பாடம் 2.4 பிரும்மம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 2.4 – “பிரும்மம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல்வெளி
- பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம்.
- இவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்.
- சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை எனப் பல்வேறு இலக்கியத் தளங்களில் இயங்கி வந்தவர்.
- பிரும்மம் சிறுகதை பிரபஞ்சன் சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.
- இவரின் வானம் வசப்படும் என்ற வரலாற்றுப் புதினம் 1995ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
- இவருடைய படைப்புகள் தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பாட நூல் மதிப்பீட்டு வினா
குறு வினா
மழைநின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.
இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். இந்த இயற்கைக்கு நாம் திருப்பிச் செலுத்தும் நன்றிக்கடன்களில் மரம் வளர்த்தலும் ஒன்றாகும். செடி, மரமாக வளர்ந்தபின் அதில் வருகின்ற முதல் இலை, பூ, காய், கனி ஒவ்வொன்றுமே பேரின்பத்தைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்கள் என இணைந்து நட்டுவைத்த மரமொன்று அவர்களின் வாழ்வில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பது இக்கதையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னுரை:
அழகாகக் பிரபஞ்சன் இயற்றிய சிறுகதை பிரும்மம் இக்கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினைக் காண்போம்.
முருங்கை வளர்க்க ஆசை:
பிற உயிர்களைத் தம் உயிர்போல நேசிக்கும் ஒரு குடும்பம் புது வீட்டிற்குக் குடிபோனது. அந்த வீட்டின்முன் இடம் காலியாக இருந்தது. அங்கு என்ன செய்யலாம் என்று யோசித்தனர். பசு வளர்க்கலாம், காய்கறிச் செடிகள் வளர்க்கலாமென யோசித்தனர். கடைசியில் முருங்கை மரம் வளர்க்கலாம் என்று அப்பா முடிவு செய்தார்.
அப்பாவும் முருங்கையும்:
அங்கு முருங்கை நட்டு வளர்த்தனர். ஒவ்வொரு நாளும் முருங்கையின் வளர்ச்சியைக் கண்டு ரசித்தனர். அன்று முதல் வீட்டில் ஒர் உறுப்பினராக மாறிய அம்மரத்தால் அனைவரும் பயன்பெற்றனர் மகிழ்ச்சியாக இருந்தனர். காற்றில் முருங்கை சாய்ந்ததால் மிகவும் வருந்தினர். மீண்டும் முருங்கை வளர்ந்தது: மகிழ்ச்சி அடைந்தனர்
முடிவுரை:
பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை பிரும்மம் கதை மூலம் அனைவரும் தெரிந்து கொண்டோம்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. பிரபஞ்சனின் இயற்பெயர் _______
- இராமலிங்கம்
- சங்கரலிங்கம்
- வைத்தியலிங்கம்
- மதிலிங்கம்
விடை : வைத்தியலிங்கம்
2. வானம் வசப்படும் என்னும் புதினத்தின் ஆசிரியர்
- பிரமிள்
- அகிலன்
- பிச்சமூர்த்தி
- பிரஞ்சன்
விடை : பிரஞ்சன்
3. வானம் வசப்படும் என்னும் நூலிற்காக பிரஞ்சன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு
- 1995
- 1996
- 1998
- 1997
விடை : 1995
4. பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற வரிகள் மூலம் அகநானூறு குறிப்படும் ஊர்
- மருதமலை
- மதுரை
- கொல்லிமலை
- திருநெல்வேலி
விடை : கொல்லிமலை
5. பிரும்மம் என்ற சிறுகதையின் ஆசிரியர்
- பிரமிள்
- அகிலன்
- பிச்சமூர்த்தி
- பிரஞ்சன்
விடை : பிரஞ்சன்
குறுவினா
1. பாலிலிருந்து கிடைப்பவைகளை பட்டியலிடுக
- மோர்
- தயிர்
- வெண்ணெய்
- நெய்
2. முருங்கை சம்பந்தப்பட்ட சமையல் பட்டியலிடுக
- முருங்கை கீரைப் பிரட்டல்
- முருங்கைக்காய் சாம்பார்
- முருங்கைக்காய் காரக்குழம்பு
- முருங்கைக்காய் பொரியல்
3. நாமக்கல் மாவட்டத்தின் கொல்லி மலையை குறிக்கும் அகநானூறு அடிகள் பற்றி எழுதுக
“பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி”
அகநானூறு 208 : 22
சிறுவினா
பிரபஞ்சன் சிறுகுறிப்பு வரைக
- பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம்.
- இவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்.
- சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை எனப் பல்வேறு இலக்கியத் தளங்களில் இயங்கி வந்தவர்.
- பிரும்மம் சிறுகதை பிரபஞ்சன் சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.
- இவரின் வானம் வசப்படும் என்ற வரலாற்றுப் புதினம் 1995ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது.