Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 2.6 – திருக்குறள்

பாடம் 2.6 திருக்குறள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 2.6 – “திருக்குறள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

மதிப்பீடு

  • பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய சிறப்பு பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
  • திருக்குறள் உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல்
  • அறம், பொருள், இன்பம் என முப்பால் பகுப்புகள் கொண்டது
  • அறத்துபால் பாயிரவியல், இல்லறவியல் துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களை கொண்டது.
  • பொருட்பால் அரசியல், அமைச்சியல் ஒழிபியல் என மூன்று இயல்களை கொண்டது.
  • இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என இரு இயல்களை கொண்டது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது ……………..

  1. அடக்கமுடைமை
  2. நாணுடைமை
  3. நடுவு நிலைமை
  4. பொருளுடைமை

விடை : நடுவு நிலைமை

2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் …………………

  1. வலிமையற்றவர்
  2. கல்லாதவர்
  3. ஒழுக்கமற்றவர்
  4. அன்பில்லாதவர்

விடை : கல்லாதவர்

3. வல்லுருவம் என்னும் சொல்லை  பிரித்து எழுதக் கிடப்பது …………………

  1. வல் + உருவம்
  2. வன்மை  + உருவம்
  3. வல்ல + உருவம்
  4. வல்லு + உருவம்

விடை : வன்மை  + உருவம்

4. நெடுமை + தேர் என்பதை்சேர்த்து எழுத கி்டக்கும் சொல் ………………….

  1. நெடுதேர்
  2. நெடுத்தேர்
  3. நெடுந்தேர்
  4. நெடுமைதேர்

விடை : நெடுந்தேர்

5. வருமுன்னர் எனத்  தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ………………

  1. எடுத்துக்காட்டு உவமை அணி
  2. தற்குறிப்பேற்று  அணி
  3. உவமை  அணி
  4. உருவக அணி

விடை : உவமை  அணி

குறு வினா

1. சான்றோர்க்கு அழகாவது எது?

துலாக்கோல் போல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

2. பழியின்றி வாழும் வழியாக, திருக்குறள் கூறுவது யாது?

தலைவன் முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன் பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

3. ‘புலித் தோல் போர்த்திய பசு’ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

மனத்தை அடக்கும் வல்லமை இல்லதாவர் மேற்கொண்ட தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக.

1. தக்கார் தகவிலரெ ன்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்

2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது

கோடிட்ட  இடத்தை நிரப்புக.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் _____________
புலியின்தோல் _____________ மேய்ந் தற்று.

விடை : பெற்றம், போர்த்த

2. விலங்கொடு _____________ அனையர் _____________
கற்றாரோடு ஏனை யவர்

விடை : மக்கள், இலங்குநூல்

சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு

விடை :-

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக.

Class 8 Tamil Chapter 2.6 படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக.

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

Class 8 Tamil Chapter 2.6 படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக.

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. திருவள்ளுவர் ……………………. ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

  1. ஆயிரம்
  2. இரண்டாயிரம்
  3. மூவாயிரம்
  4. நான்காயிரம்

விடை : இரண்டாயிரம்

2. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ………………………..

  1. புறநானூறு
  2. தொல்காப்பியம்
  3. சீவகசிந்தாமணி
  4. திருக்குறள்

விடை : திருக்குறள்

3. திருக்குறள் ……………………. பகுப்புக் கொண்டது.

  1. இருபால்
  2. நான்குபால்
  3. முப்பால்
  4. ஐந்துபால்

விடை : முப்பால்

4. நடுவுநிலைமையுடன் செயல்படுவதே …………………….. அழகாகும்.

  1. மகளிர்க்கு
  2. நல்வர்க்கு
  3. சான்றோர்க்கு
  4. தீயோருக்கு

விடை : சான்றோர்க்கு

சிறு வினா

1. திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் யாவை?

பெருநாவலர், முதற்பாவலர், நாயனார்

2. திருக்குறளின் முப்பால் பகுப்புகள் எவை?

அறம், பொருள், இன்பம்

3. அறத்துபால் கொண்ட இயல்கள் எத்தனை?

பாயிரவியல், இல்லறவியல் துறவறவியல், ஊழியல்

4. பொருட்பால் இயல்களை கூறு?

அரசியல், அமைச்சியல் ஒழிபியல்

5. இன்பத்துப்பாலின் இரு இயல்கள் எவை?

களவியல், கற்பியல்

6. பொருத்தமான இடத்தை அறியாமல் எதனை கூடாது என வள்ளுவர் கூறுகிறார்?

பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும், தொடங்கவும் கூடாது; இகழவும் கூடாது.

7. கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது எதற்கு இணையானது?

கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

8. கல்லாதவர் எதைப் போன்றவர்?

கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர்.

9. எவரால் எந்தப் பயனும் இல்லை என வள்ளுவர் கூறுகிறார்?

கல்லாதவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை.

10. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – என்ற பாடலில் உள்ள அணியினை கூறு

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து

– இப்பாடலில் உள்ள அணி பிறிது மொழிதல் அணி ஆகும்

விளக்கம்

அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாக செயல்பட முடியும் என்பதே புலவர் கூற விரும்பிய கருத்து. ஆனால் அதனைக் கூறாமல் பெரியதோர் கடலில் ஓடாது.கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓடாது என உவமையா வேறொன்றைக் கூறியுள்ளார்.இவ்வாறு உவமையை மட்டும் கூறிப் பொருளினைப் பெற வைப்பதனால் பிறிது மொழிதல் அணி ஆகும்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment