Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 6.1 – சிற்பக்கலை

பாடம் 6.1 சிற்பக்கலை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 6.1 – “சிற்பக்கலை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக.

1. பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று ________

  1. மாமல்லபுரம்
  2. பிள்ளையார்பட்டி
  3. திரிபுவனவீரேசுவரம்
  4. தாடிக்கொம்பு

விடை : மாமல்லபுரம்

2. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ________

  1. விலங்கு உருவங்கள்
  2. தீர்த்தங்கரர் உருவங்கள்
  3. தெய்வ உருவங்கள்
  4. நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

விடை : தீர்த்தங்கரர் உருவங்கள்

குறு வினா

1. செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக.

  • சோழர் காலத்தில் மிகுதியான செப்புத் திருமேனிகள் உருவாக்கப்பட்டன.
  • கடவுளின் உருவங்களும் மிகுந்த கலை நுட்படத்தோடு வடிவமைக்கப்பட்டன.
  • செப்புத் திருமேனைகளில் பொற்காலம் எனபர்.

2. நடுகல் என்றால் என்ன?

போரி்ல் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்குக் கல்லில் வீரரின் உருவம் பொறிக்கப்பட்டு நடுவது நடுகல் ஆகும்.

3. இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?

இசைத் தூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டவை.

சிறு வினா

1. முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண் டிற்கும் உள்ள வேறுபாடு யாது?

முழு உருவச் சிற்பங்கள்புடைப்புச் சிற்பங்கள்
உருவத்தின் முன், பின் பகுதிகள் தெளிவாக முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள்உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள்.

2. நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?

  • கோவைக்கு அண்மையில் உள்ள பேரூர் சிவன் கோவிலின் சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலைநுட்பத்தில் உச்சநிலைப் படைப்பு எனலாம்.
  • விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிகமிக நுட்பகமாகக் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

நெடு வினா

தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலை நயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.

  • பல்லவர் கால மாமல்லபுரச் சிற்பங்கள் பெரும்பாைறகளைச் செதுக்கிப் பற்பல உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பஞ்சபாண்டவர்கள் இரதத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் அழகாக உள்ளன. காஞ்சி கைலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கின்றன.
  • தஞ்சைப் பெரிய கோவிலில் காணப்படும் 14 அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும், நந்தியும் வியப்பூட்டும் வண்ணம் உள்ளது.
  • விஜய நகர மன்னர்கள் காலத்தில் மிக உயர்ந்த கோபுரங்கள் சிற்ப வேலப்பாடுகளுடன் அமைக்கப்பட்டன. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அமைத்தன.
  • நாயக்கர் மன்னர்கள் சிற்ப வேலைபாடுடன் ஆயிரங்களால் மண்டபத்தை அமைத்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரம் கால் மண்டபத்து தூண்களில் கண்ணப்பர், குறவன், குறத்தி போன்ற சிற்பங்கள் உள்ளன. அரிச்சந்திரன். சந்திரமதி சிற்பங்களில் ஆடை ஆபரணங்கள் கலை நயத்துடன் காணப்படுகின்றன. இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி சந்திரமதி சிற்பம் நயம் மிக்கது.
  • கோவைக்கு அண்மையில் உள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள் நாயக்காலச் சிற்பக் கலைநுடபத்தின் உச்சநிலைப் படைப்பு எனலாம்.
  • விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிகமிக நுட்பமாகக் கலைநயத்துடன் அவை அமைக்கப்பட்டுள்ளன.
  • இவை அனைத்தும் கலைநயத்திற்கும், வரலாற்றுப் பதிவுகளும் தக்க சான்றுகளாகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. தொடக்க காலச் சிற்பகலைக்குச் சான்றினைக் கூறும் நூல்

  1. தொல்காப்பியம்
  2. மணிமேகலை
  3. சிலப்பதிகாரம்
  4. மணிமேகலை

விடை : தொல்காப்பியம்

2. கண்ணகிக்குச் சிலை வடித்த செய்தி இடம் பெறும் நூல்

  1. தொல்காப்பியம்
  2. மணிமேகலை
  3. சிலப்பதிகாரம்
  4. மணிமேகலை

விடை : சிலப்பதிகாரம்

3. மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை  (கதைச் சிற்பங்கள்) இருந்த செய்தியைக் கூறும் நூல் எது?

  1. தொல்காப்பியம்
  2. மணிமேகலை
  3. சிலப்பதிகாரம்
  4. மணிமேகலை

விடை : மணிமேகலை

4. சிற்ப தொழிலுக்குரிய உறுப்புகளைப் பற்றிக் கூறும் நூலகள்

  1. தொல்காப்பியம், நன்னூல்
  2. திவாகரநிகண்டு, மணிமேகலை
  3. சிலப்பதிகாரம், வளையாபதி
  4. சீவகசிந்தாமணி, குண்டலகேசி

விடை : திவாகரநிகண்டு, மணிமேகலை

5. பல்லவர்கள் காலச் சிற்பங்கள் அமைந்துள்ள இடங்கள்

  1. மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி, மலைக்கோட்டை
  2. திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம்
  3. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேசுவரம் பெருங்கோவில்
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி, மலைக்கோட்டை

6. பாண்டியர் காலச் சிற்பங்கள் அமைந்துள்ள இடங்கள்

  1. மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி, மலைக்கோட்டை
  2. திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம்
  3. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேசுவரம் பெருங்கோவில்
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம்

7. நாயக்கயர் காலச் சிற்பங்கள் அமைந்துள்ள இடங்கள்

  1. மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி, மலைக்கோட்டை
  2. திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம்
  3. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேசுவரம் பெருங்கோவில்
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேசுவரம் பெருங்கோவில்

8. சிற்பக்கலை பற்றிய செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயககம் வெளியிட்டுள்ள நூல்

  1. சிற்பக்கலை
  2. சிற்பச்செந்நூல்
  3. சிற்ப ஓவியம்
  4. சிற்ப நூல்

விடை : சிற்பச்செந்நூல்

9. தெலுங்கு, கன்னடப் பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் அந்நாட்டுச் சிற்பக்கலையின் தாக்கம் தமிழகச் சிற்பங்களில் ஏற்படக் காரணமானவர்கள்

  1. பாண்டிய மன்னர்
  2. சோழ மன்னர்
  3. நாயக்க மன்னர்
  4. விஜயநகர மன்னர்

விடை : விஜயநகர மன்னர்

10. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அமைத்தவர்

  1. பாண்டிய மன்னர்
  2. விஜயநகர மன்னர்
  3. சோழ மன்னர்
  4. நாயக்க மன்னர்

விடை : விஜயநகர மன்னர்

11. 24 தீர்த்தங்கரர் உருவங்களையும் சிற்பங்களாக்கியுள்ளவர்

  1. சமணர்
  2. சோழர்
  3. பெளத்தர்
  4. பாண்டியர்

விடை : சமணர்

12. தமிழக அரசு சிற்பக்கல்லூரியை நடத்தி வருகின்ற இடம்

  1. கும்பகோணம்
  2. சுவாமி மலை
  3. மாமல்லபுரம்
  4. மதுரை

விடை : மாமல்லபுரம்

12. தமிழக அரசு சிற்பக்கல்லூரியை நடத்தி வருகின்ற இடம்

  1. கும்பகோணம்
  2. சுவாமி மலை
  3. மாமல்லபுரம்
  4. மதுரை

விடை : மாமல்லபுரம்

13. உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்ள் அமையாத இடம்

  1. கும்பகோணம்
  2. சுவாமி மலை
  3. மதுரை
  4. மாமல்லபுரம்

விடை : மாமல்லபுரம்

14. அரசு கவின்கலைக் கல்லூரிகள் உள்ள இடங்கள்

  1. சென்னை, கும்பகோணம்
  2. மதுரை, திருநெல்வேலி
  3. மாமல்லபுரம், சுவாமி மலை
  4. மதுரை, கோவை

விடை : சென்னை, கும்பகோணம்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _______ கற்கவிஞர்கள் என்று சிறபிக்கின்றன

விடை : சிற்பிகளை

2. கல்உலோகம், செங்கல், மரம் முதலியவற்றை காெண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உவருவங்கள் அமைக்கும் கலையே _______ ஆகும்

விடை : சிற்பக்கலை

3._______, _______ கூறுகளும் தமிழகச் சிற்பக்கலையில் இடம் பெறச் செய்தனர்.

விடை : யோகக்கலை, நாட்டியக்கலை

4. _______ மன்னர்கள் காலத்தில் மிக உயர்ந்த கோபுரங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டன

விடை : விஜய நகர

5. _______ மதத்தினர் அருகக் கடவுகளின் உருவத்தையும், 24 _______ உருவங்களையும் சிற்பங்களாக்கியுள்ளனர்

விடை : சமண, தீர்த்தங்கரர்

6. _______ மதத்தில் சிற்பங்கள் அளவுக்கு மீறிய உயரம் பருமனும் உடையவையாக உள்ளன.

விடை : சமண

7. _______ என்னும் இடத்தில், ஒரு பாறையில் 24 தீர்த்தங்கரர் உருவங்கள் புடைச் சிற்பங்களாகச் செதுக்கப்ட்டுள்ளன.

விடை : திருநாதர் குன்று

8. _______  அண்மையில் சமணர் படுக்கைகள் செதுக்கப்பட்ட இடங்களிலும் மலைப்பாறைகளிலும் சமணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன

விடை : மதுரைக்கு

9. தமிழகத்தில் கட்டப்படும் கோவில்களில் இன்றும் _______, _______ அமைக்கப்பட்டு வருகின்றன

விடை : கதைச்சிற்பங்கள், கற்சிற்பங்கள்

குறு வினா

1. கற்கவிஞர்கள் என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?

சிற்ப இலக்கண மரபைப் பின்பற்றிக் கலை நயத்துடனும், மிகுந்த தேர்ச்சியுடனும் சிற்பிகள் வடிவமைக்கின்றனர். அதனால் அவர்களைக் “கற்கவிஞர்கள்” என்று சிறப்பிக்கின்றனர்.

2. பல்லவர்கள் காலச் சிற்பங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?

மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி, மலைக்கோட்டை

3. பாண்டியர் காலச் சிற்பங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?

திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம்

4. நாயக்கர் காலச் சிற்பங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேசுவரம் பெருங்கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில், திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் உள்ள பெருமாள் கோவில், பேரூர் சிவன் கோவில்

5. சிற்பக் கலை என்றால் என்ன?

கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே சிற்பக்கலை ஆகும்.

6. சிற்பங்களின் நான்கு நிலைகள் யாவை?

  • தெய்வ உருவங்கள்
  • கற்பனை உருவங்கள்
  • இயற்கை உருவங்கள்
  • முழு வடிவ உருவங்கள்

7. பல்லவர் காலத்தில் தூண்களில் பொறிக்கப்பட்டவை எவை?

யாளி, சிங்கம், தாமரை மலர், நுட்பனமான வேலைப்பாடுகள் அமைந்த வட்டங்கள்

8. சிற்பங்களின் வகைகள் யாவை?

சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில்

  • முழு உருவச் சிற்பங்கள்
  • புடைப்புச் சிற்பங்கள் – என இரண்டாகப் பிரிக்கலாம்.

9. முழு உருவச் சிற்பங்கள் என்றால் என்ன?

உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்களை முழு உருவச் சிற்பங்கள் என்று கூறலாம்.

10. புடைப்புச் சிற்பங்கள் என்றால் என்ன?

முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.

11. புடைப்புச் சிற்பங்களை எங்கு காணலாம்?

  • கோவிலின் தரைப் பகுதி
  • கோபுரம், தூண்கள்
  • நுழைவாயில்கள்
  • சுவர்களின் வெளிப்புறங்கள்

என எல்லா இடங்களிலும் புடைப்புச் சிற்பங்களைக் காணலாம்.

12. பாண்டியர் காலச் சிற்பங்களுக்கு சான்றுகள் கூறுக.

பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட குகைக்கோவில்களில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. அவற்றைத் திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் காணலாம்.

கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான் கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களும் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment