பாடம் 4.6 படைபாக்க உத்திகள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 4.6 “படைபாக்க உத்திகள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
கற்பவை கற்றபின்…
1. பூவை விட்டு இறங்காதே
இறக்கை முறிந்த வண்ணத்துப் பூச்சியே
உனக்காக எறும்புகள். – இக்கவிதை படைப்பாக்க உத்திகளால் தனித்துவம் பெற்றுள்ளன – விளக்குக.
விருப்பப்படி பறக்க உதவும் இறக்கை முறிந்தால், வண்ணத்துப் பூச்சிகள் கதி என்னவாகும்? எறும்பு உள்ளிட்டவற்றிக்குக் கொண்டாட்டம் தான்
உடலில் உயிரிருந்தாலும் காத்துக் கொள்ள முடியுமா? பறக்க உதவும் இறேக முறிந்தால் என்னாவது?
விரும்பிய படி மலர்த்தேனை உன்ன முடியுமா? மகரந்த சேர்க்கைக்குத்தான் உதவ முடியுமா?
எனவே விழிப்புணர்வு தேவை. வானில் பறக்கும் வண்ணத்துப் பூச்சியும் தன் நிலை தவறினால் உயிரிழக்க நேரும்.
இங்கு கூறப்பட்ட அறிவுரை, வண்ணத்துப்பூச்சிக்கு மட்டுமன்று; ஆறறிவு படைத்த மனிதனுக்கும் தான். மெய்பொருள் காண்பது அறிவு!
2. மனிதர்க்கு உணவாவதை எண்ணி
கண்ணீர் விட்டனவோ மீன்கள்
கடல் நீரில் உப்பு. – இக்கவிதை படைப்பாக்க உத்திகளால் தனித்துவம் பெற்றுள்ளன – விளக்குக.
கடல் நீர், அது தோன்றிய காலத்திலிருந்தே உப்புக் கரித்துக் கொண்டுதான் உள்ளது.
இப்பாடலை பாடிய கவிஞர், அதற்கு ஒரு புதிய காரணத்தை கற்பித்துக் கூறியுள்ளார்.
மீனின் சுவை அறிந்த மனிதன், அதை விட்டு வைக்க நினைப்பானா? மீன்கள் மனிதர்க்கு உணவாவதை எண்ணிக் கண்ணீர் வடிப்பதனால், கடல்நீர் உப்பானதாகக் கூறுகிறார்.
உன்மையில் அழகானதொரு கற்பனை தான். இயற்கை நிகழ்வை உள்ளது உள்ளபடி கூறுவர் சிலர். அந்த இயற்கை நிகழ்வில், தம் கற்பனையை ஏற்றி கூறுவர் சிலர். இப்புதுக்கவிதை, அவ்வகையில் தற்குறிப்பேற்ற அணியைப் படைப்பு உத்தியாகக் கொண்டுள்ளது எனலாம்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
நிழல் போலத் தொடர்ந்தான் – இது எவ்வகை உவமை?
- வினை
- பயன்
- வடிவம்
- மெய்
விடை : வடிவம்
குறு வினா
உவமை, உருவகம் – வேறுபடுத்துக?
உவமை :-
- சொல்வதை எளிதில் உணருமாறு கூற உவமை பயன்படும்
- உவமை முன்னும், உவமேயம் பின்னும் அமையும்
- சான்று : மதிமுகம் – மதி போன்ற முகம்
உருவகம் :-
- ஒப்பீட்டுச் செறிவும், பொருள் அழுத்தமும் கொண்டது உருவகம்
- உவமேயம் முன்னும் பின்னும் அமையும்
- சான்று : முகமதி – முகமாகியமதி
சிறு வினா
உள்ளுறை உவமை, இறைச்சி – எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக
உள்ளுறை :-
- கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை இயற்கைப் புனைந்துரை மூலம் கருப்பொருள்களால் உவமைப்படுத்துவது உள்ளுறை ஆகும்
- பாடலில் இடம் பெறும் மாந்தரின் உள்ளத்தில் எழும் உணர்வுகளின் குறிப்புப் பொருளாகவும் அமையும்
- அகநானூற்றில் தோழிக்குச் சொல்லுவதுபோல் மறைந்து நிற்கும் தலைவனுக்கு தலைவி கூறுவதாகப் பெருங்குன்றூர்கிழார் பாடிய “ஈயல் புற்றத்து” எனத் தொடங்கும் பாடல் உள்ளுறை உணர்த்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்
இறைச்சி:-
- அகப்பாடலில் இடம்பெறும் உள்ளுறை போன்ற மற்றொரு உத்தி, இறைச்சி. இறைச்சி என்பது உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பு இல்லாத குறிப்பு பொருளாகும்
- இது அகப்பாடலில் மட்டுமே இடம்பெறும். தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, “தலைவன் செல்லும் வழியில் ஆண் யானை, பெண் யானையின் பசியைப் போக்க, “யா” மரத்தின் பட்டையை உரித்து, நீர்ச்சுவையைப் பருகச் செய்யும்” என்று கூறுவாள்
- இது பாடலின் கருத்து. ஆனால், “தலைவன் இந்தக் காட்சியைக் காண்பான். விரைவில் திரும்பி, தலைவியின் துன்பம் தீர்ப்பான்” என்பது, இது உணர்த்தும் குறிப்பு பொருளாகும். இவ்வாறு உரிப்பொருளின் புறத்தே நின்று, வேறு கருத்தைக் குறிப்பாக உணர்த்துவது “இறைச்சி” ஆகும்.
கூடுதல் வினாக்கள்
1. உவமை என்பது யாது? உவமையை ஏன் பயன்படுத்தினர்?
- ஒரு பொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையாகும்.
- ஒரு கருத்தைக் கூறுகையில், கேட்போர் மனத்தைக் கவரும் வகையிலும், எளிதில் உணரும் வகையிலும் கூறுவதற்கு உவமையைப் பயன்படுத்தினர்.
2. உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்? சான்று தருக
வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) என்னும் நான்கின் அடிப்படையில் உவமை உருவாகும்.
எ.கா.
- புலிபோல – தொழில் உவமை
- மழைபோல – பயன் உவமை
- துடி போன்ற – வடிவு உவமை
- தளிர் போல – நிறஉவமை
3. உவமையில் அமையும் உறுப்புகள் யாவை? சான்று தருக
உவமானம் (உவமை), உவமேயம் (பொருள்), உவமை உருபு, பொதுத்தன்மை என்னும் நாக்கு உறுப்புகள் உவமையில் அமையும்.
சான்று : செல்வன் புலி போலப் பாய்ந்தான்
- உவமானம் (உவமை) – புலி
- உவமேயம் (பொருள்) – செல்வன்
- உவமை உருபு – போல
- பொதுத்தன்மை – பாய்தல்
4. உருவகமாவது யாது? சான்று தருக
- உவமையையும், உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றோ எனக்கூறவது உருவகம் ஆகும்.
- உருவகத் தொடரில் உவமேயம் (உவமிக்கப்படும் பொருள்) முன்னும், உவமை (ஒப்பாகக் காட்டப்படும் பொருள்) பின்னுமாக அமையும்
சான்று : மதிமுகம், பாதமலர்
5. உருவகம் எவ்வெவற்றின் அடிப்படையில் அமையும் ? சான்று தருக
- வினை, பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) ஆகியவற்றில் அடிப்படையில் உருவம் அமையும்
சான்று :
- எண்ணவலை பின்னும் மூளைச்சிலந்தி (சிந்தனை) – வினை
- ஆவேசப் பயுல்களாலும் அசைக்க முடியாது ஆகாசப்பூ (சூரியன்) – பயன்
- நீல வயலின் நட்சத்திர மணிகள் (வானமும் விண்மீன்களும்) – மெய்
- மலைக்கிழவியின் நரைத்த கூந்தல் (அருவி) – நிறம்
6. உள்ளுறை உவமம் என்றால் என்ன?
கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை இயற்கைப் புனைந்துரை மூலம் கருப்பொருள்களால் உவமைப்படுத்துவது உள்ளுறை ஆகும்
7. உள்ளுறை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
வினை, பயன் போன்றவற்றின் அடிப்படைகளில் தோன்றும் குறியீடுகளைக் கொண்டு உள்ளுறை உருவாக்கப்படுகிறது.க்ஷ
இலக்கணத் தேர்ச்சிகொள்
1. உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்? சான்று தருக
வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) என்னும் நான்கின் அடிப்படையில் உவமை உருவாகும்.
2. உவமைத் தொடர்களால் அழைக்கப்பெறும் சங்கப்புலவர்கள் பெயர்களைத் தொகுத்து அவற்றில் உள்ள உவமைகளை கண்டறிக
செம்புலப்பெயல்நீரார், தய்புரிபழகயிற்றினார், அணிலாடுமுன்றிலார் என்போர் உவமைகளால் பெயர் பெற்ற புவர்களாவர்.
செம்புலப்பெயல்நீர் | உவமை, செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் (போல) |
தேய்புரிபழங்கயிறு | உவமை, தேய்ந்து மெலிந்த பழைய கயிறு (போல) |
அணிலாடுமுன்றில் | உவமை, அணில் விளையாடும் வீட்டின் முற்றம் (போன்ற) |
3. ஒட்டுப் போடாத
ஆகாயம் போல – இந்த
உலகமும் ஒன்றேதான்…. இக்கவிதையில் பயின்று வருவது
- உவமை
- உருவகம்
- உள்ளுறை
- இறைச்சி
விடை : உவமை
4. கீழ்காண்பனவற்றுள் “இறைச்சி” பற்றிய கூற்றைத் தேர்க
- குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும்
- ஒப்பீட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும்
- வினை, பயன், வடிவம், நிறம் ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும்
- உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்பொருள்
விடை : உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்பொருள்
5. உள்ளுறைக்கும், இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டினை சான்றுடன் ஆய்க
உள்ளுறை :-
கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை இயற்கைப் புனைந்துரை மூலம் கருப்பொருள்களால் உவமைப்படுத்துவது உள்ளுறை ஆகும்
தோழிக்கு கூறுவதுபோல் மறைந்து நின்ற தலைவனுக்குத் தலைவி கூறியதாகப் பெருங்குன்றூர்கிழார் பாடிய “ஈயல் புற்றத்து” எனத் தொடங்கும் பாடல், உள்ளுறைக்குச் சிறந்த சான்று.
அகநானூற்றில் தோழிக்குச் சொல்லுவதுபோல் மறைந்து நிற்கும் தலைவனுக்கு தலைவி கூறுவதாகப் பெருங்குன்றூர்கிழார் பாடிய “ஈயல் புற்றத்து” எனத் தொடங்கும் பாடல் உள்ளுறை உணர்த்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இதில் பசியுடன் அலையும் கரடி ஈசல் புற்றில் கைவிட்ட செயலும், அங்குப் பதுங்கி இருந்த பாம்பு கரடி நகம் பட்டுத் துன்புறும் செய்தியும் சுட்டப்பட்டுள்ளன.
இரவில் காட்டைக் கடந்துவரும் தலைவன் செயலுக்குத் தலைவி அஞ்சுவது மறைபொருளாக சுட்டப்பட்டுள்ளது. தலைவனுக்குக் கரடியும், தலைவிக்கு பாம்பும் குறியீடுகளாக அமைந்த உள்ளுறை உவமமாகும்.
இறைச்சி:-
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பு இல்லாத குறிப்பொருளே இறைச்சியாகும்
“நசை பெரிது” எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல், இறைச்சிக்கு சிறந்த சான்றாகும்.
தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, “தலைவன் செல்லும் வழியில் ஆண் யானை, பெண் யானையின் பசியைப் போக்க, “யா” மரத்தின் பட்டையை உரித்து, நீர்ச்சுவையைப் பருகச் செய்யும்” என்று கூறுவாள்
இது பாடலின் கருத்து. ஆனால், “தலைவன் இந்தக் காட்சியைக் காண்பான். விரைவில் திரும்பி, தலைவியின் துன்பம் தீர்ப்பான்” என்பது, இது உணர்த்தும் குறிப்பு பொருளாகும். இவ்வாறு உரிப்பொருளின் புறத்தே நின்று, வேறு கருத்தைக் குறிப்பாக உணர்த்துவது “இறைச்சி” ஆகும்.
மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
ஜியு.போப்
செந்தமிழ்ச் செம்மல் டாக்டர் ஜி.யு.போப் 1839ஆம் ஆண்டில் தென்னிந்தியாவுக்கு வந்தார். சென்னையை அடைந்த போப் “சாந்தோம்” என்னும் இடத்தில் முதன்முதலாகத் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றினார். ஆங்கிலேயரான அவரின் தமிழுரை கூடியிருந்த தமிழர்களுக்குப் பெருவியப்பளித்தது. தமிழ் மொழியைப் பயிலத் தொடங்கிய சிறிது காலத்திலேயே ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது திருக்குறள், திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்தவை.
போப் அவர்கள் தஞ்சாவூரில் வாழ்ந்தபோது, தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுற அறிந்தார். அப்போதுதான் தொல்காப்பியம், நன்னூல் முதலிய பேரிலக்கண நூல்களைப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிட்டார். ஐரோப்பியர் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளுவதற்குரிய நூல் ஒன்றை (Tamil Hand Book) எழுதினார். ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை தமிழில் எழுதிப் பதிப்பித்தார். பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார். எழுபது ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழக்கு நலம் அருளிய பெரியார் ஜி.யு.போப் ஆவார்.
கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை தருக
1. இலக்கணக் குறிப்பு தருக
அ) பிறந்தவர்
படர்க்கை பலர்பால் இறந்த கால வினைமுற்று
ஆ) அருளிய
பெயரெச்சம்
2. திருக்குறளை ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் – விடைக்கேற்ற வினாவை எழுதுக
எந்த எண்ணத்தில் ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்?
3. பதிப்பித்தார் – பகுபத உறுப்பிலக்கணம் தருக
பதிப்பித்தார் – பதிப்பி + த் + த் + ஆர்
- பதிப்பி – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி
4. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக
பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகையைக் கல்வியேப் பயனளிக்கும்மென்றும் போப் கருதினார்.
விடை
பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகையை கல்வியே பயனளிக்கும்மென்றும் போப் கருதினார்.
5. பொருத்துக
அ) தொல்காப்பியம் | i) சங்க நூல் |
ஆ) திருக்குறள் | ii) பக்தி நூல் |
இ) புறநானூறு | iii)அற நூல் |
ஈ) திருவாசகம் | iv) இலக்கண நூல் |
விடை : அ – iv, ஆ – iii, இ – i, ஈ – ii |
செய்திகுக் கீழுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை மொழிபெயர்ப்பு பகுதியிலிருந்து கண்டறிந்து எழுதுக.
The Chinese have no religious science. The practices of their religion (Buddhism) are derived from India. They believe that it is the Indians who brought idols to them and that the latter were their religious educators. In China and in India they believe in metempsychosis. The Chinese and Indians draw from the same religious principles different conclusions. In India medicine and philosophy are practiced. The Chinese practice medicine equally. Their chief treatment is cauterization. The Chinese practice astronomy but the Indians practice this science still more.
Written by Abu Zayd Al Sirafi, traveler, 10th century.
Foreign notices of South India by K.A.Neelakanda Sastri.
சீனாகவுக்கென்று தனியாக மதங்கள் இல்லை. இந்தியாவின் மதத்தை (பவுத்தம்) அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். சிலைகளைத் தங்களுக்கு அறிமுகம் செய்தோர் இந்தியர்கள் என்று நம்பும் சீனர்கள், இந்தியர்களே தங்களின் மத ஆசிரியர்கள் என்னும் கருதுகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் மரணத்துக்குப் பிந்தைய மறுபிறப்பை நம்புகின்றன. ஒரே மதக் கோட்பாடு இருந்தாலும், சீனர்களும் இந்தியர்களும் வெவ்வேறு தீர்மானங்களுக்கு வருகிறார்கள். இந்தியாவில் மருத்துவமும், தத்துவமும் நடைமுறையில் உள்ளன. அவர்களுக்குச் சமமான சீனர்களும் மருத்துவத்தை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். “தீய்த்தல்” அவர்களுது பிரதான சிகிச்சை முறை, சீனர்கள் வானியல் சாஸ்திரப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள. ஆனால் இந்த அறிவியிலை இந்தியர்கள் இன்னும் அதிகமாய்ப் பயன்படுத்துகின்றனர்.
Religion – மதம் | Medicine – மருந்து |
Idols – சிலைகள் | Science – அறிவியல் |
Philosophy – தத்துவம் |
கீழ்க்காணும் பத்தியில் உள்ள உவமைகளும் உருவகங்களையும் பட்டியலிடுக. உருவகங்களை உவமையாக மாற்றுக. உவமைகளை எவ்வகை உவமைகள் என்றும் எழுதுக.
விழிச்சுடர், வாசலில் உட்கார்ந்திருந்தாள். அவளது எண்ணவலையில் மின்னல்களைப் போன்ற சொற்கள் தோன்றி மறைந்தன. அடுக்கி வைக்கப்படாத புத்தகங்களைப் போலக் குழம்பிய எண்ணங்களை ஒழுங்குபடுத்த நினைத்தாள். நேரம், நத்தையைப்போல மெதுவாக நகர்ந்தது. அண்ணாந்து பார்த்தாள். நீலப்பட்டு உடுத்தியதைப் போன்ற வானம், அம்மாவை நினைவூட்டியது. பூனைக்குட்டியைப்போல் அம்மாவின் முந்தானைக்குள் சுருண்டு கொள்ள நினைத்தாள். பூனைக்குட்டியை மடியில் வைத்துக் கொண்டதைப் போல், அம்மாவின் கதகதப்பை உணர்ந்தாள். பசிக்கயிற்றால் சுண்டிவிடப்பட்டவள், பூட்டியிருந்த வீட்டுக் கதவின்மேல் சாய்ந்தபடி, அம்மாவின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.
1. உவமை, உருவகங்கள்
உவமை
- மின்னல்களைப் போன்ற சொற்கள்
- அடுக்கிவைக்கப்படாத புத்தகங்களைப் போல
- நத்தையைப் போல
- பூனைக்குட்டியை மடியில் வைத்து கொண்டதைப் போல்
உருவகங்கள்
- விழிச்சுடர்
- எண்ணவலை
- நீலப்பட்டு உடுத்திய வானம்
- பசிக்கயிறு
2. உருவகங்களை உவமையாக்குதல்
- எண்ணவலை – வலைஎண்ணம் (வலை போன்ற எண்ணம் – வடிவம்
- விழிச்சுடர் – சுடர்விழி (சுடர் போன்ற விழி) – தொழில்
- பசிக்கயிறு – கயிறுபசி (கயிறு போன்ற பசி) – தொழில்
- நீலப்பட்டு – பட்டுநீலம் – நிறம்
உவமையை உருவகமாக்குதல்
மின்னல்களைப் போன்ற சொற்கள் – சொற்களாகிய மின்னல்
3. மின்னல் போன்ற சொற்கள் – வினை
மின்னல் போன்ற சொற்கள் | வினை |
அடுக்கி வைக்கப்படாத புத்தகங்கள் | வடிவம் |
நத்தையைப் போல | வினை |
நீலப்பட்டு உடுத்தியதைப் போல | வண்ணம் |
பூனைக்குட்டியை மடியில் வைத்துக் கொண்டதைப்போல் | தொழில் |
கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக.
கல்வி என்றால் என்ன? அது நூல்களைப் படிப்பதா? அல்லது அது பலவகையானதைக் குறித்த அறிவா? அதுவும் இல்லை. எத்தகைய பயிற்சியின்மூலம் மனத்தின் ஆற்றலும் அது வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுப் பயன்தரும் வகையில் அமைகிறதோ, அந்தப் பயிற்சிதான் கல்வியாகும். அக்கல்வி வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுதான் மனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சி. கல்வியின் நோக்கம் செய்திகளைப் பற்றிய அறிவைச் சேமிப்பதன்று. கல்வியின் நோக்கமே மனத்தை ஒருமுகப்படுத்துவதுதான். மனவொருமைப்பாடே கல்வியின் அடிப்படை.
எல்லோரும் தங்கள் அறிவு வளர்ச்சிக்கு அம்முறையைத்தான் பின்பற்றியாக வேண்டும். மனத்தை ஒருமுகப்படுத்தும் அளவுக்கு அறிவும் வளரும். இயற்கையால் மூடப்பட்டிருக்கும் அறிவுச்சுடரைத் திறப்பதற்கு இதுவொன்றே சிறந்த வழியாகும். மனிதன் தன் சக்தியை நூற்றுக்குத்
தொண்ணூறு விழுக்காடு வீண் செய்து விடுகிறான். இதனால்தான், அவன் அடிக்கடி தவறுகள் செய்கிறான். பண்புடைய மனத்தைப் பெற்றவன் ஒரு தவற்றையும் செய்ய மாட்டான். மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது, இதைப் பொறுத்துத்தான் அமைகிறது. இசை, ஓவியம், சிற்பம் முதலிய எல்லாக் கலைகளிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெறச் செய்வது மன ஒருமைப்பாடுதான். மேலும், உலகத்தின் புதிர்களை மூடி வைத்திருக்கும் கதவுகளைத் திறக்கக்கூடிய வலிமையை நாம் பெற வேண்டும். இவ்வலிமையை நமக்கு அளிக்கக்கூடியது மன ஒருமைப்பாடுதான். அதுவே கல்விக்கு அடிப்படையாகும். (சுவாமி விவேகானந்தர் – கல்வி)
விடை:-
மாதிரிப்படி
பயிற்சியின் மூலம் மனவுறதியைக் கட்டுப்படுத்தி, பயன்தரச் செய்வதே கல்வி, அதனை வளர்க்க, மன ஒருமைப்பாடே அடிப்படை, அறிவை வளர்க்கவும் மன ஒருமைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். இயற்கை மூடியுள்ள அறிவுச் சுடரைப் பெற அதுவே சிறந்த வழி. சக்தியை மனிதன் வீணாக்கிவிடுவதால், அடிக்கடி தவறு செய்கிறான். பண்புடை மனம் பெற்றவன், தவறு செய்யான். மனதை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற்று, மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறனான். கலைகளில் தேர்ச்சி பெற, மன ஒருமை தேவை. புதிர்களை விடுவிக்கும் திறம் அதற்கு உண்டு. அதுவே கல்விக்கு அடிப்படை.
உண்மைப்படி – மன ஒருமையே வெற்றி
மனவுறுதியைக் கட்டுப்படுத்திப் பயிற்சியால் பயன்தரச் செய்வதே கல்வி. மனவொருமைப்பாடே கல்வியை வளர்க்க அடிப்படை, அறிவு வளர, மனவொருமைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். இயற்கை மூடியுள்ள அறிவுச்சுடரை பெறச் சிறந்தவழி அதுவே. சக்தியை மனிதன் வீணாக்கி விடுவதால் தவறிழைக்கிறான். மனத்தை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற்றால், மனிதன் விலங்கிலிருந்து திறம் அதற்குண்டு. அதுவே கல்விக்கு அடிப்படை.
இலக்கிய நயம் பாராட்டுக
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்தி
காட்சிக் கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடும் காணீர்
-பாரதியார்
ஆசிரியர்:-
இப்பாடலைப் பாடியவர் நற்றமிழ்க் கவிஞர் பாரதியார். இப்பாடலில் சமுதாயத்தில் பெண்கள் கல்வி கற்க வேண்டுவதை வலியுறுத்தியுள்ளார்.
மையக்கருத்து:-
பெண்கள் அறிவை வளர்க்கக் கல்வி அளிக்க வேண்டும். அதனால் உலகமே வெளிச்சம் பெறும் என்பதை மையக் கருத்தாக வைத்துப் பாடியுள்ளார்
எதுகைத்தொடை:-
அடிதோறும் முதல் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவதால் இப்பாடல் அடி எதுகையாக அமைந்துள்ளது.
- பெண்ணுக்கு – மண்ணுக்கு – கண்கள் – பெண்கள்
அணி:-
இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி “இயல்பு நவிற்சி அணி” ஆகும்.
- ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி எனக் கூறுவர்.
- பெண்கள் கல்வி பெற வேண்டும் என்பதை நயம்படி இயல்பான சொற்களை விளக்கியுள்ளார்.
மேலும் கண்கள் இரண்டில் ஒன்றைக் குத்திக்காட்சி கெடுத்திடலாமோ? என வினவுவதால் உவமையும் அமைந்துள்ளது.
சந்த நயம்:-
இப்பாடலில் எதுகை, மோனைச் சொற்கள் அமைய எளிய, இனிய சொற்களைக் கொண்டு சுவையுடன் பாடத்தக்க வகையில் பாடியுள்ளமையால் சந்தநயம் வெளிப்படுகிறது.
மொழியோடு விளையாடு
எண்ணங்களை எழுத்தாக்குக.
இயற்கையாகப் பெற்ற அறிவால் கற்றுப் பெற வேண்டியது அதிகம்
கலைகள் கற்போம்; ஓயுதல் செய்வோம்;
நல்ல ஆடை செய்வோம்; நாகரிகம் வளர்ப்போம்;
நடையும் பரப்பும் உணர் ஊர்திகள் செய்வோம்;
சட்டம் கற்போம்; சகலகலை திட்டம் வகுப்போம்;
மண்ணை ஆய்வோம்!
விண்ணையும் ஆய்வோம்!
திறமை, ஊக்கம், நேர்மை மறவாமல் உழைப்போம்!
ஆணும், பெண்ணும் சமம் என உழைப்போம்!
தேடு பொருள் அத்தனையும் தேசியம் செய்வோம்!
மறைந்திருக்கும் சொற்களை கண்டுபிடிக்க
மேலிருந்து கீழ்:-
கோத்தாரி | கணக்காயன் | சுவடி |
பாலபாரதி | வேடல் | திண்ணைப்பள்ளி |
புவி | போதனார் | பெளத்தம் |
கீழிருந்து மேல்:-
கல்லாடனார் | இலக்கணம் |
பனுவல் | பாரதியார் |
மன்றம் | பொத்தகம் |
பிள்ளைக்கூடம் | மதரஸா |
விஜயா | சமணம் |
வலமிருந்து இடம்
பாதி | பிரசம் | பொன் |
இடமிருந்து வலம்
பட்டிமண்டபம் | நற்றிணை | பொதி |
சொல்லை பிரித்து தொடர் அமைக்க
எ.கா.:- கால்நடை – கால் நடை
கால்நடை | கால்நடைகளை மேய்ச்சல் நிலத்திற்கு ஓட்டிப் போனார்கள் |
கால் நடை | காலையில் கால் நடைபயிற்சி (கால் நடை) உடலுக்கு நல்லது |
1. பிண்ணாக்கு – பிள் நாக்கு
பிண்ணாக்கு | கடலைப் பிண்ணாக்கு கால்நடைத் தீவனமாகப் பயன்படும். |
பிள் நாக்கு | பாம்பு தன் பிண்ணாக்கை (பிள் நாக்கை) வெளியே நீட்டியது. |
2. எட்டுவரை – எள் துவரை
எட்டுவரை | அவன் எட்டுவரை தான் படித்துள்ளான். |
எள் துவரை | எங்கள் நிலத்தில் எட்டுவரை (எள் துவரை) விதைத்துள்ளோம். |
3. அறிவில்லாதவன் – அறிவில் ஆதவன்
அறிவில்லாதவன் | அறிவில்லாதவனுக்கு எதையும் சொல்லிய புரிய வைக்க எளிதில் முடியாது. |
அறிவில் ஆதவன் | ஆசிரியர் என்னை அறிவில் ஆதவன் என பாரட்டினார். |
4. தங்கை – தம் கை
தங்கை | அண்ணன் தன் தங்கையை தேர்வில் முதலிடம் பிடித்தற்கு பாராட்டினான் |
தம் கை | தங்கையே (தன் கையே) தமக்கு உதவி என்பது பழமொழி |
5. வைகை
வைகை | மதுரையை வைகை நதி வளம்கொழிக்க செய்கிறது |
வை கை | பணப்பையில் “வை கை”யை உதைப்பேன் என்றார் தந்தை |
6. நஞ்சிருக்கும்
நஞ்சிருக்கும் | வாழைப்பழத்தை நஞ்சிருக்கும் போது தின்னக்கூடாது |
நஞ்சு இருக்கும் | பாம்புக்கு பல்லில் நஞ்சு இருக்கும் |
நிற்க அதற்குத் தக
கலைச்சொல் அறிவோம்
கல்விக்குழு – Education Committee | மூதாதையர் – Ancestor |
உள்கட்டமைப்பு – Infrastructure | மதிப்புக் கல்வி – Value Education |
செம்மொழி – Classical Language | மனஆற்றல் – Mental Ability |