பாடம் 3.6 பகுபத உறுப்புகள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 3.5 “பகுபத உறுப்புகள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பாடநூல் வினாக்கள்
சிறு வினா
பகுபத உறுப்பிலக்கணம் கூறுக
அ) வருகின்றாள்
வருகின்றாள் = வா (வரு) + கின்று + ஆள்
- வா – பகுதி
- வரு – ஆனது விகாரம்
- கின்று – நிகழ்கால இடைநிலை
- ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி
ஆ) வாழ்வான்
வாழ்வான் = வாழ் + வ் + ஆன்
- வாழ் – பகுதி
- வ் – எதிர்கால இடைநிலை
- ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி
இ) காண்பிப்பார்
காண்பிப்பார் = காண்பி + ப் + ப் + ஆர்
- காண்பி – பகுதி
- ப் – சந்தி
- ப் – எதிர்கால இடைநிலை
- ஆர் – படர்க்கை பலர்பால் வினைமுற்று விகுதி
ஈ) பிரிந்த
பிரிந்த = பிரி + த்(ந்) + த் + அ
- பிரி – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனதுவிகாரம்
- த் – எதிர்கால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
கூடுதல் வினாக்கள்
குறு வினா
1. பகுதி என்பதனை விளக்கு
- ஒருசொல்லின் அடிச்சொல்லே பகுதியாகும். இதனை முதனிலை என்றும் கூறுவர்.
- விகுதி பெறாத ஏவல் வினையாக வரும்.
- மேலும் பகுதி, விகுதி என பிரிக்க இயலாததாய் இருக்கும்.
2. விகுதி என்றால் என்ன?
- சொல்லின் முதலில் இறுதியல் நிற்கும் உறுப்பு; இறுதிநிலை; விகுதி
- திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும்
- எச்சம், தொழிற்பெயர், ஏவல், வியங்கோள் – அவ்வவற்கு உரிய விகுதி பெறும்.
3. விகுதி வெளிப்படும் நிலையை கூறுக
- ‘ஆன்’ என்னும் விகுதி உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை இடம் என்பனவற்றையும்
- ‘ஆள்’ என்னும் விகுதி உயர்திணை, பெண்பால், ஒருமை, படர்க்கை இடம் என்பனவற்றையும்
- ‘து’ என்னும் விகுதி அஃறிணை ஒன்றன்பால், படர்க்கைஇடம் என்பனவற்றையும் வெளிப்படுத்துகின்றன.
செய்தேன் | செய் + த் + ஏன் | தன்மை | ஒருமை |
செய்தோம் | செய் + த் + ஓம் | தன்மை | பன்மை |
உண்டாய் | உண் + ட் + ஆய் | முன்னிலை | ஒருமை |
உண்டீர் | உண் + ட் + ஈர் | முன்னிலை | பன்மை |
கொடுத்தான் | கொடு + த் + த்+ ஆன் | படர்க்கை | ஆண்பால் |
படித்தாள் | படி + த் + த்+ ஆள் | படர்க்கை | பெண்பால் |
ஆடினார் | ஆடு + இன் + ஆர் | படர்க்கை | பலர்பால் |
நடந்தது | நட + த்(ந்) + த் + அ + து | படர்க்கை | ஒன்றன் |
வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் போன்ற பல்வேறு இலக்கணப் பொருண்மைகளை உணர்த்தவும் விகுதி பயன்படுகிறது.
சான்று :
- எழுதுக – எழுது + க
- உரைத்த – உரை + த் + த் + அ
4. இடைநிலை என்றால் என்ன?
ஒரு வினைப் பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் காட்டும் உறுப்பு கால இடைநிலை அல்லது காலம் காட்டும் இடைநிலை எனப்படும்.
சான்று :
- செய்தான் – செய் + த் + ஆன்
5. இடைநிலை வகைகளையும், அதன் உறுப்புகளையும் எழுதுக
இறந்தகால இடைநிலைகள் | த், ட், ற், இன் |
நிகழ்கால இடைநிலைகள் | கிறு, கின்று, ஆநின்று |
எதிர்கால இடைநிலைகள் | ப், வ் |
எதிர்மறை இடைநிலைகள் | ஆ, அல், இல் |
6. எதிர்மறை இடைநிலை என்றால் என்ன?
எதிர்மறை வினைச்சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறையை உணர்த்தும் இடைநிலை, எதிர்மறை இடைநிலை ஆகும்.
7. பெயர் இடைநிலை என்றால் என்ன?
- ஓர் ஆக்கப்பெயர்ச்சொல்லில் பெயர்ப்பகுதியை விகுதியோடு இணைப்பதற்கு வரும் இடைநிலை, பெயர் இடைநிலை ஆகும்.
- ச், ஞ், ந், த், வ் ஆகிய மெய்கள் பெயர் இடைநிலைகளாக
வரும்.
8. சந்தி என்பதனை விளக்குக
- சந்தி என்பதற்குப் புணர்ச்சி என்று பெயர்.
- பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும்போது இடையில் தோன்றும் உறுப்பு, சந்தி எனப்படும்.
9. எழுத்துப்பேறு என்றால் என்ன?
பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு எழுத்துப்பேறு எனப்படும்.
10. சாரியை என்பது என்ன?
- பகுதியோடு இடைநிலையும் இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாகச் சார்ந்து இயைய வரும் உறுப்பு, சாரியை ஆகும்.
- பெரும்பாலும் சாரியை இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும
11. விகாரம் என்றால் என்ன?
- பகுதி விகுதி இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம், விகாரம் எனப்படும்.
- ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்தும் கெட்டும் நெடில் குறிலாகவும் மாற்றம் பெறும். இத்தகைய மாற்றமே விகாரம் எனப்படும்.
நினைவிற்கொள்க
இறந்தகால இடைநிலை | த், ட், ற், இன் |
நிகழ்கால இடைநிலை | கிறு, கின்று, ஆநின்று |
எதிர்கால இடைநிலை | ப், வ் |
எதிர் மறை இடைநிலை | அ, அல், இல் |
தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் | என், ஏன், அல், அன், கு, டு, து, று |
தன்மை பன்மை வினைமுற்று விகுதிகள் | எம், ஏம், அம், ஆம், ஓம், கும், டும், தும், றும் |
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் | ஐ, ஆய், இ |
முன்னிலை பன்மை வினைமுற்று விகுதிகள் | இர், ஈர், மின் |
படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள் | அன், ஆன் |
படர்க்கை பெண்பால் வினைமுற்று விகுதிகள் | அள், ஆள் |
படர்க்கை பலர்பால் வினைமுற்று விகுதிகள் | அர், ஆர், ப, மார், கள் |
படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் | து, று, டு |
படர்க்கை பவவின்பால் வினைமுற்று விகுதிகள் | அ, ஆ |
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் | க, இய, இயர் |
தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள் | அ, உம் |
தெரிநிலை வினைமுற்று விகுதிகள் | உ, இ, அ |
இலக்கணத் தேர்ச்சிகொள்
1. பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?
பகுபத உறுப்புகள் ஆறு. அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகும்
2. காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துகாட்டுடன் விளக்குக?
இறந்த காலம் காட்டும் இடைநிலைகள்
- த், ட், ற், இன் – ஆகியன இறந்த காலம் காட்டும் இடைநிலைகள்
சான்று
- செய்தான் = செய் + த் + ஆன் – த் – இறந்தகால இடைநிலை
நிகழ்காலம் காட்டும் இடைநிலைகள்
- கிறு, கின்று, ஆநின்று – ஆகியன நிகழ்காலம் காட்டும் இடைநிலைகள்
சான்று
- உண்கிறான்= உண் + கிறு + ஆன் – கிறு – நிகழ்கால இடைநிலை
எதிர்காலம் காட்டும் இடைநிலைகள்
- ப், வ் – ஆகியன எதிர்காலம் காட்டும் இடைநிலைகள்
சான்று
- படிப்பான்=படி + ப் + ப் + ஆன் – ப் – எதிர்கால இடைநிலை
3. பகுபதத்தில் சந்தி, சாரியை எவ்விடங்களில் அமையும்?
சந்தி : பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் அமையும், சிறுபான்மை இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையில் அமையும்
சாரியை : இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் அமையும், சிறுபான்மை பகுதிக்கும், இடைநிலைக்கும் இடையில் அமையும்
4. விகுதிகள் எவற்றை உணர்ந்தும்?
விகுதிகள், திணை (உயர்திணை, அஃறிணை) பால் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின்பால்), இடம் (தன்னிலை, முன்னிலை, படக்கை) ஆகியவற்றை உணர்த்தும்.
5. பகுபத உறுப்பிலக்கணம் தருக
பகுதி | சந்தி | விகாரம் | இடைநிலை | சாரியை | விகுதி | |
அமைந்து | அமை | த் | ந் | த் | உ | |
பார்த்தான் | பார் | த் | த் | ஆன் | ||
தோன்றி | தோன்று | இ | ||||
வருகிறார் | வா | வரு | கிறு | ஆர் | ||
செய் | செய் | க | ||||
நடந்தனன் | நட | த் | ந் | த் | அன் | அன் |
கொடுத்த | காடு | த் | த் | அ |
6. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையை தேர்க
- அன் – வந்தனன்
- இன்- முறிந்தது
- கு – கான்குவன்
- அன் – சென்றன
விடை : இன்- முறிந்தது
7. பின்வருவனவற்றுள் பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி சொற்களை உருவாக்குக
பேசு | இன் | ஆன் | பேசினான், பேசுகிறான், பேசுவான், பேசான் |
எழுது | கிறு | எழுதினாள், எழுதிகிறாள், எழுதுவான், எழுதான் | |
வணங்கு | வ் | வணங்கினாள், வணங்குகிறான், வணங்குவான், வணங்கான் | |
ஆ |
8. வேர்ச்சொல், எதிர்மறை இடைநிலை, விகுதி ஆகியவற்றை பயன்படுத்தி சொற்களை உருவாக்குக
பார் | அ | ஆன் | பாரான் |
காண் | அல் | அன் | காணலன் |
உரை | இல் | அர் | பார்த்திலர் |
மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
வை.மு. கோதைநாயகி (1901-1960)
ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர், தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கும் புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணவர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் ஓரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எப்படி எழுத முடியும் என்று அவர் வருந்தியபோது, அவரது தோழி, நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான ‘இந்திர மோகனா’ என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர்தான் ‘நாவல் ராணி’, ‘கதா மோகினி’, ‘ஏக அரசி’ என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. (‘வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்’) ஆவார்.
இவர் ‘ஜகன் மோகினி’ என்ற இதழை முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளர்களையும், வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார். காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர் தம் எழுத்துகளால் மட்டுமன்றி மேடைப்பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றார். தமிழகப் பெண் வரலாற்றில் தனித்து அடையாளம் காட்டப்பட வேண்டிய சிறப்புக்குரியவரான வை.மு.கோ. அவர்கள் 115 நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘குடும்பமே உலகம்’ என்று பெண்கள் வாழ்ந்த காலகட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன் வாழ்வின்மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் வை.மு.கோ. அம்மையார்.
அவருடைய எழுத்தாற்றலுக்கொரு சான்று :
”என்ன வேடிக்கை! அடிக்கடி பாட்டி ‘உலகானுபவம்… உலகம் பலவிதம்… என்றெல்லாம் சொன்னதைக் கேட்டபோது எனக்கு ஒண்ணுமே புரியாது விழித்தேனே… பாட்டி சொல்லிய வசனங்களைவிடக் க டிதங்கள் பலவற்றைப் படித்தால் அதுவே மகத்தான லோகானுபவங்களை உண்டாக்கிவிடும் போலிருக்கிறதே! பாவம்! பேசுவது போலவே தன்னுடைய மனத்தினுள்ளதைக் கொட்டி அளந்துவிட்டாள்… நான் கிராமத்தை வெறுத்துச் சண்டையிட்டு வீணாக அவர் மனதை வடிக்கிறேன். இவள் பட்டணத்தை வெறுத்துத் தன் கொச்சை பாஷையில் அதன் உண்மை ஸ்வரூபத்தை படம் பிடித்துக் காட்டி விட்டாளே!.. என்ன உலக விசித்திரம்!.. என்று கட்டுமீறிய வியப்பில் சித்ரா மூழ்கினாள்.”
(‘தபால் வினோதம்’ குறுநாவலில் இருந்து)
வினாக்கள்:-
1. வை.மு. கோதைநாயகின் முதல் நூல் எது?
2. தொடர்ந்து – உறுப்பிலக்கணம் தருக
3. இப்பகுதியில் இடம்பெற்றுள்ள உவம உருபினை எடுத்து எழுதுக.
4. பிரித்தறிக ; பங்கேற்று
5. தன்னுடைய – புணர்ச்சி விதி கூறுக
விடைகள்:-
1. இந்திர மோகனா
2. தொடரந்து = தொடர் + த் (ந்) + த் + உ
- தொடர் – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ வினையெச்ச விகுதி
3. போலவே (போல
4. பங்கேற்று = பங்கு + ஏற்று
5. தன்னுடைய = தன் + உடைய
- தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் என்ற விதிப்படி தன்ன +உடைய என்றாயிற்று.
- உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி தன்னுடைய என்றாயிற்று.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக
1. குமரனைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகைத் தாருங்கள். என் வீட்டிற்கு பக்கத்து வீடு தான் குமரனது வீடு.
விடை : குமரனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகைத் தாருங்கள். என் வீட்டிற்கு பக்கத்து வீடு தான் குமரனது வீடு.
2. அனைத்துத் துறைகளிலும் ஆண்களை போலவேப் பெண்களும் அரசு பணியை பெற வேண்டும்.
விடை : அனைத்துத் துறைகளிலும் ஆண்களை போலவே பெண்களும் அரசு பணியைப் பெற வேண்டும்.
3. கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மைத் தீமைகளை புரிந்து பேசுவர்
விடை : கல்வி கேள்விகளில் சிறந்தவர், நன்மை தீமைகளை புரிந்து பேசுவர்.
4. தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.
விடை : தமிழர் ஆற்று தண்ணீரைத் தேக்கி சேமித்துக் கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.
5. சான்றோர் மிகுந்தப் பொறுப்புடன் சிறப்பான சேவைப் புரிந்து கொள்கையை நிலைநாட்ட செய்தனர்
விடை : சான்றோர், மிகுந்தப் பொறுப்புடன் சிறப்பான சேவைப் புரிந்து கொள்கையை நிலைநாட்டச் செய்தனர்.
தமிழாக்கம் தருக
1. Education is the most powerful weapon, which you can use to change the world.
விடை : கல்வி என்பது அதிக ஆற்றல் வாய்ந்த கருவி என்பதனைக் கொண்டு, நீ உலகையே மாற்றலாம்.
2. Looking at beauty in the world is the first step of purifying the mind.
விடை : உலகில் காணப்படும் அழகை நோக்குவதே, மனத்தைத் தூய்மை செய்வதற்கு முதல் படியாகும்.
3. Culture does not make people; People make culture.
விடை : பண்பாடு என்பது மக்களை உருவாக்குவதில்லை; மக்களே பண்பாட்டை உருவாக்குகிறார்கள்.
4. People without the knowledge of their past history and culture is like a tree without roots.
விடை : கடந்தகால வரலாற்றையும், நாகரிகத்தையும் பற்றிய அறிவைப் பெறாத மக்கள், வேர் இல்லாத மரத்திற்கு ஒப்பாவர்.
5. A nation’s culture resides in the hearts and in the soul of its people.
விடை : ஒரு தேசத்தின் பண்பாடு என்பது, அத் தேசமக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் தங்கியுள்ளது.
கீழ்க்காணும் செய்தியைப் படித்து அறிவிப்புப் பதாகை ஒன்றை உருவாக்குக.
தமிழ்ப்பண்பாட்டுக் கருத்தரங்கு
ஜனவரி – 10, மதுரை. தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புக் குறித்தும், பண்பாடு குறித்தான தேடலின் தேவை குறித்தும் சிறகுகள் சமூக அமைப்பின் சார்பாக ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. | மதுரையை மையமாகக் கொண்டு இயங்கி ரும் சமூகநல அமைப்பான சிறகுகள் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் தெப்பக்குளம் அருகில், பாரதி கலைக்கூட அரங்கில் ஜனவரி 13ஆம் நாள் நடைபெற உள்ளது. இதில் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புக் குறித்தும் தொலைத்த பண்பாட்டை மீட்டெடுப்பது குறித்தும் “பண்பாடுகளால் வாழும் தமிழர்“ என்னும் தலைப்பில் சமூக ஆர்வலரும் கவிஞருமான அன்பரசி பேசவிருக்கிறார். இதன் இறுதிப்பகுதியாகக் கலந்துரையாடலும் நடைபெற இருக்கிறது. விருப்பம் உள்ள சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று சிறகுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இனியன் தெரிவித்துள்ளார். |
கலைச்சொல் அறிவோம்
Ethnic Group – இனக்குழு | Etymological Dictionary – வேர்ச்சொல் அகராதி |
Prefix – முன்னொட்டு | Earth Environment – புவிச்சூழல் |
Suffix – பின்னொட்டு | பண்பாட்டுகூறுகள் – Cultural Elements |
அறிவை விரிவு செய்
ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை – ஆர். பாலகிருஷ்ணன். |
காவடிச் சிந்து – அண்ணாமலையார் |
வாடிவாசல் – சி.சு. செல்லப்பா. |
எழுத்து இதழ்த் தொகுப்பு – தொகுப்பாசிரியர் – கி.அ. சச்சிதானந்தன். |