பாடம் 3.1 அறிவியல் ஆத்திசூடி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 3.1 – “அறிவியல் ஆத்திசூடி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- இயன்றவரை – முடிந்தவரை
- ஒருமித்து – ஒன்றுபட்டு
- ஔடதம் – மருந்து
நூல் வெளி
- ”தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து.
- இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர்.
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.
- அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார்.
- என்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. உடல் நோய்க்கு ____________ தேவை.
- ஔடதம்
- இனிப்பு
- உணவு
- உடை
விடை : ஔடதம்
2. நண்பர்களுடன் _____________ விளையாடு
- ஒருமித்து
- மாறுபட்டு
- தனித்து
- பகைத்து
விடை : ஒருமித்து
3. கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______
- கண் + அறி
- கண்டு + அறி
- கண்ட + அறி
- கண் + டற
விடை : கண்டு + அறி
4. ஓய்வற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- ஓய்வு + அற
- ஓய் + அற
- ஓய் + வற
- ஓய்வு + வற
விடை : ஓய்வு + அற
5. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________
- ஏன்என்று
- ஏனென்று
- ஏன்னென்று
- ஏனன்று
விடை : ஏனென்று
6. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________
- ஔடதமாம்
- ஔடதம்ஆம்
- ஔடதாம்
- ஔடதஆம்
விடை : ஔடதமாம்
“How India Wrought for Freedom” என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தவர்.
அன்னிபெசன்ட்
திலகர்
ஆ. எதிர்ச்சொற்களைப் பொருத்துக
1. அணுகு | தெளிவு |
2. ஐயம் | சோர்வு |
3. ஊக்கம் | பொய்மை |
4. உண்மை | விலக |
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
இ. பாடல் வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக.
1. சிந்தனை கொள் அறிவியல்
விடை : அறிவியல் சிந்தனை கொள்
2. சொல் தெளிந்து ஐயம்
விடை : ஐயம் தெளிந்து சொல்
3. கேள் ஏன் என்று
விடை : ஏன் என்று கேள்
4. வெல்லும் என்றும் அறிவியல்
விடை : என்றும் அறிவியல் வெல்லும்
ஈ. குறு வினா
மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
மனிதர்களுக்கு மருந்தாக அமைவது அவர்களுடைய அனுபவங்களே ஆகும்
உ. சிறுவினா
பாடலின் கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.
- மாணவர்கள், அறிவியல் நாட்டம் கொள்ள வேண்டும். காரண காரியங்களை அறிய ஆய்வில் மூழ்குதல் வேண்டும்.
- அறிவியல் மாற்றங்களையும், உண்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டும், எந்தவொரு செயலையும் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.
- அறிவின் துணை கொண்டு அறிவியல் உண்மைகளை கண்டறிய வேண்டும். நாம் எடுக்கிறன்ற முயற்சிகள் கட்டாயம் ஒரு நாள் வெற்றியைத் தரும். இவ்வுலகில் அறிவியலே என்றும் வென்று நிற்கும். தெளிவுபடுத்திக் கொள்ள ஏன் என்று கேட்டல் வேண்டும்.
- பிறருக்குச் சொல்லும் போது தெளிவாகச் சொல்ல வேண்டும். நட்புடன் செயல்பட வேண்டும். எடுத்த முயற்சியில் வெற்றி பெறும் வரை அயராது உழைத்தல் வேண்டும். அனுபவமே நமக்கு அருமருந்து.
ஊ. சிந்தனை வினா
உங்களுக்குத் தெரிந்த மருத்துவ முறைகள் யாவை?
சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ரெய்கி மருத்துவம், வர்ம மருத்துவம், அலோபதி மருத்துவம், ஓமியோபதி மருத்துவம், காந்த மருத்துவம், அக்குபஞ்சர் மருத்துவம், அக்குபிரஷர் மருத்துவம், நாட்டு மருத்துவம், மசாஜ் மருத்துவம், மூலிகை மருத்துவம், நவமணி மருத்துவம், சிரிப்பு மருத்துவம், உளவியல் மருத்துவம்
கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர்
விடை : நெல்லை சு.முத்து.
2. ஆத்திசூடியை முதன்முதலில் _________ இயற்றினார்.
விடை : ஔவையார்
3. புதிய ஆத்திசூடி எழுதியவர் _________
விடை : பாரதியார்
4. அறிவியல் _________ கொள்
விடை : சிந்தனை
II. பிரித்து எழுதுக
- ஈடுபாட்டுடன் = ஈடுபாடு + உடன்
- பணியாற்றியவர் = பணி + ஆற்றியவர்
III. அறிவியல் ஆத்திச்சூடியில் இடம் பெறும் எதுகை, மோனைச் சொற்களை எழுதுக
மோனைச் சொற்கள் | எதுகைச் சொற்கள் |
வெற்றிதரும் – வெல்லும் | என்றும் – ஏன் |
அறிவியல் – அனுபவம் | சொல் – வெல்லும் |
உழை – உண்மை | இயன்றவரை – ஐயம் |
IV. எதிர்ச்சொற்களைப் பொருத்துக
1. காெள் | தாேல்வி |
2. வெற்றி | தாேற்கும் |
3. வெல்லும் | காெடு |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ |
V. குறு வினா
1. நெல்லை சு.முத்து. பணியாற்றி நிறுவனங்கள் எவை?
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
- சதீஷ்தவான் விண்வெளி மையம்
- இந்திய விண்வெளி மையம்
2. நெல்லை சு.முத்து அப்துல்கலாம் அவர்களால் எவ்வாறு பாராட்டப்பட்டார்?
நெல்லை சு.முத்து தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப்பட்டார்.