Class 6th Tamil Book Solution for CBSE | Lesson 7.1 – பாரதம் அன்றைய நாற்றங்கால்

பாடம் 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 7.1 – “பாரதம் அன்றைய நாற்றங்கால்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 6 Tamil Text Books – Download

சொல்லும் பாெருளும்

  • மெய் – உண்மை
  • தேசம் – நாடு

பாடலின் பொருள்

பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது. காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன. புல்வெளிகள் எல்லா ம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன.

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.

நூல் வெளி

  • தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
  • கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.
  • புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.
  • இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிபபிடும் நூல் ________

  1. திருவாசகம்
  2. திருக்குறள்
  3. திரிகடுகம்
  4. திருப்பாவை

விடை : திருக்குறள்

2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் ________

  1. காவிரிக்கரை
  2. கங்கைக்கரை
  3. கங்கைக்கரை
  4. யமுனைக்கரை

விடை : காவிரிக்கரை

3. கலைக்கூடமாகக் காட்சி தருவது ________

  1. சிற்பக்கூடம்
  2. ஓவியக்கூடம்
  3. பள்ளிக்கூடம்
  4. சிறைக்கூடம்

விடை : சிற்பக்கூடம்

4. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. நூல்+ஆடை
  2. நூலா+ டை
  3. நூல்+ லாடை
  4. நூலா+ஆட

விடை : நூல்+ஆடை

5. எதிர் + ஒலிக்க என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ________

  1. எதிரலிக்க
  2. எதிர்ஒலிக்க
  3. எதிரொலிக்க
  4. எதிர்ரொலிக்க

விடை : எதிரொலிக்க

நயம் அறிக

1. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகைச் சாெற்களை எடுத்து எழுதுக.

  • மெய்களைப் – மெய்யுணர்வு
  • ன்னை – அன்னிய

2. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள மோனைச் சாெற்களை எடுத்து எழுதுக

  • புதுமைகள் – பூமியின்
  • காளிதாசனின் –  காவிரிக் கரையில்
  • புல்வெளி – புன்னகை
  • ன்னை – ன்னிய
  • ல்லை – ட்டி
  • ண்ணல் – றத்தின்

3. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள இயைபுச் சாெற்களை எடுத்து எழுதுக

  • தேசமிது – வாசலிது
  • நூலாடை – மேலாடை
  • எதிரொலிக்க – இசையமைக்க
  • பூத்தொடுக்கும் – நலம்கேட்கும்

குறு வினா

1. தாராபாரதியின் பாடலில் இடம்பெற்று கவிஞர்களின் பெயர்களை குறிப்பிடுக

திருவள்ளுவர், காளிதாசர், கம்பர் ஆகியோர் தாராபாரதியின் பாடலில் இடம் பெற்றள்ள கவிஞர்கள் ஆவார்கள்

2. இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைநத்து கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.

மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து உருவாகும் ஆறுகள் கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலப்பதை “மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்கு கரையில் நலம் கேட்கும்!” என்று காட்சிப்படுத்துகிறார் கவிஞர்

சிந்தனை வினா

நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பார் திருநாவுக்கரசர். ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வு உடையவர்களாய் வளர்ந்தால் தான் வீடும் நாடும் நலம் பெறும் மாணவர்கள் தம் பள்ளிப்பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக  பள்ளிகளில் செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித்திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர்கள் இவ்வமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம்.

இவ்வாறெல்லாம் செய்தால் நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் நன்மக்களாக மாணவர்கள் மாற முடியும்.

கூடுதல் வினாக்கள்

பொருள் கூறுக

  • மெய் – உண்மை
  • தேசம் – நாடு
  • அமுதம் – அமிர்தம்
  • கோல் – கம்பு
  • அமுதசுரபி – எடுக்க எடுக்க குறையாமல் உணவு தரும் கலன்

பிரித்து எழுதுக

  • தேசமிது = தேசம் + இது
  • வாசலிது =  வாசல் + இது
  • மேலாடை = மேல் + ஆடை
  • மெய்யுணர்வு = மெய் + உணர்வு
  • பூக்காடு = பூ + காடு
  • அமுதக்கவிதை = அமுதம் + கவிதை
  • கைத்தடி = கை + தடி
  • கலைக்கூடம் = கலை + கூடம்
  • இசையமைக்க = இசை + அமைக்க

எதிர்ச்சொல்

  • மெய் x பொய்
  • பழமை x புதுமை
  • அமுதம் x நஞ்சு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் _________

  1. கவிமணி
  2. சுரதா
  3. தாராபாரதி
  4. வாணிதாசன்

விடை : தாராபாரதி

2. கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்ற கவிஞர் ________

  1. சுரதா
  2. தாராபாரதி
  3. வாணிதாசன்
  4. கவிமணி

விடை : தாதாபாரதி

3. விரல் நுனி வெளிச்சங்கள் என்ற கவிதையை எழுதிய கவிஞர் ________

  1. தாராபாரதி
  2. சுரதா
  3. வாணிதாசன்
  4. கவிமணி

விடை : தாராபாரதி

4. அள்ள அள்ள குறையாத அமுதசுரபியாக விளங்குவது _________

  1. பாரத நாடு
  2. குமரிமுனை
  3. இமயமலை
  4. பொதிகை மலை

விடை : பாரத நாடு

5. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கூறியவர் 

  1. திருஞானசம்பந்தர்
  2. திருநாவுக்கரசர்
  3. சுந்தரரர்
  4. மாணிக்கவாசகர்

விடை : திருநாவுக்கரசர்

6. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் ______ விளங்குகின்றது.

  1. மேலாடை
  2. கைத்தடி
  3. நூலாடை
  4. அகிம்சை

விடை : கைத்தடி

குறுவினா

1. பூமியின் கிழக்கு வாசலாகத் திகழ்வது எது?

பூமியின் கிழக்கு வாசலாகத் திகழ்வது நமது இந்திய நாடு

2. நம்நாடு அணிந்திருக்கும் ஆடை எது

திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது.

3. கங்கை மற்றும் காவிரி வரை உள்ளவை எவை?

காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

சிறுவினா

தாதாபாரதி பற்றிய குறிப்பு வரைக

  • தாதாபாரதியின் இயற்பெயர் இராதா கிருஷ்ணன்
  • கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்
  • புதிய விடில்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment