Class 12th Tamil Book Solution for CBSE | Lesson 5.2 – தெய்வமணிமாலை

பாடம் 5.2 தெய்வமணிமாலை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 5.2 “தெய்வமணிமாலை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 12 Tamil Text Books – Download

நூல் வெளி

  • பாடப்பகுதியிலுள்ள பாடல், இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்ற தெய்வமணிமாலை என்னும் பாமாலையில் உள்ளது.
  • இப்பாடல் சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டும் தெய்வமணிமாலையின் 8ஆம் பாடல்.
  • சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும் பசிப்பிணி போக்கியவருமான அடிகள் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார்.
  • சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.
  • இம்மண்ணில் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர் அடிகளார்.
  • வாடிய பயிரைக் கண்டபோது வாடிய அவ்வள்ளலின் பாடல்கள் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையவை.
  • திருவருட்பா, ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
  • ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள்.

இலக்கணக்குறிப்பு

  • மலரடி – உவமைத்தொகை
  • வளர்தலம் – வினைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. நினைக்கின்ற = நினை + க் + கின்று + அ

  • நினை – பகுதி
  • க் – சந்தி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி.

2. வைத்து = வை + த் + த் + உ

  • வை – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி.

3. பேசுவார் = பேசு + வ் + ஆர்

  • பேசு – பகுதி
  • வ் – எதிர் கால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதி

1. உள்ளொன்று = உள் + ஒன்று

  • தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “உள்ள + ஒன்று” என்றாயிற்று
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “உள்ளொன்று” என்றாயிற்று

2. ஒருமையுடன் = ஒருமை + உடன்

  • இ ஈ ஐ வழி யவ்வும்”  என்ற விதிப்படி “ஒருமை + ய் + உடன்” என்றாயிற்று
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “ஒருமையுடன்” என்றாயிற்று

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1) ’உள்ளொன்று வைத்துப் புறம்பாென்று பேசுவார்’ – இத்தொடர் உணர்த்தும் பண்பு

  1. நேர்மறைப் பண்பு
  2. எதிர்மறைப் பண்பு
  3. முரண் பண்பு
  4. இவை அனைத்தும்

விடை : முரண் பண்பு

குறு வினா

‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே’ – தொடருக்குப் பதவுரை எழுதுக.

அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துக் திருக்கோவிலில் எழுந்தருளயிருக்கும் கந்தவேளே!

சிறு வினா

இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?

  • சென்னை கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தையுடைய தூய்மையான மாணிக்க மணியே! அருள் நிறைந்த சைவமணியே!
  • எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன் மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் பேசும் வங்சகர் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.
  • சிறந்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்ற எனக்கு அருள் புரிய வேண்டும். மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் துறக்க வேணடும். என்றும் உன்னை மறவாதிருக்கு வேண்டும்.
  • நின் கருணையாகிய நிதி, நோயற்ற வாழ்வு உடைவனாக இருக்க வேண்டும் என்று கந்தக்கோட்டத்துக்க கந்தவேளிடம் இராமலிங்கர் வேண்டுகிறார்.

நெடு வினா

சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்த கோட்டப் பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப்படுகின்றன?

மயிலாப்பூர்:-

  • இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளை உடைய பெரிய ஊர் திருமயிலை.
  • அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும் மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா அன்று முதல் இன்று வரை சிறப்பாக நடைபெறுகிறது. அவ்விழாவினைக் கண்குளிரக் காண வேண்டும்.

கந்தக்கோட்டம்:-

  • அறம் செய்வோர்கள் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத் தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே! மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே!
  • எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகரின் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.
  • உனது புகழைப் பேச வேண்டும்; பொய் பேசாமல் இருக்க வேண்டும். சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்ற எனக்கு அருள வேண்டும். மதப்பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும் பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்.
  • நல்ல அறிவும், கருணாயாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும். ஆறுமுகங்கள் உடைய தெய்வமாகிய மணியே இத்தகைய சிறப்புகளை எனக்கு அருள்வாயாக என்று கந்தக் கோட்டத்தில் பெருமானிடம் வேண்டுகிறார்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • கருணைநிதி, மதமானபேய் – உருவகங்கள்
  • மறவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • மிகுசென்னை, மருவுபெண் – வினைத்தொகைகள்
  • மறக்க – எதிர்மறைப் பெயரெச்சம்
  • பெருநெறி – பண்புத்தொகை

உறுப்பிலக்கணம்

1. ஒழுக = ஒழுகு + அ

  • ஒழுகு – பகுதி
  • அ – பெயரெச்ச விகுதி.

2. பிடித்து = பிடி + த் + த் + உ

  • பிடி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி.

3. பிடியாது = பிடி +ய் +ஆ + த் + உ

  • பிடி – பகுதி
  • ய் – (உடம்படு மெய்) சந்தி
  • ஆ – எதிர் மறை இடைநிலை
  • த் – எழுத்துப்பேறு
  • உ – வினையெச்ச விகுதி.

4. இருக்க = இரு + க்+ க் + அ

  • இரு – பகுதி
  • க் – சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதி

1. பெண்ணாசை =  பெண் + ஆசை

  • தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “பெண் + ண் + ஆசை” என்றாயிற்று
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “பெண்ணாசை” என்றாயிற்று

2. மறவாதிருக்க = மறவாது + இருக்க

  • உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்”  என்ற விதிப்படி “மறவாத் + இருக்க” என்றாயிற்று
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “மறவாதிருக்க” என்றாயிற்று

3. பிடித்தொழுக = பிடித்து + ஒழுக

  • உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்”  என்ற விதிப்படி “பிடித்த் + ஒழுக” என்றாயிற்று
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “பிடித்தொழுக” என்றாயிற்று

4. நோயற்ற = நோய் + அற்ற

  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “நோயற்ற” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மிக மையத்தை ஏற்படுத்தியவர் …………………….

  1. ஞானயாரடிகள்
  2. வள்ளலார்
  3. கிருபானந்த அடிகள்
  4. தாயுமானவர்

விடை : வள்ளலார்

2. வள்ளலாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது ………………

  1. வள்ளுவர் கோட்டம்
  2. கந்தக் கோட்டம்
  3. தில்லை கோட்டம்
  4. கணபதி கோட்டம்

விடை : கந்தக் கோட்டம்

3. ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் ………..

  1. சிதம்பரம்
  2. வடலூர்
  3. சென்னை
  4. கடலூர்

விடை : சென்னை

4. உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
    உறவுகல வாமை வேண்டும் என்று பாடிவயர் ……………….

  1. ஞானயாரடிகள்
  2. வள்ளலார்
  3. கிருபானந்த அடிகள்
  4. இராமலிங்க அடிகள்

விடை : இராமலிங்க அடிகள்

5. தெய்வமணிமாலையின் பாவகை ………………

  1. கலிவிருத்தம்
  2. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  3. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  4. பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

விடை : பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

6. துறவுக்கு எதிரான ஆசை என்று வள்ளலார் குறிப்பிடுவது ………………

  1. மண்ணாசை
  2. பொன்னாசை
  3. பெண்ணாசை
  4. புகழாசை

விடை : பெண்ணாசை

7. இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் …………. திருமுறையில் இடம் பெற்றுள்ளது தெய்வமணி மாலை

  1. மூன்றாம்
  2. நான்காம்
  3. ஐந்தாம்
  4. ஆறாம்

விடை : ஐந்தாம்

8. கந்தக்கோட்டம் அமைந்துள்ள இடம் …………………..

  1. சிதம்பரம்
  2. மருதூர்
  3. வடலூர்
  4. சென்னை

விடை : சென்னை

9. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் ………..

  1. சிதம்பரத்தை அடுத்த மருதூர்
  2. கடலூரை அடுத்த வடலூர்
  3. தஞ்சையை அடுத்த வல்லம்
  4. மயிலாடுதுறையை அடுத்த தேரழந்தூர்

விடை : சிதம்பரத்தை அடுத்த மருதூர்

10. திருவருட்பா …………… திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது

  1. 12
  2. 8
  3. 10
  4. 6

விடை : 6

11. மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடை நூல்களின் ஆசிரியர்

  • ஞானயாரடிகள்
  • இராமலிங்க அடிகள்
  • வள்ளலார்
  • கிருபானந்த அடிகள்

விடை : இராமலிங்க அடிகள்

12. இராமலிங்க அடிகளார் ஆன்மிக மையத்தை ஏற்படுத்திய இடம் …………………..

  1. சிதம்பரம்
  2. மருதூர்
  3. வடலூர்
  4. சென்னை

விடை : வடலூர்

13. பேசாதிருக்க வேண்டுவது …………………..

  1. உறவு
  2. புறம்
  3. புகழ்
  4. பொய்மை

விடை : பொய்மை

14. கலவாமை வேண்டுவது …………………..

  1. உத்தமர் உறவு
  2. புறம் பேசுவார் உறவு
  3. புகழ் பேசுவர் உறவு
  4. பொய்மை பேசுவார் உறவி

விடை : புறம் பேசுவார் உறவு

15. பேச வேண்டுவது …………………..

  1. புகழ்
  2. உறவு
  3. புறம்
  4. பொய்மை

விடை : புகழ்

குறு வினா

1. இராமலிங்க அடிகள் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்

2. இராமலிங்க அடிகளாரின் சீர்திருத்த சிந்தனை யாவை?

ஆன்மநேயம், சமய ஒருமைப்பாடு, ஒளி வழிபாடு

3. இராமலிங்க அடிகளார் திருவருட்பா மூலம் வெளிப்படுத்தும் செய்தி யாது?

  • வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன்
  • ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையன

4. வள்ளலால் தெய்வமணிமாலையை எங்கு வீற்றிருக்கும் இறைவன் மீது பாடியுள்ளார்?

வள்ளலால் தெய்வமணிமாலையை சென்னை கந்தக்கோடத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் மீது பாடியுள்ளார்.

5. இராமலிங்க அடிகளார் எத்தகையவர் உறவு வேண்டும் என்கிறார்?

இராமலிங்க அடிகளார் நெறிப்படுத்தப்பட்ட மனத்துடன் கந்தனின் மலர் போன்ற திருவடிகளை நினைக்கிற உத்தமர்களின் உறவு வேண்டும் என்கிறார்.

6. இராமலிங்க அடிகளார் உறவு கலவாமை வேண்டும் கூறுகிறார்?

உள்ளத்தில் ஒன்றை வைத்துப் புறத்தில் ஒன்றைப் பேசும் வஞ்சகர்களின் உறவு கலாவாமை வேண்டும் என இராமலிங்க அடிகளார் கூறுகிறார்.

சிறு வினா

1. திருவருட்பா குறிப்பு வரைக

  • திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய பாடல்களின் தொகுப்பு
  • திருவருட்பாவில் 5818 பாடல்களை கொண்டது
  • பா – ஆசிரியவிருத்தம்
  • ஆறு திருமுறையாக தொகுக்கப்பட்டது.
  • நமது பாடப்பகுதியில் உள்ள தெய்வமணிமாலை ஐந்தாம் திருமுறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

2. வள்ளலார் குறிப்பு வரைக.

  • பெயர் – இராமலிங்க அடிகளார்
  • பெற்றோர் இராமையா – சின்னமை
  • சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும் பசிப்பிணி போக்கியவருமான அடிகள் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார்.
  • சிறுவயதிலே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.
  • ஆன்மநேயம், சமய ஒருமைப்பாடு, ஒளி வழிபாடு ஆகியன சீர்திருத்த சிந்தனையாகும்.
  • அருட்பெருஞ்ஜோதி – தனிப்பெருங்கருணை வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன் ஆகியன இவரது முழக்கம் ஆகும்.
  • மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய இவர் எழுதிய நூல்கள் ஆகும்
  • வாடிய பயிரைக் கண்டபோது வாடிய அவ்வள்ளலின் பாடல்கள் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையவை.
  • ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment