பாடம் 6.5 தொன்மம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 6.5 “தொன்மம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
இலக்கணத் தேர்ச்சி கொள்
1) பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தா ஒன்றைத் தேர்க.
- கர்ணன் தோற்றான் போ.
- வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி!
- இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு.
- இந்தா போறான் தருமன்.
விடை ; வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி!
2) தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க.
- உருவாக்கப்பட்டு இறுகி விட்ட வடிவங்கள்.
- பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவது.
- நம்ப முடியாதது போல் தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகள்.
- விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.
விடை ; விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.
3) சாபவிமோசனம், அகலிகை கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்
- கு. அழகிரிசாமி
- புதுமைப்பித்தன்
- ஜெயமோகன்
- எஸ். இராமகிருஷ்ணன்
விடை ; புதுமைப்பித்தன்
4) பண்புக்குறியீடுகளைக் கதைமாந்தர்களோடு பொருத்துக.
அ) அறம் | 1) கர்ணன் |
ஆ) வலிமை | 2) மனுநீதிச்சோழன் |
இ) நீதி | 3) பீமன் |
ஈ) வள்ளல் | 4) தருமன் |
- 3, 2, 1, 4
- 4, 3, 2, 1
- 2, 4, 3, 1
- 4, 3, 1, 2
விடை ; 4, 3, 2, 1
5) தொன்மம் விளக்கம் தருக.
- சமய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் வெளிப்படுத்துகின்றன.
- உவமைக் கதைகளாகவும், மெய்யியல் உருவகங்களாகவும் நின்றறு சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன.
- அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்து கொள்ளவோ முடியாது.
- சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாக அவற்றினால் ஏற்படும் கட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன.
6) பேச்சு வழக்கில் தொன்மம் வெளிப்படும் இரு தொடர்களை எழுதுக.
- நம் அன்றாடப் பேச்சில் மரபுத் தொடர்களாகத் தொன்மங்கள் கலந்துள்ளன.
- “கிழிந்த கோட்டைத் தாண்டமாட்டான்” – என்பது இராமாயணத்தில் பர்ணசாலையை விட்டு சீதை வெளியே வந்தால் தீங்கு வரும் என்பதற்காக இலக்குவன் கோடு கிழித்த நிகழ்விலிருந்து உருவான மரபுத்தொடர்.
- “மனுநீதிச் சோழன்” – தன் தேர்ச்சக்கரத்தில் இறந்த கன்றுக்காக தன் மகனைத் தேர் ஏற்றி கொன்ற சோழன் நீதி தவறாத ஆட்சி.
7) உன்மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
நீ அறிவாய் அல்லவா? – இக்கவிதையில் வெளிப்படும் தொன்மம் யாது?
- தொன்மங்கள் முரண்பட்டவை
- ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன.
- இப்பாடலில் பாற்கடல், அமுதம், அலகாலம் ஆகிய தொன்மங்கள் வெளிப்படுகின்றன.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. பொருத்திக் காட்டுக
அ) பழங்கதை
ஆ) புராணம்
இ) புதுக்கவிதை
- ஆ, இ – மட்டும் சரி
- அ, ஆ – மட்டும் சரி
- அ, இ – மட்டும் சரி
- மூன்றும் சரி
விடை : அ, ஆ – மட்டும் சரி
2. கவிதையில் பழங்கதையைத் துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவது
- படிமம்
- குறியீடு
- தொன்மம்
- இவற்றில் ஏதுமில்லை
விடை : தொன்மம்
3. புதுமைபித்தன், சாபவிமேசனம், அகலிகை ஆகிய கதைகளை எழுதத் தொன்மாகப் பயன்பட்ட நூல்
- இராமாயணம்
- மகாபாரதம்
- மணிமேகலை
- சிலப்பதிகாரம்
விடை : இராமாயணம்
4. திருவிளையாற்புராணத்திற்கு சிவனை, நக்கீரனைக் கொண்டு விட்டகுறை, வெந்தழலால் வேகாது என்னும் சிறுகதைப் படைத்தவர்
- புதுமைத்பித்தன்
- அழகிரிசாமி
- ஜெயகாந்தன்
- எஸ். ராமகிருஷ்ணன்
விடை : ஜெயகாந்தன்
5. தொன்மங்களை கொண்டு படைக்கபட்டவைகளையும், படைபாளிகளையும் பொருத்திக் காட்டுக
அ) பூதுமைப்பித்தன் | 1) அரவாணன் |
ஆ) அழகிரிசாமி | 2) பத்மவியூகம் |
இ) ஜெயமோகன் | 3) விட்ட குறை |
ஈ) எஸ். இராமகிருஷ்ணன் | 4) அகலிகை |
- 4, 3, 2, 1
- 2, 1, 3, 4
- 3, 2, 1, 4
- 2, 4, 3, 1
விடை : 4, 3, 2, 1
6. தொன்மைக்கு சான்றாக இளம்பூரணர் உரையில் இம் பெறுவன
- இராமசரிதம், பாண்டவ சரிதம்
- பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை
- பாண்டவ சரிதம், தகடூர் யாத்திரை
- இராமசரிதம், பெருந்தேவனார் பாரதம்
விடை : இராமசரிதம், பாண்டவ சரிதம்
7. தொன்மைக்கு சான்றாக பேராசிரியர் உரையில் இம் பெறுவன
- இராமசரிதம், பாண்டவ சரிதம்
- பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை
- பாண்டவ சரிதம், தகடூர் யாத்திரை
- இராமசரிதம், பெருந்தேவனார் பாரதம்
விடை : பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை
8. வெவ்வேல் கவுரியர் தொன்முதுகோடி என்ற அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள தொன்மம் உணர்த்துவது
- காதல் தோல்வி
- தலைவன் மரணம்
- காதல் வெற்றி
- தலைவி வருத்தம்
விடை : காதல் வெற்றி
9. முருகு உறழ் முன்பொடு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை என்ற நற்றிணை பாடல்களில் வெளிப்படும் தொன்மம் உணர்த்தும் செய்தி
- யானையின் போர் – முருகனின் வீரம்
- காதல் தோல்வி
- தலைவன் மரணம்
- தலைவி வருத்தம்
விடை : யானையின் போர் – முருகனின் வீரம்
10. மதுரை எரிக்கக் கண்ணகியாயும்
மீண்டும் எழுந்திடச் சீதையாயும்
எப்பவும் எரிதழல் மடிசுமப்பது இனி
எங்கள் வேலையல்ல என்னும் கவிதையில் அமைந்துள்ள தொன்மம்
அ) இக்காலப் பெண்ணியத்திற்கான தொன்மமாகக் கண்ணகி
ஆ) பெண்ணியப் போராட்டத்திற்கான தொன்மமாக மதுரை
- அ – சரி
- ஆ – சரி
- இரண்டும் தவறு
- இரண்டும் சரி
விடை : இரண்டும் சரி
11. கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் உள்ள ஒப்புமைகளைப் பொருத்திக்க காட்டுக
அ) இந்திரன் | 1) சோல் |
ஆ) வருணன் | 2) மார்ஸ் |
இ) பலராமன் | 3) டயானிசிஸ் |
ஈ) கார்த்திகேயன் | 4) ஊரனாஸ் |
உ) சூரியன் | 5) சீயஸ்பிடர் |
- 5, 4, 3, 2, 1
- 4, 3, 5, 1, 2
- 5, 1, 2, 3, 4
- 2, 1, 3, 4, 5
விடை : 5, 4, 3, 2, 1
12. கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் உள்ள ஒப்புமைகளைப் பொருத்திக்க காட்டுக
அ) சந்திரன் | 1) இராஸ் |
ஆ) விஸ்வகர்மன் | 2) மினர்வா |
இ) கணேசன் | 3) ஜீனோ |
ஈ) துர்க்கை | 4) ஜோனஸ் |
உ) சரஸ்வதி | 5) வன்கண் |
ஊ) காமன் | 6) லூனஸ் |
- 6, 5, 4, 3, 2, 1
- 5, 6, 4, 3, 2, 1
- 4, 3, 2, 1, 5, 6
- 3, 2, 4, 5, 6, 1
விடை : 6, 5, 4, 3, 2, 1
குறு வினா
1. தொன்மத்தை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர்?
- தொன்மத்தை வெளிப்படுத்தம் முதன்மையான கருவி கதை
- உலகில் பெரும்பாலன தொன்மங்கள் கவிதை மூலமே வெளிப்படுகின்றன.
2. திரைப்படங்கள், நாடகங்கள், கதைகளில் தொன்மங்கள் கையாண்டுள்ளவற்றைச் சில சான்றுகள் தருக.
- இராமாயணத்தின் அகலிகை கதையை வைத்துப் புதுமைப்பித்தனின் சாப விமோசனம்
- திருவிளையாடற்புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு அழகிரிசாமி “விட்ட குறை”, “வெந்தழலால் வேகாது” என்னும் சிறுகதைகள்
- ஜெயமோகன் – பத்மவியூகம்) எஸ். ராமகிருஷ்ணன் – அரவான் போன்ற புதினங்களில் தொன்மங்கள்.
3. தொன்மங்கள் பற்றி தொல்காப்பியனார் கூறுவன யாவை?
- தொன்மை தானே சொல்லுங்காலை
- உரையோடு புணர்ந்த பழமை மேற்ற (தொல் செய்யுளில் – 228)
- உரைேயாடு சேர்ந்த பழமையே தொன்மம் என்கிறார் தொல்காப்பியர்.
4. தொன்மங்கள் பற்றி இளம்பூரணரர் கூறுவன யாவை?
தொன்மையாவது உரையோடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராம சரிதமும் மேல் வருஞ் செய்யுள் என்கிறார் இளம்பூரணர்.
5. தொன்மம் பற்றி பேராசிரியர் கூறுவன யாவை?
தொன்மை என்பது உரை விராஅய்ப் பழமையனவாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது. அவை
“முருக உறழ் முன்பொடு
கடுஞ்சினம் செருகிப் பொருத யானை” (நற்றிணை 225 – 1 – 2)
சிறு வினா
1. தொன்மம் பற்றி நீவிர் அறிவன யாவை?
- தொன்மம் எங்கும் எப்போதும் எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் வழக்கில் இருக்கும் ஒன்றாகும்.
- அது காலத்தைக் கடந்து நிற்பது;
- இக்காலத்தோடு கடந்த காலத்தை இணைப்பது.
- சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை சொல்ல வந்த கருத்தை விளக்குவதற்குத் தொன்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- தொன்மங்கள் கருத்தினை ஆழமாக விளக்கும் உத்தியாகவே ஆளப்படுகின்றன.
2. தொன்மம் பற்றி அப்துல் ரகுமானின் கருத்து யாது?
தொன்மங்கள் முரண்பட்டவை
ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன.
உன்மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை நீ அறிவாய் அல்லவா?
இங்குப் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகியன தொன்மங்களாக வெளிப்படுகின்றன.
3. பெண்ணியம் பற்றித் தொன்மன் கூறுவன யாவை?
தமிழில், கண்ணகி கதை தொன்மை நோக்கிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இக்காலப் பெண்ணியத்திற்கான தொன்மமாகக் கண்ணகியும் பெண்ணியப் போராட்டத்திற்கான தொன்மமாக மதுரையை எரித்த நிகழ்வும் பின்வரும் புதுக்கவிதையில் அமைந்துள்ளவிதத்தை அறியலாம்.
“மதுரை எரிக்கக் கண்ணகியாயும்
மீண்டும் எழுந்திடச் சீதையாயும்”
4. சங்க இலக்கியங்கள் காட்டும் முருகனின் தொன்மத்தினை நற்றிணை வாயிலாக விளக்குக?
- சங்க இலக்கியங்களில் முருகன் பற்றிய கதைப்பகுதிகள் உள்ளன.
- முருகனுக்கு வெறியாடும் சடங்கு முறைகளும் தொன்மங்களாக
ஆளப்பட்டுள்ளன. - முருகனை அழகுக்கும் ஆற்றலுக்கும் வீரத்துக்கும் உவமையாக்கி உள்ளனர்.
- யானை சினங்கொண்டு பேராற்றலுடன் போர் செய்த சிறப்பினை, முருகனின் வீரத்தோடு இணைத்துக் கூறியுள்ளனர்.
”முருகு உறழ் முன்பொடு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை (நற்றிணை, 225 : 1 – 2 )
என்னும் பாடலடி வெளிப்படுத்துகிறது.
கற்பவை கற்றபின்…
தொன்மம் என்னும் உத்தியைப் பயன்படுத்திப் புதுக்கவிதையொன்றை எழுதுக.
- “தாண்டிக் கெட்டாள் சீதை
தாண்டாமல் கெட்டாள் கண்ணகி”
- இரண்டு அடியாவது வாங்கினால்தான்
திருந்துவாய்” – வள்ளுவர் வாக்கு
மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
மா. இராசமாணிக்கனார் (1907-1967)
இவரின் தந்தை அரசுப் பணி யாளர் என்பதால் பல ஊர்களில் பணியாற்ற வேண்டியிருந்தது. எனவே தற்போதைய ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்புவரை தெலுங்கு மொழியையே பயின்றார். இளம்வயதில் தந்தையை இழந்து தமையனாரால் வளர்க்கப்பட்டார். பதினைந்து வயதை அடைந்த நிலையில் ‘இனி இவன் எங்கே படிக்கப் போகிறான்?’ என்று முடிவெடுத்து ஒரு தையல் கடையில் அவரது தமையனாரால் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். ‘நான் பதினைந்து நாட்கள் வேலை கற்றுக்கொண்டேன்; காஜா எடுக்கக் கற்றுக்கொண்டேன். சிறிய பைகளைத் தையல் இயந்திரத்தில் தைக்கக் கற்றுக்கொண்டேன். நாள்தோறும் இரவில் வீடு திரும்புகையில் கடை உரிமையாளர் எனக்குக் காலணா கொடுப்பார்’ என்று பின்னாளில் பதிவு செய்த அவரால் அத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை.
தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். மிகுந்த பொருளாதார நெருக்கடியில் கல்வி பயின்ற அவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதோடு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்திய பள்ளி இறுதித் தமிழ்த்தேர்விலும் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்பு எழுத்தர், பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர் என வளர்ந்தார். அவர்தான் இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் மிளிர்ந்த தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார்.
ஆய்வு நெறிமுறைகளிலும் அணுகுமுறைகளிலும் புதிய சிந்தனைகளைக் கையாண்ட இவர், சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்; சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் ‘மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே. உமாமகேசுவரன், ந.மு. வேங்கடசாமி, ஆகியோராலும் உ.வே. சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட இவர் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். 2006-2007ஆம் ஆண்டு இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய சொல்லாற்றலுக்கொரு சான்று: “அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செயலாற்றவிருக்கும் நிலையில் அப்புதிய தமிழகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும் புதிய தமிழகத்தில் செய்ய வேண்டுவன எவை என்பதைக் கூறத் தமிழன் விரும்புதலும் இயல்புதானே! முதலில் புதிய தமிழகம் எதனை வட எல்லையாகப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதைக் காய்தல் உவத்தலின்றிக் காண வேண்டும்”.
(மா. இராசமாணிக்கனார் எழுதிய புதிய தமிழகம் நூலில் இருந்து)
வினாக்கள்:-
1. இராசமாணிக்கனாரின் பன்முகத்தன்மைப பற்றிக் கூறுக.
2. இவருடைய நூல்கள் எந்த ஆண்டு தமிழக அரசால் நாட்டுடமையாக்கபட்டன?
3. பிரித்தறிக; பேருதவி
4. இழந்து – உறுப்பிலக்கணம் தருக
5. காய்தல் – இலக்கணக்குறிப்பு வரைக
விடைகள்:-
1. இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு
2. 2006 – 2007 ஆம் ஆண்டு
3. பேருதவி = பெருமை + உதவி
4. இழந்து = இழ + த் (ந்) + த் + உ
- இழ – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
5. காய்தல் – தொழிற்பெயர்
தமிழாக்கம் தருக.
Popular as the ‘Cultural Capital’ of India, Tamil Nadu is extremely well-known for its marvellous temples and other architectural gems. The state rose to prominence primarily because of its well-known and outstanding Tanjore Paintings that flourished at the time of Chola dynasty in ancient Tanjavoor. In this traditional art form, the paintings showcase the embellished form of the sacred deities of the region. The deities in the paintings are festooned with glass pieces, pearls, semi-precious stones, and gold and other vibrant colours. In the modern times, Tanjore paintings look up to human figures, animals, floral motifs and birds as muses.
தமிழாக்கம்:
இந்தியாவில் தமிழகம் கலாச்சாரத் தலைநகரமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு பிரம்மாண்டமான கோவில்களுக்கும் மற்றும கட்டடக்கலைக்களுக்கும் புகழ் பெற்றது. குறிப்பாக தஞ்சாவூர் ஓவியங்கள் சோழ வம்சத்தின் கலாச்சாலங்களையும் பண்டைய தஞ்சாவூரின் பாரம்பரிய கலை, ஓவியங்கள் மற்றும் புனித தெய்வங்கள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. தெய்வங்களின் உருவங்கள் கண்ணாடித் துண்டுகள் ஓவியங்கள், முத்துக்கள், விலை உயர்ந்த கற்கள் மற்றும் தங்கம் ஆகியவற்றில் பல வண்ணங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. நவீன காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் மனித உருவங்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பறவைகள் – உருவங்கள் கொண்டதாகப் பரிணாமம் பெற்றுள்ளன.
மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. ஆற அமர
விடை : ஒரு செயலை செய்யும் முன் ஆற அமர யோசித்து செயலை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
2. ஆணி அடித்தாற் போல
விடை : நமது தேசிய கீதம் பாடும் போது மரத்தில் ஆணி அடித்தாற் போல அசையாமல் நிற்க வேண்டும்.
3. அகலக்கால்
விடை : தொழில் தொடங்கு முதன் சிந்தித்து அகலக்கால் வைக்காமல் சிறிய முதலுடன் தொடங்க வேண்டும்.
4. வழிவழியாக
விடை : தமிழர்களின் பண்பாடு வழிவழியாக பல தலைமுறைகளாக வளர்ந்தவை
5. கண்துடைப்பு
விடை : தேர்தலில் பல வாக்குறுதிகளை கொடுக்கும் அரசியல்வாதிகள், வெற்றி பெற்ற பின் கண்துடைப்பாக ஒரு சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றுகின்றனர்.
தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
1. வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.
விடை : வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.
2. முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
விடை : முருகன் சோறு உண்டு பால் பருகினான்.
3. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார்.
விடை : கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை வேய்ந்தான்.
4. வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன்.
விடை : வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும் யானைக்குட்டியும் கண்டேன்.
5. ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.
விடை : ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன.
6. பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
விடை : பனை ஓலையால் கூரை வைத்திருந்தனர்.
இலக்கிய நயம் பாராட்டுக.
பூமிச்சருகாம் பாலையை
முத்துபூத்த கடல்களாக்குவேன்
புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்
புதிய தென்றலாக்குவேன்
இரவில் விண்மீன் காசினை – செலுத்தி
இரவலரோடு பேசுவேன்!
இரவெரிக்கும் பரிதியை – ஏழை
விறகெரிக்க வீசுவேன்
– நா. காமராசன்
ஆசிரியர் குறிப்பு:-
நா.காமராசன் 1942-ல் தேனி மாவட்டத்தில் பிறந்தவர். கவிஞர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்வர், பேராசிரியர், மொழிபெயர்ப்புத்துறை போன்ற சிறப்பினை உடையவர்.
திரண்ட கருத்து:-
பாலைவனம் போல் காட்சியளிக்கும் பூமியை முத்து பூத்த கடல் போல் ஆக்குவேன். புயலைக் கூறுபடுத்தி தென்றல் ஆக்குவேன். இரவில் விண்மீனைப் பயன்படுத்தி இல்லாதவேலாடு பேசுவேன். சுட்டெரிக்கும் சூரியனை வீட்டுக்கு விறெகரிக்க பயன்படுத்துவேன்.
மோனை:-
குயவனக்கு பானை, செய்யுளுக்கு மோனை
முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்
சான்று : புயலை – புதிய, இரவில் – இரவலரோடு – இரவெரிக்கும்
எதுகை:-
மதுரைக்கு வைகை, செய்யுளுக்கு எதுகை
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
சான்று : இரவில் – இரவலரோடு – இரவெரிக்கும்
இயைபு:-
இறுதி எழுத்தே ஒசையோ ஒன்றி வருவது இயைபு
சான்று : கடலகளாக்குவேன் – தென்றலாக்குவேன் – பேசுவேன் – வீசுவேன்
அணி நயம்:-
கண்ணுக்கு மை அழகு, செய்யுளுக்கு அணி அழகு
அணி என்பதன் பொருள் அழகு ஆகும். இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி அமைந்துள்ளது.
கற்பனை நயம்:-
கற்பனை விற்பனை அல்ல. கவிஞர் தம் கற்பனைய விற்பனை செய்யாமல் தம் கவிதையிலே பயன்படுத்தியுள்ளார்.
புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்
புதிய தென்றலாக்குவேன்
கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து நாளிதழ்ச் செய்தியாக மாற்றுக.
புத்தகக் கண்காட்சி
– நமது சிறப்பு நிருபர் –
42வது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 2019 ஜனவரி 4 முதல் நடைபெற உள்ளது. அனைத்து வயதினமும் கொண்டாடும் ஆனந்தத் திருவிழா. 800 அரங்குகள், 20,00,000 வாசகங்கள். 30,00,000 பார்வையாளர்கள் பங்குபெறும் திருவிழா.
நுழைவுக் கட்டணம் ரூபாய் 10/- மட்டுமே. நீங்கள் வாங்கும் புத்தகத்திற்கு 10% கழிவு உண்டு. வாருங்கள் புத்தகங்களை வாசிப்போம்! வாழ்க்கையை நேசிப்போம்…!!
விழா ஏற்பாடு
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்
பத்தியைப் படித்து தேவையான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
இளங்கோவடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.
விடை:-
“இளங்கோவடிகள் சாத்தனாரிடம்“ முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே! அவர்களுடைய முந்தைய வினை யாது? அதன் விளைவு? என்ன நிகழ்ந்த காலம் யாது? அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.
எண்ணங்களை எழுத்தாக்குக.
- பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நாங்கள்
- வீட்டினில் அடைத்து வைக்கும் கிளிகல்ல நாங்கள்
- பிள்ளை பெறும் இயந்திரங்கள் அல்ல நாங்கள்
- விண்ணில் பயணம் செய்திடுவோம்
- விந்தைகள் பல புரிந்திடுவோம்
- ஆடல்கள் மட்டும் ஆடும் பெண்கல்ல
- விளையாட்டுக்களில் விவேகம் காட்டும் வீராங்களைகள்
- கணிதம் அறியா மக்குளல்ல நாங்கள்
- கணினி விற்பன்னர்கள் நாங்கள்
- நிதியிலும் நீதியிலும் மேலாண்மை பெறுவோம் – நாங்கள்
- வீராங்கனைகளாகப் பாதுகாப்புக்கு வலம் வரும்
- காவல் தெய்வங்கள் நாங்கள்
- விமானிகளாகி விண்ணகத்தில் உலா வருவோம்
- ஆட்சியராகி அகிலத்தில் நல்லாட்சி தருவோம்
- ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே அல்ல
- தீமைகள் அழிவதும் பெண்ணாலே என திருத்துவோம்
- மாதராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்
- என்று பாடிய கவிமணியை வணங்கி முடிக்கிறோம்.
நிற்க அதற்குத் தக
படிப்போம் பயன்படுத்துவோம் (வங்கி)
- Business Management – வணிக மேலாண்மை
- Mission – குறிக்கோள் பயணம்
- Customs officer – சுங்க அதிகாரி
- Emotion – மனவெழுச்சி
அறிவை விரிவு செய்
- நீர்க்குமிழி - கே. பாலசந்தர்
- முள்ளும் மலரும் – உமா சந்திரன்
- இயேசு காவியம் – கண்ணதாசன்
- ஏழாவது அறிவு – வெ.இறையன்பு