பாடம் 4.1 மூதுரை
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 4.1 – “மூதுரை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- மாசற – குற்றம் இல்லாமல்
- சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
- தேசம் – நாடு
- மன்னற்கு – மன்னனுக்கு
பாடலின் பொருள்
- மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர்.
- மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.
ஆசிரியர் குறிப்பு
- மூதுரை நூலின் ஆசிரியர் ஒளவையார்
- ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
நூல் குறிப்பு
- மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
- சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
- இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.
மதிப்பீடு
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர்கள் நூல்களை _________ க் கற்க வவண்டும்.
- மேலோட்டமாக
- மாசற
- மாசுற
- மயக்கமுற
விடை : மாசற
2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது __________
- இடம் + மெல்லாம்
- இடம் + எல்லாம்
- இட + எல்லாம்
- இட + மெல்லாம்
விடை : இடம் + எல்லாம்
3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
- மாச + அற
- மாசு + அற
- மாச + உற
- மாசு + உற
விடை : மாசு + அற
4. குற்றம் + இல்லாதவர் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________
- குற்றமில்லாதவர்
- குற்றம்இல்லாதவர்
- குற்றமல்லாதவர்
- குற்றம் அல்லாதவர்
விடை : குற்றமில்லாதவர்
5. சிறப்பு + உடையார் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________
- சிறப்புஉடையார்
- சிறப்புடையார்
- சிறப்படையார்
- சிறப்பிடையார்
விடை : சிறப்புடையார்
2. குறுவினா
கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?
- மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர்.
- மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.
3. சிந்தனை வினா
1. கல்லாதவர்க்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக
- மனிதனுக்குக் கல்வி கண் போன்றது. கண் இல்லை என்றால் இவ்வுலகமே இருள் மயமாகி விடும். கற்றவரே கண்ணுடையவர். கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்கள் உடையவர்.
- கல்லாதவர் விலங்களுக்கும், மரத்துக்கும் ஒப்பாவார்
- கல்லாதவரால் நாட்டிற்கு பயனில்லாமல் போகும்
- கல்லாதவரை பெற்றோர்கள். உடன் பிறந்தோர், மனைவி, தம்மக்கள், உற்றார் உறவினர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள், ஊரார் மதிக்கமாட்டார்கள்.
2. கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?
- அறிவியல், பொறியியல், பொருளியல் முதலியவற்றை வளர்ந்தோங்கச் செய்வது கல்வியே. கல்வியால் மனிதன் விண்ணையும் மண்ணையும் அளக்க அறிநது கொண்டான்.
- இன்றைய உலகில் அறிவியலின் கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பெருகிய வண்ணமாக உள்ளன. ஒருவனுக்குள் புதைந்து கிடைக்கும் அறியாமையைத் தோண்டி எடுப்பதே கல்வியாகும்.
- உள்ளத்தை அறிவான் நிலப்பி ஒழுக்கத்தை வளர்த்திட, மனிதனாக வாழந்திட நூல்களைக் கற்பதே கல்வியாகும்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையை தேர்ந்தெடு
1. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத் பாடல் வரிகளின் ஆசிரியர்
- விளம்பிநாகனர்
- மூன்றுரையனார்
- ஒளவையார்
- குமரகுருபரர்
விடை : ஒளவையார்
2. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு
- மாசற – குற்றம் இல்லாமல்
- சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
- தேசம் – வீடு
- கற்றோன் – கற்றவன்
விடை : தேசம் – வீடு
3. ஒளவையார் எழுதிய நூல்களில் பொருந்தாதது
- ஆத்திசூடி
- கொன்றை வேந்தன்
- நல்வழி
- பழமொழி
விடை : பழமொழி
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ஆத்திச்சூடி நூலின் ஆசிரியர் __________
விடை : ஒளவையார்
2. மன்னன் சொல்லுக்கும் தமிழில் வழங்கும் வேறு பெயர் __________
விடை : கோ
3. மூதுரையில் _______ பாடல்கள் உள்ளன.
விடை : 31
4. மன்னனை விடக் _______ சிறந்தவர்.
விடை : கற்றவரே
5. இடம் + எல்லாம் = _______
விடை : இடமெல்லாம்
இப்பாடலில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
எதுகைச் சொற்கள் |
மன்னனும் – மன்னனின் |
கற்றோன் – கற்றோனும் |
சிறப்புடையான் – சிறப்பில்லை |
கற்றோன் – கற்றோருக்கு |
மன்னற்குத் – தன்தேசம் |
மோனைச் சொற்கள் |
மன்னனும் – மன்னனின் |
கற்றோன் – கற்றோனும் |
சிறப்புடையான் – சிறப்பில்லை |
கற்றோன் – கற்றோருக்கு |
குறுவினா
1. மூதுரை என்னும் சொல்லின் பொருள் யாது?
மூத்தோர் கூறும் அறிவுரை
2. ஒளவையார் – குறிப்பு வரைக
மூதுரையின் ஆசிரியர் ஒளவையார் ஆவார்
இவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி என்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
3. மூதுரை – நூற்குறிப்பு வரைக
- மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
- சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
- இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.