பாடம் 2.5 தொகாநிலைத் தொடர்கள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 2.5 – “தொகை நிலைத் தொடர்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
- வேற்றுமை உருபு
- எழுவாய்
- உவம உருபு
- உரிச்சொல்
விடை : வேற்றுமை உருபு
குறு வினா
1. எழுது என்றாள் என்பது விரைவு காரணமாக எழுது எழுது என்றாள் என அடுக்குத் தொடரானது. சிரித்துப் பேசினார் என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
சிரித்துப் பேசினார் என்பது, உவகை காரமாணக சிரித்து சிரித்து பேசினார் என அடுக்குத் தொடராகும்
2. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?
பெயர்ப் பயனிலை | கவிஞர் |
வினை பயனிலை | சென்றார் |
வினா பயனிலை | யார்? |
சிறு வினா
வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார்.- வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக
- பாடிக் காட்டினார் – வினையெச்சத்தொடர்.
- கேட்டுப் பாடினர் – வினையெச்சத்தொடர்
- கேட்ட பாடலில் – பெயரெச்சத்தொடர்
- சிறுவினாக்களைக் கேட்டார் – வேற்றுமைத்தொடர்
‘கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!’ – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
‘கண்ணே கண்ணுறங்கு | விளித்தொடர் |
காலையில் நீயெழும்பு | ஐந்தாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர் |
மாமழை பெய்கையிலே | உரிச்சொல் தொடர் |
மாம்பூவே கண்ணுறங்கு – | விளித்தொடர் |
பாடினேன் தாலாட்டு | வினைமுற்றுத் தொடர் |
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு | அடுக்குத் தொடர் |
கூடுதல் வினாக்கள்
1. தொகாநிலைத்தொடர் என்றால் என்ன?
- ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருக்கும்.
- அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்தும்
- இதுவே தொகாநிலைத் தொடர் எனப்படும்.
2. தொகாநிலைத்தொடர் வகைகளை எழுதுக?
எழுவாய்த்தொடர் | வேற்றுமைத்தொடர் |
விளித்தொடர் | இடைச்சொல் தொடர் |
வினைமுற்றுத்தொடர் | உரிச்சொல் தொடர் |
பெயரெச்சத்தொடர் | அடுக்குத் தொடர் |
வினையெச்சத்தொடர் |
3. எழுவாய்த்தொடர் என்றால் என்ன?
எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.
4. விளித்தொடர் என்றால் என்ன?
விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.
எ.கா: நண்பா எழுது!
5. வினைமுற்றுத்தொடர் என்றால் என்ன?
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
எ.கா: பாடினாள் கண்ணகி
“பாடினாள்” என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது..
6. பெயரெச்சத்தொடர் என்றால் என்ன?
முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் தொடர்வது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
கேட்ட பாடல் – “கேட்ட” என்னும் எச்சவினை “பாடல்” என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.
8. வினையெச்சத்தொடர் என்றால் என்ன?
முற்றுப் பெறாத வினை, வினைச் சொல்லைத் தொடர்வது வினையெச்சத்தொடர் ஆகும்.
எ.கா: பாடி மகிழ்ந்தனர் – “பாடி” என்னும் எச்சவினை “மகிழ்ந்தனர் ” என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.
9. வேற்றுமைத்தொடர் என்றால் என்ன?
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
எ.கா.: கட்டுரையைப் படித்தாள்.
இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை
உணர்த்துகிறது.
10. இடைச்சொல் தொடர் என்றால் என்ன?
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
எ.கா.: மற்றொன்று – மற்று + ஒன்று
மற்று என்னும் இடைச்சொல்லை அடுத்து ஒன்று என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
11. உரிச்சொல் தொடர் என்றால் என்ன?
உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.
எ.கா.: சாலச் சிறந்தது
சால என்பது உரிச்சொல். அதனைத் தொடர்ந்து சிறந்தது என்ற சொல் நின்று மிகச் சிறந்தது என்ற பொருளை தருகிறது.
12. அடுக்குத் தொடர் என்றால் என்ன?
ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது தொடர் ஆகும்.
எ.கா.: வருக! வருக! வருக!
ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.
13. கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் எவ்வாறு உருவாகின்றன?
- ஒன்றிற்கு மேற்பட்ட வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடியும் கூட்டுநிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம்.
- வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.
எ.கா. கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி
கற்பவை கற்றபின்…
கோடிட்ட சொற்களின் தொடர்வகைகளை எழுதுக
1. பழகப் பழகப் பாலும் புளிக்கும்
விடை : பழகப் பழகப் – அடுக்குத் தொடர்
2. வடித்த கஞ்சியில் சீலையை அலசினேன்
விடை : வடித்த கஞ்சியில் – வினையெச்சத் தொடர்
3. மேடையில் நன்றாகப் பேசினான்.
விடை : நன்றாகப் பேசினான் – உரிச்சொல் தொடர்
4. வந்தார் அண்ணன் – வினைமுற்றுத் தொடர்
விடை : வந்தார் – வினைமுற்றுத் தொடர்
5. அரிய கவிதைகளின் தொகுப்பு
விடை : கவிதைகளின் – உரிச்சொல்தொடர்
கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.
மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவர் அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பால்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.
இறங்கினார் முகமது | வினைமுற்றுத்தொடர் |
அவர் பாடகர் | எழுவாய்த்தொடர் |
பாடுவதும் கேட்பதும் | உம்மைத்தொகை |
கேட்ட பாடல் | உரிச்சொல்தொடர் |
அடுக்கு அடுக்காக | அடுக்குத்தொடர் |
மொழியை ஆள்வோம்
தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக.
The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers’ fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.
இயற்கை
பொன்னான கதிரவன் நாள்தோறும் காலையில் எழுந்து அதன் ஒளிக் கதிர்களை வீசி, இருளை மறையச் செய்யும், பால் போன்ற மேகங்கள் சுற்ற ஆரம்பித்துவிடும். வண்ணப் பறவைகள் இதமான சூழ்நிலையைத் தன் இறகுகளை அடிப்பதன் மூலம் உருவாக்கும். அழகான வண்ணத்துப் பூச்சி மலர்களைச் சுற்றி ஆடும். பூக்களின் நறுமணம் தென்றல் காற்றை நிரப்பும். அந்தக் காற்று அனைத்த இடங்களிலும் பரவி ஒரு புத்துணர்வான சூழ்நிலையை உருவாக்கும்.
செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள் பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் அரியனவாய் இருக்கும் மலர்கள்: ஆல மலர்; பலா மலர். மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர். அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா. பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை. இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும் – கோவை.இளஞ்சேரன் |
1. மலரில் சில எளியவை ஆகக் காாரணங்கள் யாவை?
பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன
2. அரும்பாகி மொட்டாகிப் பூவாகி…. என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.
காயாகி, கனியாகி அரிசியாய் தோன்றுவது – மூங்கில்
3. பத்தியில் இடம்பெற்றுள்ள தொகாநிலைத் தொடர்களை நான்கினை எடுத்தெழுதுக.
- மனத்தை ஏற்றும் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- கண்ணிற்குக் காட்சி – நான்காம் வேற்றுமைத் தொகை
- மரத்தின் மீதேறி – ஐந்தாம் வேற்றுமைத் தொகை
- மக்களது விருப்பில் – ஆறாம் வேற்றுமைத் தொகை
மொழியோடு விளையாடு
சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.
(காடு, புதுமை, விண்மீன், காற்று, நறுமணம்)
1. முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.
விடை : நறுமணம்
2. பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்
விடை : புதுமை
3. இருக்கும்போது உருவமில்லை – இல்லாமல் உயிரினம் இல்லை.
விடை : காற்று
4. நாலெழுத்தில் கண் சிமிட்டும் – கடையிரண்டில் நீந்திச் செல்லும்
விடை : விண்மீன்
5. ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம்
விடை : காடு
நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.
(வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு)
1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.
தலைப்பு : காற்றின் பாடல்
2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
தலைப்பு : மொட்டின் வருணனை
3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.
தலைப்பு : மிதக்கும் வாசம்
4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.
தலைப்பு : உயர்ப்பின் ஏக்கம்
5. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.
தலைப்பு : நீரின் சிலிர்ப்பு
6. குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்.
தலைப்பு : வனத்தின் நடனம்
அகராதியில் காண்க.
1. அகன்சுடர்
விடை : சூரியன், விரிந்து சுடர், அகன்ற சுடர், உயர்ந்த தீபம்
2. ஆர்கலி
விடை : கடல், மழை, ஆரவாரம், பேரொலி, வெள்ளம், பறவை
3. கட்புள்
விடை : விழித்திருக்கும் பறவை, ஒரு புலவன்
4. கொடுவாய்
விடை : புலி, வளைந்த வாய், பழிச்சொல்
5. திருவில்
விடை : வானவில், இந்திரவில்
கலைச்சொல் அறிவாேம்
Storm – புயல் | Land Breeze – நிலக்காற்று |
Tornado – சூறாவளி | Sea Breeze – கடற்காற்று |
Tempest – பெருங்காற்று | Whirlwind – சுழல்காற்று |
அறிவை விரிவுசெய்
- குயில்பாட்டு – பாரதியார்
- அதோ அந்தப் பறவை போல – ச. முகமது அலி
- உலகின் மிகச்சிறிய தவளை – எஸ். ராமகிருஷ்ணன்
பணி வாய்ப்பு வேண்டித் தன்விவரப் படிவத்தை நிரப்புதல்
1. பெயர் | சங்கரலிங்கம் |
2. பாலினம் | ஆண் |
3. பிறந்த நாள் மற்றும் வயது | 12/07/2010/15 |
4 தேசிய இனம் | இந்தியன் |
5. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : | அருணாச்சலம் |
6. வீட்டு முகவரி | 7/507, காந்திநகர், வெங்கடேஸ்வரபுரம், தென்காசி |
7. தொலைபேசி / அலைபேசி எண் | 90000 00000 |
8. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் | 472/500 |
9. தாய்மொழி | தமிழ் |
10. பயின்ற மொழிகள் | தமிழ், ஆங்கிலம் |
11. தட்டச்சு | முதுநிலை (தமிழ், ஆங்கிலம்) |
12. கணினி | MS Word, Excel, Photoshop, Coreldraw |
மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மைையென உறுதிகூறுகிறேன். தங்கள் நிறுவனத்தில் தட்டச்சர் பணியினைத் தந்தால் எனது பணியைச் சிறப்பாகவும் உண்மைையாகவும் செய்வேன் என உறுதியளிக்கிறேன். | |
இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள, சங்கரலிங்கம் |
உங்கள் கிராாமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக.
பூம்பாறைை,
10.07.2025
அனுப்புநர்
அ.சங்கரலிங்கம்
7/507, காந்திநகர்,
வெங்கடேஸ்வரபுரம்,
தென்காசி – 627 854
பெறுநர்
பொது நூலக இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
சென்னை 600 002.
ஐயா,
பொருள் : நூலக வசதி வேண்டுதல் – சார்பு.
வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தைை உருவாக்கும் தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும், எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் சென்று வருகின்றோம்.
எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப்போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே, எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
அ.சங்கரலிங்கம்
உறைமேல் முகவரி
பெறுநர்
பொது நூலக இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
சென்னை 600 002.