Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 4.2 – கவின்மிகு கப்பல்

 பாடம் 4.2 கவின்மிகு கப்பல்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 4.2 – “கவின்மிகு கப்பல்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • உரு – அழகு
  • வங்கம் – கப்பல்
  • போழ – பிளக்க
  • எல் – பகல்
  • வங்கூழ் – காற்று
  • நீகான் – நாவாய் ஓட்டுபவன்
  • கோடு உயர் – கடை உயர்ந்த
  • மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

பாடலின் பொருள்

உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய். அது புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும். இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும். உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்

நூல் வெளி

  • மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  • கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே.
  • மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.
  • அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
  • இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
  • இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

மதீப்பிடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் _______

  1. நிலம்
  2. நீர்
  3. காற்று
  4. நெருப்பு

விடை : காற்று

2. மக்கள் _______ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

  1. கடலில்
  2. காற்றில்
  3. கழனியில்
  4. வங்கத்தில்

விடை : வங்கத்தில்

3. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது _______

  1. காற்று
  2. நாவாய்
  3. கடல்
  4. மணல்

விடை : கடல்

4. பெருங்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. பெரு + கடல்
  2. பெருமை + கடல்
  3. பெரிய + கடல்
  4. பெருங் + கடல்

விடை : பெருமை + கடல்

5. இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______

  1. இன்றுஆகி
  2. இன்றிஆகி
  3. இன்றாகி
  4. இன்றாஆகி

விடை : இன்றாகி

6. எதுகை இடம்பெறாத இணை _______

  1. இரவு- இயற்கை
  2. வங்கம் – சங்கம்
  3. உலகு – புலவு
  4. அசைவு – இசைவு

விடை : இரவு – இயற்கை

பொருத்துக

1. வங்கம்பகல்
2. நீகான்கப்பல்
3. எல்கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரிநாவாய் ஓட்டுபவன்
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

குறுவினா

1. நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?

நாவாயின் தோற்றம் உலகம் இடம்பெயர்ந்தது போன்று இருந்ததாக அகநானூறு கூறுகிறது

2. நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?

இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்து நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று துணைசெய்கிறது.

சிறுவினா

கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?

  • உலகம் இடம்பெயர்ந்தது போன்று அழகிய தோற்றமுடையது நாவாய்.
  • அது புலால் நாற்றம் உடைய கடலின் நீரைப் பிரிந்து பிளந்து கொண்டு செல்லும்.
  • இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும்.
  • உயர்ந்த தரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான் என கடலின் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு விளக்குகிறது.

சிந்தனை வினா

தரைவழிப்பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன்?

தரைவழிப்பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நான் விரும்புவது கடல்வழிப் பயணம்

காரணம் :

கடலின் அழகைக் கண்டு மகிழவும், கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழவும் கடல்வழி பயணமே சிறந்தது. எனவே, நான் கடல்வழிப் பயணத்தை விரும்புகிறேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல் _______

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. அகநானூறு
  4. பரிபாடல்

விடை : அகநானூறு

2. அகநானூறு _______ நூல்களுள் ஒன்று

  1. பதினென்கீழ்கணக்கு
  2. பதினென்மேல்கணக்கு
  3. எட்டுத்தொகை
  4. பத்துப்பாட்டு

விடை : எட்டுத்தொகை

3. கலித்தொகையில் மருதத்திணைப் பாடல்களை பாடிய புலவர் _______

  1. ஓரம்போகியார்
  2. ஓதாலாந்தையார்
  3. பேயனார்
  4. மருதன் இளநாகனார்

விடை : மருதன் இளநாகனார்

4. கவின்மிகு கப்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல் இடம் பெறும் நூல் _______

  1. அகநானூறு
  2. நற்றிணை
  3. குறுந்தொகை
  4. பரிபாடல்

விடை : அகநானூறு

5. எல் என்ற சொல்லின் பொருள் _______

  1. பகல்
  2. பிளக்க
  3. அழகு
  4. கரை

விடை : பகல்

6. “கலங்கரை விளக்கம்” என்னும் பொருள் தரும் சொல் _______

  1. நீகான்
  2. மாட ஒள்ளெரி
  3. எல்
  4. கோடு உயர்

விடை : மாட ஒள்ளெரி

7. பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்வது _______

  1. கலங்கரை விளக்கம
  2. காற்று
  3. நீகான்
  4. நாவாய்

விடை : நாவாய்

பொருத்துக

1. உருபிளக்க
2. போழஅழகு
3. வங்கூழ்கரை உயர்ந்த
4. கோடு உயர்காற்று
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பிரித்து எழுதுக

  1. புலவுத்திரை = புலவு + திரை
  2. பெருங்கடல் =  பெருமை + கடல்
  3. அகநானூறு = அகம் + நானூறு
  4. புறநானூறு = புறம் + நானூறு

குறு வினா

1. புலால் நாற்றமுடையது எது?

அலை வீசும் பெரிய கடல் நீர் புலால் நாற்றமுடையது

2. கப்பல் என்பதற்கும் பாடலில் இடம் பெறும் வேறு சொல் எது?

கப்பல் என்பதற்கும் பாடலில் இடம் பெறும் வேறு சொல் – வங்கம்

3. மருதன் இளநாகனார் பெயர்க்காரணம் கூறு

மருத்த்திணை பாடுவதில் வல்வர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்

4. மருதன் இளநாகனார் பற்றி குறிப்பு எழுதுக?

  • மருதன் இளநாகனார் சங்காலப்புலவர்களுள் ஒருவர்
  • கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களை பாடியவர்.
  • மருத்த்திணை பாடுவதில் வல்வர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.

5. அகநானூறு பற்றி குறிப்பு எழுதுக?

  • அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • புலவர் பலரால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது
  • நெடுந்தொகை எனவும் அழைக்கப்படுகிறது

சிறு வினா

எட்டுத்தொகை நூல்கள் யாவை?

நற்றிணைகுறுந்தொகை
ஐங்குறுநூறுபதிற்றுப்பத்து
பரிபாடல்கலித்தொகை
அகநானூறுபுறநானூறு

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment