Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 5.5 – வினையால் அமையும் தொடர்கள்

பாடம் 5.5 வினையால் அமையும் தொடர்கள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 5.5 – “வினையால் அமையும் தொடர்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

நூல்வெளி

குறு வினா

1. எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது _______

  1. செய்வினை
  2. செயப்பாட்டு வினை
  3. தன்வினை
  4. பிறவினை

விடை: தன்வினை

2. கரையில் சேர்ப்பான் என்பது _______

  1. செய்வினை
  2. செயப்பாட்டு வினை
  3. தன்வினை
  4. பிறவினை

விடை: பிறவினை

3. பாடல் இலக்கியாவால் பாடப்பட்டது என்பது _______

  1. செய்வினை
  2. செயப்பாட்டு வினை
  3. தன்வினை
  4. பிறவினை

விடை: செயப்பாட்டு வினை

பொருத்துக

1. ஆடினாள்செய்வினை
2. திருத்தினான்தன்வினை
3. புத்தகம் படிக்கிறேன்செயப்பாட்டு வினை
4. கட்டுரை அகிலனால் எழுதப்பட்டதுபிறவினை
விடை: 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

குறு பின்வருவனவற்றுள் செய்வினைத் தொடர்களைச் செயப்பாட்டு வினைத்தொடர்களாவும் செயப்பாட்டுவினைத் தொடர்களைச் செய்வினைத் தொடர்களாவும் மாற்றுக.

1. மாணவர்கள் வகுப்பைத்  தூய்மை செய்தனர்.

விடை: வகுப்பு மாணவர்களால் தூய்மை செய்யப்பட்டது.

2. பழம் அணிலால் கொறிக்கப்பட்டது.

விடை: அணில் பழத்தை கொறித்தது.

3. ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்.

விடை: இலக்கணம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது.

4. ஓவியம் குமரனால் வரையப்பட்டது.

விடை: குமரன் ஓவியம் வரைந்தான்.

குறு வினா

1. தன்வினை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக

எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன் வினை ஆகும்.

எ.கா: செல்வி கடலைக் கண்டாள்

2. ஏற்றினாள் என்பது எவ்வகை வினை என்பதை விளக்குக

ஏற்றினாள் என்பது பிறவினை ஆகும்.

இவ்வாறு எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை ஆகும்.

3. செய்வினை, செயப்பாட்டு வினையாக மாறும்போது நிகழும் மாற்றங்கள் யாவை?

செய்வினைசெயப்பாட்டு வினை
1. எழுவாய், செய்யப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும்செய்யப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் அமையும்
2. செயப்படுபொருளுடன் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்தோ வெளிப்பட்டோ வரும்.எழுவாயோடு ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும். பயனிலையோடு படு, பட்டது போன்ற துணைவினைகளுஒ் ஒன்று சேர்ந்து வரும்.
3. சான்று: கயல்விழி கதை படித்தாள் (அ) கயல்விழி கதையைப் படித்தாள்சான்று: கதை கயல்விழியால் படிக்கப்பட்டது.

கூடுதல் வினாக்கள்

குறு வினா

1. செய்வினை என்றால் என்ன?

செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை எனப்படும்.

2. செயப்பாட்டு வினை என்றால் என்ன?

செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை ஆகும்.

சிறு வினா

தன்வினை சொல்லை பிறவினையாக்கி சில சொற்களை அட்டவணைப்படுத்துக

தன்வினைபிறவினை
திருந்துதிருத்து
ஓடுஓட்டு
நடநடத்து
உருள்உருட்டு

மரபுச்சொற்கள்

பறவைகளின் ஒலிமரபு
ஆந்தை அலறும்குயில் கூவும்
காகம் கரையும்கோழி கொக்கரிக்கும்
சேவல் கூவும்புறா குனுகும்
மயில் அகவும்கூகை குழறும்
கிளி பேசும்
தொகை மரபு 
மக்கள் கூட்டம்ஆநிரைஆட்டு மந்தை
வினை மரபு
சோறு உண்தண்ணீர் குடி
முறுக்குத் தின்பால் பருகு
சுவர் எழுப்புகூடை முடை
பூக் கொய்பானை வனை
இலை பறி

சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கோழி __________ (கூவும்/கொக்கரிக்கும்)

விடை : கொக்கரிக்கும்

2. பால் __________ (குடி/ பருகு)

விடை : பருகு

3. சோறு __________ (தின்/உண்)

விடை : உண்

4. பூ __________ (கொய்/பறி)

விடை : கொய்

5. ஆ __________ (நிரை/மந்தை)

விடை : நிரை

மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

விடை :

சேவல் கூவும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைப் கொய்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக் கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை பருகி விட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

மரபுத்தொடர்கள்

நாம் பேச்சிலும் எழுத்திலும் சில மரபுத்தொடர்களைப் பயன்படுத்துகிறோம். அத்தொடர்கள் நம்முடைய கருத்துகளுக்கு வலுச்சேர்க்கின்றன. சில மரபுத்தொடர்களுக்கு நேரடிப்பொருள் கொள்ளாமல், அவற்றின் உட்பொருளை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.) 1. திண்டுக்கல், பூக்கள் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நகரமாக விளங்குகிறது.

கொடிகட்டிப் பறத்தல் – புகழ்பெற்று விளங்குதல்

2. அவர் ஓர் அவசரக்குடுக்கை.

அவசரக்குடுக்கை – எண்ணிச் செயல்படாமை

பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.

1. ஆயிரங்காலத்துப் பயிர்அ. இயலாத செயல்.
2. கல்லில் நார் உரித்தல்ஆ. ஆராய்ந்து பாராமல்.
3. கம்பி நீட்டுதல்இ. இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது.
4. கானல்நீர்ஈ. நீண்டகாலமாக இருப்பது.
5. கண்ணை மூடிக்கொண்டுஉ. விரைந்து வெளியேறுதல்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 –  ஆ

பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. வாழையடி வாழையாக

விடை : வாழையடி வாழையாக நம் முன்னோர்கள் விவசாயம் செய்து வந்தனர்.

2. முதலைக்கண்ணீர்

விடை : காவலரிடம் மாட்டிக் கொண்ட திருடன் தான் திருடவில்லை என்று முதலைக்கண்ணீர் வடித்தான்.

3. எடுப்பார் கைப்பிள்ளை

விடை : நாம் சுயமாக யோசிக்காமல் எடுப்பார் கைப்பிள்ளை போலச் செயல்படடக்கூடாது. 

மொழியோடு விளையாடு

ஊர்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறிவோம்!

Class 8 Tamil Chapter 6.5 ஊர்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறிவோம்!

 

இடமிருந்து வலம் :-

1. சிவகாசி 

விடை : பட்டாசு

5. திருபாச்சி

விடை : அரிவாள்

7. திருநெல்வேலி

விடை : அல்வா

12. கோவில்பட்டி

விடை : கடலைமிட்டாய்

வலமிருந்து இடம் :-

3. மதுரை

விடை : மல்லிகை

4. பண்ருட்டி

விடை : பலாப்பழம்

9. தஞ்சாவூர்

விடை : தலையாட்டி பொம்மை

10. மணப்பாறை

விடை : முறுக்கு

மேலிருந்து கீழ் :-

1. காஞ்சிபுரம்

விடை : பட்டுப்புடவை

2. சேலம்

விடை : மாம்பழம்

4. பழனி

விடை : பஞ்சாமிர்தம்

கீழிருந்து மேல் :-

6. தூத்துக்குடி

விடை : உப்பு

8. ஸ்ரீவில்லிப்புத்தூர்

விடை : பால்கோவா

11. திண்டுக்கல்

விடை : பூட்டு

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

நூல் – Threadபால்பண்ணை – Dairy farm
தறி – Loomசாயம் ஏற்றுதல் – Dyeing
தையல் – Stitchதோல் பதனிடுதல் – Tanning
ஆலை – Factoryஆயத்த ஆடை – Readymade Dress

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment