பாடம் 7.5 பா வகை, அலகிடுதல்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 7.5 “பா வகை, அலகிடுதல்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
- அகவற்பா
- வெண்பா
- வஞ்சிப்பா
- கலிப்பா
விடை : அகவற்பா
குறு வினா
1. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
- குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
- முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்
எ.கா.:-
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
2. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.
வஞ்சிப்பா தூங்கல் ஓசையும், கலிப்பா துள்ளல் ஓசையும் பெற்று வரும்
சிறு வினா
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
- அகவல் ஓசை பெற்று வரும்.
- ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
- ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.
- மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
- ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.
கூடுதல் வினாக்கள்
குறு வினா
1. யாப்பின் உறுப்புகள் யாவை?
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு.
2. பாக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பாக்கள் நான்கு வகைப்படும். அவை
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
3. பாவின் ஓசை வகையினை கூறுக
செப்பல், அகவல், துள்ளல், தூங்கல்
4. வெண்பாக்கள் எத்தனை வகைகள் உள்ளன?
- குறள் வெண்பா
- சிந்தியல் வெண்பா
- நேரிசை வெண்பா
- இன்னிசை வெண்பா
- பஃறொடை வெண்பா
என்று ஐந்துவகை வெண்பாக்கள் உள்ளன.
5. ஆசிரியப்பாக்கள் எத்தனை வகைகள் உள்ளன?
நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்று நான்கு வகை ஆசிரியப்பாக்கள் உள்ளன.
6. அலகிடுதல் என்றால் என்ன?
அலகிடுதல் என்பது சீரைப் பிரித்து அசை பார்த்து, அசைக்கேற்ற வாய்ப்பாடு காணுதல் ஆகும்.
7. ஓரசைச் சீர்களை எழுதுக
- நேர் – நாள்
- நிரை – மலர்
- நேர்பு – காசு
- நிரைபு – பிறப்பு
8. ஈரசைச் சீர்களை எழுதுக
- நேர் நேர் – தேமா
- நிரை நேர் – புளிமா
- நிரை நிரை – கருவிளம்
- நேர் நிரை – கூவிளம்
சிறு வினா
1. யாப்போசை தரும் பாவோசைகள் பற்றி புலவர் குழந்தை குறிப்பிடுவன பற்றி எழுதுக
செப்பல் ஓசை:-
இருவர் உரையாடுவது போன்ற ஓசை.
அகவல் ஓசை:-
ஒருவர் பேசுதல் போன்ற – சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
துள்ளல் ஓசை:-
கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து வரும்
தூங்கல் ஓசை:-
சீர்தோறும் துள்ளாது தூங்கி வரும் ஓசை. தாழ்ந்தே வரும்.
2. வெண்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
- செப்பல் ஓசை பெற்று வரும்.
- ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.
- இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும்.
- இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும். (கலிவெண்பா பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.)
- ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்.
3. பாவின் ஓசைகளை விவரி
செப்பல் ஓசை:-
செப்பலோசை வெண்பாவிற்குரியது. அறம் கூறும், குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.
அகவல் ஓசை:-
அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா.
சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை , பெருங்கதை ஆகிய காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.
துள்ளல் ஓசை:-
செய்யுளில் இடையிடைேய உயர்ந்து வருவது துள்ளல் ஓசை. இது கலிப்பாவுக்கு உரியது.
தூங்கல் ஓசை:-
தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது. முன் வகுப்பில் கற்ற ஏழு வகைத் தளைகளையும் நீங்கள் நினைவுகூர்தல் நல்லது.
4. மூவசைச் சீர்களை எழுதுக
நேர் நேர் நேர் | தேமாங்காய் |
நிரை நேர் நேர் | புளிமாங்காய் |
நிரை நிரை நேர் | கருவிளங்காய் |
நேர் நிரை நேர் | கூவிளங்காய் |
நேர் நேர் நிரை | தேமாங்கனி |
நிரை நேர் நிரை | புளிமாங்கனி |
நிரை நிரை நிரை | கருவிளங்கனி |
நேர் நிரை நிரை | கூவிளங்கனி |
மொழியை ஆள்வோம்!
மொழிபெயர்க்க.
1. Education is what remains after one has forgotten what one has learned in School. – Albert Einstein
விடை: ஒரு பள்ளியில் கற்றுக்கொண்டதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன!
2. Tomorrow is often the busiest day of the week. – Spanish Proverb
விடை: இவ்வாரத்தில் நாளை ஒருநாள் மட்டுமே வேலைப்பளு உள்ளது.
3. It is during our darkest moments that we must focus to see the light. – Aristotle
விடை: நம் இருண்ட தருணங்களிலும் ஒளியைப் பார்ப்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
4. Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts. – Winston Churchill.
விடை: வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது விதியல்ல. இரண்டுக்காகவும் தொடரந்து முயற்சியுடன் ஊக்கத்துடன் செயல்படுவதே எண்ணப்படும்.
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
1. மனக்கோட்டை
விடை : முயற்சி இல்லாமல் முன்னேறலாம் என சிலர் மனக்கோட்டை கட்டுகிறார்கள்.
2. கண்ணும் கருத்தும்
விடை : கண்ணும் கருத்தாய் கவனமுடன் படிக்க வேண்டும்.
3. அள்ளி இறைத்தல்
விடை : பணத்தைக் கணக்குப் பார்க்காமல் அள்ளி இறைத்தல் நம்மை வறுமை நிலைக்கு தள்ளவிடும்.
4. ஆறப்போடுதல்
விடை : பிரச்சனைகளை பெரிதாக்கமல் ஆறப்போடுதல் நல்லது
உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.
1. தாமரை இலை நீர்போல
விடை : பட்டினத்தார் வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர்போல ஒட்டாதது துறந்தார்
2. மழைமுகம் காணாப் பயிர்போல
விடை : வெற்றியை எதிர்பார்த்து தோல்வி ஏற்பட்டதால் ரகு மழைமுகம் காணாப் பயிர்போல வாடி நின்றான்.
3. கண்ணினைக் காக்கும் இமை போல
விடை : பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாத்து வளர்ப்பர்
4. சிலை மேல் எழுத்து போல
விடை : கவிஞர்களின் கவிதைகள் சிலை மேல் எழுத்து போல மனதில் பதிந்தது
பொருத்தமான நிறுத்தக் குறியிடுதல்
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலைய மான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
விடை:-
சேரர்களின் பட்டப் பெயர்களில், ‘கொல்லி வெற்பன்‘ ‘மலைய மான்‘ போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், ‘கொல்லி வெற்பன்‘ எனவும், பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் “மலையமான்“ எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.
“தம்பீ? எங்க நிக்கிறே?”
“நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
“அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு… நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு!”
“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம்
பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்…”
“சரிங்கண்ண
“தம்பி எங்கே நிற்கிறாய்?” “நீங்கள் சொன்ன இடத்தில் தான் அண்ணா! எதிர்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது” “அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டிரு, நான் விரைாக வந்து விடுகிறேன்” “அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாடகளாகிவிட்டன.” “அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனைக் கூடிக்கொண்டு வருகிறேன்.” “நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில் பார்த்தது அண்ணா. அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும்” “இப்போது உயரமாக வளர்நது விட்டான். உனக்கு அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்படுகிறேன்.” “சரி அண்ணா!” |
குறுக்கெழுத்து புதிர்
இடமிருந்து வலம்:-
1. சிறுபொழுதின் வகைகளுள் ஒன்று ______ (2)
விடை : காலை
2. நேர் நேர் – வாய்பாடு ______ (2)
விடை : தேமா
11. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ______ (5)
விடை : கலித்தொகை
14. மக்களே போல்வர் ______ (4)
விடை : கயவர்
மேலிருந்து கீழ் :-
1. முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது ______ (5)
விடை : கார்காலம்
2. மொழிஞாயிறு ______ (9)
விடை : தேவநேயப்பாவாணர்
3. நல்ல என்னும் அடைமொழி கொண்ட தொகைநூல் ______ (5)
விடை : குறுந்தொகை
4. கழை என்பதன் பொருள் ______ (4)
விடை : மூங்கில்
7. மதியின் மறுபெயர், இது நிலவையும் குறிக்கும் (4)
விடை : திங்கள்
10. குறிஞ்சித் திணைக்குரிய விலங்கு ______
விடை : சிங்கம்
12. ______ என்பது புறத்திணைகளுள் ஒன்று
விடை : கைக்கிளை
வலமிருந்து இடம் :-
15. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் ஆசிரியர் (4)
விடை : ஒளவையார்
16. மதிமுகம் உவமை எனில் முகமதி ______ (5)
விடை : உருவகம்
கீழிருந்து மேல் :-
5. விடையின் வகைகள் ______ (3)
விடை : எட்டு
6. வீரமாமுனிவர் இயற்றிய நூல் ______ (5)
விடை : தேம்பாவணி
8. பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் ______ (4)
விடை : செங்கீரை
9. முப்பால் பகுப்பு கொண்ட நூல்களுள் ஒன்று ______ (5)
விடை : திருக்குறள்
13. மன்னனது உண்மையான புகழை எடுத்துக் கூறுவது ______ (7)
விடை : மெய்க்கீர்த்தி
17. 96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று ______ (7)
விடை : பிள்ளைத்தமிழ்
18. செய்தவம் – இலக்கணக்குறிப்பு (5)
விடை : வினைத்தொகை
IV. கவிதையை உரையாடலாக மாற்றுக
மகள் சொல்லுகிறாள்
அம்மா என் காதுக்கொரு தோடு – நீ
அவசியம் வாங்கி வந்து போடு!
சும்மா இருக்க முடியாது – நான்
சொல்லி விட்டேன் உனக்கு இப்போது!
உரையாடல்:-
அம்மா! என் காதுக்கு ஒரு தோடு வாங்கித் தாங்கம்மா! தோடு இல்லாமல் வெறுங்காதோடு என்னால் இருக்க முடியாது… சொல்லிட்டேன்
தாய் சொல்லுகிறாள்
காதுக்குக் கம்மல் அழகன்று -நான்க்ஷ
கழறுவதைக் கவனி நன்று
நீதர் மொழியை வெகுபணிவாய் – நிதம்
நீ கேட்டு வந்து காதில் அணிவாய்!
உரையாடல்:-
காதிற்குத் தங்கக் கம்மல் மட்டும் அழகு கிடையாது. நான் சொல்வதைக் கவனித்து பணிவான சொற்களையும் நல்ல கருத்துகளையும் உன் காதுக்கு அணியாக அணிந்து கொள்
மகள் மேலும் சொல்லுகிறாள்
கைக்கிரண்டு வளையல் வீதம் – நீ
கடன்பட்டுப் போட்டிடினும் போதும்!
பக்கியென் றென்னை யெல்லாரும் – என்
பாடசாலையிற் சொல்ல நேரும்!
உரையாடல்:-
கைக்கு இரண்டு வளையல்கள் கடன் வாங்கியாவது எனக்கு வாங்கித்தா அம்மா பக்கி வளையல் இல்லையா என்று பள்ளியில் என்னைக் கேலி செய்கிறார்கள்.
தாய் சொல்லும் சமாதானம்
வாரா விருந்து வந்த களையில் – அவர்
மகிழ உபசரித்தல் வளையல்!
ஆராவமுதே மதி துலங்கு – பெண்ணே
அவர் சொல்வ துன்கைகட்கு விலங்கு!
உரையாடல்:-
மகளே…. நம்மைத் தேடி வரும் விருந்தினரை மகிழ்ச்சியுடன் உபசரித்தேல் வளையல்… அறிவார்ந்த மகளே கேள்…. அவர்கள் சொல்லும் வளையல்… உனக்கு கைவிலங்கு
பின்னும் மகள்
ஆபர ணங்கள் இல்லை யானால் – என்னை
யார் மதிப்பார் தெருவில் போனால்?
கோபமோ அம்மா இதைச் சொன்னால் – என்
குறை தவிர்க்க முடியும்
உரையாடல்:-
அணிகலன்கள் இல்லாமல் தெருவில் போனால் என்னை யார் தான் மதிப்பார்? இதைச் சொன்னால் உனக்குக் கோபம் வருகிறது. என் குறையை நீக்க மாட்டாய்…
அதற்குத் தாய்
கற்பது பெண்களுக்கா பரணம் – கெம்புக்
கல்வைத்த, நகைதீராத ரணம்!
கற்ற பெண்களை இந்த நாடு – தன்
கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு!
உரையாடல்:-
கல்வி தான் பெண்களுக்கு உண்மையான அணிகலன்; மாணிக்கக்கல் வைத்த அணிகலன் தீராத ரணத்தையே தரும் மகளே; கல்வி என்னும் அணிகலன் அணிந்த பெண்களை இந்நாடு கண்ணுக்குள் வைத்துப் போற்றும் என்பதை உணர்ந்து கொள்.
மொழியோடு விளையாடு
கண்டுபிடித்து எழுதுக
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம் பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக…
ஒன்று
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்
இரண்டு
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்
மூன்று
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
நான்கு
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
ஐந்து
பொறிவாயில் ஐந்துவித்தான் பொய்நீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்
ஆறு
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
ஏழு
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
எட்டு
கோயில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
பத்து
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.
1. கானடை
கான் + அடை | காட்டைச் சேர் |
கான் + நடை | காட்டுக்கு நடத்தல் |
கால் + நடை | காலால் நடத்தல் |
2. வருந்தாமரை
வரும் + தாமரை | தாமரை மலர் |
வரும் + தா + மரை | தாவும் மான் வருகிறது |
வருந்தா + மரை | துன்புறாத மான் |
3. பிண்ணாக்கு
பிண்ணாக்கு | எள், கடலை ஆட்டும்போது கிடைப்பது |
பிள் + நாக்கு | பிளவுபட்ட நாக்கு |
4. பலகையொலி
பலகை + ஒலி | பலகையால் ஏற்படும் ஒலி |
பல + கை + ஒலி | பல கைகள் தட்டும் ஒலி |
செயல்திட்டம்…
அகராதியில் காண்க
1. ஆசுகவி
கொடுத்த பொருளை உடனே பாடும் பாட்டு
அப்பாடலைப் பாடும் புலவன்
2. மதுரகவி
இனிமை பெருகப் பாடும் கவி
சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு
3. சித்திரகவி
சித்திரத்தில் அமைத்தற்கு ஏற்ப பாடும் இறைக்கவி
21 நயங்களில் கவிதை ஏற்றுபவர்
4. வித்தாரகவி
விரித்துப் பாடப்பெறும் பாட்டு
விரிவாக பாடும் நூல்
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
![]() | மனம் நொந்து மறுகி கேட்கவும் நா எழாது வாழவும் வகை யறியாது இரத்தலே வழி என்பதை இறுதி முடிவு ஆக்கி “ஈயெனன” இரத்தல் கொடிது இரக்கத்துடன் ஈவாரைத் தடுத்தல் அதனினும் கொடிதன்றோ” |
கலைச்சொல் அறிவோம்
Happiness – மகிழ்ச்சி | Sceptor – செங்கோல் |
Gratuity – பணிக்கொடை | Truth – வாய்மை |
Charity – ஈகை |
அறிவை விரிவு செய்
அறமும் அரசியலும் – மு. வரதராசனார் |
அபி கவி்தைகள் – அபி |
எண்ணஙகள் – எம்.எஸ். உதயமூர்த்தி |