பாடம் 1.3 என்ன சத்தம்…
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 1.3 – என்ன சத்தம்… to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
கற்பவை கற்றபின்
1. செழியனின் செயல்கள் பற்றி உங்களுடைய கருத்து என்ன? குழுவில் பகிர்ந்து கொள்க.
செழியனின் வீரமும், கருணை உள்ளமும் பாராட்டுக்குரியது.
2. ஞாயிறு விடுமுறையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
ஞாயிறு விடுமுறையில் எங்கள் தோட்த்திற்கு சென்றோம். அங்கு வயலில் நாற்று நட்டேன். களை பறித்தேன்.
3. உமக்குத் தெரிந்த கதை ஒன்றை வகுப்பறையில் கூறுக.
மனநிறைவு
ஓர் ஊரில் செல்வன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் அளவுக்கதிமாகச் செல்ல்வம் இருந்தது. வேலையாட்கள் நிறைய பேர் இருந்தனர். ஆனால் அவனால் மனம் நிறைவுடன் வாழ முடியவில்லை. ஓரு நாள் அந்த ஊருக்கு துறவி ஒருவர் வந்தார். அவரிடம் செல்வந்தன் தனக்கு மனநிறைவுக்கு வழி சொல்ல வேண்டினான்.
துறவி மூன்று கல்லைச் செல்வந்தனைச் தூக்கச் செய்து மலை மீது ஏறும்படி கூறினார். அவனால் ஏற முடியவில்லை. மிகவும் கனமாக உள்ளது. என்னால் தூக்க முடியவில்லை என்றான். துறவி ஒரு கல்லைத் தூக்கிப் போடச் சொன்னார். இறுதியில் துறவி இப்போது பாரம் குறைந்ததா? என்றார் செல்வந்தரும், ஆம்! உன்னிடம் அளவில்லாத செல்வம் தான் பாரம். அதனை ஏழைகளுக்குத் கொடுத்து விட பாரம் குறைந்து உன் மனம் நிறைவடையும் என்றார். அவனும் அப்படியே செய்து மனநிறைவு அடைதான்.
4. இப்பாடப்பகுதிக்கு ஏற்ற தலைப்பினைக் குழுவில் கலந்துரையாடித் தெரிவு செய்க.
மாணவன் – 1 | இப்பாடப் பகுதிக்கு “ஒலி” என்னும் தலைப்பினைக் கொடுப்பேன். |
மாணவன் – 2 | இப்பாடப் பகுதிக்கு “நுணுக்கம்” என்னும் தலைப்பினைக் கொடுப்பேன். |
மாணவன் – 3 | இப்பாடப் பகுதிக்கு “வீரம்” என்னும் தலைப்பினைக் கொடுப்பேன். |
மதிப்பீடு
அ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. செழியன் ஆடுகளைக் காட்டிற்கு ஓட்டிச் செல்லக் காரணம் என்ன?
ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் செழியன் தன் பாட்டியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு ஓட்டிச் சென்றான்.
2. செழியன் செய்தவற்றை உமது சொந்த நடையில் கூறுக.
காட்டில் ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து இயற்கை அழகை இரசித்துக் கொண்டு இருந்தான். திடீரென ஆடுகள் கத்தத் தொடங்கின. செழியன் எழுந்து சென்று பார்த்தான். புதர் அருகே நரி ஒன்று ஆடுகளை கொன்று தின்ன நேரம் பார்த்துக் கொண்டு இருந்தது. செழியன் அருகில் இருந்த குச்சியை வில்லாக்கி நரியை நோக்கி அம்பை எய்தான். அடிபட்டு நரி ஓடிவிட்டது.
ஆ. சிந்தனை வினா
1. நம்மைப்போல் விலங்குகளுக்கும் பேசும் திறன் கிடைத்தால் எப்படி இருக்கும்? காட்டில் வாழும் விலங்குகள் பேசுவதுபோல் ஓர் உரையாடல் எழுதிக்காட்டுக.
மான் | ஏய், எல்லாம் ஓடுங்க ஓடுங்க சிங்கம் வருது. ஓடுங்க |
முயல் | என்ன மான் அக்கா சொல்றீங்க. |
மான் | அடி குட்டிப் பையலே உண்மையைத் தான் சொல்றேன். ஒழிஞ்சுக்கோ! |
முயல் | சரி மானக்கா |
சிங்கம் | ஏய்! எல்லாரும் எங்க ஓடுறீங்க? நில்லுங்க |
மான் | நிக்க மாட்டோம்! நீ எங்களை தின்னுடுவ |
சிங்கம் | அட நில்லு மா, உங்கள எதுவும் பண்ணமாட்டேன். |
மான் | அய்யோ! நீ இப்படி எத்தனை முறை சொல்லி எங்க இனத்தையே அழிச்சுட்டே (என்று சொல்லி ஓடியது) |
2. நீங்கள் செல்லமாக வளர்க்கும் நாய், பூனை போன்ற விலங்குகள் ஏதேனும் ஆபத்து நேர்வதற்கு முன்பு ஏன் ஒலியெழுப்புகிறது என எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?
சிந்தித்தது உண்டு. ஒரு நாள் எங்கள் வீட்டு நாய் நடு இரவில் குரைத்தது. அப்போது தான் திருடன் வந்ததை அறிந்தோம்.