பாடம் 2.5 நால்வகைக் குறுக்கங்கள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 2.5 – “நால்வகைக் குறுக்கங்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ______.
- அரை
- ஒன்று
- ஒன்றரை
- இரண்டு
விடை : அரை
2. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ________.
- போன்ம்
- மருண்ம்
- பழம் விழுந்தது
- பணம் கிடைத்தது
விடை : பணம் கிடைத்தது
3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _______.
- ஐகாரக் குறுக்கம்
- ஔகாரக் குறுக்கம்
- மகரக் குறுக்கம்
- ஆய்தக் குறுக்கம்
விடை : ஔகாரக் குறுக்கம்
குறு வினா
1. ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?
ஔ, வெள என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
2. சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை
முதல் = 1 ½ மாத்திரை
இடை = 1 மாத்திரை
இறுதி = 1 மாத்திரை
3. மகரக்குறுக்கத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
வலம் வந்தான், போலும்
கூடுதல் வினாக்கள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மூவிடங்களிலும் குறுகும் குறுக்கம் _________
விடை : ஐகாகரக்குறுக்கம்
2. சொல்லுக்கு முதலில் மட்டுமே குறுகும் குறுக்கம் _________
விடை : ஒளகாகரக்குறுக்கம்
3. ஆய்தம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிப்பது _________
விடை : ஆய்தக்குறுக்கம்
குறு வினா
1. குறுக்கங்கள் என்றால் என்ன?
சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவை விடக் குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.
2. ஔகாரக்குறுக்கம் என்றால் என்ன?
ஔகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஔகாரக்குறுக்கம் எனப்படும்.
ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது. சொல்லின் முதலில் மட்டுமே வரும்
எ.கா. ஒளவையார், வெளவால்
3. ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன?
ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஐகாரக்குறுக்கம் எனப்படும். சொல்லின் முதல். இடை, கடை ஆகிய இடங்களில் குறுகும்
எ.கா. சைவம், சமையல்
4. மகரக்குறுக்கம் என்றால் என்ன?
மகரம் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும்.
எ.கா. வலம் வந்தான்
5. ஆய்தக்குறுக்கம் என்றால் என்ன?
ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் எனப்படும்.
எ.கா. கஃறீது
மொழியை ஆள்வோம்
அறிந்து பயன்படுத்துவோம்.
பால் ஐந்து வகைப்படும். அவை
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- ஒன்றன்பால்
- பலவின்பால்
ஆகியனவாகும்.
உயர்திணையில்,
1. ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால்.
(எ.கா.) மாணவன், செல்வன்.
2. ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால்.
(எ.கா) ஆதினி, மாணவி .
3. ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால்.
(எ.கா.) மாணவர்கள், மக்கள்.
அஃறிணையில்
4. ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால்.
(எ.கா.) கல், பசு.
5. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால்.
(எ.கா.) மண் புழுக்கள், பசுக்கள்.
எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.
1. மகளிர் x ஆடவர் | 2. அரசன் x அரசி |
3. பெண் x ஆண் | 4. மாணவன் x மாணவி |
5. சிறுவன் x சிறுமி | 6. தோழி x தோழன் |
படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுக.
ஒன்றன்பால் | ஆண்பால் | ஒன்றன்பால் |
பெண்பால் | பலர்பால் | பலவின்பால் |
பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.
1. கண்ணகி சிலம்பு அணிந்தான்.
விடை : கண்ணகி சிலம்பு அணிந்தாள்.
2. கோவலன் சிலம்பு விற்கப் போனாள்.
விடை : கோவலன் சிலம்பு விற்கப் போனான்
3. அரசர்கள் நல்லாட்சி செய்தார்.
விடை : அரசர்கள் நல்லாட்சி செய்தனர்.
4. பசு கன்றை ஈன்றன.
விடை : பசு கன்றை ஈன்றது.
5. மேகங்கள் சூழ்ந்து கொண்டது.
விடை : மேகங்கள் சூழ்ந்து கொண்டன.
6. குழலி நடனம் ஆடியது.
விடை : குழலி நடனம் ஆடினாள்
மொழியோடு விளையாடு
வட்டத்திலுள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை அமைக்க.
கல் | இலை | கடல் | கதை |
புல் | இயல் | கலை | கடலை |
புதையல் | தையல் | இல்லை |
சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.
வாழை | தயிர் | கூடு | திடல் | பாட்டு |
குருவி | கொய்யா | சோறு | பழம் | பறவை |
விளையாட்டு | கூட்டம் | அவரை | போட்டி | காய் |
- வாழை + காய் = வாழைக்காய்
- வாழை + பழம் = வாழைப்பழம்
- குருவி + கூடு = குருவிக்கூடு
- குருவி + கூட்டம் = குருவிக்கூட்டம்
- விளையாட்டு + திடல்= விளையாட்டுத்திடல்
- விளையாட்டு + போட்டி = விளையாட்டுப்போட்டி
- தயிர் + கூடு = தயிரக்கூடு
- தயிர் + சோறு = தயிர்ச்சோறு
- கொய்யா + காய் = கொய்யாக்காய்
- கொய்யா + பழம் = கொய்யாப்பழம்
- அவரை +காய் = அவரைக்காய்
- பாட்டு + போட்டி = பாட்டுப்போட்டி
- பறவை + கூடு = பறைவக்கூடு
- பறவை + கூட்டம் = பறவைக்கூட்டம்
விடுகதைகளுக்கு விடை எழுதுக.
1. மரம் விட்டு மரம் தாவுவேன்; குரங்கு அல்ல. வளைந்த வாலுண்டு; புலி அல்ல. கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல. முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?
விடை : அணில்
2. என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது. முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன். இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன். மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்?
விடை : குதிரை
3. வெள்ளையாய் இருப்பேன்; பால் அல்ல. மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?
விடை : கொக்கு
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்.
- தீவு – Island
- உவமை – Parable
- இயற்கை வளம் – Natural Resource
- காடு – Jungle
- வன விலங்குகள் – Wild Animals
- வனவியல் – Forestry
- வனப் பாதுகாவலர் – Forest Conservator
- பல்லுயிர் மண்டலம் – Bio Diversity