பாடம் 8.4 மயங்கொலிச்சொற்கள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 8.4 – “மயங்கொலிச்சொற்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
கற்பவை கற்றபின்
மயங்கொலி எழுத்துகள் இடம்பெறும் சொற்களை அடையாளம் காண்க.
- தவலை – தவளை
- ஒலி – ஒளி
- கரை – கறை
- வலை – வளை
- பனை – பணை
மயங்கொலிச் சொற்களின் பொருள் வேறுபாடு அறிக.
1. தவலை | குடம் |
தவளை | நீர்வாழ் உயிர் |
2. ஒலி | சத்தம் |
ஒளி | வெளிச்சம் |
3. வலை | மீன்பிடி வலை |
வளை | வளையல் |
4. கரை | எரிக்கரை |
கறை | அழுக்கு |
5. பனை | மரம் |
பணை | மூங்கில் |
மதிப்பீடு
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. சாலையில் பள்ளம் இருந்ததால், ——— பேருந்தை மெதுவாக ஓட்டிச்சென்றார்.
- ஓட்டுநர்
- ஓட்டுனர்
- ஓட்டுணர்
விடை : ஓட்டுநர்
2. கடவூருக்குச் செல்ல எந்த ———ப் போக வேண்டும்?
- வலியாக
- வளியாக
- வழியாக
விடை : வழியாக
3. கூண்டிலிருந்த ———யைச் சுதந்திரமாகப் பறக்கவிட்டான் எழிலன்.
- கிலி
- கிளி
- கிழி
விடை : கிளி
4. நீரில் துள்ளி விளையாடுகிறது ——— மீன்
- வாளை
- வாலை
- வாழை
விடை : வாலை
5. தாய்ப்பசு இல்லாமையால் நாளடைவில் கன்று ——–ப்போனது.
- இழைத்து
- இளைத்து
- இலைத்து
விடை : இளைத்து
6. கடல் ——-யில் கால் நனைத்து மகிழ்வது அனைவருக்குமே பிடிக்கும்.
- அளை
- அழை
- அலை
விடை : அலை
ஆ. பொருத்தமான சொல்லை நிரப்பித் தொடர்களைப் படித்துக் காட்டுக
1. நடனம் என்பது, ஒரு —————- (களை/ கலை/ கழை)
விடை : கலை
2. சோளம் என்பது, ஒரு ————— (தினை/ திணை)
விடை : தினை
3. பெட்ரோல் என்பது, ஓர்————– (எரிபொருள்/ எறிபொருள்)
விடை : எரிபொருள்
4. ஒட்டகம் என்பது ஒரு ————— (விளங்கு/ விலங்கு)
விடை : விலங்கு
5. தென்னை என்பது, ஒரு ————- (மறம்/ மரம்)
விடை : மரம்
இ. விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை எழுதுக.
எகா : மடியைக் குறிப்பது குறங்கு. மரத்தில் தாவுவது குரங்கு
1. ஆற்றின் ஓரம் ———. ஆடையில் இருப்பது ———.
விடை : கரை / கறை
2. மடியைக் குறிப்பது ———. மரத்தில் தாவுவது ———.
விடை : குறங்கு / குரங்கு
3. பரந்து இருப்பது ———. பறந்து செல்வது ———.
விடை : பரவை / பறவை
4. மரத்தை அறுப்பது ———. மனிதர் செய்வது ———.
விடை : அரம் / அறம்
5. சுவரில் அடிப்பது ———. மாதத்தில் ஒன்று ———.
விடை : ஆணி / ஆனி
மொழியை ஆள்வோம்
1 சொல்லக்கேட்டு எழுதுக.
- அன்னையும் தந்தையும் தெய்வம்
- கல்வியைக் கசடறக் கற்றிட வேண்டும்
- தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும்
2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. ஆயிரம்
விடை : என்னிடம் ராமு ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கினான்.
2. உண்மை
விடை : நாம் எப்பொழுதும் உண்மையே பேசவேண்டும்
3. புகார் நகரம்
விடை : புகார் நகரம் சோழநாட்டின் துறைமுகமாக இருந்தது,
4. ஆடுகள்
விடை : ஆடுகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.
3. கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
கல்வி கண் போன்றது நீதி தவறாதவன் அரசன் சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள் தீங்கு செய்தால் தீமை விளையும் |
1. தீங்கு செய்தால் என்ன நேரிடும்?
தீங்கு செய்தால் தீமை நேரிடும்
2. சிலம்பின் பரல் எவற்றால் ஆனது?
சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது
3. கல்வி எதனைப் போன்றது?
கல்வி கண் போன்றது
4. நீதி தவறாதவன் யார்?
நீதி தவறாதவன் அரசன்
5. பணப்பையுடன் வந்தது யார்?
ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள்
4. வினாக்களுக்கு விடையளிக்க.
புறநானூறு என்னும் நூலில் அறப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. அரசன் ஒருவன் மற்றொரு நாட்டு அரசன்மீது போர் தொடுக்கும் முன்பு, பசுக்களையும், அறவோரையும், பெண்களையும், பிணியாளர்களையும் போர் நிகழும் இடத்தைவிட்டுப் புறத்தே போய்விடும்படி எச்சரித்த பின்னரே படையெடுப்பு நிகழும். இச்செய்தி முதுகுடுமிப்பெருவழுதியிடம் அமைந்திருந்ததாக நெட்டிமையார் என்னும் புலவர் பாராட்டுகிறார். மேலும், படையெடுத்து வரும் பகைவன் மீது, மறைந்துநின்று, அம்பு எய்தும் நிலையங்கள் ‘ஞாயில்கள்’ என்று அழைக்கப்பட்டன.
1. உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் யாது?
புறநானூறு
2. நெட்டிமையாரால் பாராட்டப்படும் அரசர் யார்?
முதுகுடமிப்பெருவழதி
3. ‘ஞாயில்கள்’ என்றால் என்ன?
மறைந்து நின்று அம்பு எய்தும் நிலையங்கள்
4. பகைவன் – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
நண்பன்
5. ‘பிணி’ என்பதன் பொருள்
நோய்
5. பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க
சொல்லி | மீனவன் | கடலிலே | பார்த்ததே |
வலையில் | விட்டதே | செய்ததே |
துள்ளி குதிக்கும் மீன் கடலிலே
வெள்ளியை வானத்தில் பார்த்ததே
மீனவன் வலை போட்டானே
வலையில் சிக்கிய மீனுமே
வெளியேற முயற்சி செய்ததே
நண்டு நண்பன் வந்ததே
வலையை வெட்டி விட்டதே
மீன் நன்றி சொல்லி சென்றதே
மொழியோடு விளையாடு
1. பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
அன்னையும் – அறிந்திட | நன்மையும் – நயமதும் |
வல்லமை – வளமை | கல்வியைக் – கசடறக் |
கண்ணெனும் – கருத்தினில் |
2. ஒரு சொல்லில் இரு தொடரை உருவாக்குவோம்.
திங்கள் வாரத்தின் இரண்டாம் நாள். | திங்கள் |
நிலவுக்கு திங்கள் என்றும் பெயர் உண்டு | |
சூரியனுக்கு ஞாயிறு என்ற பெயர் மறுபெயர் உண்டு. | ஞாயிறு |
ஞாயிறு வாரத்தின் முதல் நாள் |
3. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் எழுதுக.
1. கல்விக் கண் திறந்தவர் போற்றப்படுகிறார் எனக் காமராசர்
விடை : கல்விக்கண் திறந்தவர் எனக் காமராசர் போற்றப்படுகிறார்.
2. கற்றிட வேண்டும் கல்வியைக் கசடறக்
விடை : கல்வியைக் கசடறக் கற்றிட வேண்டும்
3. மனுநீதிச் சோழன் மன்னர் சோழமன்னர்களுள் புகழ்வாய்ந்த
விடை : சோழமன்னர்களுள் புகழ்வாய்ந்த மன்னர் மனுநீதிச் சோழன்
4. காற்சிலம்பு உடையது கண்ணகியின் மாணிக்கப்பரல்கள்
விடை : கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்கப்பரல்கள் உடையது
5. தந்தையும் தெய்வம் அன்னையும்
விடை : அன்னையும் தந்தையும் தெய்வம்
4. சொல்லிலிருந்து புதிய சொல் உருவாக்கலாமா?
நெல், வயல் | நெல் வயல் | |
கவி, கண் | கண்கவி | |
மீன், தலை | மீன் தலை | |
மரம், பலா | பலாமரம் | |
பார். மனை | மனைபார் |
கூட்டு விண்ணப்பம் எழுதுதல்
நூல் நிலையம்/ படிப்பகம் அமைக்க வேண்டி ஊர்ப்பொதுமக்களின் கூட்டு விண்ணப்பம் (மாதிரி)
அனுப்புநர் ஊர்ப்பொது மக்கள், பெறுநர் மாவட்ட நூலக அலுவலர், மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். நீலகிரி மாவட்டம், புலியூர் கிராமத்தில் மூவாயிரம் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலானோர் எழுத்தறிவு உடையவர்கள். அதனால், தங்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்கு நூலகம் அல்லது படிப்பகம் வேண்டும் என விரும்புகிறார்கள். நூலகம் அமைப்பதற்குத் தேவையான இடமும் கிராமத்தில் உள்ளது. ஆகவே, அறிவை விரிவு செய்யும் நூலகத்தை எங்களுக்கு விரைவில் அமைத்துத் தர வேண்டுகிறோம். தங்கள் உண்மையுள்ள, ஊர்ப்பொது மக்கள், புலியூர் கிராமம், நீலகிரி |