பாடம் 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 5.4 – “மனம் கவரும் மாமல்லபுரம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சிறு வினா
1. மாமல்லபுரம் எப்படி உருவானது? அதற்கான நிகழ்வு யாது?
- மாமல்லன் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் அவர் தந்தையுடன் மாமல்லபுரம் கடற்கரைக்குச் சென்றார்.
- ஒரு பாறையில் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த பாறையில் நிழல் யானை போல் தரையில் விழந்தது. அதை அவர் தந்தையிடம் காட்டினார். அவர் தந்தை “ஆம் நரசிம்மா! இது யானைப் போலத்தான் தெரிகிறது.
- அதோ அந்தக் குன்றில் நிழலைப் பார். கோவில் போலத் தெரிகிறது” என்றார். மாமல்லான் “ஆம் அப்பா! அந்தக் குன்றை கோவிலாகவும், இந்த குன்றைக் கோவில் முன் நிற்கும் யானை போலவும் மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே” என்றார். ” நல்ல சிந்தனை.
- இவை இரண்டை மட்டும்” அல்ல. இங்குள்ள ஒவ்வொரு குன்றையும் சிற்பமாக மாற்றலாம். ஒவ்வொரு பாறையையும் நந்தி, சிங்கம், யானை என்று மாற்றுவோம்.
- இந்தக் கடற்கரையையே சிற்பக்கலைக்கூடமாக மாற்றிவிடலம்” என்று கூறினார். இந்நிகழ்வே மாமல்லபுரம் உருவான நிகழ்வாகும்.
2. மாமல்லபுரத்தில் “அர்ச்சுனன் தபசு” பாறையில் உள்ள சிறப்பங்களைப் பற்றி எழுதுக.
- அர்ச்சுனர் தபசு பாறையில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல அழகாக இருக்கும்.
- அப்பாறையில் 150-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. அர்ச்சுனன் கண்களை மூடி, இரு கைகளையும் உயர்த்தி, வணங்குவது போல ஒரு சிற்பம் உள்ளது. அவரது உடல் மெலிந்து, எலும்புகளும், நரம்புகளும் வெளியே தெரிவது போல அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது.
- ஆகாய கங்கை பூமிக்கு வருவது போல ஒரு சிற்பம் உள்ளது. சிங்கம். புலி. யானை. அன்னப்பறவை. உடும்பு. குரங்குகள் என எல்லாமே உயிருள்ளவை போலச் செதுக்கப்பட்டுள்ளன.
- மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போன்ற சிற்பம் அது உண்மையிலேயே மான் ஒன்று இருப்பது போல தோன்றும்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கலைகளும் இலக்கியங்களும் ஒருநாட்டின் __________ உலகிற்கு உணர்த்துவன.
- பண்பட்ட நாகரிகத்தை
- உணவு முறை
- வாழ்க்கை முறை
- பண்பாட்டினை
விடை : பண்பட்ட நாகரிகத்தை
2. பல்லவ அரசன் __________ மற்போரில் சிறந்நதவன்.
- நந்தவர்மன்
- கரிகாலன்
- மகேந்திரவர்மன்
- நரசிம்மன்
விடை : நரசிம்மன்
3. ஐந்து இரதங்கள் உள்ள இடம் __________ எனப்படும்.
- அர்ச்சுனன் தபசு
- கடற்கரைக் கோவில்
- பஞ்சபாண்டவர் இரதம்
- குகைக்கோவில்
விடை : பஞ்சபாண்டவர் இரதம்
4. பல்லவ அரசன் நரசிம்மன் __________ சேர்ந்தவர்.
- 6-ம் நூற்றாண்டைச்
- 7-ம் நூற்றாண்டைச்
- 8-ம் நூற்றாண்டைச்
- 9-ம் நூற்றாண்டைச்
விடை : 7-ம் நூற்றாண்டைச்
5. __________ உள்ள இடம் மாமல்லபுரம்.
- நான்கு வகை சிற்பக்கலைகளும்
- இரண்டு வகை சிற்பக்கலைகளும்
- மூன்று வகை சிற்பக்கலைகளும்
- ஐந்து வகை சிற்பக்கலைகளும்
விடை : நான்கு வகை சிற்பக்கலைகளும்
வினாக்கள்
1. இரதக்கோவில் என்று எதனை அழைக்கிறார்கள்?
- மாமல்லபுரத்தில் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.
- இது இரதம் (தேர்) வடிவத்தில் இருக்கிறது.
- அதனால் இதனை இரதக் கோவில் என்று அழைக்கிறார்கள்
2. புடைச்சிற்பங்கள் பற்றி கூறு
- அர்ச்சுனன் தபசு என்றும் பாறையில் உள்ள மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிறப்பங்கள் உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல் அழகாக உள்ளன.
- இவற்றிற்கு புடைப்பு சிற்பங்கள் என்று பெயர்.
3. மகாபலிபுரம் என பெயர்வரக் காரணம் என்ன?
மாமல்லன் கேள்வியால் இந்த ஊர் உருவாகியுள்ள காரணத்தால் இதற்கு மகாபலிபுரம் என அழைக்கப்படுகிறது
4. மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்கள் எவை?
- அர்ச்சுன் தபசு
- கடற்கரைக் கோவில்
- பஞ்ச பாண்டவர் இரதம்
- ஒற்றைக்கல் யானை
- குகைக்கோவில்
- புலிக்குகை
- திருக்கடல் மல்லை
- கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து
- கலங்கரை விளக்கம்
5. சிற்பக்கலை எத்தனை வகைப்படும்?
சிற்பக்கலை நான்கு வகைப்படும்
- குடைவரைக் காேயில்கள்
- கட்டுமானக் கோயில்கள்
- ஒற்றைக் கல் கோயில்கள்
- புடைப்புச் சிற்பங்கள்