பாடம் 3.2 விருந்தினர் இல்லம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 3.2 “விருந்தினர் இல்லம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் அழகாக மொழியாக்கம் செய்தவர் கோல்மன் பார்க்ஸ்.
- அதனைத் தமிழில் ‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற தலைப்பில் என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார்.
- அத்தொகுப்பிலுள்ள கவிதையொன்று பாடப்பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில், கி.பி. (பொ.ஆ.) 1207ஆம் ஆண்டில் பிறந்தார்.
- பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர். இவரது சூஃபி தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ (Masnavi) 25,600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
- மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு.
- இவரின் புகழ்பெற்ற மற்றொரு நூல், ‘திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி’ (Collective Poems of Shams of Tabriz) என்பதாகும்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது
- வக்கிரம்
- அவமானம்
- வஞ்சனை
- இவை அனைத்தும்
விடை : இவை அனைத்தும்
குறு வினா
எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தையும் ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு என்று உருவகப்படுத்திகிறார். இவைகளை நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக எண்ண வேண்டும்.
இவ்வாறு எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி உருவகப்படுத்துகிறார்
சிறு வினா
“வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக
இடம்:-
இக்கவிதை வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய கவிதையின் ஆங்கில மொழியாக்கதத்தை தமிழில் “தாகங்கொண்ட மீளொன்று” என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார் என்.சத்தியமூர்த்தி, அத்தொகுப்பில் உள்ள “விருந்தினர் இல்லம்” என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள்:-
வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் நம்மைத் தேடி வரும் நன்மையோ, தீமையோ எது வந்தாலும் அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.
விளக்கம்:-
வாழ்க்கை என்பது எல்லாம் கலந்த கலவை. நம் வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் மகிழ்ச்சியுடன் வருபவர்களும் இருப்பர். துக்கங்களை கொண்டு வருபவர்களும் இருப்பர். அது போன்று தான நம் வாழ்க்கையும், ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், சிறிது விழிப்புணர்வு என பல வாழ்வியல் வடிவங்கள் நம்மைத் தினம் தினம் விருந்தினர்களைப் போலச் சந்திக்கலாம் அவற்றை எல்லாம் நாம் வரவேற்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு புதுப்புது அனுபவங்களைத் தரும். மகிழ்ச்சியால் மகிழ்ந்தாலும், துக்கத்தால் வெறுமையடைந்தாலும் துவண்டு விடக் கூடாது. ஏனெனில் எல்லாமே நமக்கு அனுபவங்களைக் கற்றுத் தரும். எனேவ எது வந்தாலும் விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்பது போல வரவேற்று அனுபவங்களைக் கற்றுத்தரும் வாழ்வியல் வடிவங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் …………………..
- கோல்மன் ரூபன்
- கோல்மன் ஹிப்ஸ்
- கோல்மன் பார்க்ஸ்
- கோல்மன் ஹிக்ஸ்
விடை : கோல்மன் பார்க்ஸ்
2. “தாகங்கொண்ட மீனொன்று” என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர் ………………………
- என். சத்தியமூர்த்தி
- ஆர். சத்தியமூர்த்தி
- எம். சத்தியமூர்த்தி
- எஸ். சத்தியமூர்த்தி
விடை : என். சத்தியமூர்த்தி
3. வருபவர் எவராயினும் செலுத்த வேண்டியதாக விருந்தினர் இல்லம் கூறுவது …………………..
- காணிக்கை
- நன்கொடை
- அன்பளிப்பு
- நன்றி
விடை : நன்றி
4. ஒவ்வொரு விருந்தினரையும் நடத்தும் முறையாக விருந்தினர் இல்லம் குறிப்பிடுவது …………………..
- கெளரவமாக
- அன்பாக
- பாசமாக
- உறவாக
விடை : கெளரவமாக
5. விருந்தினர் இல்லத்தில் ஒவ்வொரு காலையும் ஒரு …………………..
- சங்கீத மேடை
- புதுவரவு
- புதுமை
- ஆனந்தம்
விடை : புதுவரவு
6. எல்லாவற்றிிருந்தும் ……………… கற்றுக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்.
- அன்பானவற்றைக்
- ஒழுக்கமானவற்றைக்
- நல்லவற்றைக்
- தூய்மையானவற்றைக்
விடை : நல்லவற்றைக்
7. ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பான “மஸ்னவி” ……………. பாடல்களைக் கொண்டதாகக் சொல்லப்படுகிறது.
- 23,500
- 25,600
- 24,600
- 26,500
விடை : 25,600
8. “திவான்-ஈஷம்ஸ்-ஈ-த்ப்ரீஸி” என்னும் நூலின் ஆசிரியர் …………….
- இபின் பதூதா
- அமிர்குஸ்ரு
- ஜலாலுத்தீன் ரூமி
- நாகூர் ரூமி
விடை : ஜலாலுத்தீன் ரூமி
9. “மஸ்னவி” என்பது
- காதல் பாடல்களின் இசைத்தொகுப்பு
- தேச உணர்வு மிக்க இசைப்பாடல்களின் தொகுப்பு
- ஆழமான ஆன்மீகக் கருத்துக்கள் நிரம்பிய இசைக்கருவிகளின் தொகுப்பு
- கனவுத் தேசத்தின் எல்லைகளை வரையறுப்பது
விடை : ஆழமான ஆன்மீகக் கருத்துக்கள் நிரம்பிய இசைக்கருவிகளின் தொகுப்பு
9. ஜலாலுத்தீன் ரூமி இன்றைய நிலவரப்படி எந்த நாட்டில் பிறந்தவர் …………………
- ஆப்கானிஸ்தான்
- பாகிஸ்தான்
- கஸகிஸ்தான்
- வங்கதேசம்
விடை : ஆப்கானிஸ்தான்
10. ஜலாலுத்தீன் ரூமி ………………… மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர்
- கிரேக்கத்தின்
- பாரசீகத்தின்
- ஆப்பிரிக்காவின்
- பாரதத்தின்
விடை : பாரசீகத்தின்
11. சரியானதைத் தேர்க
- ஆனந்தம் எதிர்பார்க்கும் விருந்தாளி
- ஒவ்வொரு விருந்தினரையும் விலக்கி வை
- அவமானத்தை இன்முகத்துடன் வரவேற்பாயாக
- வருபவர் எவராயினும் ஏற்றுக் கொள்ளாதே
விடை : அவமானத்தை இன்முகத்துடன் வரவேற்பாயாக
12. பொருந்தாததைத் தேர்க
- சற்று மனச்சோர்வு எதிர்பாராத விருந்தாளி
- வக்கிரத்தை வாயிலுக்கு சென்று விரட்டி விடு
- ஒவ்வொரு விருந்தினரையும் கெளரவமாக நடத்து
- வருபவர் எவராயினும நன்றி செலுத்து
விடை : வக்கிரத்தை வாயிலுக்கு சென்று விரட்டி விடு
குறு வினா
1. எவற்றையெல்லாம் வாசலுக்கு சென்று வரவேற்க வேண்டுமென ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிட்டுள்ளார்?
வக்கிரம், அவமானம், வஞ்சனை
2. எவையெல்லாம் எதிர்பாராத விருந்தாளிகளாக வாழ்வில் வந்து செல்லும்?
ஓர் ஆனந்தம், சற்று மனச்சோர்வு, சிறிது அற்பத்தனம், நொடிற்பொழுதேயான விழிப்புணர்வு
3. “மஸ்னவி” என்பது யாது?
“மஸ்னவி” என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துக்கள் நிரம்பிய இசைக்கருவிகளின் தொகுப்பு ஆகும்.
4. எவற்றிலிருந்து வேண்டியதைக் கற்றுக்கொள்வதே நன்று?
- இன்பம் துன்பம், வேண்டியது வேண்டாதது எல்லாமே நாம் விரும்பியும் விரும்பாமலும் நம்மை வந்தடைகின்றன.
- அவற்றை வேறுபடுத்தாமல் ஏற்றுக்கொண்டு அவற்றிலிருந்து வேண்டியதைக் கற்றுக்கொள்வதே நன்று.
சிறு வினா
1. ஜலாலுத்தீன் ரூமி – குறிப்பு வரைக.
- ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில், கி.பி. (பொ.ஆ.) 1207ஆம் ஆண்டில் பிறந்தார்.
- பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர். இவரது சூஃபி தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ (Masnavi) 25,600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
- மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு.
- இவரின் புகழ்பெற்ற மற்றொரு நூல், ‘திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி’ என்பதாகும்.
2. வரும் விருந்தினர்களை எல்லாம் கெளரவமாக நடத்த வேண்டும் ஏன்?
- வாழ்வில் சந்திக்கும் அனைத்தையும் இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்
- இன்பமோ, துன்பமோ அவை புது அனுபவங்களைத் தரும்.
- துக்கங்கள் உன்னை முழுவதுமாகத் துடைத்தாலும் இனிமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- புதிய மகிழ்ச்சிக்காக அந்த துக்க நிகழ்வுகள் உன்னைத் தயாரிக்கும்.
3. “வாழ்க்கை ஓர் அனுபவப் பள்ளிக்கூடம்” – என்னும் கருத்தை “விருந்தினர் இல்லம்” கவிதை உறுதிப்படுத்துவதை நிறுவுக.
- மனித வாழ்வு எதையும் ஏற்கும் உள்ளம் கொண்டதாக இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் மனித வாழ்வில் ஆனந்தம், சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு என்பவை எதிர்பாராத விருந்தாளிகளாக வந்து போகும். வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் சொல்லிக்கொண்டு வருவதில்லை.
- இன்பச்செய்தி, துக்கச்செய்தி, துயரச்செய்தி, வீணாகப் பொழுதைக் கழிக்க தன்னுடைய கெளரவத்தைக் காட்ட எனப் பல வடிவங்களில் விருந்தினர்கள் நம் இல்லங்களுக்கு வருவது உண்டு.
- இதைப்போன்று நம்மை வந்தடையும் அத்தனை அனுபவங்களையும் வக்கிரம், அவமானம், வஞ்சனை இவைகளையும் விருந்தினர்களை எதிர் கொண்டு வரவேற்பது போல வரவேற்க வேண்டும்,
- ஒவ்வொரு விருந்தினர்களும் நமக்கு புதுப்புது அனுபவங்களைத் தருவர். ஒவ்வொரு வாழ்வியல் வடிவங்களுக்கு நமக்குப் புதுப்புது அனுபவங்களைத் தரும்.
- இன்ப துன்பம் வேண்டியது வேண்டாதது என, எல்லாமே நாம் விரும்பியும் விரும்பாமலும் நம்மை வந்தடைகின்றன. இவைகள் மூலம் நாம் நம்மை மெருகூட்ட, நம்மை புதுப்பிக்க உதவும்.
- எனவே வாழ்க்கை ஓர் அனுபவப் பள்ளிக்கூடம் என்பதை உணர்து நம்மைத் தேடி வரும் அனைத்திற்காகவும் நன்றி செலுத்துவோம்.