பாடம் 4.2 அறிவின் திறவுகோல்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 4.2 – “அறிவின் திறவுகோல்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
கற்பவை கற்றபின்
1. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்களை உற்றுநோக்கிக் காரணகாரியம் கண்டறிக.
வீட்டில் சமைக்கும்போது மூடி வைத்திருக்கும் பாத்திரங்களின் மூடி நீராவி போக்கினால் மேலெழும்புகிறது. ஏனென்றால் நீராவியின் அழுத்தத்தின் காரணமாகவே மேலெழும்புகிறது.
நாம் சுற்றில் ஒரு ரப்பர் பந்தை எறிந்தால் அது நம்மை நோக்கியே திரும்பி வருகிறது. எந்த வேகத்தில் எறிகிறோமோ அதே வேகத்தில் திரும்புகிறது. காரணம் ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு.
தரையில் உள்ள பாறையை நகர்த்துவதற்கு, நாம் கடப்பாறையை பயன்படுத்துகிறோம். பாறையும் நகர்கிறது. ஏனென்றால் இது தான் நெம்புகோல் தத்துவம். நெம்பும்போது நாம் கொடுக்கின்ற விசைக்கேற்ப அழுத்தம் பெறுகிறது.
மிதிவண்டி எவ்வாறு உருளுகிறது என்பதை பாரத்த்தால் உந்து விசையின் அடிப்படையில், எந்த அளவிற்கு உந்துதல் பெறுகிறதோ அந்த அளவிற்கு வேகமாக உருளுகிறது.
2. அறிவியல் அறிஞர்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டித் தொகுப்பேடு உருவாக்குக.
கண்டுபிடித்தவர் | கண்டுபிடிப்பு | ஆண்டு |
F. ஹோலர் | அலுமினியம் | 1827 |
H. டேவி | கால்சியம் | 1808 |
H. கேவண்டிஸ் | ஹைட்ரஜன் | 1766 |
H. பிராண்ட் | பாஸ்பரஸ் | 1669 |
P & M கியூரி | ரேடியம் | 1898 |
மோட்டன் & ஜாக்ஸன் | மயக்க மருந்து | 1802 |
E.M. பெலிகாட் | யுரேனியம் | 1841 |
B. கோர்ட்டாய்ஸ் | அயோடின் | 1812 |
A. க்ரான்ஸ்டெட் | நிக்கல் | 1751 |
D. ரூதர்போர்டு | நைட்ரஜன் | 1772 |
ஆர்வில் பி வில்பர்ரைட் | விமானம் | 1903 |
எட்வின் டி ஹோம்ஸ் | திருடர் எச்சரிப்பு கருவி | 1858 |
ரூடோலஃப் டீசல் | டீசல் இன்ஜின் | 1895 |
ஆக்ஸ்பர்க் | கண்ணாடி | 1080 |
கிர்க்பாடிரிக் மாக்மிலென் | மிதிவண்டி | 1839 – 40 |
லூயி பிரின்ஸ் | சினிமா | 1885 |
குஸ்டீவ்வான் சார்டெட் | செயற்கை ரப்பர் | 1827 |
T.H. மைமா | லேசர் | 1960 |
தாமஸ் ஆல்வா எடிசன் | மின் விளக்கு | 1878 |
ஜெ.ராபர்ட் ஓப்பன் ஹைமர் | அணுகுண்டு | 1975 |
3. அறிவுக்கு விருந்தாகும் அறிவியல்‘ என்னும் தலைப்பில் 5 மணித்துளி பேசுக.
மனிதனின் அன்றாட வாழ்வுக்கு உணவு, உடை, உறையுள் ஆகியன அவசியமானவை. தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், போக்குவரத்து, கல்வி, வேளாண்மை, தொழில், மருத்துவம், பொழுதுபோக்கு போன்ற மக்களின் வாழ்வில் இணைந்தவை. இவை அனைத்தும் பெற்று மனிதன் நிறைவாய் வாழ அறிவியல் துணை நிற்கிறது.
மனிதனின் இடைவிடா முயற்சியாலும் சிந்தனை வளர்ச்சியாலும் அறிவியல் வளர்ந்து கொண்டே வருகிறது. மனிதன் விண்ணை அளக்கிறான். மண்ணை அளக்கிறான். கடலின் ஆழத்தை துருவுகின்றான். இரவைப் பகலாக்குகிறான். அணுவைப் பிளக்கிறான். அதன் ஆற்றலை ஆக்க வேலைக்குப் பயன்படுத்துகிறான். நோய் மருந்துகளைக் கண்டுபிடிக்கிறான். இவ்வாறு அறிவியல் மனிதனின் அறிவுக்கு விருந்தாக அமைகிறது.
மதிப்பிடு
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. “அறிவியலறிஞர்” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
- அறிவியல் + அறிஞர்
- அறிவு + அறிஞர்
- அறிவியல் + லறிஞர்
- அறிவியல் + அறிஞர்
விடை : அறிவியல் + அறிஞர்
2. “மணித்துளி” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- மணித் + துளி
- மணி + துளி
- மண் + துளி
- மனி + துளி
விடை : மணி + துளி
3. “பத்து + இரண்டு” – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____________
- பன்னிரெண்டு
- பன்னெண்டு
- பன்னிரண்டு
- பன்னண்டு
விடை : பன்னிரெண்டு
4. “வேகமாக” – இச்சொல்லுக்குரிய பொருள் ____________________
- மெதுவாக
- விரைவாக
- கவனமாக
- மெலிதாக
விடை : விரைவாக
5. “மரப்பலகை” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________
- மரப் + பலகை
- மர + பலகை
- மரம் + பலகை
- மரப்பு + பலகை
விடை : மரம் + பலகை
ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
- நீராவி = நீர் + ஆவி
- புவியீர்ப்பு = புவி + ஈர்ப்பு
இ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.
- சமையல் + அறை = சமையலறை
- இதயம் + துடிப்பு = இதயத்துடிப்பு
ஈ. பொருத்துக
1. ஐசக் நியூட்டன் | நீராவி இயந்திரம் |
2. இரேனே லென்னக் | புவியீர்ப்பு விசை |
3. ஜேம்ஸ் வாட் | ஸ்டெதஸ்கோப் |
விடை : 1 – ஆ, 2 -இ, 3 – அ |
ஆ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. மனிதனின் சிந்தனையால் எது வளரத் தொடங்கியது?
மனிதனின் சிந்தனையால் அறிவியல் வளரத் தொடங்கியது.
2. ஐசக் நியூட்டன், புவியீர்ப்பு விசையைக் கண்டறிய எந்த நிகழ்ச்சி காரணமாக இருந்தது?
- ஐசக் நியூட்டன் சிறுவனாக இருக்கும்போது தன் வீட்டுத் தோட்டத்திலுள்ள ஆப்பிள் மரத்தினடியில் உட்கார்ந்திருந்தார்.
- அப்போது, மரத்திலிருந்த ஒரு பறவை சிறகடித்துப் பறந்து செல்ல, திடீரென ஆப்பிள் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுந்தது.
- நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? “ஆகா, நமக்கு ஓர் ஆப்பிள் கிடைத்ததே“ என்று மகிழ்ச்சியோடு உண்ணத் தொடங்கியிருப்போம் அல்லவா?
- ஆனால், அவர், அப்படி நினைக்கவில்லை. இந்த ஆப்பிள் ஏன் மேலே மேலே வானத்தை நோக்கிப் போகாமல் கீழிறங்கி வந்து விழுகிறது? என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்.
- இதில் ஏதோ ஓர் இயற்கைச் சக்தி இருக்கவேண்டும் என எண்ணினான். இதன் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தன் பிறந்தநாளில் முடிவு செய்தார்.
- அன்று தன் பிறந்தநாள் பரிசாக ஆப்பிள் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார். அன்று சிந்திக்கத் தொடங்கிய அவர் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்துப் பின்னாளில் உலகப்புகழ் பெற்ற சர் ஐசக் நியூட்டன்.
- அவர், பூமிக்கு ஈர்ப்புச் சக்தி உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய அறிவியல் அறிஞர் ஆவார்.
3. ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிப்பதற்குக் காரணமான நிகழ்வு எது?
பூங்கா ஒன்றில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அருகில் சிந்தனையுடன் அமர்ந்திருந்தார் மருத்துவர் ஒருவர். சிறுவனொருவன், ‘ஸீஸா‘ என்ற ஒருவகை மரப்பலகையின் மீது ஒரு முனையில் குண்டூசியால் கீறிக்கொண்டிருந்தான். லகையின் மறுமுனையில் தன் காதைப் பொருத்தி, எழும் ஒலியைக் கேட்டுக் கொண்டிருந்தான் மற்றொரு சிறுவன். பலகையின் ஒரு முனையில் குண்டூசியால் மெதுவாகக் கீறும்போது எழுந்த ஒலி, மறுமுனையில் மிகத் தெளிவாகக் கேட்பதைக் கண்டு அந்தச் சிறுவன் வியப்படைந்தான்.
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த அந்த மருத்துவர், சிறுவர்களின் செய்கையைக் கண்டார். அவர் உள்ளத்தில் மின்னல்போல் ஓர் ஒளிக்கீற்று தோன்றியது. ஏனெனில், நோயாளியின் இதயத் துடிப்பை எவ்வாறு துல்லியமாகக் கேட்கமுடியும் என்றுதானே
அவர் கவலைப்பட்டார். இந்நிகழ்வே ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிப்பதற்குக் காரணமாக அமைந்தது.
4. நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் வாட் ஆவார்.
5. அறிவியலறிஞர்களிடம் உற்றுநோக்கும் திறன் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- ஐசக் நியூட்டன் ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் ஏன் மேலே நோக்கி செலலாமல் கீழே விழுந்தது என்பதை உற்று நோக்கியதால் புவிஈர்ப்பு விசையை கண்டறிந்தார்.
- இரேனே லென்னக், பூங்கா ஒன்றில் சிறுவர்கள் “ஸீஸா” என்ற ஒருவகை மரப்பலகையின் மீது குண்டுசியால் கீறி விளையாடுவதை உற்று நோக்கியதால் தான் “ஸ்டெதஸ்கோப்” கருவியை கண்பிடிக்க முடிந்தது,
- ஜேம்ஸ் வாட் சிறுவனாக இருந்தபோது, சமையலறையில் தேநீர் தயாரிப்பதற்காகக் கெட்டிலில் நீர் கொதித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். நீராவியன் உந்துதல் காரணமாக, கெட்டிலின் மூடி மேலெழும்பத் தொடங்கி. இதனை உற்று நோக்கியதால் தான் நீராவி என்ஜினையும் புகைவண்டியையும் கண்டுபிடிக்க முடிந்தது.
ஊ. சிந்தனை வினாக்கள்
1. ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னும் ஓர் அறிவியல் உண்மை உள்ளதா? உங்களால் விளக்க இயலுமா?
ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னும் ஓர் அறிவியல் உண்மை உள்ளது.
பறவைகள் பறப்பது எதனால் என்றால் அவைகளில் எலும்புகளிலும் இறகுகளிலும் காற்றுப்பைகள் உள்ளதால் அவைகள் பறக்கின்றன. ஏன் பறவை மட்டும் பறக்கின்றன? நம்மால் ஏன் பறக்க முடியவில்லை என்று ரைட் சகோதரர்கள் சிந்திக்க் தொடங்கினர். அவைகளுக்கு இறக்கை இருக்கிறது நமக்கு இறக்கை இல்லையே என முடிவுக்கு வந்தனர். நாமும் பறக்க வேண்டும் என்றால் இறக்கை போல ஒரு அமைப்பு வேண்டும் என்ற முடிவு செய்தனர். அதற்காகப் பல ஆய்வில் ஈடுபட்டு இறுதியாக விமானத்தை கண்டுபிடித்தனர்;பறந்தும் காட்டினர்.
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழ்கின்ற அனைத்து நிகழ்வுகளில் ஒரு அறிவியல் உண்மை ஒளிந்துதான் உள்ளது.
குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகின்றது. அது தாயின் கருவில் இருக்கும்போது தாயின் இதயத் துடிப்பை கேட்டு வளர்கிறது. பிறந்தவுடன் அந்தத் தாயின் இதயத் துடிப்பு கேட்காததனால் தான் அழுகிறது.
சிட்டுக்குருவிகள் ஏன் அழிந்து வருகின்றது. அலைபேசி கோபுரங்களில் ஏற்படுகின்ற கதிர்வீச்சினால் குருவிகளின் முட்டைகள் இனவிருத்தி செய்ய முடியாமல் செயல் இழந்து போவதால் அழிந்து வருகிறது.
இவ்வாறு பல நிகழ்வுகளை ஒவ்வொருவரும் விளக்க முடியும்.
2. நீரில் நீந்தும் மீனால், நிலத்தில் வாழ முடிவதில்லையே, ஏன்?
- மீன்கள் குளிர் இரத்தப் பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீர் வெப்பநிலையைப் பொறுத்து மாறும்.
- பொதுவாக மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரை கன்னத்திலுள்ள செவுகள் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது நீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
- மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்கின்றன. ஏனென்றால் இவற்றிற்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை.
- மீன்களுக்குப் புறச்செவிகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து கொள்கின்றன.
- மீன்களுக்குத் தேவையான உணவுகள் நிலத்தில் கிடைப்பதில்லை.
- இப்படிப்பட்ட காரணங்களினால் தான் மீன்கள் நிலத்தில் வாழ முடிவதில்லை.
கூடுதல் வினாக்கள்
அ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் யார்?
புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன் ஆவார்.
2. அறிவியல் எப்போது வளரத் தொடங்கியது?
மனிதன், ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கியபோது அறிவியல் வளரத் தொடங்கியது.