Class 11th Tamil Book Solution for CBSE | Lesson 5.5 – பா இயற்றப் பழகலாம்

பாடம் 5.5 பா இயற்றப் பழகலாம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 5.5 “பா இயற்றப் பழகலாம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 11 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது ………………

  1. காய் முன் நேர்
  2. காய் முன் நிரை
  3. கனி முன் நிரை
  4. மா முன் நேர்

விடை : மா முன் நேர்

குறு வினா

ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள் யாவை?

ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் இயற்சீர், ஆரிரிய உரிச்சீர் என்பன. ஈரசைச்சீர்கள் மாச்சீர் (தேமா, புளிமா), விளச்சீர் (கூவிளம், கருவிளம்) என இருவகைப்படும்.

சிறு வினா

ஆசிரியப்பாவின் பொது இலக்ககணத்துள், எவையேனும் நான்கினைக் கூறுக

  • எல்லா அடிககுளம் நான்கு சீர்களை பெற்று வரும்.
  • இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.
  • நிரை நடுவாகிய (கூவிளங்கனி,கருவிளங்கனி) வஞ்சி உரிச்சீர்கள் வாரா.
  • இறுதி அடியின் இறுதிச் சீர் “ஏ” என்னும் ஓசையில் முடிவது சிறப்பு.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பாக்களின் வகை, ஓசை இயற்றும் விதிமுறைகளை கூறும் நூல் ……………

  1. புறநானூறு
  2. நற்றிணை
  3. தொல்காப்பியம்
  4. யாப்பருங்கலக்காரிகை

விடை : யாப்பருங்கலக்காரிகை

2. கலிப்பாவிற்குரிய ஓசை ……………

  1. செப்பலோசை
  2. துள்ளலோசை
  3. அகவலோசை
  4. தூங்கலோசை

விடை : துள்ளலோசை

3. செய்யுளில் இசையைப் பிணைப்பவை …………………

  1. எதுகை, மோனை, இயைபு
  2. எழுத்து, சீர், அசை
  3. அடி, தொடை, பா
  4. சீர், அடி, தொடை

விடை : எதுகை, மோனை, இயைபு

4. எல்லா அடிகளும் அளவடி (நாற்சீர் அடி) பெற்று வருவது ……………..

  1. இணைக்குறள் ஆசிரியப்பா
  2. நிலைமண்டில ஆசிரியப்பா
  3. அடிமறிமண்டில ஆசிரியப்பா
  4. நேரிசை ஆசிரியப்பா

விடை : நிலைமண்டில ஆசிரியப்பா

5. முதலடியும் இறுதி அடியும் அளவடிகளாகவும், இடையடிகள் குறளடி, சிந்தடிகளாகவும் வரும் ஆசிரியப்பா ……………….

  1. இணைக்குறள் ஆசிரியப்பா
  2. நிலைமண்டில ஆசிரியப்பா
  3. அடிமறிமண்டில ஆசிரியப்பா
  4. நேரிசை ஆசிரியப்பா

விடை : இணைக்குறள் ஆசிரியப்பா

குறு வினா

1. “செய்யுள்” என்னும் பொருளைக் குறிக்கும் சொற்கள் எவை?

செய்யும் என்னும் பொருளைக் குறிக்கும் சொற்கள் தூக்கு, கவி, கவிதை, பாட்டு என்பன.

2. செய்யுள் உறுப்புகள் எவை?

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன செய்யுள் உறுப்புகள் ஆகும்.

3. அசை என்பது யாது? அதன் வகைகளை கூறு

  • எழுத்தோ, எழுத்துகளோ சேர்ந்து அசைந்து, இசை பொருந்த சீருக்கு உறுப்பாக வருவது அசை எனப்படும்
  • நேரசை, நிரையசை என இருவகைப்படும்

4. நேரசை எவ்வாறு அமையும்?

குறில் தனித்தோ, ஒற்றிணைந்தோ, நெடில் தனித்தோ, ஒற்றிணைந்தோ “நேரசை” அமையும்

5. நிரையசை எவ்வாறு அமையும்?

இரு குறில் இணைந்தோ, இரு குறிலோடு ஒற்றிணைந்தோ, குறில்நெடில்  இணைந்தோ, குறில்நெடில் ஒற்றிணைந்தோ “நிரையசை” அமையும்.

6. நேரிசை ஆசரியப்பா எவ்வாறு அமையும்?

ஈற்றயல் அடி மூன்று சீர்களாய் அமைய, ஏனைய அடிகள் நான்கு சீர்களாய் அமைய வருவது நேரிசை ஆசிரியப்பா ஆகும்.

7. நிலை மண்டில ஆசிரியப்பா என்பது யாது?

எல்லா அடிகளும் நான்கு சீர்களாய் அமைந்து வரும் ஆசிரியப்பா நிலைமண்டில ஆசிரியப்பான எனப்படும். இது “ஏ”, “என்” என்னும்ஈற்று அசை பெறுவது சிறப்பு என்பர்.

8. இணைக்குறள் ஆசிரியப்பா எவ்வாறு அமையும்?

முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களைப் பெற்று இடையடிகள் ஈரசை, மூவசைப் சீர்களைப் பெற்று வருவது இணைக்குறள் ஆசிரியப்பாவாகும்.

9. அடிமறிமண்டில ஆசிரியப்பா என்பது யாது?

பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாது அமைவது அடிமறிமண்டில ஆசிரியப்பாவாகும்.

10.  ஆசிரியப்பாவின் இனங்கள் யாவை?

ஆசிரியத்தளை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம்

இலக்கணத் தேர்ச்சி கொள்

1. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

ஆசியப்பா நான்கு வகைப்படும். அவை

நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறிமண்டில ஆசிரியப்பா

2. ஆசிரியப்பாவிற்கு சீரும் தளையும் யாவை?

  • மாச்சீர், விளச்சீர் எனும் ஈரசைச் சீர்கள், ஆசிரியப்பாவிற்குரிய சீர்களாகும்
  • வெண்பாவிற்குறிய காய்ச்சீர்கள் வரலாம்
  • நேரொன்றாசிரியத் தளையும், நிரையொன்றாசிரியத் தளையும் ஆசிரியப்பாவின் தளையாகும்.
  • பிற தளைகளும் கலந்து வரும்.

3. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் வகைகளையும், அவை இயற்றுவதற்கான விதிகளையும் கூறுக?

  • ஆறுசீர்கள் நான்கு கொண்டதாக அமைந்து, நான்கு அடிகளும் அளவு ஒத்து வரவேண்டும்.
  • முதல்சீரிலும், நான்காம் சீரிலும் மோனை அமைத்தும், முதல் சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை அமைந்தும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எழுதலாம்.

4. பொருத்துக

அ) நேரிசை ஆசிரியப்பாi) முதலடியும் இறுதியடியும் அளவடிகாள் வரும்
ஆ) இணைக்குறள் ஆசிரியப்பாii) அடிகளை மாற்றிப் பாடினாலும் ஓசையும் பொருளும் மாறாது வரும்
இ) நிலைமண்டில ஆசிரியப்பாiii) ஈற்றயல் அடி சிந்தடியாய் வரும்
ஈ) அடிமறிமண்டில ஆசிரியப்பாiv) எல்லா அடிகளும் அளவடி பெற்று வரும்.
விடை : அ – iii, ஆ – i, இ – iv, ஈ – ii

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர் (1882 – 1954)

தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச்சுவைக்கு ஈடுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்க முடியும் எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை இரிசகமணி டி.கே. சிதம்பரநாதர். இவர் தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர். டி.கே.சி-யின் வீட்டுக் கூடத்தில் வட்ட வடிமான தொட்டிக் கட்டு, ஞாயிறுதோறும் மாலை ஐந்து மணிக்குக் கூடிய கூட்டம், இலக்கியத்தைப் பற்றி பேசியது. அவ்வமைப்பு “வட்டத் தொட்டி” என்றே பெயர்பெற்றது. டி.கே.சி. இலக்கியங்களின் நயங்களைச் சொல்லச் சொல்லக் கூட்டத்திலுள்ள அனைவரும் தங்களை மறந்து இலக்கியத்தில் திளைப்பர். தமிழின் இனிமை என்பது மட்டும் அவர்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும் வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதேயே டி.கே.சி. விரும்பினார். தமிழ்க்கலைகள், தமிழ் இசை, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் சுவையையும், மேன்மையையும் எடுத்துச் சொன்னார். கடிங்களிலும் அவற்றையே வியந்து எழுதினார். அவர்தம் கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன. இதய ஒலி, கம்பர் யார்? முதலான நூல்ககளும் முத்தெள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு எழுதிய உரையும் அவர்தம் இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம். சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும், அறிநிலையத்துறையின்  ஆணையராகவும் திகழந்த டி.கே.சி. ஏற்றிய இலக்கியஒளி தமிழ் அழகியமலை வெளிச்சப்படுத்தியது.

வினாக்களுக்கு விடையளிக்க

1. அன்று, அல்ல என்பவற்றுக்கான பொருள்வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க

  • அன்று : நீ செய்யும் செயல் நன்று அன்று.
  • அல்ல : நான் கேட்டவை இவை அல்ல.

2. சொல்லச் சொல்ல, திளைப்பர் – இலக்கணக் குறிப்புத் தருக

சொல்லச் சொல்ல

  • அடுக்குத்தொடர்

திளைப்பர்

  • படக்கைப் பலர்பால் எதிர்கால வினைமுற்று.

3. ரசிகர் – தமிழ்ச்சொல் எழுதுக. மாநில மேலவை – ஆங்கிலக் கலைச்சொல் தருக

ரசிகர்

  • சுவைப்பவர், சுவைஞர்

மாநில மேலவை

  • Legislative Council

4. வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி விரும்பினார் – விடைக்கேற்ற வினா அமைக்க

வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிட எதில் திளைப்பதையே டி.கே.சி விரும்பினார்?

5. மேலவை, புத்துணர்வு – இச்சொற்களின் புணர்ச்சி வகையைக் கண்டறிக

மேலவை = மேல் + அவை

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி  “மேலவை” என்றாயிற்று

புத்துணர்வு = புதுமை + உணர்வு

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி  “புது + உணர்வு” என்றாயிற்று
  • “தன் ஒள்று இரட்டல்” என்ற விதிப்படி  “புத்து + உணர்வு” என்றாயிற்று
  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி  “புத்த் + உணர்வு” என்றாயிற்று
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி  “புத்துணர்வு” என்றாயிற்று

தமிழாக்கம் தருக

The folk songs of TamilNadu have in them a remarkable charm just as we find in the folk songs of any other country. But what is special in these Tamil songs is, they not only possess a native charm and the aroma of the soil but have preserved in them a certain literary and artistic quality. This is so because the people who speak the language of these folk songs, the Tamils, have had a great historical past and a wonderful literary tradition. Folk songs are so old and yet so full of life that they are always new and progressively modern. These songs were born several centuries ago; they are being born every generation; they will be born and reborn over and over again!

விடை :-

தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் பாடல்கள் பிற மொழி நாட்டுப்புறப் பாடல்களை விட ஒரு குறிப்பிடத்தக்க அழகுணர்ச்சி நிறைந்த கவர்ச்சியைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதனால், தமழில் உள்ள பாடல்கள் தனிச்சிறப்பு உடையன. இயற்கை அழகின் தோற்றத்தையும். சொந்த மண்ணின் மணத்தையும், குறிப்பிட்ட இலக்கிய மற்றும் கலை உணர்வுகளையும் தன்னகத்தே பாதுகாத்து வைத்துள்ளது. நாட்டுப்புற்பாடல்கள், அவை புழங்கும் தாய்மொழி ஒரு பெரிய வரலாற்றைக் கடந்த அற்புதமான இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டதாக இருந்துள்ளது. நாட்டுப்புறப் பாடல்கள், மிகவும் பழமையானவை. அது புதிய வாழ்க்கையையும் படிப்படியாக நவீனமயமாக்கப்படும் வாழ்க்கையையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தலைமுறையினருக்குமு் மறுபடியும் மறுபடியும் தோன்றிப் புதுபித்து வந்துள்ளது.

கீழ்காணும் பாடலின் முதலடியைக் கவனித்து பிற அடிகளில் உள்ள சீர்களை ஒழுங்கு செய்க

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

ஓடையிலேஊறுகின்றதீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண்ணீர்இடைமலர்ந்தசுகந்தமணமலரே

மேடையிலேவீசுகின்றமெல்லியபூங்காற்றே
மென்காற்றில்விளைசுகமேசுகத்திலுறும்பயனே

ஆடையிலேஎனைமணந்தமணவாளாபொதுவில்
ஆடுகின்றஅரசேஎன்அலங்கலணிந்தருளே

விடை :

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில்விளைசுகமேசுகத்திலுறும்பயனே

ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே!

இலக்கியநயம் பாராட்டுக

செந்நெலும் கரும்பும் விளைந்தனவே – நல்ல
தேன்பொழி மலர்களும் விரிந்தனவே
இன்னலும் பசியும் போயொழிக – தேசம்
எழிலுடன் கூடியே நலமுறுக

பிரிவுகள் பேசியே பூசலிட்ட – பழம்
பேதமை தனைத்தள்ளி அனைவருமே
ஒருதனிக் குடும்பமாய் வாழ்ந்திடுவோம் – நம்முள்
ஒற்றுமை ஓங்கிடச் செய்திடுவோம்

தமிழன் திருநாள் பொங்கலென்றால் – அதில்
தமிழன் பண்புகள் பொங்குமன்றோ?
புவியெலாம் சேர்ந்தொரு வீடதிலே – யாரும்
புறம்பிலை என்றசொல் தமிழன்றோ?

யாதும் ஊரெனச் சாற்றியதும் – மக்கள்
யாவரும் கேளிர் என்றதுவும்
மேதினிக் குரைத்தவர் நம்முன்னோர் – இன்று
வேற்றுமை நாமெண்ணல் சரியாமோ?

– பெ. தூரன்

ஆசிரியர் குறிப்பு 

பெ. தூரன் என்று சுருக்கப் பெயரில் குறிப்பிடப் பெறுபவர் “பெரியசாமித்தூரன்”. இவர் சிறந்த இலக்கியப் புலமையும், ஆழ்ந்த அறிவியல் அறிவும் பெற்றவர். தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காகத் தாய்மொழியில் இனிய எளிய பாடல்களை எழுதி, நல்லறிவு புகட்ட முயன்றார். தமிழ்மொழியல் குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியத்தைப் படைத்தளித்த உழைப்பாளி

திரண்ட கருத்து

இயற்கையைப் போற்ற வேண்டும். அதனால் வளம் பெருகும். உணவுப் பொருள் உற்பத்தி பெருகம். வறுமை போகும் என்பவற்றை வலியுறது்துகிறார். முன்பு சாதி, சமய வேறுபாடுகளால் சிதைந்து அடிமைப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அவற்றை நீக்கி அனைவரும் ஒரு குடும்பகமாக வாழ வேண்டுமென அறிவுரை கூறுகிறார். ஒற்றுமையுடன் அனைவரும் ஒன்றுபட்டு வழ்வது நல்லது என்னும் செய்தி, உறுதிபடக் கூறப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கலில் தமிழப்பண்பு வெளிப்பட விழா எடுத்து வாழவேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார். வேற்றுமைகளை மறந்து, மனித இன உயர்வுகளுக்கு பாடுபடவேண்டுமென்பதை வலியுறுத்துகிறார். எளி சொற்களில் இனிய கருத்தை அருமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடை நயம்

மோனைத் தொடை

  • ருதனி – ற்றுமை, மிழன் – மிழன், புவியெலாம் – புறம்பிலை, யாதும் – யாவரும் என்னும் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வந்து சீர்மோனை வந்துள்ளது.

இயைபுத் தொடை

  • விளைந்தனவே – விரிந்தனவே, போயொழி – நலமுறு, வாழ்ந்திடுவோம் – செய்திடுவோம், சாற்றியதும் – ஏற்றிதுவும் என்னும் ஈற்றுசீர்களில் ஓசைநயம் பொருந்தி இயைபுத்தொடை அமைந்துள்ளது.

சந்தநயம்

  • எளிய சொற்களில் ஓசைநயம் பெறப்பாடி இன்புறுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளமை சந்த நயத்தை புலப்படுத்தும்

மொழியை விளையோடு

கருத்துப் படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக

Class 11th Chapter 5.5 கருத்துப் படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக

தமிழ்மொழியின் ஐவகை இலக்கணப் பிரிவுகளுள் “பொருள் இலக்கணம்” ஆகும். இது தமிழர் வாழ்க்கைமுறை கூறுவதாகும். பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என இரு வகைப்படும். அகப்பொருள் முதற்பொருள, கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று பிரிவுகளை கொண்டது.

முதற்பொருள் நிலத்தையும், பொழுதினையையும் குறிக்கும். நிலத்தினை ஐந்து வகையாக பிரிப்பர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பாலை ஆகும்.

பொழுதினை சிறுபொழுது, பெரும்பொழுது என இரு வகையாக பிரிப்பர். சிறுபொழுது ஒருநாளின் வைகறை, காலை, நண்பகல், மாலை, ஏற்பாடு, யாமம் என்னும் ஆறு பிரிவு கொண்டது. பெரும்பொழுது ஓர் ஆண்டின் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் ஆறு பிரிவுகளை உடைது.

கருப்பொருள் என்பது தெய்வம், மக்கள், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் என்னும் பிரிவுகளை கொண்டது. இது ஐந்து திணைகளுக்கும் தனித்தனியே அமையும்

உரிப்பொருள் ஐந்து வகையாக பிரிப்பர். குறிஞ்சி- புணர்தலும் புணர்தல் நிமித்தமும், முல்லை- இருத்தலும் இருத்தல் நிமித்தமும், மருதம்- ஊடலும் ஊடல் நிமித்தமும், நெய்தல்- இரங்கலும் இரங்கல் நிமித்தமும், பாலை- பிரிதலும் பிரிதல் நிமித்தமும் இது ஐந்திணைக்குரிய உரிப்பொருளாகும்.

எண்ணங்களை எழுத்தாக்குக.

Class 11th Chapter 5.5 எண்ணங்களை எழுத்தாக்குக.எண்ணித் துணிந்தால் வழுக்குப் பாறையும் ஏணிப்படி! வெற்றி என்பது விழாகனி! அதை எட்டிப்பறிப்பதே காலத்தின் விதி! வெற்றி பெற வேண்டும் என்பதே எல்லோருக்கும் ஆசை! அடைந்தவர் என்னவோ மிகவும் சொர்ப்பம்! நெஞ்சில் உறுதியும் உடலில் வலிமையும் எதிர்நீச்சல் குணமுமே ஏற்றமிகு படிகள்! ஆபத்த நிறைந்தது தான் ஆழ்கடல்! அதில் அள்ளிவரும் முத்தோ பெருஞ்செல்வம்! துணிந்துவிட்டால் இமயமும் உனது காலுக்கு கீழ்! என்பதே இப்படித்தின் மூலம் புரிந்து கொண்டவை.

புதிர்களுக்கான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக

(கம்பு, மை, வளை, மதி, இதழ், ஆழி)

1. எலியும் நுழையும்; எழிலரசி கையும் நுழையும் ……………..

விடை : வளை

2. அடிக்கவும் செய்யலாம்; கோடைக்கு கூழாகவும் குடிக்கலாம் ………….

விடை : கம்பு

3. கண்ணிலும் எழுதலாம்; வெண்தாளிலும் எழுதலாம் ……………

விடை : மை

4. அறிவின் பெயரும் அதுதான்; அம்புலியின் பெயரும் அதுவேதான் …………….

விடை : மதி

5. பூவின் உறுப்பும் நானே; புன்னகையின் பிறப்பிடமும் நானே ……………

விடை : இதழ்

6. வண்டியையும் இயக்கமும்; பெரும் கப்பலையும் தாங்கும் ………………….

விடை : ஆழி

நிற்க அதற்குத் தக

கலைச்சொல் அறிவோம்

ஆவணம் – Documentஉப்பங்கழி – Backwater
ஒப்பந்தம் – Agreementபடையெடுப்பு – Invasion
பண்பாடு – Cultureமாலுமி – Sailor

அறிவை விரிவு செய்

மறைக்கப்பட்ட இந்தியா – எஸ். இராமகிருஷ்ணன்
பிரபஞ்சன் சிறுகதைகள்

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment