பாடம் 6.3 ஒருவன் இருக்கிறான்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 6.3 “ஒருவன் இருக்கிறான்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல் வெளி
- கு.அழகிரிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இடைசெவல் என்னும் ஊரில் பிறந்தவர்.
- இவர் பிரசண்ட விகடன், சக்தி, தமிழ் நேசன் முதலான இதழ்களில் பணியாற்றிவயர்.
- கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம்.
- புது வீடு புது உலகம், மூன்று பிள்ளைகள், கவிச்சக்கரவர்த்தி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
- ஒருவன் இருக்கிறான் என்ற கதையானது கு.அழகிரிசாமி சிறுகதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
பாடநூல் வினாக்கள்
குப்புசாமியை நினைத்துக் கண்ணீர் விட்ட நிகழ்வை எழுதுக
முன்னுரை:
யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில், குஅழகிரிசாமி தனது ” ஒருவன் இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.
குப்புசாமியின் குடும்ப நிலை:
காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது. சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள்.
நோயுற்ற குப்புசாமி:
சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.
ஆறுமுகம்:
வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.
முடிவுரை:
” பண்புடையார்ப் பட்டுண்டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்”
பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. ஒருவன் இருக்கிறான் கதையின் ஆசிரியர்
- அண்ணாதுரை
- அழகர்சாமி
- அழகிரிசாமி
- சுஜாதா
விடை: அழகிரிசாமி
2. கு.அழகிரிசாமி பிறந்த ஊர்
- துலுக்கர்குளம்
- இடையன்குளம்
- இடைசெவல்
- துடியன்குளம்
விடை: இடைசெவல்
2. கு.அழகிரிசாமி பிறந்த ஊர்
- துலுக்கர்குளம்
- இடையன்குளம்
- இடைசெவல்
- துடியன்குளம்
விடை : இடைசெவல்
4. கு.அழகிரிசாமி பணியாற்றிய இதழ்களில் பொருந்தாதது
- மலரும் மாலையும்
- சக்தி
- பிரசண்ட விகடன்
- தமிழ் நேசன்
விடை: மலரும் மாலையும்
5. கரிசல் வரிசையில் மூத்தவர்
- ராஜநாரயணன்
- அழகிரிசாமி
- கந்தர்வன்
- ஜெயகாந்தன்
விடை: அழகிரிசாமி
குறுவினா
கு.அழகிரிசாமி எழுதிய நூல்களை எழுதுக
- புது வீடு புது உலகம்
- மூன்று பிள்ளைகள்
- கவிச்சக்கரவர்த்தி