Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 6.2 – விதைத் திருவிழா

பாடம் 6.2 விதைத் திருவிழா

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 6.2 – “விதைத் திருவிழா ” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 5 Tamil Text Books – Download

கற்பவை கற்றபின்

1. இயற்கை வேளாண்மையின் சிறப்புகளைப் பற்றி, வழிபாட்டுக் கூட்டத்தில் பேசுக. 

இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமன்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு அவசியமானதாக உள்ளது. வேளாண்மையில் செயற்கையான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தாமல் இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்வது இயற்கை வேளாண்மை ஆகும். இயற்கையின் போக்கில் விவசாயம் செய்வது ஆகும்.

இம் முறையைப் பயன்படுத்துவதால் மண், நீர், காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. பயனீட்டாளர்களுக்கும் உடல் நலத்திற்கேற்ற உணவு கிடைக்கிறது. விவசாயிகளும் அதிக விளைச்சலுடன் லாபத்தை பெறுகின்றனர. முக்கியமாக நாம் நமது அடுத்த தலைமுறைக்கு மாசற்ற வேளாண் முறையைத் தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம். பயிர்களுக்கு இயற்கை உரங்களான மண்புழு உரம், சாண எரு உரம், தொழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இதனால் குறைந்த செலவில் நிறைய விளைச்சலை பெறலாம். ஆரோக்கியமான உணவுப் பொருள்களைப் பயனீட்டாளரும் பெறலாம்.

2. “இயற்கை உரம் பயன்படுத்துவோம், இனிமையாய் வாழ்வோம்” என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக

முன்னுரை

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இரசாயன வேதிப்பொருட்களை உட்கொள்கிறோம். இதனால் மனித உடல் உறுப்புகள் மட்டுமல்ல நிலங்களும் பாதிக்கப்டுகின்றன. இயற்கை வேளாண்மை மூலம் இப்பாதிப்புகளிலிருந்து நாம் நலமுடன் வாழலாம்.

இரசாயனத்தின் தீங்கு

நாம் உண்ணும் உணவில் வேதிப்பொருட்கள் கலந்து விட்டன. இதனால் நிலம், நீர், காற்று மூன்றும் பாதிப்படைகிறது. இவை பூமியில் நிரந்தரமாக தங்கி நிலத்தின் உயிர் சக்தியினை அழிக்கிறது. மேலும் சுற்றுப்புற சூழல் மாசடைகிறது.

இயற்கை உரங்கள்

விவசாய உற்பத்திக்கு இயற்கை உரம் இன்றியமையாதது. இயற்கை கழிவுகள், மக்கிய குப்பைகள், இலைகள், தழைகள், எருக்கு மற்றும் ஆடு, மாடு, கோழி, மண்புழு கழிவுகள் அனைத்தும் இயற்கை உரங்களாகும்.

இயற்கை உரங்களின் நன்மைகள்

  • இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை கழிவுகளை நாம் பயன்படுத்துவதால் நிலத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கின்றன. ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதனால் உற்பத்தி, விளைச்சல் மற்றும் மகசூல் அதிகரிக்கின்றன.
  • நல்ல தரமான மற்றும் சுவையான உணவுப் பொருட்கள், காய்கறிகள், கனிகள் கிடைக்கின்றன.
  • இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட பொருட்களிளை நாம் உண்பதால் நம் வாழ்நாளை நீட்டிக்க முடியும்.
  • பல உயிரினஙகள் பாதுகாக்கப்படுகின்றன.

முடிவுரை

அன்றாடம் நாம் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

3. உங்கள் பள்ளியில் நடைபெறும் ஏதேனும் ஒரு விழாவுக்கு மாதிரி அழைப்பிதழ்/துண்டு விளம்பரம் உருவாக்கி மகிழ்க.

மரம் வளர்ப்போம்                                          மழை பெறுவோம்!!

மரம் நடு விழா

நேரம் – காலை 10 மணி

நாள் – 18.11.2021

விழாவினை தொடங்கி வைப்பவர்

மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள். சேலம்

இங்கனம்

தலைமையாசிரியர்

ஆசிரிய ஆசிரியைகள் மாணவச் செல்வங்கள்

மதிப்பீடு

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

1. அனுமதி இச்சொல் குறிக்கும் பொருள் ________________

  1. கட்டளை
  2. இசைவு
  3. வழிவிடு
  4. உரிமை

விடை : இசைவு

2. விளம்பரத்தாள்கள் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. விளம்பர + தாள்கள்
  2. விளம்புரத்து + தாள்கள்
  3. விளம்பரம் + தாள்கள்
  4. விளம்பு + தாள்கள்

விடை : விளம்பரம் + தாள்கள்

3. ஆலோசித்தல் இச்சொல்லுக்குரிய பொருள் _______________

  1. பேசுதல்
  2. படித்தல்
  3. எழுதுதல்
  4. சிந்தித்தல்

விடை : சிந்தித்தல்

4. தோட்டம் + கலை இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ___________

  1. தோட்டம்கலை
  2. தோட்டக்கலை
  3. தோட்டங்கலை
  4. தோட்டகலை

விடை : தோட்டக்கலை

5. பழங்காலம் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்———————–

  1. பழைய காலம்
  2. பிற்காலம்
  3. புதிய காலம்
  4. இடைக்காலம்

விடை : புதிய காலம்

ஆ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக.

  1. வழிபாடு + கூட்டம் = வழிபாட்டுக்கூட்டம்
  2. வீடு + தோட்டம் = வீ ட்டுத்தோட்டம்

இ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

  1. அழைப்பிதழ் = அழைப்பு + இதழ்
  2. விதைத்திருவிழா = விதை + திருவிழா

ஈ. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. விதைத்திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளின் எண்ணிக்கை——-.

விடை : 27

2. விதைகள்——–ஆனவையாக இருத்தல் வேண்டும

விடை : தரம்

3. கொண்டைக்கடலை என்பது, ———-ஒன்று

விடை : தின்பொருள்களில்

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. மாணவர்களை எங்கே அழைத்துச் செல்வதாகத் தலைமையாசிரியர் கூறினார்?

மாணவர்களை அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விதைத் திருவிழாவிற்கு அழைத்துச் செல்வதாகத் தலைமையாசிரியர்
கூறினார்.

2. ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத்தாளில் என்ன செய்தி இருந்தது?

ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத்தாளில் விதைத் திருவிழா குறித்த செய்தி இருந்தது.

3. ‘பாதிப்பு‘ என்று எழுதப்படட அரங்கத்தில் என்ன செய்தி சாெல்லப்பட்டது?

‘பாதிப்பு‘ என்று எழுதப்படட அரங்கத்தில் இரசாயன விதைகள், இரசாயன பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய செய்தி சாெல்லப்பட்டது.

4. நவதானியங்களுள் ஐந்தின் பெயரை எழுதுக.

நெல், துவரை, அவரை, எள், கடலை

ஊ. சிந்தனை வினா

செயற்கை உரங்கள், மண்ணின் வளத்தைக் கெடுக்கும் எனில், அதற்கு மாற்றாக நாம் என்ன செய்யலாம்?

செயற்கை உரங்கள் மண்ணின் வளத்தைக் கெடுக்கும் எனில் அதற்கு மாற்றாக நாம் இயற்கை உரங்களை பயன்படுத்தலாம். நம் மண வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிக்காக்கும் பொருட்டு இயற்கை வேளாண்மையை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும். இந்த இயற்கை வளங்களில் நமது எதிர்கால சந்ததியினருக்கும் பங்கு, உரிமை  உண்டு. அதற்கேற்ப இயற்கை வேளாண்மையினைக் கடைபிடிப்பதே ஒரே வழி. இயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களின் பயன்பாட்டினைக் குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்தி வேளாண்  உற்பத்தியை அதிகப்படுத்தலாம்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment