பாடம் 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 9.4 – “தாய்மைக்கு வறட்சி இல்லை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- சு. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம், திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர்.
- தமது பெயரைப் போலவே ஆழமும் விரிவும் வளமும் கொண்டவர்.
- முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
- வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு போன்றவை இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகளாகும்.
- “வேரில் பழுத்த பலா” புதினம் சாகித்திய அகாதெமி விருதையும், “குற்றம் பார்க்கில்” சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளன.
பாட நூல் மதிப்பீட்டு வினா
“தாய்மைக்கு வறட்சி இல்லை” என்னும் சிறுதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக
முன்னுரை:-
தாய்மைக்கு வறட்சி இல்லை என்னும் சிறுகதையை எழுதியவர் சு.சமுத்திரம். தாய்மை உள்ளத்தை விளக்குவதாய் இக்கதை அமைகிறது.
ஏழைக் குடும்பம்:-
கர்நாரித்தில் குல்பர்கா நகரைத் தாண்டிய நெடுஞ்சாலை அருகே ஒரு தோட்டம். அங்கு உள்ள குடிசையில் வாழ்ந்து வரும் குடும்பம் ஒன்று. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள், இரண்டு நாய்க்குட்டிகள் ஆகியவை குடும்ப உறுப்பினர்கள்
அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி:-
ஜீப்பில் இருந்து இறங்கிய அதிகாரியும் மற்றவர்களும் இலையில் பிரியாணியும் முட்டையும் சாப்பிட்டனர். கஷ்டப்பட்டு கொண்டு வந்த தண்ணீரை அவர்களுக்கு அந்த ஏழை கொடுக்கின்றான். அந்த அதிகாரி மீதி பிரியாணி, முட்டை, மற்ற உணவுகளை இலையில் வைத்துக் கொடுத்தான். அதை வாங்கி தன் குடும்பத்தை நோக்கி நகர்ந்தான். ஆனால் அவன் மனைவி மீதியை வாங்கி வருவதை பார்த்து முறைத்தாள்.
தாய்மை உணர்வு:-
கணவனைக் கோபமாக பேசி விட்டு பார்த்தாள். உணவு தீர்ந்துவிடக் கூடாது என மெதுவாக சுவைத்தார்கள். இரவு உணவுக்கு என்ன செய்வோம் என்று நினைக்கையில் ஒரு உருண்டை உணவைக் கூட அவள் தொண்டை வாங்க மறுத்தது. கத்திய நாய்க் குட்டிகளுக்கு உணவிட்டுத் தடவிக் கொடுத்தாள். மடியில் வைத்து சிறு உருண்டையை ஊட்டினாள். உணவு குறைய குறைய தாய்மை உணர்வும் கூடிக் கொண்டிருந்தது.
முடிவுரை:-
கருவைச் சுமந்திருந்தாலும் கருணையைச் சுமந்திருந்தால், தனது வயிரைக் காயப்போட்டு மற்றவர்களுக்கு உணவிட்டாள் தாய், கருணை உள்ளம் கடவுள் இல்லம்
கூடுதல் வினாக்கள்
1. சு.சமுத்திரம் எழுதிய சிறுகதை தொகுப்புகள் யாவை?
வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு, வளத்தம்மா
2. சு.சமுத்திரம் பெற்ற விருதுகள் யாவை?
- “வேரில் பழுத்த பலா” புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருதும்
- “குற்றம் பார்க்கில்” சிறுகதைத் தொகுதிக்காக தமிழக அரசின் பரிசையையும் பெற்றார்.
3. சு.சமுத்திரம் – குறிப்பு வரைக
- சு. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம், திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர்.
- தமது பெயரைப் போலவே ஆழமும் விரிவும் வளமும் கொண்டவர்.
- முந்நூற்றுகும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
- வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு போன்றவை இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகளாகும்.
- “வேரில் பழுத்த பலா” புதினம் சாகித்திய அகாதெமி விருதையும், “குற்றம் பார்க்கில்” சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளன.