Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 6.1 – உழவுப் பொங்கல்

பாடம் 6.1 உழவுப் பொங்கல்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 6.1 – “உழவுப் பொங்கல்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 5 Tamil Text Books – Download

சொல்பொருள்

  • எங்கணும் – எங்கும்
  • ஏர்த்தொழில் – உழவுத்தொழில்
  • விழலாகும் – வீணாகும்
  • களித்து – மகிழ்ந்து
  • இசைந்து – ஏற்றுக்கொண்டு
  • வையகம் – உலகம்

பாடல் பொருள்

  • உழவுத்தொழிலின் மேன்மையை இப்பாடல் விளக்குகின்றது.
  • உழவின் சிறப்பால் பொங்குகின்ற பொங்கலை அனைவரும் கொண்டாடி மகிழவேண்டும் எனக் கூறுகின்றது.
  • எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு ஏற்ற தொழில் ஏர்த்தொழிலே.
  • உணவுப் பொருள்கள் இல்லையென்றால் நாம் வாழ்வது அரிது.
  • பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும்.
  • மற்ற தொழில்களைக் கற்றுக்கொண்டாலும், பயிர்த்தொழில் இல்லையெனில் எல்லாம் வீணாகும்.
  • தங்கம், வெள்ளி போன்றவற்றை நாம் உண்ணமுடியாது. உணவுப்பயிர்களே நமக்கு உணவாக
    அமையும்.
  • இன்பத்தைத் தருவதும் உழவுத்தொழிலே ஆகும்.
  • பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே.
  • ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவுப் பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்குவோம்.

நூல் குறிப்பு

  • உழவுப் பொங்கலின் சிறப்பை விளக்கும் இப்பாடலை இயற்றியவர்,
  • நாமக்கல் வெ. இராமலிங்கனார். அவருடைய கவிதைத் தொகுப்பிலிருந்து இப்பாடல் எடுத்தாளப் பெற்றுள்ளது.

ஆசிரியர் குறிப்பு

  • நாமக்கல் மாவட்டம் மேகானூரில் பிறந்தார்.
  • இவரின் பெற்றோர் வெங்கடராமன் பிள்ளை –  மணியம்மாள்.
  • இந்திய விடுதலை குறித்தும், காந்தியடிகள் குறித்தும் பல பாடல்களைப் பாடியுள்ளார். காந்தியக் கவிஞர் என்றும் போற்றப்படுகிறார்.
  • இவருடைய ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது‘ என்னும் பாடல் வரி மிகவும் புகழ்  பெற்றதாகும்.
  • ‘தமிழன் என்றோர் இனமுண்டு‘ என்றும் ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா‘ என்றும் அவர் பாடிய பாடல் வரிகள் என்றும் நிலைத்திருப்பவை.
  • இவர், தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.

கற்பவை கற்றபின்

பாடலிலுள்ள நயங்களைப் பாராட்டுக.

எதுகைமோனை
பொங்குக – எங்கணும்பொங்குக – புதுவன்
வு – பம்ங்கணும் – ர்த்தொழில்
வு – பகுணவு – யிரோ
ங்கம் – இங்கிதன்ணமும் – யிர்கள்
வே – உவைழவும் – டையும்

மதிப்பீடு

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

1. “வையகம்” – என்பதன் பொருள் ______________

  1. ஊர்
  2. வயல்
  3. உலகம்
  4. கிராமம்

விடை : உலகம்

2. “நலனெல்லாம்” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. நலன் + எல்லாம்
  2. நல + னெல்லாம்
  3. நலன் + னெல்லாம்
  4. நலம் + எல்லாம்

விடை : நலன் + எல்லாம்

3. “நிறைந்தறம்” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. நிறைந்து + அறம்
  2. நிறைந்த + அறம்
  3. நிறை + அறம்
  4. நிறை + தறம்

விடை : நிறைந்து + அறம்

4 ‘இன்பம்‘ – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ___________

  1. மகிழ்ச்சி
  2. களிப்பு
  3. கவலை
  4. துன்பம்

விடை : துன்பம்

ஆ. பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எழுதுக.

ணவு – யிரோ,ணமும் – யிர்கள்
ண்டு – ழவு
ன்றேல் – ல்லால்

இ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.

ல்லால் – செல்லாதுண்டு – கொண்டு
கும் – உவுணியவரும் – துணிந்திடுவோம்

ஈ. பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

உணர்ந்திடுவோம் – துணிந்திடுவோம்பொங்குகவே – தங்குகவே
உணவுதரும் – அணியவரும்விழலாகும் – விருந்தாகும்

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. அனைவரும் இன்பமுடன் தெம்பு தரும் தொழில் எது?

அனைவரும் இன்பமுடன் தெம்பு தரும் தொழில் உழவுத்தொழில் ஆகும்

2. உழவுத்தொழிலால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?

எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு உழவுத்தொழில் பயன்படுகிறது. பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும்.

3. பொங்கலை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டுமெனக் கவிஞர் கூறுகிறார்?

  • பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே.
  • ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவுப் பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்குவோம்.

ஊ. சிந்தனை வினா

‘உழவர், சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்கமுடியும்‘ இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

எந்த ஒரு தொழிலைப் பற்றியும் குறிப்பிட்டு பேசாத வள்ளுவர் உழவுத் தொழில் பற்றி மட்டும் தனி அதிகாரம் அமைத்து ஆராய்வது, நம்மையும் ஆராயத் தூண்டுகிறது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற பழமொழியும் உழவர்களை நோக்கிக்தான் சொல்லப்பட்டது. உழவே தலையாயத் தொழிலாக விளங்குகிறது என வள்ளுவர் கூறுகிறார்.

உழவுத் தொழில் நடைபெறவில்லை என்றால் நாமும் உணவில்லாமல் வாழ வேண்டும். பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும். உணவு பயிர்கேள உணவாக அமைகிறது. எனவே  உழவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான்  நாம் சோற்றில் கால் வைக்க முடியும்.

மதிப்பீடு

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

1. “காந்தியக்கவிஞர்” எனப் போற்பப்பட்டவர் ……………

  1. பாரதியார்
  2. வெ.இராமலிங்கனார்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : வெ.இராமலிங்கனார்

2. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் …………

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. வெ.இராமலிங்கனார்

விடை : வெ.இராமலிங்கனார்

ஆ. வினாக்களுக்கு விடையளிக்க

1. உழவுத்தாெழிலால் நமக்கு கிடைப்பவை எவை?

செல்வம், உணவு, உடை

2. காந்தியக்கவிஞர் என வெ. இராமலிங்கனார் போற்றப்பட்ட காரணம் யாது?

இந்திய விடுதலை குறித்தும், காந்தியடிகள் குறித்தும் பல பாடல்களைப்
பாடியுள்ளதால் காந்தியக் கவிஞர் என்று போற்றப்படுகிறார்.

3. வெ. இராமலிங்கனார் எந்த வரிகள் புகழ்பெற்றதாகும்?

‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது‘ என்னும் பாடல் வரி மிகவும் புகழ்பெற்றதாகும

4. வெ. இராமலிங்கனார் எந்ததெந்த பாடல் வரிகள் நிலைத்திருப்பவை யாவை?

தமிழன் என்றோர் இனமுண்டு‘ என்றும் ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா‘ என்றும் அவர் பாடிய பாடல் வரிகள் என்றும் நிலைத்திருப்பவை.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment