Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 9.3 – தேம்பாவணி

பாடம் 9.3 தேம்பாவணி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 9.3 “தேம்பாவணி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

நூல் வெளி

  • தேம்பா + அணி என்பதன் பொருள்  “வாடாத மாலை” என்றும், தேன் + பா + அணி என்பதன் பொருள்  “தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு” என்றும் இந்நூலுக்கு பொருள் கொள்ப்பபடுகிறது.
  • தேம்பாவணி கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தயான சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டது.
  • இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி 3615 பாடல்களை கொண்டுள்ளது.
  • 17ஆம் நூற்றாண்டில் தேம்பாவணி படைக்கப்பட்டது
  • வீரமாமுனிவர் இயற்பெயர் கான்சுடான்சு ஜோசப் பெசுகி
  • தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலகக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குரு கதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவை வீரமாமுனிவர் படைத்த நூல்கள் ஆகும்

சொல்லும் பொருளும்

  • சேக்கை – படுக்கை
  • யாக்கை – உடல்
  • பிணித்து – கட்டி
  • வாய்ந்த – பயனுள்ள
  • இளங்கூழ் – இளம்பயிர்
  • தயங்கி – அசைந்து
  • காய்ந்தேன் – வருந்தினேன்
  • கொம்பு – கிளை
  • புழை – துளை
  • கான் – காடு
  • தேம்ப – வாட
  • அசும்பு – நிலம்
  • உய்முறை – வாழும் வழி
  • ஓர்ந்து – நினைத்து
  • கடிந்து – விலக்கி
  • உவமணி – மணமலர்
  • படலை – மாலை
  • துணர் – மலர்கள்

இலக்கணக் குறிப்பு

  • காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
  • கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை
  • காய்மணி, உய்முறை, செய்முறை – வினைத்தொகைகள்
  • மெய்முறை – வேற்றுமைத்தொகை
  •  கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. அறியேன் = அறி + ய் + ஆ + ஏன்

  • அறி – பகுதி
  • ய் – சந்தி
  • ஆ – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று

2. ஒலித்து = ஒலி + த் + த் + உ

  • ஒலி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………………….. , ………………….. வேண்டினார்.

  1. கருணையன் எலிசபெத்துக்காக
  2. எலிசபெத் தமக்காக
  3. கருணையன் பூக்களுக்காக
  4. எலிசபெத் பூமிக்காக

விடை : கருணையன் எலிசபெத்துக்காக

குறு வினா

“காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்” – உவமை உணர்த்தும் கருத்து யாது?

உவமை:-

இளம்பயிர் நெல்மணி காணும் முன்னே மழையின்றி வாழக் காய்தல்

உவமை உணர்த்தும் கருத்து:-

கருணையாகிய நான் என் தயார் எலிசபெத் அவர்களை இழந்து வாடுகிறேன்.

சிறு வினா

எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

  • கருணையாகிய நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
  • அறிவோடு பொருந்திய உறுப்புகள் இயங்காத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  • உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக்கொண்டு வரும் வழிவகைகளை அறியேன்.
  • காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன் என்று கூறுகிறார்.

“செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்”

நெடு வினா

கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர்தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

முன்னுரை:-

தாயின்  அன்பை எழுத உலக மொழிகள் போதாது. தாயை இழந்த துயரம் சொல்ல இயலாது. தாயை இழந்த கருணையனின் கண்ணீர் சொற்களை அறிவோம்.

வீரமாமுனிவரின் உவமை உருவக கவிதாஞ்சலி:-

1. மலர்ப்படுக்கை:-

கருணையனின் தாய் மறைந்து விட்டாள். கருணையன் தன் கையைக் குவித்துப் “பூமித்தாயே! என் அன்னையின் உடலைக் காப்பாயாக என்று கூறி, குழியிலே மலர்படுக்கையைப் பரப்பினேன். அன்னையின் உடலை மண்ணிட்டு மூடி மலர்களையும் தன் கண்ணீரையும் பொழிந்தான்.

2. இளம்பயிர் வாட்டம்:-

என் தாயின் மார்பில் மணிமாலையென அசைந்து வாழ்ந்தேனே! இப்பொழுது, இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து காய்ந்து மணியாகு முன்பே, தூய மணி போன்ற மழைத்துளி இன்றி வாடிக் காய்ந்து விட்டது போல நானும் வாடுகிறேன். என் மனம் மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர் போல் வாடுகிறது.

3. அம்பு துளைத்த வேதனை:-

தீயையும், நஞ்சையும் தன் முனையில் கொண்ட அம்பு துளைத்தால் எற்படும் புண்ணின் வரியைப் போல் என் துயரம் வேதனை தருகிறது. துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல நான் இக்காட்டில்  அழுது வாடுகிறேன்.

4. தவிப்பு:-

சரிந்த வழக்கு நிலப்பகுதியிலே தனியே விடப்பட்டுச் செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன். நவமணிகள் பதித்த மணிமாலைகளை இணைத்தது போன்று நல்ல அறன்கள் எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன் புலம்பினான்.

5. உயிர்கள் அழுதல்:-

புலம்பலைக் கேட்டு பல்வேறு இசைகளை இயக்கியது போல் தேன் மலர்கள் தோறும் மணம் வீசும் மலர்களும், மலர்ந்த சுனைதோறும் உள்ள பறவைகளும், வண்டுகளும் அக்காட்டினிேல அழுவன போல கூச்சலிட்டன.

முடிவுரை:-

வீரமாமுனிவர் உவமை, உருவக மலர்களால் தன் கவிதை மூலம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • பரப்பி, ஒலித்து – வினையெச்சங்கள்
  • வாழ்ந்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
  • வீ – ஒரெழுத்தொருமொழி
  • தடவிலா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • நல்லறம், இளங்கூழ் – பண்புத்தொகைகள்

பகுபத உறுப்பிலக்கணம்

பரப்பி = பரப்பு + இ

  • பரப்பு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. கிறித்துவிற்கு முன் தோன்றியவர் ………………….

  1. பேதுரு
  2. ஆபிரகாம்
  3. திருமுழுக்கு யோவான்
  4. சூசை

விடை : திருமுழுக்கு யோவான்.

2. திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர் …………..

  1. கருணாகரன்
  2. கருணையன்
  3. கருணாமூரத்தி
  4. வலின்

விடை : கருணையன்

3. கருணையனின் தாயர் …………..

  1. எலிசபெத்
  2. அண்ணாள்
  3. மரியாள்
  4. சாரா

விடை : எலிசபெத்

4. தேம்பா + அணி என்பதன் பொருள் …………..

  1. சூடாத மாலை
  2. பாடாத மாலை
  3. தேன் மாலை
  4. வாடாத மாலை

விடை : வாடாத மாலை

6. கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தை ……….

  1. கருணையன்
  2. சூசையப்பர்
  3. தாவீது
  4. ஈசாக்கு

விடை : சூசையப்பர்

7. தேம்பாவணியில் உள்ள காண்டங்கள் ……………

  1. மூன்று
  2. நான்கு
  3. ஐந்து
  4. ஆறு

விடை : மூன்று

8. தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் ………….

  1. 7ஆம் நூற்றாண்டில்
  2. 12ஆம் நூற்றாண்டில்
  3. 17ஆம் நூற்றாண்டில்
  4. 19ஆம் நூற்றாண்டில்

விடை :  17ஆம் நூற்றாண்டில்

9. தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை……………

  1. 3015
  2. 3315
  3. 3615
  4. 3915

விடை : 3615

10. தேம்பாவணி ஒரு …………… நூல் ஆகும்.

  1. பெருங்காப்பிய
  2. நாடக நூல்
  3. வரலாற்று
  4. புதின

விடை : பெருங்காப்பிய

11. தேம்பாவணியை இயற்றியவர் ……………

  1. கபிலர்
  2. ஜி.யு.போப்
  3. கால்டுவெல்
  4. வீரமாமுனிவர்

விடை : வீரமாமுனிவர்

12. தமிழ் முதல் அகராதி ……………

  1. தமிழ் அகராதி
  2. சதுரகராதி
  3. தொன்மை அகராதி
  4. புதிய அகராதி

விடை : சதுரகராதி

13. சந்தாசாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் ……………

  1. சாகிப்
  2. இஸ்மத்
  3. சன்னியாசி
  4. இஸ்மத் சன்னியாசி

விடை : இஸ்மத் சன்னியாசி

14. வீரமாமுனிவரின் இயற்பெயர் ……………

  1. தாமஸ்பெஸ்கி
  2. இஸ்மத்
  3. கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி
  4. கால்டுவெல்

விடை : கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி

15. இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள் ……………

  1. தூயவன்
  2. புனிதன்
  3. தூயதுறவி
  4. பெரியோன்

விடை : தூயதுறவி

16. இஸ்மத் சன்னியாசி என்பது …………… மொழிச்சொல்

  1. பாரசீக
  2. இலத்தின்
  3. எபிரேய
  4. உருது

விடை : பாரசீக

17. கானில் செல்வழி அறியேன் யார் கூற்று?

  1. எலிசபெத் கூற்று
  2. கருணையன் கூற்று
  3. சூசையப்பர் கூற்று
  4. தாவீது கூற்று

விடை : கருணையன் கூற்று

18. “சரிந்தன அசும்பில் செல்லும்” இவ்வடிகளில் “அசும்பு” என்பதன் பொருள் …………

  1. வானம்
  2. காடு
  3. நிலம்
  4. கிளை

விடை : நிலம்

19. நவமணி என்பதில் நவம் என்ற சொல் குறிப்பது …………

  1. ஒன்பது
  2. எட்டு
  3. ஐந்து
  4. நான்கு

விடை : ஒன்பது

20. நல்லறப் படலைப் பூட்டும் இவ்வடிகளில் அசும்புபடலை பொருள் ………...

  1. மணமலர்
  2. மாலை
  3. நிலம்
  4. மலர்கள்

விடை : மாலை

20. கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி …………

  1. யோவான்
  2. சூசையப்பர்
  3. வளன்
  4. இயேசு

விடை : யோவான்

21. கருணையன் என்பவர் …………

  1. சூசையப்பர்
  2. சந்தாசாகிப்
  3. யோசேப்
  4. அருளப்பன்

விடை : அருளப்பன்

பொருத்துக

1. சேக்கைஅ. நிலம்
2. அசும்புஆ. இளம்பயிர்
3. இளங்கூழ்இ. மாலை
4. படலைஈ. படுக்கை
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

பொருத்துக

1. கூழ்அ. கிளை
2. கொம்புஆ. பயிர்
3. புழைஇ. காடு
4. கான்ஈ. துளை
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பொருத்துக

1.கடிந்துஅ. விலக்கி
2. உவமணிஆ. மாலை
3. படலைஇ. மணமலர்
4. துணர்ஈ. மலர்கள்
விடை : 1 – அ, 2 – இ, 3 – ஆ, 4 – ஈ

பொருத்துக

1. காக்கென்றஅ. இடைக்குறை
2. கணீர்ஆ. தொகுத்தல் விகாரம்
3. காய்மணிஇ. வேற்றுமைத்தொகை
4. மெய்முறைஈ. வினைத்தொகை
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. தேம்பாவணி பிரித்து பொருள் கூறுக

  • தேம்பா + அணி என்றும் தேன் + பா + அணி என்றும் பிரிக்கலாம்.
  • தேம்பா + அணி என்பதன் பொருள்  “வாடாத மாலை” என்பதாகும்.
  • தேன் + பா + அணி என்பதன் பொருள்  “தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு” என்பதாகும்.

2. எதனை மட்டம் தான் அறிந்ததாக கருணையன் கூறுகிறார்?

தன் தாயாகிய எலிசபெத் தன் கையால் காட்டிய முறைகளை மட்டும் அறிவேன். வேறொன்றும் அறியேன் என்று கூறுகிறார்.

3. தேம்பாவணி யாரை பாட்டுடைத் தலைவனாக கொண்டது?

தேம்பாவணி கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தயான சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டது

4. வீரமாமுனிவர் படைத்த நூல்கள் யாவை?

சதுரகராதிபரமார்த்தக் குரு கதைகள்
தொன்னூல் விளக்கம்மொழிபெயர்ப்பு நூல்கள்
சிற்றிலக்கியங்கள்உரைநடை நூல்கள்

5. கருணையன் உள்ளம் வாடியது எதற்கு ஒப்பாக தேம்பாவணி கூறுகின்றது?

கருணையன் உள்ளம் மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலர் வாடிதலுக்கு ஒப்பாக தேம்பாவணி கூறுகின்றது.

6. கருணையன் “இரும்புழைப் புண்போல” நோகக் காரணம் யாது?

கருணையனின் தாய் இறந்துவிட்டார். தாயை இழந்து வாடும் அவர், தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்ட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருந்துவது போன்று வருந்துகின்றார்.

7. “நவமணி வடக்க யில்போல்” – இவ்வடிகள் சுட்டும் நவமணிகள் யாவை?

கோமேதகம்முத்து
நீலம்மாணிக்கம்
பவளம்வைடூரியம்
மரகம்வைரம்
புருடராகம் (புஷ்பராகம்)

8. இஸ்த் சன்னியாசி குறிப்பு வரைக

  • வீரமாமுனிவரின் எளிமையும் துறவையும் கண்டு வியந்த, திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டம் வழங்கினார்.
  • இஸ்மத் சன்னியாசி என்பதற்கு தூயதுறவி என்று பொருள்.
  • இஸ்மத் சன்னியாசி என்பது பாரசீகச் சொல் ஆகும்.

சிறு வினா

1. தேம்பாவணி – குறிப்பு வரைக

  • 17ஆம் நூற்றாண்டில் தேம்பாவணி படைக்கப்பட்டது
  • தேம்பா + அணி என்பதன் பொருள்  “வாடாத மாலை” என்பதாகும்.
  • தேன் + பா + அணி என்பதன் பொருள்  “தேன் போன்ற பாடல்களின் தொகுப்பு” என்பதாகும்.
  • தேம்பாவணி கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தயான சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டது.
  • 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி 3615 பாடல்களை கொண்டுள்ளது.

2. வீரமாமுனிவர் குறிப்பு வரைக

  • வீரமாமுனிவர் இயற்பெயர் கான்சுடான்சு (கொனஸ்டான்) ஜோசப் பெஸ்கி
  • சதுரகராதி, தொன்னூல் விளக்கம், சிற்றிலகக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குரு கதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவை வீரமாமுனிவர் படைத்த நூல்கள் ஆகும்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment