Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 7.3 – பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

 பாடம் 7.3 பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 7.3 – “பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. எம்.ஜி.ஆர் ………………….. என்னும் ஊரில் கல்வி பயின்றார்.

  1. கண்டி
  2. கும்பகோணம்
  3. சென்னை
  4. மதுரை

விடை : கும்பகோணம்

2. எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் …………………….

  1. நடிப்பு ஆர்வம்
  2. பள்ளி இல்லாமை
  3. குடும்ப வறுமை
  4. படிப்பில் ஆர்வமில்லாமை

விடை : குடும்ப வறுமை

3. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான ……………….. எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது.

  1. புரட்சித் தலைவர்
  2. பாரத்
  3. பாரத மாமணி
  4. புரட்சி நடிகர்

விடை : பாரத்

4. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் ……………………

  1. திருச்சி
  2. சென்னை
  3. மதுரை
  4. கோவை

விடை : மதுரை

5. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் ………………….

  1. மதிய உணவுத்திட்டம்
  2. வீட்டு வசதித் திட்டம்
  3. மகளிர் நலன் திட்டம்
  4. இலவசக் காலணித் திட்டம்

விடை : மதிய உணவுத்திட்டம்

குறு வினா

1. எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?

எம்.ஜி.ஆர். தன் குடும்ப வறுமை காரணமாக நாடகத்துறையில் ஈடுபட்டார்

2. திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் யாவை?

திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகளை எம்.ஜி.ஆரின் பெற்றிருந்தார்.

3. எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்களுள் நான்கனை எழுதுக.

  • ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டம்
  • ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம்
  • தாய் சேய் நல இல்லங்கள்
  • பற்பொடி வழங்கும் திட்டம்

சிறு வினா

1. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வை எழுதுக.

  • எம்.ஐி.ஆரும் அவரது மனைவியும் ஒரு முறை வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
  • அப்போது மூதாட்டி ஒருவரும், பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் காலில் காலணி இல்லாமல் தலையில் புல் கட்டுக்களைச் சுமந்தவாறு சென்று கொண்டிருந்தனர்.
  • சாலையின் சூடு தாங்காமால் மரநிழலில் நிற்பதும், ஒடுவதுமாக இருந்தனர்.
  • உடனே எம்.ஜி.ஆர் தமது மனைவியாரின் காலணியையும் உறவினப் பெண்ணின் காலணியையும் அவர்களுக்குக் கொடுத்துப் பணம் கொடுத்தார்.
  • இந்த நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்தது.
  • அதனால், பின்னர் பள்ளிக்குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

2. தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை?

  • தந்தைப் பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தி தமிழ் எழுத்து முறையை எளிமைப்படுத்தினார்.
  • மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
  • தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவினார்

நெடு வினா

எம்.ஜி.ஆரின் பண்பு நலன்களை விளக்கி எழுதுக.

  • திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகளை எம்.ஜி.ஆரின் பெற்றிருந்தார்.
  • தாம் நடித்த திரைப்படங்களின் பாடல்கள் மூலம் உயரிய கருத்துக்களை மக்களிடம் விதைத்தார்.
  • வாழ்வின் உயர்நிலையை அடைந்த பின்னரும் எளிமையாக வாழ வேண்டம் என்பதைத் தன் பாடல்களில் கூறினார். அப்பாடலுக்கு ஏற்ப தாமும் வாழ்ந்தார்.
  • ஏழை மக்கள் காலணி இல்லாமல் நடந்து செல்லும் நிகழ்ச்சி அவரது மனதை ஆழமாகப் பாதித்தது. அதனால் பின்னர் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு இலவச காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
  • எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அரும்பாடுபட்டார்.
  • உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டம், ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம், முதியோர் உதவித் தொகை வழங்கும் திட்டம் முதலிய எண்ணற்ற திட்டங்களை ஏழைகளுக்காக கொண்டு வந்தார்.

சிந்தனை வினா

சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளாக நீங்கள் கருதுவன யாவை?

உண்மை, உழைப்பு, மனிதநேயம், நேர்மை, இரக்கம், ஏழைகளுக்கு உதவுதல், தன்னலமில்லாமை, ஒருமைபாட்டு உணர்வு, சமயச் சார்பின்மை, கூர் சிந்தனை, எளிமை ஆகிய பண்புகள் சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. எம்.ஜி.ஆரின் பெற்றோர் ………………. மாநிலத்தைத் சேர்ந்தவர்கள்

  1. தமிழ்நாடு
  2. கேரளா
  3. கர்நாடகா
  4. ஆந்திரா

விடை : கேரளா

2. எம்.ஜி.ஆர் தாயார் குழந்தைகளுடன் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய ஊர் …………….

  1. திருச்சி
  2. தஞ்சாவூர்
  3. சென்னை
  4. கும்பகோணம்

விடை : கும்பகோணம்

3. எம்.ஜி.ஆர் பிறந்த ஆண்டு ……………….

  1. 1915
  2. 1916
  3. 1917
  4. 1918

விடை : 1917

4. மதிய உணவுத்திட்டத்தை தொடங்கியவர் ……………………

  1. ஜெயலலிதா
  2. எம்.ஜி.ஆர்
  3. காமராசர்
  4. அண்ணா

விடை : காமராசர்

5. காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தியவர் ……………………

  1. எம்.ஜி.ஆர்
  2. ஜெயலலிதா
  3. கலைஞர்
  4. அண்ணா

விடை : எம்.ஜி.ஆர்

5. சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தவர் ……………………

  1. ஜெயலலிதா
  2. கலைஞர்
  3. எம்.ஜி.ஆர்
  4. அண்ணா

விடை : எம்.ஜி.ஆர்

6. சென்னை பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்கு …………… பட்டம் வழங்கியது

  1. பாரதரத்னா
  2. டாக்டர்
  3. பத்மபூஷன்
  4. கேல்ரத்னா

விடை : டாக்டர்

7. தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் ……………

  1. திருநெல்வேலி
  2. தென்காசி
  3. மதுரை
  4. தஞ்சாவூர்

விடை : தஞ்சாவூர்

8. ……………… எம்.ஜி.ஆரின் நினைவினை போற்றும் வகையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தை நிறுவியுள்ளது.

  1. கேரள அரசு
  2. தமிழக அரசு
  3. கர்நாடக அரசு
  4. ஆந்திர அரசு

விடை : தமிழக அரசு

9. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை ……………… மாநகரில் எம்.ஜி.ஆர் சிறப்பாக நடத்தினார்.

  1. மதுரை
  2. திருநெல்வேலி
  3. தென்காசி
  4. கன்னியாகுமரி

விடை :  மதுரை

10. எம்.ஜி.ஆர் தோற்றுவித்த பல்கலைக்கழகம் ………………….

  1. அண்ணா பல்கலைக்கழகம்
  2. பெரியார் பல்கலைக்கழகம்
  3. காமராஜர் பல்கலைக்கழகம்
  4. தமிழ்பல்கலைக்கழகம்

விடை : தமிழ்பல்கலைக்கழகம்

11. எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்கள் ……………..

  1. சென்னை, தென்காசி, நெல்லை
  2. சென்னை, மதுரை, நெல்லை
  3. மதுரை, தென்காசி, நெல்லை
  4. சென்னை, கன்னியாகுமரி, நெல்லை

விடை : சென்னை, மதுரை, நெல்லை

II. சிறு வினா

1. எம்.ஜி.ஆர் எங்கு எப்போது பிறந்தார்?

எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் 17.01.1917-ல் பிறந்தார்

2. எம்.ஜி.ஆரின் பெற்றோர் யார்?

  • தாய் – சத்தியபாமா
  • தந்தை – கோபாலன்

3. யார் யாருடைய முன்னேற்த்திற்காக எம்.ஜி.ஆர் தமிழ்த் திரைப்படம் வாயிலாக உயரிய கருத்துகளை எடுத்துரைத்தார்?

ஏழை, எளியோர், உழவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் முன்னேற்த்திற்காக எம்.ஜி.ஆர் தமிழ்த் திரைப்படம் வாயிலாக உயரிய கருத்துகளை எடுத்துரைத்தார்.

4. எம்.ஜி.ஆரின் நினைவப் போற்றும் வகையில் தமிழக அரசு செய்துள்ள நடவடிக்கைகள் யாவை?

  • தமிழக அரசு எம்.ஜி.ஆர் நினைவப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர் பெயரில் மருத்துவப் பல்கலைக்கழகத்தினை நிறுவியுள்ளது.
  • சென்னை கடற்கரையில் அவருக்கு அழகான நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது.

5. எம்.ஜி.ஆருக்கு இந்திய அரசு செய்த சிறப்பு யாது?

1988-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்களின் இறப்பிற்கு பின்பு இந்திய அரசு பாரதரத்னா விருதினை வழங்கிய சிறப்பு செய்தது.

6. எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்கள் எவை?

சென்னை, மதுரை, திருநெல்வேலி

7. இந்திய அரசு எம்.ஜி.ஆருக்கு எவ்வாறு பெருமை செய்தது?

இந்திய அரசு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குப் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமசந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்து அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.

8. எம்.ஜி.ஆரின் பெற்ற சிறப்பு பெயர்கள் யாவை?

புரட்சி நடிகர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர்

குறு வினா

எம்.ஜி.ஆரின் தமிழகத்திற்கு செயல்படுத்திய சமுக நலத்திட்டங்களை கூறுக

எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அரும்பாடுபட்டார்.

  • உழவர்களின் கடன் தள்ளுபடி.
  • ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்.
  • ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம்.
  • தாய்சேய் நல இல்லங்கள்.
  • பற்பொடி வழங்குதல்.
  • நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்க்குப் பாடநூல் வழங்கும் திட்டம்.
  • முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்.
  • வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்.

போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment