Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 5.4 – அகப்பொருள் இலக்கணம்

பாடம் 5.4 அகப்பொருள் இலக்கணம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 5.4 – “அகப்பொருள் இலக்கணம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் _______

  1. முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
  2. குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
  3. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
  4. மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

விடை : குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

2. சித்திரை, வைகாசி மாதங்களை _______ காலம் என்பர்.

  1. முதுவேனில்
  2. பின்பனி
  3. முன்பனி
  4. இளவேனில

விடை : இளவேனில

குறு வினா

கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.

முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

உழவர்கள் வயலில் உழுதனர்.

நெய்தல் பூச்செடியை பார்த்தவாறே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர் (அல்லது) தாழைப்பூச்செடியைப் பார்த்தவாரே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர்.

முல்லை பூச்செடியைப் பார்த்தவாறே இடையகர்கள் காட்டுக்குச் சென்றனர்

சிறு வினா

கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.’ – காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

  • சங்ககாலத் தமிழர் திணையின் அடிப்படையில் நிலத்தைப் பிரித்தனர்.
  • ஐவகை நிலங்களுக்குகேற்ப தனித்தனியே தொழில்களை மேற்கொண்டு வந்தனர்.
  • இன்றைய சூழலில் திணைநிலைத் தொழில்கள் நவீனமாக்கபட்டுள்ளதே தவிர மாறவில்லை.

கூடுதல் வினாக்கள்

1. பொருள் இலக்கணம் பற்றி எழுதுக

பொருள் என்பது ஒழுக்கமுறை. நம் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
வாழ்வியலை அகம், புறம் என வகுத்தார்கள். இதனைப் பொருள் இலக்கணம் விளக்குகிறது

2. அகத்திணை என்றால் என்ன?

அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது அகத்திணை.

3. அன்பின் திணைகள் யாவை?

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவே அன்பின் ஐந்திணைகளாகும்.

4. ஐந்திணைகளுக்கு உரியன யாவை?

முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன ஐந்திணைகளுக்கு உரியன.

5. முதற்பொருள் எனப்படுவது யாது?

நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.

6. ஐவகை நிலங்கள் யாவை? அதன் அமைவிடங்கள் யாவை?

  • குறிஞ்சி – மலையும் மலைசார்ந்த இடமும்
  • முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
  • மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
  • நெய்தல் – கடலும் கடல்சார்ந்த இடமும்
  • பாலை – சுரமும் சுரம் சார்ந்த இடமும்.

7. பொழுது எத்தனை வகைப்படும்?

பொழுது, பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.

8. பெரும்பொழுதின் கூறுகள் யாவை?

ஓராண்டின் ஆறு கூறுகள்

  • கார்காலம் – ஆவணி, புரட்டாசி
  • குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை
  • முன்பனிக் காலம் – மார்கழி, தை
  • பின்பனிக் காலம் – மாசி, பங்குனி
  • இளவேனிற் காலம் – சித்திரை, வைகாசி
  • முதுவேனிற் காலம் – ஆனி, ஆடி

9. சிறுபொழுது யாவை?

(ஒரு நாளின் ஆறு கூறுகள்)

  • காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை
  • நண்பகல் – காலை 10 மணி முதல் 2 மணி வரை
  • எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
  • மாலை – மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
  • யாமம் – இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
  • வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

10. ஐந்திணையும் பொழுதுகளைம் கூறுக

திணைபெரும்பொழுதுசிறுபொழுது
குறிஞ்சிகுளிர்காலம், முன்பனிக்காலம்யாமம்
முல்லைகார்காலம்மாலை
மருதம்ஆறு பெரும்பொழுதுகள்வைகறை
நெய்தல்ஆறு பெரும்பொழுதுகள்எற்பாடு
பாலைஇளவேனில், முதுவேனில், பின்பனி நண்பகல்

11. ஐந்திணைகளின் தெய்வங்கள் பற்றி எழுதுக

  • குறிஞ்சி – முருகன்
  • முல்லை – திருமால்
  • மருதம் – இந்திரன்
  • நெய்தல் – வருணன்
  • பாலை – கொற்றவை

12. ஐந்திணைகளின் மக்கள் பற்றி எழுதுக

  • குறிஞ்சி – வெற்பன், குறவர், குறத்தியர்
  • முல்லை – தோன்றல், ஆயர். ஆய்ச்சியர்
  • மருதம் – ஊரன், உழவர், உழத்தியர்
  • நெய்தல் – சேர்ப்பன், பரதன், பரத்தியர்
  • பாலை – எயினர், எயிற்றியர்

13. ஐந்திணைகளின் உணவு பற்றி எழுதுக

  • குறிஞ்சி – மலைநெல், தினை
  • முல்லை – வரகு, சாமை
  • மருதம் – செந்நெல், வெண்ணெல்
  • நெய்தல் – மீன், உப்புக்குப் பெற்ற பொருள்
  • பாலை – சூறையாடலால் வரும் பொருள்

14. ஐந்திணைகளின் விலங்கு பற்றி எழுதுக

  • குறிஞ்சி –  புலி, கரடி, சிங்கம்
  • முல்லை – முயல், மான், புலி
  • மருதம் – எருமை, நீர்நாய்
  • நெய்தல் – முதலை, சுறா
  • பாலை – வலியிழந்த யானை

15. ஐந்திணைகளின் பூக்களினை பற்றி எழுதுக

  • குறிஞ்சி – குறிஞ்சி, காந்தள்
  • முல்லை – முல்லை, தோன்றி
  • மருதம் – செங்கழுநீர், தாமரை
  • நெய்தல் – தாழை, நெய்தல்
  • பாலை – குரவம், பாதிரி

16. ஐந்திணைகளின் மரங்களினை பற்றி எழுதுக

  • குறிஞ்சி – அகில், வேங்கை
  • முல்லை – கொன்றை, காயா
  • மருதம் – காஞ்சி, மருதம்
  • நெய்தல் –  புன்னை, ஞாழல்
  • பாலை –  இலுப்பை, பாலை

17. ஐந்திணைகளின் பறவைகள் பற்றி எழுதுக

  • குறிஞ்சி – கிளி, மயில்
  • முல்லை – காட்டுக்கோழி, மயில்
  • மருதம் – நாரை, நீர்க்கோழி, அன்னம்
  • நெய்தல் – கடற்காகம்
  • பாலை – புறா, பருந்து

18. ஐந்திணைகளின் ஊர் பற்றி எழுதுக

  • குறிஞ்சி – சிறுகுடி
  • முல்லை – பாடி, சேரி
  • மருதம் – பேரூர், மூதூர்
  • நெய்தல் – பட்டினம், பாக்கம்
  • பாலை – குறும்பு

19. ஐந்திணைகளின் நீர் பற்றி எழுதுக

  • குறிஞ்சி – அருவி நீர், சுனைநீர்
  • முல்லை – காட்டாறு
  • மருதம் – மனைக்கிணறு, பொய்கை
  • நெய்தல் – மணற்கிணறு, உவர்க்கழி
  • பாலை – வற்றிய சுனை, கிணறு

20. ஐந்திணைகளின் பறை பற்றி எழுதுக

  • குறிஞ்சி – தொண்டகம்
  • முல்லை – ஏறு கோட்பறை
  • மருதம் – மணமுழா, நெல்லரிகிணை
  • நெய்தல் –  மீன் கோட்பறை
  • பாலை – துடி

21. ஐந்திணைகளின் யாழ்களை பற்றி எழுதுக

  • குறிஞ்சி –  குறிஞ்சி யாழ்
  • முல்லை – முல்லை யாழ்
  • மருதம் – மருத யாழ்
  • நெய்தல் – விளரி யாழ்
  • பாலை – பாலை யாழ

22. ஐந்திணைகளின் பண்களை பற்றி எழுதுக

  • குறிஞ்சி – குறிஞ்சிப்பண்
  • முல்லை – முல்லைப்பண்
  • மருதம் – மருதப்பண்
  • நெய்தல் –  செவ்வழிப்பண்
  • பாலை – பஞ்சுரபண்

23. ஐந்திணைகளின் தொழில்களை பற்றி எழுதுக

  • குறிஞ்சி – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
  • முல்லை – ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்
  • மருதம் – நெல்லரிதல், களை பறித்தல்
  • நெய்தல் – மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்
  • பாலை – வழிப்பறி, நிரை கவர்தல்

மொழியை ஆள்வோம்!

மொழிபெயர்க்க.

Koothu

Kalaignar Karunanidhi is known for his contributions to Tamil literature. His contributions cover a wide range: poems, letters, screenplays, novels, biographics, historical novels, stage-plays, dialogues and movie songs. He has written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanniyakumari, Karunanidhi constructed a 133-foot-high statue of Thiruvalluvar in honour of the scholar.

தமிழாக்கம்

தமிழ் இலக்கியத்திற்கு தான் செய்த படைப்புகளால் கலைஞர் கருணாநிதி அறியப்படுகிறார். அவரது படைப்புகள், கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள், புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், சரித்திரப் புதினங்கள், மேடை நாடகங்கள், திரைக்கதை வசனங்கள் மற்றும் திரைப்படப்பாடல்களும் அடக்கம். திருக்குறளுக்கு குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பல நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியத்துக்கு அப்பாற்பட்டு, கலை, கட்டிடக்கலை வாயிலாக கருணாநிதி அவர்கள் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். திருக்குறளுக்கு, “குறளோவியம்” எழுதியதைப் போல, சென்னையில், வள்ளுவர் கோட்டத்தில், ஒரு கட்டிடத்தின் வாயிலாக, திருவள்ளுவருக்கு ஒரு மணிமாடத்தைத் தந்துள்ளார். அந்த அறிஞருக்குப் பெருமை சேர்க்க, கன்னியாகுமரியில், 133 அடி திருவள்ளுவர் சிலையை கருணாநிதி எழுப்பியுள்ளார்.

தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.

1. அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார் (தனிச் சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக மாற்றுக)

விடை : அழைப்புமணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.

2. இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார். (தொடர் சொற்றொடராக மாற்றுக.)

விடை : இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.

3. கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர், எழுத்துவழியாகத் தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார். (கலவைச் சொற்றொடராக மாற்றுக.)

விடை : எழுத்தை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்த கலைஞர், தமது எண்ணங்களை எழுத்து வழியாகக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார்.

4. காற்று மாசுபாட்டை குறைக்க குப்பை மேலாண்மையை மேற்கொண்டு பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை தந்து மின்வாற்றலால் இயங்கும் உறுதிகளை பயன்படுத்த வேண்டும்.
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.)

விடை : குப்பை மேலாண்மையை மேற்கொண்டு காற்று மாசுபாட்டை குறைக்க வேண்டும். பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை தர வேண்டும். மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வேண்டும்

5. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது. (தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.)

விடை : ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.

6. கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். (கலவைச் சொற்றொடராக மாற்றுக.)

விடை : கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச்சொற்களாக மாற்றி எழுதுக

புதிர்

உங்களிடம் ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.

விடை

தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால், கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். இரண்டு
தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!

பிற மொழிச் சொல்தமிழ்ச்சொல்
காேல்டு பிஸ்கெட்தங்கக்கட்டி
பிஸ்கட்கட்டி
எக்ஸ்பெரிமெண்ட்சோதனை
ஆன்சரைவிடையை, முடிவை
ஆல் தி பெஸ்ட்எல்லாம் நல்லபடி முடியட்டும்.
ஈக்குவலாகசமமாக
வெயிட்எடை
ரிப்பிட்மறுமுறை, மறுபடி

யார் இவர்?

தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்; “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர் இவர். தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர். அதே வேளையில் நாடகத்தில் பயன்படுத்தப்படும் நேரடி இசைமுறையை அறிமுகம்செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர். இவரின் நாடகங்கள் பெரும்பாளாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேணின.

இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. இவர் இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். இவர்தான் கூத்துப்பட்டறையை ந.முத்துசாமி என்ற கலைஞாயிற

மொழியோடு விளையாடு

தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

1. வானம் _____ தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.

விடை : கருக்கத்

2. அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் _____

விடை : சிவந்தது

3. _____ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

விடை : வெள்ளை

4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் _____ புல்வெளிகளில் கதிரவனின்  _____வெயில் பரவிக் கிடக்கிறது.

விடை : பச்சை / மஞ்சள்

5. வெயிலில் அலையாதே; உடல் _____

விடை : கருத்துவிடும்

பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.

தங்கும்மரம் வீடுஅவிழும்
தயங்கும்மரவீடுதோற்பாவை
விருதுதோற்பவைகவிழும்
விருந்து

1. விரட்டாதீர்கள் – பறவைக்கு _____
    வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவைதரும் _____

விடை : மரம் வீடு / மரவீடு

2. காலை ஒளியினில் மலரிதழ் _____
    சோலைப் பூவினில் வண்டினம் _____

விடை : அவிழும் / தங்கும்

3. மலை முகட்டில் மேகம் _____ – அதைப்
    பார்க்கும் மனங்கள் செல்லத் _____ 

விடை : கவிழும் / தயங்கும்

4. வாழ்க்கையில் _____ மீண்டும் வெல்லும் – இதைத்
    தத்துவமாய்த் _____ கூத்து சொல்லும்

விடை : தோற்பாவை / தோற்பவை

5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே _____ – அதில்
    வரும்காசு குறைந்தாலும் அதுவேயவர் _____

விடை : விருது / விருந்து

அகராதியில் காண்க.

1. தால்

விடை : தாலாட்டு, தாலு, நாக்கு

2. உழுவை

விடை : புலி, ஒருவகை மீன், தும்பிலி

3. அகவுதல் 

விடை : அழைத்தல், ஆடல், கூத்தாடல்

4. ஏந்தெழில் 

விடை : மிக்க அழகு, மிக்க வனப்பு

5. அணிமை 

விடை : சமீபம், அருகு, நுட்பம், நுண்மை

காட்சியைக் கண்டு கவினுறு எழுதுக

Class 10 Tamil Chapter 6.6 - காட்சியைக் கண்டு கவினுறு எழுதுக

ஆடுவோம்

ஆடுவோம் மேள தாளத்தோடு
பாடுவோம் பம்பை உடுக்கையோடு
வண்ண துணியசைத்து
வட்டமாய் ஆடுவோம்
வரிசையாய் ஆடுவோம்
எண்ணக் கருத்துகளை
எல்லோருக்கும் கூறுவோம்
துன்பமில்லா சமுதாயத்தைத்
ஆட்டத்தால் ஆக்குவோம்

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்

  • Playwright – நாடக ஆசிரியர்
  • Screenplay – திரைக்கதை
  • Storyteller – கதை சொல்லி
  • Aesthetics – அழகியல், முருகியல்
  • Terminology – கலைச்சொல்
  • Artifacts -கலைப் படைப்புகள்
  • Myth – தொன்மம்

அறிவை விரிவு செய்

  • தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி
  • திருக்குறள் – கலைஞர் உரை – கலைஞர் மு. கருணாநிதி
  • தேன்மழை – சுரதா
  • திருக்குறள் நீதி இலக்கியம் – க.த.திருநாவுக்கரசு
  • நாட்டார் கலைகள் – அ.கா.பெருமாள்

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment