Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 9.2 – தன்னை அறிதல்

 பாடம் 9.2 தன்னை அறிதல்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 9.2 – “தன்னை அறிதல்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

கவிதையின் உட்பொருள்

குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த குயில்குஞ்சு தன்னைக் காக்கைக்குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது. தனியே சென்று வாழ அஞ்சுகிறது. தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது. நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்பது இக்கவிதையின் உட்பொருள் ஆகும்.

நூல் வெளி 

  • சே. பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர்.
  • மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
  • இக்கவிதை மகளுக்குச் சொன்ன கதை என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கூடுகட்டத் தெரியாத பறவை _______.

  1. காக்கை
  2. குயில்
  3. சிட்டுக்குருவி
  4. தூக்கணாங்குருவி

விடை : குயில்

2. தானொரு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. தா + ஒரு
  2. தான் + னொரு
  3. தான் + ஒரு
  4. தானே + ஒரு

விடை : தான் + ஒரு

குறு வினா

1. காக்கை ஏன் குயில் குஞ்சை போகச் சொன்னது?

காக்கை கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல. குயில் குஞ்சு தான் என்று ஒரு நாள் தெரிய வந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது.

2. குயில் குஞ்சு தன்னை எப்போது ‘குயில்’ என உணர்ந்தது?

ஒரு விடியலில் குயில் குஞ்ச “கூ” என்று கூவயிது. அன்று தான் ஒரு “குயில்” என உணர்ந்தது.

சிறு வினா

குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக

காக்கை கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல. குயில் குஞ்சு தான் என்று ஒரு நாள் தெரிய வந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது.

அதனால் தாய் காக்கையை விட்டுச் செல்ல முடியவில்லை. அந்த மரத்திலேயே வாழ ஆரம்பித்தது. “கா” என்று கத்த முயற்சித்தது, அதனால் முடியவில்லை.

அதற்குக் கூடு கட்டத் தெரியாது. அம்மா, அப்பா, தோழர் யாரும் இல்லை. குளிர், மழை, வெயில் ஆகியவற்றை கடந்தது. தானே இரை தேடத் தொடங்கியது.

வாழ்க்கை வாழப் பழகி விட்டது. ஒரு விடியலில் குயில் குஞ்ச “கூ” என்று கூவயிது. அன்று தான் ஒரு “குயில்” என உணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தன்னை அறிதல் கவிதை இடம் பெற்ற நூல் ……………

  1. மழை பற்றிய பகிர்தல்கள்
  2. வீடு முழுக்க வானம்
  3. மகளுக்குச் சொன்ன கதை
  4. எதுவுமில்லை

விடை : மகளுக்குச் சொன்ன கதை

2. குயில் ………………….. ன் கூட்டில் முட்டையிட்டது

  1. காக்கை
  2. குருவி
  3. குயில்
  4. புறா

விடை : காக்கை

3. ………………….. கூகூ எனக் கூவியது

  1. குயில் குஞ்சு
  2. காகம்
  3. கொக்கு
  4. வாத்து

விடை : குயில் குஞ்சு

குறு வினா

1. காக்கையின் கூட்டில் முட்டையிட்டது எது?

குயில் காக்கையின் கூட்டில் முட்டையிட்டது

2. காக்கையைப் போல கரைய முயல்வது எது?

குயில் குஞ்சு காக்கையைப் போல கரைய முயன்றது

3. தன்னை அறிதல் என்ற கவிதையில் உட்பொருள் யாது?

நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகள் புரியலாம்

4. சே.பிருந்தா குறிப்பு வரைக

சே.பிருந்தா புகழ்பெற்ற பெண் கவிஞர்களுள் ஒருவர். மழை பற்றி பகிர்தல்கள். வீடு முழுக்க வானம், மகளுக்கு சொன்ன கதை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment