பாடம் 8.1 பராபரக்கண்ணி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 8.1 – “பராபரக்கண்ணி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பாெருளும்
- தண்டருள் – குளிர்ந்த கருணை
- கூர் – மிகுதி
- செம்மையருக்கு – சான்றோருக்கு
- ஏவல் – தாெண்டு
- பராபரமே – மேலான பொருள்
- பணி – தொண்டு
- எய்தும் – கிடைக்கும்
- எல்லாரும் – எல்லா மக்களும்
- அல்லாமல் – அதைத்தவிர
பாடலின் பொருள்
- அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.
- அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.
- எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன்.
நூல் வெளி
- பராபரக்கண்ணி பாடலை எழுதியவர் தாயுமானவர்.
- திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர்.
- இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது.
- இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர்.
- இப்பாடல்கள் பராபரக் கண்ணி என்னும் தலைப்பில் உள்ளன.
- கண்ணி என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- தம்முயிர்
- தமதுயிர்
- தம்உயிர்
- தம்முஉயிர்
விடை : தம்முயிர்
2. இன்புற்று + இருக்கை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- இன்புற்றிருக்கை
- இன்புறுறிருக்கை
- இன்புற்றுஇருக்கை
- இன்புறுஇருக்கை
விடை : இன்புற்றிருக்கை
3. தானென்று என்பதனைச் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்
- தானெ + என்று
- தான் + என்று
- தா + னென்று
- தான் + னென்று
விடை : தான் + என்று
4. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்
- அழிவு
- துன்பம்
- சுறுசுறுப்பு
- சோகம்
விடை : சுறுசுறுப்பு
நயம் அறிக
பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
மோனைச் சொற்கள்
தம்உயிர்போல் – தண்டருள் | செம்மையருக்கு – செய்வேன் |
இன்புற்று – இருக்க | அல்லாமல் – அறியேன் |
எதுகைச் சொற்கள்
தம்உயிர் – செம்மையருக்கு | செய்யஎனை – எய்தும் |
அன்பர்பணி – இன்பநிலை | எல்லாரும் – அல்லாமல் |
குறு வினா
1. யாருக்குத் தாெண்டு செய்ய வேண்டும்?
அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தாெண்டு செய்ய வேண்டும்.
2. இன்பநிலை எப்போது வந்து சேரும்?
அன்பர்களுக்குத் தாெண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும் இன்பநிலை தானே வந்து சேரும்.
சிறு வினா
பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை?
அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தாெண்டு செய்ய வேண்டும். அன்பர்களுக்குத் தாெண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும் இன்பநிலை தானே வந்து சேரும். எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று தாயுமானவர் வேண்டுகிறார்.
சிந்தனை வினா
குளிரால் வாடுபவர்களுக்கு நீங்கள் எவ்விதம் உதவுவீர்கள்?
குளிரால் வாடுபவர்களுக்கு வீடுகள் கட்டுக் கொடுப்பேன். ஆடைகள் வாங்கிக் கொடுப்பேன். தேநீர், காபி வாங்கிக் கொடுப்பேன். பாய், போர்வை, ஸ்வட்டர், கம்பளிப் போர்வை, குல்லா, மப்ளர் போன்றவைகள் வாங்கிக் கொடுப்பேன். வீட்டில் அடைக்கலம் தருவேன். நெருப்பு மூட்டி குளிரைப் போக்குவேன்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பராபரமே என்பதற்கு ________ என்று பொருள்
- மிகுதி
- சான்றோருக்கு
- மேலான பொருள்
- தொண்டு
விடை : மேலான பொருள்
2. எல்லாரும் ________ வாழ வேண்டும்.
- துன்பமாக
- மகிழ்ச்சியாக
- சோர்வாக
- இன்பமாக
விடை : இன்பமாக
3. பராபரக்கண்ணி ________ என்னும் நூலில் உள்ளது
- தாயுமானவர் பாடல்கள்
- பாரதியார் பாடல்கள்
- பாரதிதாசன் பாடல்கள்
- வள்ளுவர் பாடல்கள்
விடை : தாயுமானவர் பாடல்கள்
4. ________ எனப் போற்றப்படுவது பராபரக்கண்ணி
- உலகப்பொதுமறை
- தமிழ் மொழி உபநிடதம்
- பொய்யா மொழி
- முப்பால்
விடை : தமிழ் மொழி உபநிடதம்
5. கூர் என்பதனைக் குறிக்கும் சொல்
- மிகுதி
- கருணை
- குறைவு
- தொண்டு
விடை : மிகுதி
6. சோம்பல் என்பதன் இருபொருள் தருக
- மடி, மந்தம்
- மடி, கருணை
- மந்தம், குறைவு
- தொண்டு, கூர்
விடை : மடி, மந்தம்
பிரித்து எழுதுக
- எவ்வுயிரும் = எ + உயிரும்
- இன்பநிலை = இன்பம் + நிலை
- இன்புற்ற = இன்பம் +உற்ற
- வேறொன்று = வேறு + ஒன்று
- வந்தெய்தும் = வந்து + எய்தும்
- ஆளாக்கி = ஆள் + ஆக்கி
எதிர்ச்சொல் எழுதுக
- இன்பம் x துன்பம்
- வந்து x சென்று
- நினைக்க x மறக்க
வினாக்கள்
1. தாயுமானவர் எதையும் நினைக்க மாட்டேன் என்று எதை கூறுகிறார்?
எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று தாயுமானவர் வேண்டுகிறார்.
2. தாயுமானவர் பற்றி குறிப்பு எழுதுக
- பராபரக்கண்ணி என்னும் நூலை எழுதியவர் தாயுமானவர்
- திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்காராகப் பணி புரிந்தவர்.
3. ‘கண்ணி’ என்பது யாது?
‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.