பாடம் 24. மலையும் எதிரொலியும்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 24 – மலையும் எதிரொலியும் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
வாங்க பேசலாம்
மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறீர்களா? உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பேசுக.
நானும் என் நண்பர்களுடன் மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறேன். மரங்களும் செடிகளும் அடர்ந்து மிகவும் செழிப்பான காடுபோல் காணப்படும். உள்ளே செல்லச் செல்ல பயமும் வியப்பும் கலந்து காணப்படும். அக்காட்சியை காணும்பொழுது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.
சிந்திக்கலாமா!
மேலே உள்ள இரண்டு படங்களிலும் நீங்கள் காண்பது என்ன? இருவரில் யாருடைய செயல் சிறந்தது?
முதல் படத்டதில் இருப்பவர் விலங்கினை துன்புறத்துகிறார். இரண்டாவது படத்தில் இருப்பவர் விலங்கினை அரவணைத்து அன்பு செலுத்துகிறார். எனவே இரண்டாவது படத்தில் உள்ளவரின் செயலே சிறந்தது.
1. வினாக்களுக்கு விடையளிக்க
1. தந்தையும் மகனும் எங்குச் சென்று கொண்டிருந்தனர்?
1. தந்தையும் மகனும் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
2. சிறுவன் பேசியபோது மலை என்ன செய்தது?
சிறுவன் பேசியபோது மலை அதே வார்த்தைகளை திரும்ப எதிரொலித்தது.
3. சிறுவன் “நான் அன்பு கொண்டவன்” என்று சொல்லியிருந்தால் மலை என்ன சொல்லி இருக்கும்?
சிறுவன் “நான் அன்பு கொண்டவன்” என்று சொல்லியிருந்தால் மலையும் “நான் அன்பு கொண்டவன்” என்று சொல்லி இருக்கும்.
4. இக்கதையின் மூலம் தந்தை மகனுக்குக் கூறிய அறிவுரை யாது?
- நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதையே வாழ்க்கையும் நமக்குத் திருப்பிக் கொடுக்கிறது.
- உன்னுடைய வாழ்க்கை எதிர் பாராமல் நடக்கும் ஒன்றன்று; அது உன்னுடைய எதிரொலிதான் என்று தந்தை மகனுக்கு அறிவுரை கூறினார்.
1. விடுகதைக்குரிய சரியான படத்தைத் தேர்ந்தெடுப்போமா?
1. வட்டமாய் இருந்திடுவேன் உண்ணுவதற்கே என்னை வாங்குவர். ஆனால் என்னை யாரும் உண்ணுவதில்லை. நான் யார்?
விடை : தட்டு
2. உயரமாய் இருந்திடுவேன்; பச்சை ஆடை உடுத்தியிருப்பேன்; குளிர்ச்சியான தண்ணீரைக் கொட்டுவேன். நான் யார்?
விடை : மலை
3. நீல நிறமாய்த் தோன்றிடுவேன். ஓயாமல் அலைந்திடுவேன். தவழ்ந்து தவழ்ந்து வந்திடுவேன். நான் யார்?
விடை : ஆறு
4. நீ பார்த்தால் நானும் பார்ப்பேன். நீ சிரித்தால் நானும் சிரிப்பேன். நீ செய்தால் நானும் செய்வேன். நான் யார்?
விடை : கண்ணாடி
5. தரையிலே ஊர்ந்திடுவேன். வானத்திலே பறந்திடுவேன். கடலைத் தாண்டிடுவேன். மக்களைச் சுமந்து செல்வேன். நான் யார்?
விடை : விமானம்
மொழியோடு விளையாடு
3. குறிப்புகளைப் படி, விடையைக் கண்டுபிடி
1. மூன்றெழுத்துச் சொல் நடு எழுத்து எடுத்து விட்டால் படுக்கச் சொல்லும் காஞ்சிபுரம் இதனால் புகழ் பெறும்
ப | ட் | டு |
2. நான்கெழுத்துச் சொல் முதல் இரண்டு எழுத்து விடச்சொல்லும் கடை இரண்டு எழுத்து பாட்டி சொல்வார் முதலும் கடையும் வித்தாகும்.
வி | டு | க | தை |
3. ஐந்தெழுத்துச் சொல் முதல் இரண்டும் இனிக்கும் கடைசி மூன்றும் பறக்கும் முதலும் கடையும் தேடும் அது என்ன?
தே | ன் | சி | ட் | டு |
மொழியோடு விளையாடு
உலகின் மிக உயரமான சிகரம் – இமய மலையில் உள்ள எவரெஸ்ட் |
தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் – ஆனை மலையிலுள்ள ஆனைமுடி |
செயல் திட்டம்
உனக்குப் பிடித்த செல்லப் பிராணி எது? அதனிடம் நீ எவ்வாறு நடந்து கொள்வாய்? எழுதி வருக.
எனக்குப் பிடித்த செல்லப் பிராணி பூனை
- மிகவும் அதிகமான மோப்ப சக்தி திறன் கொண்டது.
- அதைத் தினமும் என்னுடைய அறையில் வைத்துக் கொள்வேன்.
- அதற்கு தேவையான உணவைக் கொடுத்து அதை மகிழ்விப்பேன்.
- நான் செல்லும் இடமெல்லாம் அதுவும் பின் தொடரும்.
- அதனால் எங்கள் வீட்டில் எலித் தொல்லை இல்லை.
எழுவாய், பயனிலை அறிவோமா? |
எழுவாய், பயனிலை அறிமுகம்
சொற்கள் தொடர்ந்து அமைவதே தொடர். ஒரு தொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் இருக்கும். இவற்றுள், செயப்படுபொருள் இல்லாமலும் எழுவாய் தோன்றாமலும்கூட வரலாம் ஆயினும், எழுவாயும் பயனிலையும் ஒரு தொடரில் இன்றியமையாத கூறுகளாக விளங்குகின்றன.
எழுவாய்
முல்லை படம் வரைந்தாள்.
படம் வரைந்தவர் யார் என்னும் வினாவுக்கு விடையாக வரும் முல்லை என்னும் சொல்லே எழுவாய்.
குரங்கு மரத்தில் ஏறியது.
எது மரத்தில் ஏறியது? என்னும் வினாவுக்கு விடையாக வரும் குரங்கு என்னும் சொல்லே எழுவாய்.
ஒரு தொடரில் யார், எவர், எது, எவை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவதே எழுவாய். |
பயனிலை
அவன் வந்து . . . . . .
அவன் வந்து சென்றான்
மேற்கண்ட இரு தொடர்களுள் முதல் தொடர் முழுமை பெறவில்லை. ஆனால், இரண்டாம் தொடர் முழுமை பெற்றுள்ளது. ஆகவே, ‘சென்றான்‘ என்பது, இத்தொடரின் பயனிலை.
ஒரு தொடரை முழுமை பெறச் செய்யும் சொல்லே பயனிலை. |
பயனிலையின் வகைகள்
பயனிலை மூன்று வகைப்படும். அவையாவன:
பெயர்ப் பயனிலை
அவன் வளவன்
இத்தொடரில் அவன் என்பது எழுவாய், வளவன் என்பது பெயர்ப் பயனிலை.
வினைப் பயனிலை
குமரன் பாடினான்
இத்தொடரில், குமரன் என்பது, எழுவாய். பாடினான் என்பது, வினைப் பயனிலை.
வினாப் பயனிலை
நீ யார்?
இத்தொடரில், நீ என்பது, எழுவாய். யார் என்பது, வினாப் பயனிலை.
- பெயரைக் கொண்டு முடிவது, பெயர்ப் பயனிலை
- வினையைக் கொண்டு முடிவது, வினைப்பயனிலை
- வினாவைக் கொண்டு முடிவது, வினாப்பயனிலை.
ஒரு தொடரின் பயனிலையைக் கொண்டே எழுவாயை அறியலாம். |
எழுவாயும் பயனிலையும் திணை, பால், எண், இடங்களோடு இயைந்து வரும். |
1. கீழ்க்காணும் தொடர்களில் எழுவாயைக் கண்டறிக:
தொடர் | எழுவாய் |
1. குழந்தை சிரித்தது. | குழந்தை |
2. கண்ணன் படம் வரைந்தான். | கண்ணன் |
3. பூங்கோதை பள்ளி சென்றாள். | பூங்கோதை |
4. அண்ணன் தம்பிக்கு உதவினான். | அண்ணன் |
5. பறவைகள் வானில் பறந்தன. | பறவைகள் |
6. பசு புல் மேய்ந்தது | பசு |
2. கீழ்க்காணும் தொடர்களைப் பயனிலைகளை கண்டறிக:
1. அவர் சிறந்த மருத்துவர்.
2. என்னை அழைத்தவர் யார்?
3. அருளரசன் நல்ல மாணவன்.
4. நேற்று அழகன் ஊருக்குச் சென்றான்.
5. முக்கனிகள் யாவை?
6. புலி உறுமியது.
பெயர்ப் பயனிலை | வினைப் பயனிலை | வினாப் பயனிலை |
அவர் சிறந்த மருத்துவர். | —- | —- |
—- | —- | என்னை அழைத்தவர் யார்? |
அருளரசன் நல்ல மாணவன். | —- | —- |
—- | நேற்று அழகன் ஊருக்குச் சென்றான். | —- |
—- | —- | முக்கனிகள் யாவை? |
—- | புலி உறுமியது | —- |
கூடுதல் வினாக்கள்
1. வினாக்களுக்கு விடையளிக்க
1. அடுத்தவர் நம் மீது அன்பு செலுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?
அடுத்தவர் நம் மீது அன்பு செலுத்த நாம் என விரும்பினால் அடுத்தவர் மீது அன்பு செலுத்த வேண்டும்.
2. சிறுவன் மலையை நோக்கிக் கூறிய வார்த்தைகள் யாவை?
- யார் நீ?
- உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
- உன்னால் நேரில் வர முடியாதா?
- நீ ஒரு வெற்றி வீரன்..
3. எதிரொலி என்னால் என்ன?
- நாம் பேசும் வார்த்தை; வரிகள் மீண்டும் அப்படி திரும்பக் கேட்பதற்கே எதிரொலி என்று பெயர்.
- நம்முடைய வாழ்க்கை நம்முடைய செயல்பாட்டின் எதிரொலிதான்.