பாடம் 1.4 தம்பி நெல்லையப்பருக்கு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 1.4 “தம்பி நெல்லையப்பருக்கு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
தெரியுமா?
- பரலி சு. நெல்லையப்பர் விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
- பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர்.
- பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
- இவர் நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களையும் வ.உ. சிதம்பரனாரின் வா ழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.
நூல்வெளி
- மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய இக்கடிதம் ரா.அ. பத்மநாபன் பதிப்பித்த பாரதி கடிதங்கள் என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது.
- பாரதி, பதினைந்து வயதில் கல்வி கற்க உதவி வேண்டி எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதம் முதல் அவர்தம் மறைவிற்கு முன்னர் குத்திகேசவருக்கு எழுதிய கடிதம் வரை அனைத்தும் நம்மிடம் பேசுவதுபோல இருப்பதே அவருடைய நடையழகின் சிறப்பு.
- பாரதியாரை விட ஏழாண்டுகள் இளையவரான பரலி சு. நெல்லையப்பரைப் பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி அன்புகாட்டி வந்தார்.
- பாரதியின் கடிதங்கள் மேலும் அவரை நன்றாகப் புரிந்துகொள்ளத் துணைபுரிகின
பாடநூல் வினாக்கள்
நெடு வினா
பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
மொழிப்பற்று:-
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிபடுத்துகின்றார். நெல்லையப்பரிடம் அவர் கூறும்போது, “நீ பிற மொழிகளை அறிந்திருந்தாலும், தமிழை வளர்ப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். புதிய, புதிய செய்திகளும் புதிய புதிய உண்மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி பெற்று வளர வேண்டும். தாய்மொழியிலே கற்பதால் புதிய தமிழ் உணர்வு அதிகமாகும். தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும், வடநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியை பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக் கொள் முயல வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியல் தோன்றல் வேண்டும் என்கிறார்.
சமூகப்பற்று:-
சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும். அந்நிலை மாறவே ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்; அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை என்கிறார். பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்தை தாழ்த்தினவன், தன் கண்ணை குத்தியவனுக்கு சமம் என்ற ஆவேசத்துடன் கூறுகின்னாறர். பெண்ணை வீட்டிற்குள் அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி, ஆணும், பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.
சமூகம் வளர்ச்சி அடைய தொழில் பெருக வேண்டும். வியாபாரம் சிறக்க வேண்டும். தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார் சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியல் உருவாகிட வேண்டும். அதனைக் கற்று நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும். அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு. நெல்லையப்பருக்கு கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.
2. சொல்லோவியங்கள் என்னும் கவிதை நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை எழுதுக.
சொல்லோவியங்கள்கவிதை நூல் வெளியீட்டு விழா
நன்றியுரை “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு ஏற்ப எனக்கு வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு மாலை வணக்கம். எப்பொழுதெல்லாம் நம் பேனா தலை குனிகிறதோ அப்பொழுதெல்லாம் நீ வாழ்வில் தலை நிமிர்வாய் என்றபடி தன் பேனாவை தலைகுனிய வைத்து இந்த அவையில் தலை நிமிர்ந்து இருக்கும் தமிழாசியருக்கு நன்றி. இவர் சொல்லாவியங்கள் என்ற கவிதை நூலை அகுபட செதுக்கியுள்ளார். இவர் செலுத்தியதை வர்ணம் தீட்டி குடமுழுக்கு விழா செய்து நம் கைகளில் தவழந்து கொண்டிருக்கும் நூலை வெளியிட்டு வாழ்த்துறை வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி. இவ்வுலகில் பிறந்து இறந்து எவ்வித அறிமுகமும் இல்லாமல் செல்கின்றனர். அதற்கு மாறாக பிறையை தலையிலே சூடிய சிவனைப் போல் இவ்விழாவிற்கு வருகைதந்து நூல் அறிமுகவுரை தந்த ஐயா ஐயாத்துரை அவர்களுக்கு நன்றி. எந்த ஒரு செயலும் இன்றே தொடங்க இறையருள் தேவை அதோடு செல்வமும் தேவை என்பதற்கு ஏற்ப செல்வத்தின் நாயகனாம் தொழிலதிபர் சங்கரலிங்கம் அவர்களின் கரங்களால் முதல் பிரதியை பெற்று துவங்கி வைத்தமைக்கு நன்றி. இவ்விழா நடைபெற முழு காரணமாக விளங்கிய தலைமை ஆசிரியர், ஆசிரிய நண்பர்கள், மாணவர்கள், ஏனைய உறவுகளுக்கு விழாக்குழு மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். |
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. தமிழ்நாட்டில் வீதிதோறும் ______ இருக்க வேண்டும் எனப் பாரதியார் விரும்புகிறார்
- பள்ளிக்கூடம்
- ஆலயம்
- தொழிற்சாலை
- இவற்றில் எதுவுமில்லை
விடை : பள்ளிக்கூடம்
2. பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்களைப் பதிப்பித்தவர்
- இளசைமணி
- கி.ராஜநாரயணன்
- ரா.அ.பத்மநாபன்
- கவிகேசரி சாமி தீட்சிதர்
விடை : ரா.அ.பத்மநாபன்
3. சரியானதைத் தேர்க
- முரசுப்பாட்டு – குந்திகேசவர்
- நெல்லைத்தென்றல் – வ.உ.சிதம்பரனார்
- பாரதி கடிதங்கள் – ரா.அ. பத்மநாபன்
- வம்சமணி தீபிகை – சு.நெல்லையப்பர்
விடை : பாரதி கடிதங்கள் – ரா.அ. பத்மநாபன்
4. சரியானதைத் தேர்க
- கவிகேசரி சாமி தீட்திதர் – பாரதி கடிதங்கள்
- இளசைமணி – சூரியோதயம்
- கண்ணன்பாட்டு – ரா.அ. பத்மநாபன்
- வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு – சு.நெல்லையப்பர்
விடை : கண்ணன்பாட்டு – ரா.அ. பத்மநாபன்
5. பொருந்தாததைப் தேர்க
- இளசைமணி – வம்சமணி தீபிகை நூலின் மறுமதிப்பு
- வம்சமணி – கவிகேசரி சாமி தீட்திதர்
- பரலி சு.நெல்லையப்பர் – ஆசிரியர்
- பாரதி வாழ்த்து – பரலி சு.நெல்லையப்பர்
விடை : வம்சமணி – கவிகேசரி சாமி தீட்திதர்
6. பாரதியார் நெல்லையப்பரை யார் காத்திட வேண்டும் என்கிறார்
- விநாயகர்
- முருகன்
- ஐயப்பன்
- பராசக்தி
விடை : பராசக்தி
7. நெல்லையப்பரைப் பாரதி ______ என்று கூவு என்கிறார்
- தொழில்கள் தொழில்கள்
- வாழ்க வாழ்க
- மனிதர்கள் மனிதர்கள்
- வெல்க வெல்க
விடை : தொழில்கள் தொழில்கள்
4. பாரதியின் கடைசிக் கடிதம் யாருக்கு எழுதப்பட்டது
- குத்திகேசவருக்கு
- எட்டயபுரம் அரசருக்கு
- நெல்லையப்பருக்கு
- சீனி.விசுவநாதனுக்கு
விடை : குத்திகேசவருக்கு
6. சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராக இருந்தவர்
- இளசைமணி
- கி.ராஜநாரயணன்
- ரா.அ.பத்மநாபன்
- நெல்லையப்பர்
விடை : நெல்லையப்பர்
8. பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது என்று கடிதம் எழுதியவர்
- இளசைமணி
- பாரதியார்
- ரா.அ.பத்மநாபன்
- நெல்லையப்பர்
விடை : பாரதியார்
9. ஒருயிரின் இரண்டு தலைகள் என்பன ______, ______
- அறிவும் அழகும்
- வாழ்வும் தாழ்வும்
- ஆணும் பெண்ணும்
- பிறப்பும் இறப்பும்
விடை : ஆணும் பெண்ணும்
10. பாரதி நடத்திய இதழ்களில் துணையாசிரியராக இருந்தவர்
- கண்ணதாசன்
- பாரதியார்
- ரா.அ.பத்மநாபன்
- நெல்லையப்பர்
விடை : கண்ணதாசன்
11. பாரதியார் _______ கடைசியாக கடிதம் எழுதினார்.
- எட்டயபுரம் அரசருக்கு
- நெல்லையப்பருக்கு
- குந்திகேசவருக்கு
- சீனி.விஸ்வாநனுக்கு
விடை : கண்ணதாசன்
12. வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்
- கண்ணதாசன்
- பாரதிதாசன்
- நெல்லையப்பர்
- சீனி.விசுவநாதன்
விடை : நெல்லையப்பர்
பொருத்துக
1. வம்சமணி தீபிகை | அ. சு. நெல்லையப்பர் |
2. பாரதி கடிதங்கள் | ஆ. ரா.சு. பதம்நாபன் |
3. நெல்லைத் தென்றல் | இ. கவிகேசரி சாமி தீட்சிதர் |
விடை : 1 – இ, 2 – ஆ, 3 – அ |
பொருத்துக
1. தமிழ் அழகியல் | அ. பரலி. சு. நெல்லையப்பர் |
2. நிலவுப்பூ | ஆ. தி.சு. நடராசன் |
3. கிடை | இ. சிற்பி. பாலசுப்பிரமணியம் |
4. உய்யும் வழி | ஈ. கி.ராஜநாராயணன் |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ |
குறு வினா
1. பரலி சு.நெல்லையப்பரின் பன்முகத் தன்மைகள் யாவை?
விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், ஏழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
2. பரலி சு.நெல்லையப்பர் பதிப்பித்த நூல்கள் யாவை?
பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாபாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர்.
3. பரலி சு.நெல்லையப்பர் படைத்த நூல்கள் எவை?
இவர் நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களையும் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்
சிறு வினா
பரலி சு.நெல்லையப்பர் – குறிப்பு வரைக
- பரலி சு.நெல்லையப்பர் விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், ஏழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
- பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாபாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர்.
- பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி அகிய இதழ்களில் துணையாசிரியராகவும் லோகோபகாரி, தேசபக்கதன் ஆகிய இதழ்களில் துணையாசியரிராகவும் பின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
- இவர் நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களையும் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்