பாடம் 5.1 திருக்கேதாரம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 5.1 – “திருக்கேதாரம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- பண் – இசை
- கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை
- மதவேழங்கள் – மதயானைகள்
- முரலும் – முழங்கும்
- பழவெய் – முதிர்ந்த மூங்கில்
பாடலின் பொருள்
பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும். கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும். நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.
நூல் வெளி
- சுந்தரர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
- “நம்பியாரூரர், தம்பிரான் தோழர்” என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
- இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
- இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தளித்தார்.
- திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர் ஆகிய பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
- இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
- இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
- தே + ஆரம் – இறைவனுக்குச் சூடப்படும் மாலை என்றும், தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும்.
- பதிகம் என்பது பத்துப் பாடல்களை கொண்டது.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கொட்டிலிருந்து வந்த ……………. கரும்பைத் தின்றன.
- முகில்கள்
- முழவுகள்
- வேழங்கள்
- வேய்கள்
விடை : வேழங்கள்
2. கனகச்சுனை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
- கனகச் + சுனை
- கனக + சுனை
- கனகம் + சுனை
- கனம் + சுனை
விடை : கனகம் + சுனை
3. முழவு + அதிர என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ………………..
- முழவுதிர
- முழவுதிரை
- முழவதிரி
- முழவுஅதிர
விடை : முழவதிர
குறு வினா
தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?
புல்லாங்குழல் மற்றும் முழுவு ஆகியவற்றைத் தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுகின்றார்
சிறு வினா
திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?
- பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.
- கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்.
- நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.
- இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் என்று சுந்தரர் வருணனை செய்கிறார்.
சிந்தனை வினா
விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக.
திருவிழாக் கூட்டத்தில் இரைச்சலைக் குறைக்கவும், திருவிழா நிகழ்வு நடக்கப்போகிறது என்பதை அறிவிக்கவும், இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அந்த உயிர்களைப் படைத்த இறைவன் இசையை விரும்புவான். அதனால் விழாக்களின் போது இசைக்கருவிகள் இசைக்கும் வழகம் ஏற்பட்டிருக்கலாம். இசைக்கருவிகளை இசைக்கும்போது உணர்ச்சிப் பெருக்கும், பக்திப் பெருக்கம் ஏற்படுவதாலும் விழாக்களின் போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் தோன்றியிருக்கும்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர் ………………
- சுந்தரர்
- திருநாவுக்கரசர்
- மாணிக்கவாசகர்
- திருஞானசம்பந்தரர்
விடை : சுந்தரர்
2. தேவாரத்தைத் தொகுத்தவர் ………………….
- திருநாவுக்கரசர்
- மாணிக்கவாசகர்
- திருஞானசம்பந்தரர்
- நம்பியாண்டார் நம்பி
விடை : நம்பியாண்டார் நம்பி
3. பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர் ……………….
- திருநாவுக்கரசர்
- மாணிக்கவாசகர்
- சுந்தரர்
- திருஞானசம்பந்தரர்
விடை : சுந்தரர்
4. திருக்கேதாரம் எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர் சுந்தரர்
- திருநாவுக்கரசர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
- திருஞானசம்பந்தரர்
விடை : சுந்தரர்
5. பதிகம் என்பது …………….. பாடல்களை கொண்டது
- ஏழு
- எட்டு
- ஒன்பது
- பத்து
விடை : பத்து
6. .……………….. பொன் வண்ண நிறமாக இருந்ததாகச் சுந்தரர் குறிப்பிடுகிறார்
- நீர்நிலைகள்
- நீர்த்திவலைகள்
- புல்லாங்குழல்
- மணல்
விடை : நீர் நிலைகள்
7. ………………… வைரங்களைப் போல இருந்ததாகத் திருகேதாரம் குறிப்பிடுகிறது
- நீர்நிலைகள்
- புல்லாங்குழல்
- நீர்த்திவலைகள்
- மணல்
விடை : நீர்த்திதிவலைகள்
குறு வினா
1. தேவாரத்தை பாடியவர்கள் யார்?
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
2. பதிகம் எத்தனை பாடல்களை கொண்டது?
பதிகம் பத்து பாடல்களை கொண்டது
3. தேவாரம் பெயர்க்காரணம் கூறுக.
- தே + ஆரம் = இறைவனுக்கு சூடப்படும் மாலை
- தே + ஆரம் = இனிய இசை பொருந்திய பாடல்
4. கண்ணுக்குக் குளிர்ச்சி தருபவை என்று சுந்தரர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
பொன் வண்ண நீர்நிலைகள் கண்ணுக்குக் இனிய குளிர்ச்சி தருபவை என்று சுந்தரர் எவற்றைக் குறிப்பிடுகிறார்
5. நீர் நிலைகள் மற்றும் நீர்த் திவலைகள் ஆகியவற்றிற்குக் கூறப்பட்ட உவமை யாது?
- நீர் நிலைகள் – பொன் வண்ணம்
- நீர் திவலைகள் – வைரம்
6. மத யானைகளின் செயல்களாக் சுந்தரர் குறிப்பிடுவன யாவை?
நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மத யானைகள் மணிகளை வாரி வாரி வீசும் என்று சுந்தரர் குறிப்பிடுகிறார்.
7. உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது எது?
உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது இசை
சிறு வினா
சுந்தரர் குறிப்பு வரைக
- சுந்தரர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
- நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
- இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.