பாடம் 1.1 தமிழின் இனிமை!
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 1.1 – தமிழின் இனிமை! to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்பொருள்
கனி – பழம் | கழை – கரும்பு |
நனி – மிகுதி | நல்கிய- வழங்கிய |
முற்றல் – முற்றிய |
பாடல்பொருள்
- கனியின் சுளையில் உள்ள சுவை
- முற்றிய கரும்புச் சாற்றின் சுவை
- மலரிலிருந்து எடுக்கப்பட்ட தேனின் சுவை
- காய்ச்சிய பாகின் சுவை
- சிறந்த பசு தந்த பாலின் சுவை
- தென்னை மரத்திலிருந்து பெறப்பட்ட குளிர்ந்த இளநீரின் சுவை – ஆகியவை இனிய சுவை உடையன.
- ஆனால், தமிழ் இத்தகைய சுவைகளையும் விட உயர்ந்தது.
- தமிழோ என் உயிர் போன்றது என்கிறார் பாரதிதாசன்.
பாடல் பொருள்
- இயற்பெயர் – சுப்புரத்தினம்
- பிறப்பு – புதுச்சேரி (29.4.1891)
- பாரதியாரின் மீது கொண்ட பற்றினால், கனக சுப்பு ரத்தினம் என்ற தம் இயற்பெயரைப் பாரதிதாசன் என மாற்றி அமைத்துக்கொண்டார்.
- சிறப்பு பெயர் – பாவேந்தர், புரட்சிக்கவி
- படைப்புகள் – குடும்ப விளக்கு, இருண்டவிடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு.
- பணி – புதுவை அரசினர் கல்லூரியில் பேராசியர் பணி
கற்பவை கற்றபின்
1. பாரதிதாசன் தமிழை உயிர் என்கிறார். உங்களுக்குத் தமிழ் எது போன்றது? கலந்துரையாடுக.
மாணவர் – 1 | தமிழ் எனக்கு அறிவு போன்றது ஏன் என்றால், நான் பிறக்கும் முன்பே கருவுக்குள் எனக்கு அறிவு புகட்டியது தமிழ்தான். |
மாணவர் – 2 | தமிழ் எனக்கு உணர்வு போன்றது ஏன் என்றால், நான் பிறக்கும் முன்பே கருவுக்குள் எனக்கு உணர்வு புகட்டியது தமிழ்தான். |
மாணவர் – 3 | தமிழ் எனக்கு இதயம் போன்றது ஏன் என்றால், என் தமிழ் இயங்குவதால் தான் உன் இதயம் இயங்குகின்றது. |
2. மொழி தொடர்பான பாடல்கள் மற்றும் கவிதைகளைப் படித்து மகிழ
இன்பத்தமிழ்
அன்னை சொன்ன மொழி
ஆதியில் பிறந்த மொழி
இணையத்தில் இயங்கும் மொழி
ஈடில்லா தொன்மை மொழி
உலகம் போற்றும் மொழி
ஊர்கூடி வியக்கும் மொழி
எங்கும் நிறைந்த மொழி
ஏறுநடை பயின்ற மொழி
ஒற்றுமை வளர்க்கும் மொழி
ஓங்கி வளர்ந்த மொழி
மதிப்பீடு
அ. சரியானச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. ‘கழை’ இச்சொல் உணர்த்தும் சரியான பொருள் __________________
- கரும்பு
- கறும்பு
- கருப்பு
- கறுப்பு
விடை : கரும்பு
2. “கனியிடை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________
- கனி + யிடை
- கணி + யிடை
- கனி + இடை
- கணி + இடை
விடை : கனி + இடை
3. “பனி + மலர்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________________
- பனிம்மலர்
- பனிமலர்
- பன்மலர்
- பணிமலர்
விடை : பனிமலர்
ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
- கழையிடை = கழை + இடை
- என்னுயிர் = என் + உயிர்
இ. பெட்டியில் உள்ள சொற்களைப் பொருத்தி மகிழ்க
கரும்பு | வெல்லம் |
பசு | தென்னை |
- பால் – கரும்பு
- சாறு – வெல்லம்
- இளநீர் – பசு
- பாகு – தென்னை
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ
ஈ. இப்பாடலில் வரும் ஒரே ஓசையுடைய சொற்களை எடுத்து எழுதுக
கனியிடை – கழையிடை | சாறும் – சுவையும் |
பாலும் – நீரும் | தேனும் – பாலும் |
உ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் உள்ள சொற்களை எடுத்து எழுதுக
கனியிடை – பனிமலர் | நனிபசு – இனியன |
இனியன – எனினும் | என்பேன் – என்னுயிர் |
ஊ. பாடலில் வரும் வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக
கனியிடை | கழையிடை | |
பனிமலர் | பாகிடை | நனிபசு |
எ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. பாரதிதாசன் எவற்றையெல்லாம் இனியன என்று கூறுகிறார்?
பலாச்சுளை, கரும்புச்சாறு, தேன், பாகு, பசுவின் பால், இளநீர்
2. பாரதிதாசன் எதனை என் உயிர் என்று கூறுகிறார்?
பாரதிதாசன் தமிழே என் உயிர் என்று கூறுகிறார்
ஏ. சிந்தனை வினா
பாரதிதாசன் சிலவற்றை இனியன என்று கூறுகிறார். உனக்கு எவையெல்லாம் இனிமையானவை? ஏன்?
மாம்பழம், கற்கண்டு, தேன், வாழை, நுங்கு ஆகியவை எல்லம் எனக்கு இனியமையானவை. ஏனென்றால் இவை அனைத்தும் இயற்கையில் இனிமை தருவன. உடல் நலத்திற்கும் ஏற்றதாலும் இனியனவாகக் குறிப்பிடுகிறேன்.
கூடுதல் வினாக்கள்
அ. சரியானச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்டவர் ……………..
- பாரதியார்
- பாரதிதாசன்
- கவிமணி
- சுரதா
விடை : பாரதிதாசன்
2. பாரதிதாசன் பிறந்த ஊர் ……………………
- புதுச்சேரி
- மோகனூர்
- ஈரோடு
- திருமறைக்காடு
விடை : புதுச்சேரி
ஆ. குறு வினா
1. பாரதிதாசன் – பெயர்க்காரணம் யாது?
பாரதியாரின் மீது கொண்ட பற்றினால், கனக சுப்பு ரத்தினம் என்ற தம் இயற்பெயரைப் பாரதிதாசன் என மாற்றி அமைத்துக்கொண்டார்.
2. கழை மற்றம் நனி ஆகிய சொற்களின் பொருள் யாது?
- கழை – கரும்பு
- நனி – மிகுதி