பாடம் 22. நட்பே உயர்வு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 22 – நட்பே உயர்வு to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. இரை என்ற சொல்லின் பொருள் ________
- உணவு
- இருப்பிடம்
- மலை
- இறைவன்
விடை : உணவு
2. மகிழ்ச்சியுடன் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- மகிழ்ச்சி + யுடன்
- மகிழ்ச்சி + உடன்
- மகிழ் + உடன்
- மகிழ்ச் + சியுடன்
விடை : மகிழ்ச்சி + உடன்
3. தேடிக்கொண்டு இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________
- தேடி + கொண்டு
- தேடி + உண்டு
- தேட + கொண்டு
- தேடு + கொண்டு
விடை : தேடி + கொண்டு
4. இங்கே என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________
- இடம்
- காடு
- எங்கே
- அங்கே
விடை : அங்கே
5. கதையில் வரும் நண்பர்கள் ________, ________
- முயல், நரி
- நரி, மான்
- மான், முயல்
- நரி, புலி
விடை : மான், முயல்
6. சொல்லி + கொண்டு இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________
- சொல்லிக்கொண்டு
- சொல்கொண்டு
- சொல்லக்கொண்டு
- சொல்லிகொண்டு
விடை : சொல்லிக்கொண்டு
7. முதுமை என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________
- தீமை
- சிறுமை
- பெருமை
- இளமை
விடை : இளமை
8. சூழ்ச்சி என்ற சொல்லுக்குக் கதையின்படி தொடர்புடைய விலங்கு ________
- மான்
- முயல்
- நரி
- சிங்கம்
விடை : நரி
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. பசியோடு இருந்தது எது?
நரி
2. யாருக்கு ஆபத்து வந்ததாக நரி கூறியது?
முயலுக்கு ஆபத்து வந்ததாக நரி கூறியது.
3. முயல் தூரத்தில் வருவதைப் பார்த்துவிட்ட நரி என்ன செய்தது?
முயல் தூரத்தில் வருவதைப் பார்த்துவிட்ட நரி, முயலை மான் பார்த்துவிடாத வண்ணம் பேச்சு கொடுத்தவாறே வேகத்தை அதிகரித்தது.
4. மானும் முயலும் நரியிடமிருந்து தப்பிச் சென்றனவா? எவ்வாறு?
மானும் முயலும் ஒரே நேரத்தில் இருவரும் இரு வேறு திசைகளில் வேகமாக ஓடின. நரி மானைப் பிடிப்பதா? முயலைப் பிடிப்பதா? என்ற குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மானும், முயலும் தப்பித்தனர்.
5. முயல் எந்த விலங்குடன் நண்பனாகப் பழகியது?
முயல் முயலுடன் நண்பனாகப் பழகியது
6. மானை விட்டுவிடுவதற்காக நரி என்ன செய்தது?
மானை விட்டுவிடுவதற்காக நரி முயலிடம் தான் கூறும் மூன்று புதிர்களுக்கு விடை கூற வேண்டும் எனக் கூறியது.
7. மான் எதனால் மாட்டிக்கொண்டது?
நரியின் சூழ்ச்சி தெரியாமல் மான் மாட்டிக்கொண்டது?
8. மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதை ஏன் தவிர்த்தன?
நரி தந்திரம் மிக்க விலங்கு அதனால் மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதை தவிர்த்தன.
முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தி எழுதுவேன்
1. நண்பா மான் செல்கிறாய் எங்கே?
விடை : மான நண்பா எங்கே செல்கிறாய்?
2. தம் எண்ணி நட்பினை இருவரும் மகிழ்ந்தனர்
விடை : இருவரும் தம் நட்பினை எண்ணி மகிழ்ந்தனர்
3. உன்னை வா செல்கிறேன் அழைத்து
விடை : வா உன்னை அழைத்து செல்கிறேன்
4. செல்லலாம் இரை தேடச் புல்வெளியில்
விடை : புல்வெளியில் இரை தேடச் செல்லலாம்
5. அழைத்துச் நண்பனை செல்கிறாய் எங்கு
விடை : நண்பனை எங்கு அழைத்துச் செல்கிறாய்
6. கட்டை முதுமையில் உயரம் இளமையில்
விடை : இளமையில் உயரம் முதுமையில் கட்டை
படிப்போம்; புரிந்துகொண்டு விடை தருவோம்
1. குழந்தைகள் கலந்துகொள்ளும் விழா எது?
- பொங்கல் விழா
- ஆண்டுவிழா
- விளையாட்டு விழா
விடை: ஆண்டுவிழா
2. விழாவில் அனைவரையும் வரவேற்கப்போவது யார்?
- முகிலன்
- யாழினி
- நிலா
விடை: முகிலன்
3. கதிர் பங்குபெறும் நிகழ்ச்சி எது?
- கோலாட்டம்
- நாடகம்
- மாறுவேடப்போட்டி
விடை: கோலாட்டம்
4. நாடகத்தில் நடிப்பவர் யார்?
- முகிலன்
- அப்துல்
- கதிர்
விடை: அப்துல்
5. விழாவில் மாறுவேட நிகழ்ச்சி உண்டா?
- ஆம்
- இல்லை
விடை: ஆம்
கூடுதல் வினாக்கள்
புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துவேன்
1. உணவை எடுத்திடுவாள் உண்ணாமல் வைத்திடுவாள் உடல் மெலிந்த பெண்- அவள் யார்? | ![]() |
2. வெள்ளையாம் வெள்ளைக்குடம் விழுந்தால் சல்லிக்குடம். அது என்ன? | ![]() |
3. கொடிகொடியாம் பூங்கொடியாம் கிளிதின்னும் பழம் இதுவாம்- அது என்ன? | ![]() |
4. தட்டு தங்கத் தட்டு தகதகக்கும் வெள்ளித்தட்டு தலைக்குமேல் உலாவரும் –அது என்ன? | ![]() |
5. ஆயிரம் அறை கொண்ட மிகப்பெரிய மிட்டாய் கடை – அது என்ன? | ![]() |
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ |
நெடிலைக் குறில் ஆக்குவேன்
- கானல் – கனல்
- வாடை – வடை
- ஆடை – அடை
- தோடு – தொடு
- கோடு – கொடு
- பால் – பால்
மீண்டும் மீண்டும் சொல்லிப்பழகுவோம்
- விண்ணுக்கும் மண்ணுக்கும் பெண்ணுக்கும் கண்ணுக்கும் டண்ண கரம்
- உளி கொண்டு சிலையொன்று வடித்தான். உலகின் தலைசிறந்த கலையென்று மலைத்தான்.
- குட்டை மரமும் நெட்டைமரமும் மொட்டைத்தலையைத் தடவிக்கொண்டன
ஒரு சொல் பல பொருள் அறிவேன்
![]() |
கார் நிறம், நீர், பருவம், குளிர்ச்சி, நெல், அழகு |
![]() |
களம் நிலம், போர்க்களம், நெற்களம், கறுப்பு, இருள், உள்ளம் |