பாடம் 2.2 பட்ட மரம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 2.2 – “பட்ட மரம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- விசனம் – கவலை
- குந்த – உட்கார
- கந்தம் – மணம்
- குமைந்தனை – வருந்தினாய்
- இற்று – அழிந்து
- எழில் – அழகு
- ஓலம் – அலறல்
- எய்தி – அடைந்து
- புவி – உலகம்
- மிசை – மேல்
- துயர் – துன்பம்
எதுகை
- குந்த – கந்த
- வெந்த – இந்த
மோனை
- குந்த – கூரை
- வெந்து – வெம்பி
இயைபு
- அடைந்தனையோ – குமைந்தனையோ
நூல் வெளி
- கவிஞர் தமிழ் ஒளி பாரதியாரின் வழித்தோன்றலகாகவும் பாரதிதானின் மாணவராகவும் விளஙகியவர்.
- நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மாதவி காவியம் முதலியவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை.
- தமிழ்ஒளியின் கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்ற ஒரு கவிதை நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.
மதிப்பீடு
சரியனா விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மலர்களிலிருந்து வரும் _______ வண்டுகளை ஈர்க்கும்
- மந்தம்
- அந்தம்
- சந்தம்
- கந்தம்
விடை : கந்தம்
2. மரத்தின் உடையாகக் குறிப்பிடப்படுவது _______ ஆகும்.
- சட்டை
- பட்டை
- மட்டை
- கட்டை
விடை : பட்டை
3. வருமென்று என்ற சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது
- வரு + மென்று
- வரும் + மென்று
- வரும் + என்று
- வரு + என்று
விடை : வரும் + என்று
4. கிழிந்து + எழில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- கிழிந்துஎழில்
- கிழிந்தெழில்
- கிழிந்தொழில்
- கிழிந்தழில்
விடை : கிழிந்தெழில்
பட்டமரம் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபு சொற்களைச் எடுத்து எழுதுக
எதுகை
- குந்த – கந்த
- வெந்த – இந்த
- கட்டை – பட்டு
- இற்று – முற்றும்
- காலம் – ஓலம்
- ஆடுங்கிளை – ஏடு
மோனை
- குந்த – கூரை
- பாடும் – பாடல்
- வெந்து – வெம்பி
இயைபு
- அடைந்தனையோ – குமைந்தனையோ
- கருகினையே – இழந்தனையே
- புனைந்ததுவும் – கொடுத்ததுவும்
குறு வினா
1. பட்டமரம் எதை நினைத்துக் கவலை அடைந்தது?
பட்ட மரம் தான் வெட்டப்படும் நாள் வருமென்று எண்ணி கவலை அடைந்தது.
2. பட்டமரம் எதனால் தனது அழகை இழந்தது?
பட்டமரம் வெந்து கரிய நிறம் பெற்றதால் தனது அழகை இழந்தது.
3. பட்டமரத்தின் கிளைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது?
பட்டமரத்தின் கிளைகளுக்கு உவமையாக, கலங்கும் மனிதன் கைநீட்டி ஓலமிடும் காட்சி கூறப்பட்டுள்ளது.
சிறு வினா
ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?
- பட்ட மரம், தான் வெட்டப்படும் நாள் வருமென்று எண்ணி கவலை அடைந்தது.
- நிழலையும் மணம் மிகுந்த மலர்களையும் தருவதற்காக மரத்தின் இலைகள் கூரைபோல் அவை வெந்து கரிய நிறம் பெற்றதை எண்ணி வருந்தியது.
- மரம் என்னும் பெயர் மாறி, கட்டை என்னும் பெயரைப் பெற்றது.
- அதன் உடையாகிய பட்டை கிழிந்ததால் அழகு முழுவதும் இழந்தது.
- சிறுவர்கள் அமர்ந்து குதிரை ஓட்டி விளையாடியது என்பன எல்லாம் ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்து விட்டன
சிந்தனை வினா
மரங்கள் பட்டுவிடாமல் காக்க, செய்ய வேண்டியவையாக நீங்கள் கருதுவன யாவை?
- மழைநீர் மரத்தடியில் தேங்க வழிசெய்ய வேண்டும்.
- மரங்களைக் காக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
- நெகிழிப் பொருள்கள் மரத்தைச் சுற்றி தேங்காதவாறு காக்க வேண்டும்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராக விளங்கியவர்
- தமிழ் ஒளி
- தமிழன்பன்
- சேக்கிழார்
- திருவள்ளுவர்
விடை : தமிழ் ஒளி
2. பட்டமரம் கவிதை இடம் பெறும் நூல்
- நிலைபெற்ற சிலை
- வீராயி
- தமிழ் ஒளியின் கவிதைகள்
- மாதவி
விடை : தமிழ் ஒளியின் கவிதைகள்
3. மணம் என்னும் பொருள் தரும் சொல் எது?
- குந்த
- கந்தம்
- கூரை
- விரித்த
விடை : கந்தம்
பொருத்துக
1. குந்த | அ. மணம் |
2. கந்தம் | ஆ. உட்கார |
3. மிசை | இ. கவலை |
4. விசனம் | ஈ. மேல் |
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |