Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 6.3 – நாச்சியார் திருமொழி

பாடம் 6.3 நாச்சியார் திருமொழி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 6.3 – “நாச்சியார் திருமொழி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • தீபம் – விளக்கு
  • சதிர் – நடனம்
  • தாமம் – மாலை

இலக்கணக் குறிப்பு

  • கொட்ட – வினையெச்சம்
  • முத்துடைத்தாமம் – இரண்டாம் வேற்றுமைத் தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. தொட்டு – தொடு (தொட்டு) + உ

  • தொடு – பகுதி, தொட்டு என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது – விகாரம்
  • உ – வினையெச்ச விகுதி

2. கண்டேன் – காண் (கண்) + ட் + ஏன்

  • காண் – பகுதி (’கண்’ எனக் குறுகியது விகாரம்)
  • ட் – இறந்தகால இடைநிலை
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

நூல் வெளி

  • திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்திய பன்னிரு ஆழ்வார்களின் ஒருவராவர்.
  • ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார் ஆவார்.
  • இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப் பெற்றார்.
  • இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.
  • ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும்.
  • இத்தொகுப்பில் ஆண்டாள் பாடியதாகத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் உள்ளன.
  • நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது.

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

’அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?

  1. கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
  2. தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
  3. ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்
  4. ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

விடை : ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

குறு வினா

கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?

இசைக்கருவிகள் மற்றும் சங்குகள் முழங்க கண்ணன் புகுந்த பந்தலில் முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டு இருந்தது.

சிறு வினா

ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக

  • கைகளில் கதிரவன் போன்ற ஒளி யை உடைய விளக்கையும், கலசத்தையும் ஏந்தி வந்து அழைக்க, வடமதுரை மன்னன் கண்ணன் பாதுகை அணிந்து நடந்து வருகிறார்’.
  • இசைக்கருவிகள் சங்குகள் முழங்க, அத்தை மகனும், “மது” என்ற அரக்கனை அழித்தவனுமாகிய கண்ணன், புகுந்த பந்தலில் முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டு இருந்தது. அதன் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ……………. இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது.

  1. சங்க
  2. அற
  3. பக்தி
  4. மறுமலர்ச்சி

விடை : பக்தி

2. ஆண்டாள் காதல் கொண்டது ………….

  1. ஈசன்
  2. முருகன்
  3. பிரம்மன்
  4. திருமால்

விடை : திருமால்

3. வட மதுரையை ஆளும் மன்னன் …………..

  1. ஈசன்
  2. கண்ணன்
  3. முருகன்
  4. பிரம்மன்

விடை : கண்ணன்

4. மது என்னும் அரக்கனை அழித்தவர் ……………

  1. கண்ணன்
  2. ஈசன்
  3. முருகன்
  4. பிரம்மன்

விடை : கண்ணன்

5. பன்னிரு ஆழ்வார்களில் ஓரே பெண் ஆழ்வார் …………..

  1. ஆண்டாள்
  2. குலசேகர ஆழ்வார்
  3. திருமங்கையாழ்வார்
  4. காரைக்காலம்மையார்

விடை : ஆண்டாள்

6. ஆழ்வார்கள் பாடிய பாடல் தொகுப்பு …………..

  1. பன்னிருதிருமுறைகள்
  2. நாச்சியார் திருமொழி
  3. தேவாரம்
  4. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்

விடை : நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்

7. மதுரையார் மன்னன் ……….

  1. கண்ணன்
  2. ஈசன்
  3. முருகன்
  4. பிரம்மன்

விடை : கண்ணன்

8. பந்தலில் தொங்கவிடப்பட்டிருந்தது …………………

  1. வைரம்
  2. பவளம்
  3. முத்து
  4. மாணிக்கம்

விடை : முத்து

9. ஆண்டாள் தன் கனவை யாரிடம் சொன்னாள்?

  1. கண்ணன்
  2. தோழி
  3. பெரியாழ்வார்
  4. அம்மா

விடை : தோழி

10. கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி – இவ்டிகளில் அமைந்துள்ள நயம்

  1. இயைபு
  2. முரண்
  3. மோனை
  4. எதுகை

விடை : எதுகை

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. திருமாலை வழிபட்டுச் சிறப்பு நிலை எய்தியவர்கள் ………………..

விடை : ஆழ்வார்கள்

2. ஆழ்வார்கள் ………….. ஆவர்

விடை : பன்னிருவர்

3. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ……………..

விடை : ஆண்டாள்

4. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ……………..

விடை : ஆண்டாள்

5. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ……………

விடை : நாலாயிர திவ்யப் பிரபந்தம்

6. ஆண்டாள் பாடியவை …………………, ………………….

விடை : திருப்பாவை, நாச்சியார் திருமொழி

7. நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ……………..

விடை : 143

குறு வினா

1. “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கக் காரணம் என்ன?

இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த மாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப்பெற்றார்.

2. திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்தியவர்கள் யார்?

திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்.

3. “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” என்றால் என்ன?

ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” ஆகும்.

4. ஆண்டாள் பாடிய நூல்கள் யாவை?

திருப்பாவை, நாச்சியார் திருமொழி

சிறு வினா

1. ஆண்டாள் -குறிப்பு வரைக

  • பன்னிரு ஆழ்வார்களின் ஒருவராவர்
  • ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார் ஆவார்.
  • இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப் பெற்றார்.
  • இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.

2. நாச்சியார் திருமொழி – குறிப்பு வரைக

  • நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது .
  • நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது.
  • திருப்பாவை நாச்சியார் திருமொழி ஆகிய ஆண்டாள் பாடியவை.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment