பாடம் 3.5 எச்சம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 3.5 – “எச்சம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ……………… எனப்படும்.
- முற்று
- எச்சம்
- முற்றெச்சம்
- வினையெச்சம்
விடை : எச்சம்
2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ………………….
- படித்து
- எழுதி
- வந்து
- பார்த்த
விடை : பார்த்த
3. குறிப்பு வினையெச்சம் …………………. வெளிப்படையாகக் காட்டாது.
- காலத்தை
- வினையை
- பண்பினை
- பெயரை
விடை : காலத்தை
பொருத்துக
1. நடந்து | அ. முற்றெச்சம் |
2. பேசிய | ஆ. குறிப்புப் பெயரெச்சம் |
3. எடுத்தனன். உண்டான் | இ. பெயரெச்சம் |
4. பெரிய | ஈ. வினையெச்சம் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ |
கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.
நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து.
பெயரெச்சம் | வினையெச்சம் |
நல்ல | படுத்து |
எறிந்த | பாய்ந்து |
வீழ்ந்த | கடந்து |
மாட்டிய | பிடித்து |
அழைத்த | பார்த்து |
சிறு வினா
1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்
2. ‘அழகிய மரம்’ – எச்ச வகையை விளக்குக.
- ‘அழகிய மரம்’ – இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறிய முடிகிறது.
- இவ்வாறு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
3. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
சான்று : வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.
இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.
4. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக
வினையெச்சங்கள் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்
தெரிநிலை வினையெச்சம் :-
எழுதி வந்தான்
இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
குறிப்பு வினையெச்சம் :-
மெல்ல வந்தான்
இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.
இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
கூடுதல் வினாக்கள்
1. பெயரெச்சம் என்றால் என்ன?
பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும்.
2. வினையெச்சம் என்றால் என்ன?
இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
3. பெயரெச்சம் எத்தனை காலத்தில் வரும்? சான்று தருக.
பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்
சான்று :-
- பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
- பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
- பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்
4. பெயரெச்சத்தின் வகைகளை விளக்குக
பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்
தெரிநிலை பெயரெச்சம்
எழுதிய கடிதம்
இத்தொடரில் உள்ள எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.
குறிப்புப் பெயரெச்சம்
சிறிய கடிதம்
இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது.
இவ்வாறு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
மொழியை ஆள்வோம்!
பொருத்துக
1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல | அ. ஒற்றுமையின்மை |
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல | ஆ. பயனற்ற செயல் |
3. பசு மரத்து ஆணி போல | இ. தற்செயல் நிகழ்வு |
4. விழலுக்கு இறைத்த நீர் போல | ஈ. எதிர்பாரா நிகழ்வு |
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல | உ. எளிதில் மனத்தில் பதிதல் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ , 4 – ஆ, 5 – அ |
அறிந்து பயன்படுத்துவோம்.
உவமைத் தொடர்கள்
நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும்.
ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.
(எ.கா)
1. மடை திறந்த வெள்ளம் போல் – தடையின்றி மிகுதியாக.
திருவிழாவைக் காண மடைதிறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.
2. உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படைத் தன்மை
பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.
உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.
1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல
விடை : குன்றின் மேலிட்ட விளக்கைப் போல திருக்குறளின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது.
2. வேலியே பயிரை மேய்ந்தது போல
விடை : வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டை காப்பாற்ற வேண்டிய தலைவர்களே மக்களை துன்புறுத்துகின்றன.
3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
விடை : பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல பரிசுத் தொகையாக இலட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனுக்குக் கோடி கிடைத்தது.
4. உடலும் உயிரும் போல
விடை : உடலும் உயிரும் போல கணவனும் மனைவியும் அன்போடு வாழ்ந்தன.
5. கிணற்றுத் தவளை போல
விடை : கிணற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலே தம் அறியாமையை வெளிப்படுத்தி விடுவர்.
மொழியோடு விளையாடு
கீழ்காணும் படம் சார்ந்த சொற்களை எடுத்து எழுதுக
உரல் | உலக்கை |
சுக்கு | மிளகு |
சீரகம் | பட்டை |
மல்லி | பூ |
புதினா | கடுகு |
பூண்டு | ஏலக்காய் |
வெற்றிலை | அண்ணாச்சி |
வெந்தையம் | கொத்தமல்லி |
எண்ணெய் | வத்தல் |
கருஞ்சிரகம் | சோம்பு |
கிராம்பு | கசகசா |
வட்டத்திலுள்ள பழமொழிகளை கண்டுபிடித்து எழுதுக
- முயற்சி திருவினையாக்கும்
- அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
- சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்
- அறிவே ஆற்றல்
- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
- வருமுன் காப்போம்
- சுத்தம் சோறு போடும்
- பருவத்தே பயிர் செய்
- பசித்து புசி
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்.
நோய் – Disease | பக்கவிளைவு – Side Effect |
நுண்ணுயிர் முறி – Antibiotic | மூலிகை – Herbs |
சிறுதானியங்கள் – Millets | மரபணு – Gene |
பட்டயக் கணக்கர் – Auditor | ஒவ்வாமை – Allergy |