Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 3.5 – தொகைநிலைத் தொடர்கள்

பாடம் 3.5 தொகைநிலைத் தொடர்கள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 3.5 – “தொகை நிலைத் தொடர்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

பலவுள் தெரிக

நன்மொழி என்பது

  1. பண்புத்தொகை
  2. உவமைத்தொகை
  3. அன்மொழித்தொகை
  4. உம்மைத்தொகை

விடை : பண்புத்தொகை

குறு வினா

தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க

தண்ணீர் குடி

  • தண்ணீரைக் குடி (இரண்டாம் வேற்றுமைத் தொகை)
  • மிகுந்த தாகத்தினால் தண்ணீரைக் குடித்தேன்.

தயிர்க்குடம்

  • தயிரை உடைய குடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)
  • கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.

சிறு வினா

மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்

பத்தியை படித்து தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.

மார்கழித் திங்கள்:-

  • இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
  • மார்கழி மாதம் (மார்கழி – சிறப்பு பெயர், திங்கள் – பொதுப்பெயர்)
  • திங்கள் என்பதன் மற்றொரு பெயர் மாதம்

செங்காந்தள் மலர்கள்:-

  • இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
  • செங்காந்தள் – சிறப்பு பெயர், மலர் – பொதுப்பெயர்
  • திங்கள் என்பதன் மற்றொரு பெயர் மாதம்

செங்காந்தள்:-

  • பண்புத்தொகை
  • செம்மை + காந்தள் (செம்மை என்பது சிவப்பு என்ற பண்பினைக்குறிக்கிறது)

வீடு சென்றேன்;-

  • நான்காம் வேற்றுமை தொகை
  • வீட்டுக்குச் சென்றேன் (கு – நான்காம் வேற்றுமை உருபு)

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

பெரிய மீசை சிரித்தார் வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

  1. பண்புத்தொகை
  2. உவமைத்தொகை
  3. அன்மொழித்தொகை
  4. உம்மைத்தொகை

விடை : பண்புத்தொகை

குறு வினா

1. சொற்றொடர் என்றால் என்ன?

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது “சொற்றொடர்” அல்லது “தொடர்” எனப்படும்.

எ.கா.:- நீர் பருகினான், வெண்சங்கு ஊதினான்.

2. தொகைநிலைத் தொடர் என்றால் என்ன?

பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் என்று கூறுவர்.

எ.கா.:- கரும்பு தின்றான்.

3. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்.?

வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.

4. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.

5. பண்புத்தொகை என்றால் என்ன?

நிறம், வடிவம், சுவை , அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் “மை” என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

6. இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன?

சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ’ஆகிய’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.

7. உவமைத்தொகை என்றால் என்ன? எ.கா. தருக.

உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

எ.கா.:- மலர்க்கை (மலர் போன்ற கை)

8. உம்மைத்தொகை என்றால் என்ன?

இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ’உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும்.

9. உம்மைத்தொகை எப்போது வரும்?

உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.

10. அன்மொழித்தொகை என்றால் என்ன?

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும்.

சிறு வினா

தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

மல்லிகைப்பூ:-

  • இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
  • மல்லிகை என்னும் பூ (மல்லிகை – சிறப்பு பெயர், பூ – பொதுப்பெயர்)

பூங்கொடி:-

  • உவமைத் தொகை
  • பூ போன்ற கொடி

தண்ணீர்த் தொட்டியில்;-

  • இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
  • தண்ணீரை ஊற்றும் தொட்டி

குடிநீர் நிரப்பினாள்;-

  • இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • குடிநீரை நிரப்பினாள்

கற்பவை கற்றபின்…

வண்ணமிட்ட தொகைச் சொற்களை வகைப்படுத்துக.

1. அன்புச்செல்வன் திறன்பேசியின் தாெடுதிரையில் படித்துக் காெண்டிருந்தார்.

  • அன்புச்செல்வன் – இருபெயரொட்டு பண்புத்தொகை
  • தாெடுதிரை – வினைத்தொகை

2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் காெடுக்கவும்.

  • மோர்ப்பானை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
  • மோர் காெடுக்கவும் – இரண்டாம் வேற்றுமைத் தொகை

3. வெண்டக்காய்ப் பாெரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.

  • வெண்டக்காய்ப் – இருபெயரொட்டு பண்புத்தொகை
  • மோர்க்குழம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

4. தங்கமீன்கள் தண்ணீர்த் தாெட்டியில் விளையாடுகின்றன.

  • தங்கமீன்கள் – உவமைத்தொகை
  • தண்ணீர்த் தாெட்டி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

மொழியை ஆள்வோம்!

மொழிபெயர்க்க

Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all.

தமிழ்ப் பண்பாடு

மரியாதைக்குரியர்களே! என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பில் படிக்கிறேன். நான் பத்தாம் வகுப்பில் படிக்கிறேன். நான் தமிழர் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வந்திருக்கிறேன். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழரே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி!

பழமொழிகளை நிறைவு செய்க.

1. உப்பில்லாப் _________

விடை : உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

2. ஒரு பானை _________

விடை : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

3. உப்பிட்டவரை _________

விடை : உப்பிட்டவரை உள்ளளவும் நினை

4. விருந்தும் _________

விடை : விருந்தும் மருந்தும் மூன்று வேளை

5. அளவுக்கு _________

விடை : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக.

பழையசோறு பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம்வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கைநிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர் பழையசோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம்போல் குடிப்பது ஒருவகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்டவைத்த முதல்நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு- அது கிராமத்து உன்னதம்.

“மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து” ……முக்கூடற்பள்ளு.

விடை:-

நெல்லை அவித்து காய வைத்து எடுக்கும் புழங்கல் அரிசியைச் சோறாக்கி, அதனை இரவெல்லாம் நீரில் ஊற வைத்து, கிடைக்கும் பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வடுமாங்காய், உப்பு நார்த்தங்காய் மற்றும் சுண்ட வைத்த குழம்பு இவற்றில் ஒன்றைக் கூட்டாக வைத்து சாப்பிடுவது கிராமத்து உன்னதம்.

கதையாக்குக.

மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்; புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற கருப்பொருள்களைத் திரட்டி, கற்பனை நயம் கூட்டிக் கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம். புதினமாக இருக்கலாம். அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக…. இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.

விடை :-

அந்திமாலைப் பொழுதில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது பாலத்தின் கீழிருந்து சத்தம் கேட்டு பாலத்தின் அடியில் எட்டிப் பார்த்தன். பசி மயக்கத்தில் சுருண்டு கிடந்தாள் ஒரு பெண். குளர் தாங்க முடியாமல் சத்தம். அரை குறை ஆடையில் இருந்தாள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எனக் கண்டுபிடித்தேன். உடனே, வீட்டிற்கு வந்து உணவை ஒரு பாத்திரத்திலும், ஆடை மற்றும் ஒரு போர்வையை ஒரு பையிலும் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தேன்.

அவ்வுணவை எடுத்து சாப்பிடுவதற்குக் கூட அவளிடம் பலமில்லை. பாதி சாப்பிட்டு விட்டு உட்கார முடியாமல் அவ்வுணவின் மீதே சரிந்து விழுந்தாள். உடனே அருகில் இருந்த மருத்துவரை அழைத்து வந்து மருத்துவனம் பாரத்து, அவளை மருத்துவரின் உதவியுன் மனநலக் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தேன. அவள் மனதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி தென்பட்டது.

மொழியோடு விளையாடு

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.

1. இ __ கு (பறவையிடம் இருப்பது)

விடை : கு

2. கு __ தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)

விடை : குருதி

3. வா __ (மன்னரிடம் இருப்பது)

விடை : வாள்

4. அ __ கா (தங்கைக்கு மூத்தவள்)

விடை : க்கா

5. ம __ (அறிவின் மறுபெயர்)

விடை : தி

6. பட __ (நீரில் செல்வது)

விடை : படகு

ஒளிந்துள்ள நூலின் பெயர் – திருக்குறள்

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

1. சிலை – சீலை

விடை : சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருக்கிறார்கள்.

2. தொடு – தோடு

விடை : தொடு உணர்வின் மூலம் தோடு காதில் உள்ளதை தெரிந்துகொள்ளலாம் .

3. மடு – மாடு

விடை : மாடு மடுவில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தது

4. மலை – மாலை

விடை : மலை மீது இருக்கும் கோவிலுக்கு மாலை நேரத்தில் சென்றேன் .

5. வளி – வாளி

விடை : வளிமண்டல காற்று பெற மரம் நட்டு வாளி நிறைய தண்ணீர் ஊற்றுவோம் .

6. விடு – வீடு

விடை : தீய பழக்கங்களை விட்டு விடு; வீடு சென்று மகிழ்ச்சியாக இரு

அகராதியில் கண்டு பொருள் எழுதுக.

1. ஊண் – ஊன்

ஊண்உணவு
ஊன்மாமிசம்

2. திணை – தினை

திணைஉயர்திணை, அஃறிணை போன்ற இலக்கண பாகுபாடு
தினைசிறு தானிய வகை

3. அண்ணம் – அன்னம்

அண்ணம்உள் நாக்கு
அன்னம்சோறு

4. வெல்லம் – வெள்ளம்

வெல்லம்கரும்பு சாற்றினால் தயாரிக்கப்படும் இனிப்பு பொருள்
வெள்ளம்ஆற்றில் கரைபுரண்டு ஓடுவது வெள்ளம்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

Class 10 Tamil Chapter 3.5 - காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.“வறுமையில் வாடிய
எனக்கு
ஒருநாள் கிடைத்தது
நல்லுணவு….
உண்ணும் வேளையில்
நீ வந்தாய்….
பசியால் இணைந்தோம்
பகிர்ந்து உண்ணலாம்
வா! தோழா வாழா!”

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்

  • Hospitality – விருந்தோம்பல்
  • Wealth – செல்வம்
  • Baby shower – வளைகாப்பு
  • House warming – புதுமனை புகுவிழா
  • Feast – விருந்து

நிற்க அதற்குத் தக…

  • திருக்குறள் தெளிவுரை – வ.உ.சிதம்பரனார்
  • சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன்
  • ஆறாம் திணை – மருத்துவர் கு.சிவராமன்

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment