பாடம் 8.5 மகனுக்கு எழுதிய கடிதம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 8.5 – “மகனுக்கு எழுதிய கடிதம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பாட நூல் மதிப்பீட்டு வினா
மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டிருக்கும் தன்மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
முன்னுரை
கடதம் எழுதுவது ஒரு கலை என்பார்கள். அத்தகு அரிய கடித்கலையில் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தின் கருத்துகளை இனிக் காண்போம்.
வாழ்க்கை நாடகம்
உலகம் இப்படித்தான் அழ வேண்டும். இப்படி தான் சிரிக்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக் கவிழந்து, பின் தலைநிமிர்ந்து. அந்தச் சாகத்தைக் கொண்டாட வேண்டும். தரை எல்லாம் தனதாக்கி எழ வேண்டும். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தை நான் நீ வெவ்வேறு வடித்தில் நடிக்க வேண்டும்.
கற்றுப்பார்
கல்வியில் தேர்ச்சி கொள். இதேநேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள். தீயைப் படித்து தெரிந்து கொள்வதை விட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான், சுற்றுப்பார்
உனக்கான காற்றை உருவாக்கு
கிராமத்தில் கூரை வீட்டில் வசித்தோம். கோடை காலத்தில் கூரை மீது இருந்து தேள்கள் விழும். இரவு முழுவதும் என் தந்தை விசிறியால் வீசிக் கொண்டே இருப்பார். இன்று விசிறியும் இல்லை. கைகளும் இல்லை. மாநகரத்தில் வாழும் நீ கொடிய பல தேள் பல வடிவத்தில் இருக்கும், உனக்கான காற்றை நீயே உருவாக்கிக் கொள்.
அறிவுரை
கிடைத்த வேலையை விட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு யாராவது கேட்டால் இல்ல எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகமானது. உறவுகளையும் விட மேலானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களை சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும் என்று மகனுக்கு அறிவுரை பகிர்கிறார் முத்துக்குமார்.
முடிவுரை
உனக்கு வயதாகும் போது இதை மீண்டும் படித்துப் பார். உன் கண்ணீர் துளியில் வாழ்ந்து கொண்டு இருப்பேன் நான் என்று கடிதத்தை நிறைவு செய்கிறார் நா.முத்துக்குமார்.
கூடுதல் வினாக்கள்
கதை வடிவில் இலக்கியங்கள் படைத்துள்ளோர் யாவர்?
தாகூர் | மு.வரதாசனார் |
நேரு | கு. அழகிரிசாமி |
டி.கே.சி. | கி. இராஜநாராயணன் |
வல்லிக்கண்ணன் | நா. முத்துக்குமார் |
பேரறிஞர் அண்ணா |