பாடம் 14. கல்வி கண் போன்றது
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 14 – கல்வி கண் போன்றது to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. துன்பம் இச்சொல்லின் எதிர்ச்சொல் _______
- இன்பம்
- துயரம்
- வருத்தம்
- கவலை
விடை : இன்பம்
2. உதவித் தொகை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- உதவ + தொகை
- உதவிய + தொகை
- உதவு + தொகை
- உதவி + தொகை
விடை : உதவி + தொகை
3. யாருக்கு + எல்லாம் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______
- யாருக்கு எலாம்
- யாருக்குல்லாம்
- யாருக்கல்லாம்
- யாருக்கெல்லாம்
விடை : யாருக்கெல்லாம்
4. வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது _______
- பணம்
- பொய்
- தீமை
- கல்வி
விடை : கல்வி
5. தண்டோரா என்பதன் பொருள் தராத சொல் _______
- முரசுஅறிவித்தல்
- தெரிவித்தல்
- கூறுதல்
- எழுதுதல்
விடை : எழுதுதல்
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. ஊராட்சிமன்றத் தலைவர் கிராமசபைக் கூட்டத்தில் எதனைக் குறித்துப் பேசினார்?
சிறுதொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை வழங்கும் அரசின் திட்டம் குறித்து தலைவர் கிராமசபைக் கூட்டத்தில் பேசினார்.
2. பொன்வண்ணனுக்கு உதவித்தொகை ஏன் கிடைக்கவில்லை?
படிக்கத் தெரியாததால் பொன்வண்ணனுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை
3. ‘தண்டோரா’ மூலம் என்ன செய்தி அறிவிக்கப்பட்டது?
விரியூர் கிராமத்திலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற கிராம சபைக் கூட்டத்தில் வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிந்துகொள்வோம்
குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். இதனை வலியுறுத்தும் விதமாக குழந்தைத்தொழிலாளர் ஒழிப்புநாள் ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. |
எதற்காக, எங்கே செல்வோம்? இணைப்போம்
1. பாதுகாப்பு தேடிச் செல்வோம் | பேருந்து நிலையம் |
2. கல்வி கற்கச் செல்வோம் | மருத்துவமனை |
3. மருத்துவம் பார்க்கச் செல்வோம் | காவல் நிலையம் |
4. அஞ்சல்தலை வாங்கச் செல்வோம் | பள்ளிக்கூடம் |
5. பயணம் செய்யச் செல்வோம் | அஞ்சல் நிலையம் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – உ, 5 – அ |
எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குவோம்
சுற்றம் | தோல்வி | |||
தோற்றம் | ஏற்றம் | |||
முற்றல் | ஏர் | |||
மாற்றம் | தோற்றல் | |||
முற்றம் | ஆற்றல் | |||
தோல் | மாசு | வில் |
பாடி மகிழ்வோம்
பப்ரப்பா வண்டி
பனங்காய் வண்டி
ஒத்தையடிப் பாதையில்
ஓரம் போகும் வண்டி
புகையில்லா வண்டி
புழுதி தரா வண்டி
எண்ணெய் இல்லா வண்டி
ஏறிக் கோடா பாண்டி
கூடுதல் வினாக்கள்
அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுவேன்
- ஆவல் – விருப்பம், ஆசை
- தபால் – அஞ்சல்
- தண்டோரா – முரசறைந்து செய்தி தெரிவித்தல்
- நெறிப்படுத்துதல் – வழிகாட்டுதல்
சரியான சொல்லால் நிரப்புவேன்
1. மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ____________ (களந்து/கலந்து) கொள்ள வேண்டும்.
விடை : கலந்து
2. கல்வி ___________ (கன்/கண்) போன்றது.
விடை : கண்
3. நான் மிதிவண்டி __________ (பளுதுபார்க்கும்/பழுதுபார்க்கும்) கடை வைத்திருக்கிறேன்.
விடை : பழுதுபார்க்கும்
4. ஆசிரியர், மாணவனை பள்ளிக்குப் தொடர்ந்து அனுப்புமாறு ___________ (அரிவுரை/அறிவுரை) கூறினார்.
விடை : அறிவுரை
உனக்குச் சரியானவற்றை எடுத்துக்கொண்டு உயர்ந்து செல்
நேர்மை | கடமை |
ஒழுக்கம் | பணிவு |
பொறுமை | கனிவு |
துணிவு |