பாடம் 13. எழில் கொஞ்சும் அருவி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 13 – எழில் கொஞ்சும் அருவி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. ஒகேனக்கல் அருவியில் நீர் வீழ்வது ________ உருக்கி ஊற்றுவது போல் இருந்தது.
- தங்கத்தை
- வெள்ளியை
- இரும்பை
- கற்பாறையை
விடை : வெள்ளியை
2. ஒகேனக்கல் என்ற சொல்லின் பொருள் ________
- பவளப்பாறை
- வழுக்குப்பாறை
- பனிப்பாறை
- புகைப்பாறை
விடை : புகைப்பாறை
3. வெண்புகை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- வெண் + புகை
- வெ + புகை
- வெண்மை + புகை
- வெம்மை + புக
விடை : வெண்மை + புகை
4. பாதை + அமைத்து இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________
- பாதைஅமைத்து
- பாதையமைத்து
- பாதம்அமைத்து
- பாதயமைத்து
விடை : பாதையமைத்து
5. தோற்றம் இச்சொல்லின் எதிர்ச் சொல் ________
- தொடக்கம்
- மறைவு
- முதல்
- ஆரம்பம்
விடை : மறைவு
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. ஒகேனக்கல் பகுதியில் நாம் பார்க்க வேண்டிய இடங்களைக் கூறுக.
தேசநாதீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் அருவி, தொங்கு பாலம்
2. ஒகேனக்கலில் அருவியில் நீர் விழும் காட்சி, பார்ப்பதற்கு எப்படி இருந்தது?
ஒகேனக்கலில் அருவியில் நீர் விழும் காட்சி, பார்ப்பதற்கு அருவிநீர் கல்பாறையில் பட்டுத் தெறித்து, வெண்புகை போலத் தோற்றம் அளிக்கும்.
3. சங்கவை பார்த்த மிகப்பழைமையான கோவிலின் பெயர் என்ன?
சங்கவை பார்த்த மிகப்பழைமையான கோவிலின் பெயர் தேசநாதீஸ்வரர் கோவில் ஆகும்.
4. ஒகேனக்கல் அருவி எங்கே அமைந்துள்ளது?
தருமபுரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒகேனக்கல் அருவி எழில் கொஞ்சும் மலையில் உள்ள அந்த அருவி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது.
அகர முதலியைப் பார்த்துப்ப பொருள் எழுதுவேன்
- எழில் – அழகு
- கண்டுகளிக்க – பார்த்து மகிழ்தல்
- நீராடி – குளித்து
- ஆனந்தம் – மகிழ்ச்சி
பொருத்தமான சொல்லால் நிரப்புவேன்
1. அருவி ___________ (மழை/மலை) உச்சியிலிருந்து விழுந்தது.
விடை : மலை
2. பழமரம் ஆற்றின் ___________ (கறை/கரை) ஓரம் இருந்தது.
விடை : கரை
3. வலப்பக்கச் சுவரின் மேல் ___________ (பல்லி/பள்ளி) இருக்கிறது.
விடை : பல்லி
4. ஆதிரைக்கு நல்ல ___________ (வேலை /வேளை) கிடைத்துள்ளது.
விடை : வேலை
5. கடற்கரையில் ___________ (மனல்/மணல்) வீடு கட்டி விளையாடலாம்.
விடை : மணல்
6. மரத்தில் பழங்கள்___________ (குரைவாக/குறைவாக) உள்ளன.
விடை : குறைவாக
படங்களை இணைத்துச் சொற்களை கண்டுபிடிப்போம்
- பனி + கரடி = பனிக்கரடி
- தேன் + நீர் = தேநீர்
- குடை + மிளகாய் = குடைமிளகாய்
- பஞ்சு + மிட்டாய் = பஞ்சுமிட்டாய்
இன எழுத்துகள்
1. உங்கள் நண்பர்களின் பெயர்களிலுள்ள இன எழுத்துகளைக் கண்டுபிடியுங்கள்
மங்கை, கங்கா, இராமலிங்கம், மஞ்சுளா, அஞ்சலி, காஞ்சனா, அஞ்சனா, பாண்டியன், தண்டபாணி, காந்தி, சாந்தி, ஜெயந்தி, கந்தன், நந்தா, நந்தினி, வந்தனா, அம்பிகா, அம்பு, இளமாறன், மணிமாறன்
மங்கை | கங்கா |
மஞ்சுளா | அஞ்சலி |
அஞ்சனா | பாண்டியன் |
காந்தி | சாந்தி |
கந்தன் | நந்தா |
வந்தனா | அம்பிகா |
இளமாறன் | மணிமாறன் |
இராமலிங்கம் | ஜெயந்தி |
காஞ்சனா | அம்பு |
தண்டபாணி | நந்தினி |
2. விடுபட்ட இடங்களில் சரியான இன எழுத்துகளை நிரப்பலாமா?
செம்பருத்தி, குன்று, சுண்டல், தொட்டிபாலம், இஞ்சி, ஆந்தை
கூடுதல் வினாக்கள்
சரியான தொடரை ✓ எனவும் தவறான தொடரை X எனவும் குறியிடுக. சரியா? தவறா?
1. ஒகேனக்கல் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. | தவறு |
2. அருவியிலிருந்து விழும் நீர், பாறையில் பட்டு, வெண்புகை போலத் தோன்றும். | சரி |
3. கடல் மட்டத்திலிருந்து ஒகேனக்கல் 1500 அடி உயரத்தில் உள்ளது . | சரி |
அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக
- எழில் – அழகு
- களிப்பு – மகிழ்ச்சி
- நீராடலாம் – குளிக்கலாம்
- பரவசம் – மகிழ்ச்சி
பொருத்தமான சொல்லால் நிரப்புக.
1. கடற்கரையில் ___________ (மனல்/மணல்) வீடு கட்டி விளையாடலாம்.
விடை : மணல்
2. மரத்தில் பழங்கள்___________ (குரைவாக/குறைவாக) உள்ளன.
விடை : குறைவாக
3. வலப்பக்க சுவரின் மேல் ___________ (பல்லி/பள்ளி) இருக்கிறது.
விடை : பல்லி
4. ஆதிரைக்கு நல்ல___________ (வேலை/வேளை) கிடைத்துள்ளது.
விடை : வேலை
படங்களை இணைத்துச் சொற்களைக் கண்டுபிடிப்போமா?
![]() | ![]() | தேனீர் |
தேன் | நீர் | |
![]() | ![]() | பனிப்பாறை |
பனி | பாறை | |
![]() | ![]() | பூமாலை |
பூ | மாலை | |
![]() | ![]() | இடியாப்பம் |
இடி | ஆப்பம் |
உன்னை அறிந்துகொள்.
தமிழ்நாட்டில் கோடை வாழிடமாகவும் சுற்றுலாத்தலமாகவும் விளங்கும் ஊட்டி (உதகமண்டலம்) ‘மலைகளின் அரசி’ என அழைக்கப்படுகிறது. இது, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சிந்திக்கலாமா?
படங்களை உற்றுநோக்கித் தூய்மையான காற்று எங்கே கிடைக்கிறது.? உன் கருத்துகளை வெளிப்படுத்துக.
தூய்மையான காற்று காடுகளில் தான் கிடைக்கிறது.
நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்தும், வாகனங்களிலிருந்து வரும் புகை காற்றை மாசுபடுத்துகிறது.
பாடலிலிருந்து உணவுப் பொருள்களின் பெயர்களை எழுதுக
பருப்பு அடை பாரம்மா பதமாய் எடுத்து உண்ணம்மா இனிப்புப் பணியாரம் வேணுமா இங்கு வந்து பாரம்மா வெள்ளை நிற உப்புமா வேண்டும் மட்டும் தின்னும்மா கரக் முரக் முறுக்கையே கடித்துத் தின்னு நொறுக்கியே சுவை மிகுந்த கொழுக்கட்டை சூடாய் இருக்கு தட்டிலே ! வெல்லம் தேங்காய் சேர்த்துமே வெண்ணெய் பிட்டும் ஈர்க்குமே ! |
பருப்பு அடை | இனிப்பு பணியாரம் |
உப்புமா | முறுக்கு |
கொழுக்கட்டை | வெண்ணெய் பிட்டு |