Class 11th Tamil Book Solution for CBSE | Lesson 2.5 – ஐங்குறுநூறு

பாடம் 2.5 ஐங்குறுநூறு

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 2.5 “ஐங்குறுநூறு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 11 Tamil Text Books – Download

நூல் வெளி

  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • இது மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடி பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.
  • திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.
  • ஐந்திணை பாடிய புலவர்கள் : குறிஞ்சி – கபிலர், முல்லை – பேயனார், மருதம் – ஓரம்போகியார், நெய்தல் – அம்மூவனார், பாலை – ஓதலாந்தையார்
  • ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
  • இதனை தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
  • பேயனார் சங்ககாலப் புலர்களின் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.

சொல்லும் பொருளும்

  • காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம், பிடவம் – மழைக்கால மர்கள்
  • போது – மொட்டு
  • அலர்ந்து – மலர்ந்து
  • கவினி – அழகுற

இலக்கணக் குறிப்பு

  • ஆல் – அசைநிலை
  • கண்ணி – அண்மை விளிச்சொல்
  • ஆடுகம் – தன்மைப் பன்னமை வினைமுற்று

பகுபத உறுப்பிலக்கணம்

அலர்ந்து  பகுபத உறுப்பிலக்கணம் தருக

அலர்ந்து =  அலர் + த் (ந்) + த் + உ

  • அலர் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ –  வினையெச்ச விகுதி

பாடநூல் வினாக்கள்

சிறு வினா

ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள் அட்டவணைப்படுத்துக

ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை

திணைமுல்லை
முதற்பொருள்இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
நிலம்காடும் காடு சார்ந்த இடமும்
பெரும்பொழுதுகார்காலம்
சிறுபொழுதுமாலை

கருப்பொருள்

தெய்வம்திருமால் (மாயோன்)
மக்கள்குறும்பொறை, நாடான், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
பறவைகாட்டுக்கோழி
விலங்குமுயல், மான்
ஊர்பாடி
மரம்முல்லை, தோன்றி, கொன்றை, காயா, குருத்தம்
நீர்குறுஞ்சுனை, கானாறு
உணவுவரகு, சாமை, முதிரை
பறைஏறுகோட்பறை
யாழ்முல்லையாழ்
பண்சாதரிப்பண்
தொழில்சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், நெல் அரிதல், ஏறுதழுவுதல், ஆநிரை மேய்த்தல்

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • கொண்டன்றால் (ஆல்) – அசைநிலை
  • பேரமார் கண்ணி – அண்மை விளி (அழைத்தல்)
  • ஆடுகளம் விரைந்தே – தன்மை பன்மை வினைமுற்று
  • காயா கொன்றை நெய்தல் முல்லை – உம்மைத்தொகை
  • போதவிழ் தளவொடு – வினைதொகை
  • அலர்ந்து கவினி, விரைந்து – வினையெச்சங்கள்

 பகுபத உறுப்பிலக்கணம்

1. ஆடுகம் = ஆடு + க் + அம்

  • ஆடு – பகுதி
  • க் – சந்தி
  • அம் –  தன்மை பன்னமை வினையெச்ச விகுதி

2. விரைந்து = விரை + த் (ந்) + த் + உ

  • விரை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ –  வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. போதவிழ் = போது + அவிழ்

  • “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி போத் + அவிழ் என்றாயிற்று
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி போதவிழ் என்றாயிற்று.

2. பிடவலர்ந்து = பிடவு + அலர்ந்து

  • “முற்றும் அற்று ஒரேவழி” என்ற விதிப்படி பிடவ் + அலர்ந்து என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பிடவலர்ந்து என்றாயிற்று.

3. பூவணி = பூ + அணி

  • “ஏனைய உயிர்வரின் வவ்வும்” என்ற விதிப்படி பூ + வ் + அணி என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி பூவணி என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க

  1. காயா
  2. குறிஞ்சி
  3. பிடவம்
  4. கொன்றை

விடை : குறிஞ்சி

2. “முல்லைத்திணை” பாடுவதில் வல்லவர் ……………..

  1. பேயனார்
  2. ஓரம்போகியார்
  3. கபிலர்
  4. அம்மூவனார்

விடை : பேயனார்

3. ஐங்குறுநூறு – பிரித்தெழுத கிடைப்பது ………………

  1. ஐங் + குறுநூறு
  2. ஐந்து + குறுநூறு
  3. ஐங்குறுமை + நூறு
  4. ஐந்து + குறுமை + நூறு

விடை : ஐந்து + குறுமை + நூறு

4. ஐங்குறுநூற்றின் அடிவரையறை ………….

  1. 13 – 31
  2. 9 – 12
  3. 3 – 6
  4. 4 – 8

விடை : 3 – 6

5. ஐங்குறுநூறு சிற்றெல்லை …………………

  1. ஆறடி
  2. ஐந்தடி
  3. நான்கடி
  4. மூன்றடி

விடை : மூன்றடி

6. ஐங்குறுநூறு பேரெல்லை …………..

  1. ஆறடி
  2. ஐந்தடி
  3. நான்கடி
  4. மூன்றடி

விடை : ஆறடி

7. ஐங்குறுநூற்றினைத் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர்…………………

  1. பேயனார்
  2. கபிலர்
  3. பெருந்தேவனார்
  4. அம்மூவனார்

விடை : பெருந்தேவனார்

8. ஐங்குறுநூற்றினைத் தொகுத்தவர் …………………

  1. பேயனார்
  2. புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
  3. கபிலர்
  4. அம்மூவனார்

விடை : புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்

9. ஐங்குறுநூற்றினைத் தொகுப்பித்தவர் ………………

  1. மாந்தரஞ் சேரலிரும்பொறை
  2. புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
  3. பாண்டியன் பெருவழுதி
  4. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

விடை : மாந்தரஞ்சோல் இளம்பொறை

9. தவறான இணையக் கூறுக

  1. குறிஞ்சி  – கபிலர்
  2. முல்லை – பேயனார்
  3. மருதம் – ஓதலாந்தையார்
  4. நெய்தல் – அம்மூவனார்

விடை : மருதம் – ஓதலாந்தையார்

10. முல்லை நிலப் பூக்களில் பொருந்தாதவற்றை தெரிவு செய்க

  1. காய கொன்றை
  2. நெய்தல் முல்லை
  3. செம்முல்லை பிடவம்
  4. குறிஞ்சி வேங்கை

விடை : குறிஞ்சி வேங்கை

11. “கிழவன் பருவம் பாராட்டும் பத்து” என்னும் தலைப்பின் பத்துப்பாடல்கள் எத்திணையில் உள்ளன?

  1. நெய்தல்
  2. முல்லை
  3. பாலை
  4. மருதம்

விடை : முல்லை

12. “போது” என்பதன் பொருள் …………….

  1. மலர்
  2. காம்பு
  3. இலை
  4. மொட்டு

விடை : மொட்டு

பொருத்துக

1. குறிஞ்சிஅ. ஓதாலந்தையார்
2. முல்லைஆ. கபிலர்
3. மருதம்இ. பேயனார்
4. நெய்தல்ஈ. ஓரம்போகியார்
5. பாலைஉ. அம்மூவனார்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – உ, 5 – அ

குறு வினா

1. முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது, பெரும்பொழுதுகள் யாவை?

  • பெரும்பொழுது – கார்காலம்
  • சிறுபொழுது – மாலை

2. முல்லைநில மழைக்கால மலர்களாக ஐங்குறுநூறு கூறுவன யாவை?

காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தவளம், பிடவம் ஆகியன முல்லைநில மழைக்கால மலர்களாக ஐங்குறுநூறு குறிப்பிட்டுள்ளது.

3. ஐங்குறுநூற்றில் ஐந்திணைகளை பாடிய புலவர்கள் யாவர்?

திணைபாடிய புலவர்
குறிஞ்சிகபிலர்
முல்லைபேயனார்
மருதம்ஓரம்போகியார்
நெய்தல்அம்மூவனார்
பாலைஓதலாந்தையார்

சிறு வினா

ஐங்குறுநூறு – நூற்குறிப்பு வரைக

  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • இது மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடி பேரெல்லையும் கொண்டது. அகவற்பாக்களால் ஆன நூல்.
  • திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவரனார்
  • இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
  • இதனை தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
  • ஐந்திணைகளில் ஒன்றான முல்லைத் திணை நமக்கு பாடப்பகுதியாக கொடுக்கப்பட்பட்டுள்ளது.
  • இப்பாடலை பாடியவர் பேயனார், இவர் சங்ககாலப் புலர்களின் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.

ஐந்திணைகளை பாடிய புலவர்கள்

  • குறிஞ்சி  – கபிலர்
  • முல்லை – பேயனார்
  • மருதம் – ஓரம்போகியார்
  • நெய்தல் – அம்மூவனார்
  • பாலை – ஓதலாந்தையார்

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment