Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 6.7 – திருக்குறள்

பாடம் 6.7 திருக்குறள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 6.7 – “திருக்குறள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

குறு வினா

1. கரப்பிடும்பை இல்லார் – இத்தொடரின் பொருள் கூறுக.

தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லவர்.

2. தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.

சீர் அசை வாய்ப்பாடு
தஞ் / சம்நேர் நேர்தேமா
எளி / யர்நிரை நேர்புளிமா
பகைக் / குநிரை நேர் (நிரைபு)பிறப்பு

3. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

இகழ்நது ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.

4. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.

பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்

  • கூரான ஆயுதம் – உழைத்ததால் கிடைத்த ஊதியம்.
  • காரணம் –  இதுவே அவனுடைய பகைவனை வெலல்லும் கூரான ஆயுதம்.

சிறு வினா

1. வள்ளுவம், சிறந்த அமைச்சருககுக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பாெருந்துவதைக் குறள் வழி விளக்குக.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு

தொழில் செய்வதற்கு தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயல்களை செய்தல் வேண்டும்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சசு

மனவலிலமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல் , நூல்களை கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைய வேண்டும்.

சூழ்ச்சிகள்:-

மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை

இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு இவற்றை உடையவர்கள் முன் எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது.

நடைமுறைகளை அறிதல்:-

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்

ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

2. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை.  அவருக்கு உணர்த்தும் நாேக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

பகைவரின் வலிமை:-

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்புரியும் எதிலான் துப்பு

சுற்றாத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும் இருந்தால் அவரால் பகைவரின் வலிமையை எதிர் கொள்ள முடியாது.

பகைக்கு ஆட்படல்:-

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்கம் எளியன் பகைக்கு

மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பாெருந்தும் பண்பு இல்லாதவராய், பிறர்க்குகு காெடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரும்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • கருவியும் காலமும் – எண்ணும்மை
  • அருவினை, வண்கண் – பண்புத்தொகைகள்
  • வந்த பொருள் – பெயரெச்சம்
  • வராப்பொருளாக்களம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • செய்க – வியங்கோள் வினைமுற்று
  • நீள்வினை – வினைத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. அறிந்த =  அறி + த்(ந்) +த் + அ

  • அறி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

2. அறியான் = அறி + ய் + ஆன்

  • அறி – பகுதி
  • ய் – உடம்படு மெய்யாகிய சந்தி
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

3. செய்வான் = செய் + வ் + ஆன்

  • செய் – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
    பொருளல்ல தில்லை பொருள் – இக்குறளில் பயின்று வரும் அணி

  1. உவமை அணி
  2. பொருள் பின்வருநிலையணி
  3. சொல் பின்வருநிலை அணி
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : சொற்பொருள் பின்வருநிலையணி

2. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
    றுண்டாகச் செய்வான் வினை – இக்குறளில் பயின்று வரும் அணி

  1. உவமையணி
  2. உருவக அணி
  3. சொல் பின்வருநிலை அணி
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : உவமையணி

3. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது – இக்குறளில் பயின்று வரும் அணி

  1. உவமையணி
  2. உருவக அணி
  3. சொல் பின்வருநிலை அணி
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : சொற்பொருள் பின்வருநிலையணி

4. மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
    ஒப்பாரி யாம்கண்ட தில் – இக்குறளில் பயின்று வரும் அணி

  1. உருவக அணி
  2. உவமையணி
  3. சொல் பின்வருநிலை அணி
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : உவமையணி

5. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
    மேவன செய்தொழு கலான் – இக்குறளில் பயின்று வரும் அணி

  1. உருவக அணி
  2. உவமையணி
  3. வஞ்சப்புகழ்ச்சி அணி
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : வஞ்சப்புகழ்ச்சி அணி

6. சொல்லப் பயன்படுபவர் சான்றோர்; கரும்புபோல்
    கொல்லப் பயன்படும் கீழ் – இக்குறளில் பயின்று வரும் அணி

  1. உருவக அணி
  2. வஞ்சப்புகழ்ச்சி அணி
  3. உவமையணி
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : உவமையணி

7. சிறந்த அமைச்சருக்குரிய குண நலன்கள்

  1. 2
  2. 3
  3. 4
  4. 5

விடை : 5

8. விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி ……………

  1. உயர்ந்து விளங்கும்
  2. தாழ்ந்து நிற்கும்
  3. காணாமல் நீங்கும்
  4. வாடிப் போகும்

விடை : உயர்ந்து விளங்கும்

குறு வினா

1. அமைச்சர் என்பவர் யார்?

தாெழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிநது அரிய செயலைச் செய்பவரை அமைச்சர் ஆவார்.

2. சிறந்த அமைச்சர் யார்?

மன வலிமை, குடிகளைக் காத்தல், விடா முயற்சி, ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல் ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவர்.

3. உலகில் சிறந்த பொருள் என்பது யாது?

ஒரு பொருளாளக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகின் சிறந்த பொருள் வேறு இல்லை.

4. எந்தப் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்?

மற்றவர்களிடம் இரக்ககும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்.

5. யாரால் பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியாது?

சுற்றத்தாரிடம் அன்பு இன்மை, பொருந்திய துணை இன்மை, வலிமையின்னை

6. அறத்தையும், இன்பத்தையும் தருவது எது?

முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பாெருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்.

7. யார் முன் எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது?

இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு இவற்றை உடையவர்கள் முன் எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது.

8. எவரின் குடி உயர்நது விளங்கும்?

விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்நது விளங்கும்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment