்குப் பயன்படுத்தி மறு சுழற்சிக்கு செய்வதன் மூலம் அதன் கழிவுகளைத் தவிர்க்கலாம்.
3. பாடுவோம் விடை கூறுவோம்: எது சரி? எது தவறு
சொல்லு, சொல்லு!
நீயும் சொல்லு!
எது சரி?
எது தவறு?
மேலே பார்!
கீழே பார்!
அங்கே பார்!
இங்கே பார்!
சொல்லு, சொல்லு!
நீயும் சொல்லு!
எது சரி?
எது தவறு?
1. கண்ட இடத்தில் குப்பையைக் கொட்டுவது | தவறு |
2. குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடுவது | சரி |
3. பயன்படுத்தாதபோதும் மின்விளக்கை எரிய விடுவது | தவறு |
4. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது | சரி |
5. சாலையின் ஓரமாக நடந்து செல்வது | சரி |
6. பறவை, விலங்குகளைத் துன்புறுத்துவது | தவறு |
4. தொடர் இரண்டு; விடை ஒன்று கண்டுபிடிப்போமா?
1. காலைக்குப் பின்னால் வரும்; கழுத்தில் வந்து விழும்
விடை:- மாலை
2. ஆடையுமாகும்; அறிவையும் தரும்
விடை:- நூல்
மொழியோடு விளையாடு
5. ஒரு சொல்லுக்கு இருபொருள் எழுதுக
1. | அணி | வரிசை |
அணிந்து கொள் |
2. | ஆடு | நடனம் |
ஆடு ஒரு விலங்கு |
3. | நாடு | விருப்பம் |
மக்கள் வாழிடம் |
4. | படி | படித்தல் |
மாடிப்படி |
5. | ஓடு | வேகமாக ஓடுதல் |
மண்டை ஓடு, கூரை வேய்தல் |
5. | மெய் | உடம்பு |
உண்மை |
இயற்கையைக் காப்போம்
வாடி வதங்கிய மரங்கள்; வண்ணம் இழந்த இலைகள்; காய்ந்து கருகிய பூக்கள்; வறண்ட பூமி; வற்றிக் கிடக்கும் ஆறு; வெண்பஞ்சு மேகம்; பசுமை இழந்து பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கும் வயல்வெளிகள்; என்னவாயிற்று? அவற்றின் அழகெல்லாம் எங்கே போயிற்று? அதோ, ஒரு வீட்டின் அருகே தண்ணீர்க் குழாய். அதில் சொட்டுச் சொட்டாக நீர். அதனை நிரப்பிக்கொள்ள எத்தனை குடங்கள் வரிசை வரிசையாக. அப்பப்பா! இந்தச் சொட்டு நீர் நாளையும் வருமா? வினாக்குறியுடன் சிறுமி.
இந்த உரைப்பகுதிக்குப் பொருத்தமான முழக்கத்தொடர்கள் எழுதுக.
- நீரைச் சேமிப்போம்; நீடுழி வாழ்வோம்.
- விண்ணின் மழைநீர்; மண்ணின் உயிர்நீர்.
- இன்றைய நீர் சேமிப்பு, நாளைய தலைமுறையின் வாழ்வாதாரம்.
- சிறுதுளி பெருவெள்ளம்.
செயல்திட்டம்
உங்கள் பள்ளியில் நடைபெற உள்ள ஆண்டுவிழா, இலக்கிய மன்ற விழா போன்றவற்றுள் ஏதேனும் ஒரு விழாவுக்கு அழைப்பிதழ் உருவாக்குக.
தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழாகிராமக் கமிட்டி மேல்நிலைப் பள்ளிவெங்கேடஸ்வரபுரம், தென்காசி மாவட்டம்
சிறப்பு விருந்தினர்
அனைவரும் வருக! தமிழழுது பருக! இவண் தமிழ் இலக்கிய மன்றம் கிராமக் கமிட்டி மேல்நிலைப் பள்ளி, வெங்கேடஸ்வரபுரம், |
கூடுதல் வினாக்கள்
1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. வகுப்பாசிரியர் கையில் ……………… அழைப்பிதழ் இருந்தது.
- திருமண
- அறிவியல் திருவிழா
- புத்தகத் திருவிழா
- இலக்கிய மன்ற விழா
விடை : அறிவியல் திருவிழா
2. அந்த ஆண்டிற்கான சிறந்த அறிவியல் படைப்புக்குரிய விருது ………………. பள்ளிக்கே கிடைத்தது.
- அகிலனது
- விமலனது
- முகிலனது
- கமலனது
விடை : முகிலனது
2. வினாக்களுக்கு விடையளிக்க
1. மனிதனுக்குத் துன்பத்தை தரும் மாசுக்கள் யாவை?
நீர், நிலம், காற்று, ஒலி போன்றவற்றில் ஏற்படும் பல்வேறு மாசுக்கள் மனிதனுக்குத் துன்பத்தை தரும் மாசுக்கள் ஆகும்.
2. அரக்கனின் வடிவில் உருவாக்கப்பட்டிருந்தவை எவை?
பழுதான கணினிகளின் பகுதிப் பொருட்கள் ஒர் அரக்கனின் வடிவில் உருவாக்கப்பட்டிருந்தன.
3. அரக்கனின் மார்பும் தோள்பட்டையும் எதனால் செய்யப்பட்டிருந்தது?
அரக்கனின் மார்புப் பகுதி ஒரு மடிக்கணினியாலும், தோள்பட்டை ஒலிப்பொருக்கியாலும் அமைக்கப்பட்டிருந்தது.
4. மனிதன் எப்பொழுது துன்பமின்றி வாழ முடியும்?
மின்னணுப் பொருள்களைத் முறையாகப் பயன்படுத்தி அவற்றை தூக்கி எறிந்திடாமல் மறு சுழற்சிக்கு செய்வதன் மூலம் மனிதன் துன்பமின்றி மகிழ்ச்சியாக வாழ முடியும்.