பாடம் 4.5 சூரியனைப் பிரசவிக்கும் பாறை
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 4.5 “சூரியனைப் பிரசவிக்கும் பாறை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- இச்சிறுகதை தோப்பில் முகமது மீரானின் வேர்களின் பேச்சு என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
- இவர் மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் எனும் சிற்றூரில் 1944இல் பிறந்தார்.
- இவர் தமிழிலும், மலையாளத்திலும் புதினம், சிறுகதை போன்ற பல்வேறு இலக்கியத் தளங்களில் இயங்கி வருபவர்.
- இவர் எழுதிய சாய்வு நாற்காலி எனும் புதினம் 1997இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.
- துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.
பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள சில சொற்கள்
- நிக்கர் – அரைக்கால் சட்டை
- உம்மா – அம்மா
- வாப்பா – அப்பா
- துன்யா – உலகம்
- அதுக்க – அதனுடைய
- நேர்ச்சை – நேர்த்திக்கடன்
- குருசு – சிலுவை
- ஜம்பர் – மேலாடை
- மனுசன் – மனிதன்
- சுவர்ணம் – பொன்
- நரங்கி – நெருங்கி
- பள்ளி – மசூதி
பாடநூல் வினாக்கள்
நெடு வினா
சூரியனைப் பிரசவிக்கும் பாறை எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுவை குன்றாமல் சுருக்கி வரைக.
மனிதனுக்குக் குழந்தைப் பருவம் என்பது அற்புதமான அனுபவங்களை அளிக்கும் பருவமாகும். இதனை ஒரு சிறுவன் வாயிலாகத் தோப்பில் முகம்மது மீரான் தமது ‘சூரியனைப் பிரசவிக்கும் பாறை என்ற கதைமூலம் நயம்படக் கூறியுள்ளார். அது உணர்த்தும் கருத்தைச் சுவை குன்றாது காண்போம்.
பள்ளியில் ஆசிரியர் “சூரியன் எங்கே உதிக்கிறது?” என்று கேட்டதும் மீரான்மட்டும் எழுந்திருந்து கிழக்குத் திசையைக் காட்டிப் பாராட்டைப் பெறுகிறான். அவன் நாள்தோறும் தன் கிராமத்தில், காலையில் எழுந்து பார்க்கும்போது பாறையின் பிளவிலிருந்து வெளிப்படுவதைக் கண்டிருக்கிறான். பகலில் வானில் மேயும் சூரியன், பொழுதானதும் மீண்டும் வேறு பாறையின் வயிற்றுக்குள் சென்றுவிடுவதையும், அதன்பின் இரவு மேய்வதையும் பார்த்திருக்கிறான். இளம் வயதில் அவன் கேள்விப்பட்ட செய்திகள் உண்மையா என அறிய ஏங்கினான்.
சூரியனைப் பெறும் பாறையைக் காணவும், அங்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட ஊசிக் கிணற்றையும் அதைக் காவல் காத்து நிற்கும் பாம்பையும் பார்க்க ஆசைப்பட்டான். அதற்கு ஆற்றைத் தாண்டிப் போக வேண்டும் என்று கேள்விப்பட்ட சின்ன மனம், வழி அறியாது திகைத்தது.
கொழும்பிலிருந்து வந்த தங்கன் (சமய அறிஞர்) தாகம் தீர்க்க உருவாக்கிய கிணறு ஆழமானது. அதைத் தம் தாகத்தைத் தீர்த்துக் கொண்டதும் அவர் மூடிவிட்டார். அதைக் காக்கும் பாம்பு அங்குச் செல்பவரைத் தீண்டிக் கொன்றுவிடுமென்றும் அம்மா சொன்னது இளம் மனத்தில் ஆழப்பதிந்திருந்தது. மீரானுக்கு அந்தப் பாறையில் ஒரு தடவையாவது ஏறிப் பார்த்துவிடவேண்டும் என்ற தீராத ஆசை வளர்ந்தது.
மேலே உள்ள பள்ளிக்கு (மசூதிக்கு) நேச்சா இல்லாமல் போகக் கூடாது. அந்தக் கிணறு ஒரு கப்பல் அளவு நூலாலும் ஆழம் காணமுடியாதது என்பதெல்லாம் உண்ணும்போதும் உறங்கும்போதும் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது.
ஒருமுறை நேச்சா கொண்டு சென்றவர்களைத் தொடர்ந்து சென்றவன், நேச்சா (நேர்த்திக்கடன்) முடித்தவர்கள் திரும்பியபோது தனித்துத் தங்கி, ஊசிக்கிணற்றையும் அதை மூடிய பாறையையும் சென்று பார்க்க நினைத்தான். பாறைமேல் நின்று பச்சைப் பசேலென்ற பெருவெளியையும் மாதா கோவிலையும் சிலுவையையும் கண்டான். சற்றுத் தொலைவில் நெடும்பனையில் எடுத்த பதனி எடுத்து வந்தவனைத் திரும்பிப் பார்த்தான். பின்னால் பாம்பு படம் எடுத்து நிற்பதைக் கண்டு பயந்தான். கையும் காலும் மரத்து இதயத் துடிப்பு நின்றது. பாம்பு படத்தைச் சுருக்கிக் கொண்டது. பாம்புடன் பேசினான்.
பாம்பு இல்லை சுடிக்கமாட்டேன்’ எனக் கூறி நகர்ந்தது. நடந்த வழியில் மீண்டும் திரும்பிப் பார்த்தான். பாம்பு தலை தூக்கியது. தன்னைக் கடிக்கக்கூடாது என்றும் தெரியாமல் வந்து விட்டதால் போய் விடுவதாகவும் மீரான் சொன்னான். எதிரில் வந்த பாம்பின் அசைவு மொழி மீரானுக்குப் புரிந்தது. தான் சூரியனைப் பிரசவிக்கும் பாறையையும் ஊசிக் கிணற்றையும் பார்க்க வந்ததாகக் கூறினான். அந்தப் பாறை சூரியனைப் பிரசவிக்கும் பாறை இல்லை என்றும் அதற்குக் கிழக்கிலுள்ள பகுதிகளை மறைத்து நிற்கிறது என்றும் பாம்பு கூறியது. உண்மை அறிய விரும்பிய பையனைப் பாம்பு பாராட்டிவிட்டு சிறுவனைத் தன் நண்பன் எனக் கூறியது.
பாம்புடன் நடத்திய உரையாடலில், பாம்புகள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவை என்பதையும் மனிதர்கள் சத்தியத்திற்குக் கட்டுப்படாத நீசர்கள் என்றும் காலப்போக்கில் புரிந்து கொள்ளமுடியும் என்றும் பாம்பின் மூலம் மீரான் அறிந்தான்.
தான் கிணறு பற்றிக் கேட்டது கட்டுக்கதை என்றும் பாம்பு குறித்துத் தான் கேள்விபட்டதெல்லாம் மூடர் பேச்சு என்றும் புரிந்து கொண்டான். வட்டக்கல் என்பது கிணற்றின் மூடி அல்லவென்றும் பாம்புகளுக்கு வீடு என்றும் தெரிந்து கொண்டான். யாரோ ஒருவர் முன்பு சொன்ன பொய் மூடநம்பிக்கையாக மாறியதை இச்சந்திப்பு மீரானுக்கு அறிவுறுத்தியது. உண்மையை விளக்கிவிட்டுப் பாம்பு நீங்கிச் சென்று வட்டக்கல் கீழ் மறைந்தது. அன்று சூரியனும் மறையவே பாறை மீதிருந்து மீரான் இறங்கியபோது, தந்தை கம்புடன் நின்றதைக் கண்டு. “வாப்பா அடிக்காதே” எனத் தந்தையிடம் கெஞ்சினது நினைவுக்கு வந்தது.
இன்று மிரானுக்கு வயது முப்பத்தாறு முடிந்துவிட்டது. அன்று பாம்பு சொன்னதன் பொருளும் புரிந்தது. பாம்புக்கு அன்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உறுதி பூண்டான். இன்று தந்தை கம்புடன் நிற்கவில்லை. இளமை நினைவுகள் வளரவளர. அந்த எண்ணங்களிலிருந்து மறைவதில்லை. இளமையில் கற்பது கல்மேல் எழுத்தாகுமல்லவா?
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக.
1. சூரியனைப் பிரசவிக்கும் பாறை என்னும் கதையின் ஆசிரியர்
- பீர்முகமது
- தோப்பில் முகமது மீரான்
- ஜெயகாந்தன்
- அப்துல் ரகுமான்
விடை : தோப்பில் முகமது மீரான்
2. சூரியனைப் பிரசவிக்கும் பாறை என்னும் கதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு
- துறைமுகம்
- கூனன் தோப்பு
- சிததன்போக்கு
- வேர்களின் பேச்சு
விடை : ஒரு குட்டித் தீவின் வரைபடம்
3. தோப்பில் முகமது மீரான் பிறந்த மாவட்டம் ______
- கன்னியாகுமரி
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- சென்னை
விடை : கன்னியாகுமரி
4. தோப்பில் முகமது மீரானின் படைப்புகள் வெளிவரும் மொழிகள் ______, ______
- தமிழ், ஆங்கிலம்
- தமிழ், இந்தி
- தமிழ், மலையாளம்
- தமிழ், கன்னடம்
விடை : தமிழ், மலையாளம்
5. தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி புதினம் சாகித்திய அகாதெமி விருதினை பெற்ற ஆண்டு
- 1994
- 1995
- 1996
- 1997
விடை : 1997
6. தமிழக அரசின் விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் படைப்புகள்
- சாய்வு நாற்காலி, துறைமுகம்
- ஒரு குட்டித் தீவின் வரைபடம்
- துறைமுகம், கூனன்தோப்பு
- கூனன்தோப்பு, சாய்வு நாற்காலி
விடை : துறைமுகம், கூனன்தோப்பு
பொருத்துக
1. புதுமைபித்தன் | அ. குமரித் தமிழ் |
2. சண்முகசுந்தரம் | ஆ. தஞ்சைத் தமிழ் |
3. ஜெயகாந்தன் | இ. சென்னை வட்டாரத் தமிழ் |
4. தி.ஜானகிராமன் | ஈ. கோவைத்தமிழ் |
5. தோப்பில் முகமது மீரான் | உ. நெல்லைத் தமிழ் |
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – இ, 4 – ஆ, 5 – அ |
நெடு வினா
1. தோப்பில் முகமது மீரான் குறிப்பு வரைக
- 1944-ல் தோப்பில் முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்தார்.
- இவர் தமிழிலும், மலையாளத்திலும் படைப்பவர்
- புதினம், சிறுகதை போன்ற பல்வேறு இலகங்கியத் தளங்களிலும் இயங்கி வருபவர்.
- இவர் 1997-ல் சாய்வு நாற்காலி என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதெமி விருதினை பெற்றுள்ளார்.
- இவரின் துறைமுகம், கூனன்தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.