பாடம் 6.4 அயல்நாட்டவரின் அருந்தமிழ்ப் பணி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 6.4 “அயல்நாட்டவரின் அருந்தமிழ்ப் பணி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பாடநூல் வினாக்கள்
நெடு வினா
தமிழ் மொழிக்கு அயல்நநாட்டவர்கள் ஆற்றிய அரும்பணிகளைத் தொகுத்துரைக்க.
அயல் நாடுகளுடனான தமிழரின் தொடர்புபோலத் தமிழ் நாட்டுடனான அயல் நாட்டவர் தொடர்பும் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் வளம் சேர்த்துள்ளது. இராபர்ட் டி நொபிலி தமிழில் பல நூல்களை எழுதினார். ஐரோப்பியரால் அச்சகங்கள் உருவாயின; உரைநடை வளர்ச்சி பெற்றது. நவீன உரைநடைவரை அடித்தளமிட்டவர்கள் தமிழ் இலக்கணம், தமிழ்ச் சுவடிகள், தமிழ் எண்கணிதம், அறிவியல் சாத்திரங்களைச் சேகரித்துப் பாதுகாத்தனர்.
இத்தாலி நாட்டவரான வீரமாமுனிவர் தமிழ் மரபில் தேம்பாவணி காப்பியத்தையும் கலம்பகம் அம்மானை சிற்றிலக்கியங்களையும் தமிழில் எழுதியதோடு, தமிழ் எழுத்துகளில் சில சீர்திருத்தங்களையும் செய்து எளிமையாக மொழியைக் கற்க உதவினார். தமிழ்மொழியில் அகராதிமுறையை அறிமுகப்படுத்தினர் அயல்நாட்டவர். இராபர்ட் டி நொபிலி தொடங்கி வைத்த அகராதிக்கலை வீரமாமுனிவர், பெப்ரிசியசு, இராட்லர், வின்சுலோ முதலியோர் வளர்த்தெடுத்தனர்.
ஜெர்மானியரான பார்த்தலோமியா சீகன்பால்கு பனைஒலைச் சுவடிகளிலிருந்து தமிழ்நூல்களை மீட்டு அச்சு நூல்களாக்கினர். நீதிவெண்பா, கொன்றைவேந்தன், உலகநீதி நூல்களை ஜெர்மனியில் மொழிபெயர்த்து, தமிழின் செழுமையை மேற்கு உலகிற்கு எடுத்துக்காட்டினார்.
ஆங்கிலேயரான பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் திருக்குறள் அறத்துப்பாலை மொழிபெயர்த்து விளக்கம் எழுதினார். திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிட்டார். எல்லீஸ் வெளியிட்ட ‘திராவிடமொழிக் குடும்பம்’ குறித்து ஆய்வு செய்து அயர்லாந்து நாட்டவரான இராபர்ட் கால்டுவெல் “வடமொழிக் கலப்பு இன்றித் தமிழ் தனித்து இயங்க வல்லது” என்னும் கருத்தை உலகிற்கு உணர்த்தினார்.
‘அரிஸ்டாட்டில்கூடச் சொல்லாத அறிவுரைகள் வள்ளுவரால் கூறப்பட்டிருப்பதாக’ வியந்த ஜி. யு. போப் திருக்குறள், நாலடியார், திருவாசகம் முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமிழின் இலக்கிய வளத்தை உலகு அறியச் செய்தார். ஜெர்மானியரான இரேனியஸ் தமிழின் முதல் அறிவியல் நூலைப் ‘பூமி சாஸ்திரம்’ என எழுதினார். பூகோளம், சரித்திரம், இயற்கை, வான சாஸ்திரம், சூரிய மண்டலம், காலநூல், தர்க்கம் முதலான பாடநூல்களைத் தமிழில் எழுதி அளித்தார். தமிழில் கலைச்சொற்களை முதன்முதலில் இவரே உருவாக்கினார் எனலாம்.
தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிய மொழியியல் வல்லுநராகத் திகழ்ந்த செக் நாட்டவரான கமில் சுவெலபில், தமிழ்க்கடவுள் முருகப் பெருமானிடம் கொண்ட ஈடுபாட்டால் தான் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்று நூலுக்கு ‘தி ஸ்மைல் ஆஃப் முருகன்’ எனப் பெயரிட்டார். திராவிட மொழி யியல், சங்க இலக்கியம், தமிழ் யாப்பு ஆகியன குறித்து ஆங்கிலத்திலும் தென்னிந்தியா பற்றிச் செக் மொழியிலும் எழுதியுள்ளார்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. அண்ட்ரிக் அடிகளார் தமிழிலே மொழிபெயர்த்த நூல்
- கம்பராமாயணம்
- தம்பிரான் வணக்கம்
- திருவாசகம்
- திருவிளையாடற்புராணம்
விடை : தம்பிரான் வணக்கம்
2. ஐரோப்பாவுக்கு வெளியே இந்திய மொழிகள், ஆசிய மொழிகள் அனைத்திற்கும் முன்பாக வெளிவந்த முதல் அச்சு நூல்
- கம்பராமாயணம்
- தம்பிரான் வணக்கம்
- திருவாசகம்
- திருக்குறள்
விடை : தம்பிரான் வணக்கம்
3. கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர்
- ஜி.யு.போப்
- வீரமாமுனிவர்
- தேவநேயபாவணர்
- மறைமலையடிகள்
விடை : வீரமாமுனிவர்
4. பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் திருக்குறளில் மொழியெர்த்த பிரிவு
- பொருட்பால்
- அறத்துப்பால்
- இன்பத்துப்பால்
- எதுவுமில்லை
விடை : அறத்துப்பால்
5. திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கருத்தாக்கத்தை முதன் முதலில் முன் வைத்தவர்
- கால்டுவெல்
- எல்லீஸ்
- ஹீராஸ் பாதிரியார்
- குமரிலபட்லர்
விடை : எல்லீஸ்
6. தமிழின் முதல் அறிவியல் நூலான பூமி சாஸ்திரம் என்ற நூலினை எழுதியவர்
- ஆரியபட்டர்
- இரேனியல்
- ஹீராஸ் பாதிரியார்
- குமரிலபட்லர்
விடை : இரேனியல்
6. தமிழ்க் கடவுள் முருகப் பெருமானிடம் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத் தான் எழுதிய இலக்கிய வரலாற்று நூலுக்கு தி ஸ்மைல் ஆஃப் முருகன் என்று பெயரிட்டவர்
- ஜி.யு.போப்
- கமில் சுவெலபில்
- பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்
- பார்த்தலோமியோ சீகன் பால்கு
விடை : கமில் சுவெலபில்
7. உரைநடையின் தந்தை என்று போற்றபட்டவர்
- சி.வை.தாமோதரனார்
- ஆறுமுக பண்டிதர்
- ஆறுமுக நாவலர்
- மறைமலையடிகள்
விடை : ஆறுமுக நாவலர்
8. பழம்பெரும் எழுத்தாளரான மா. இராமையா ______ இல் மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் என்னும் அரிய வரலாற்று நூலை எழுதினார்.
- 1995
- 1993
- 1996
- 1992
விடை : 1996