Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 1.3 – இரட்டுற மொழிதல்

பாடம் 1.3 இரட்டுற மொழிதல்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 1.3 – “இரட்டுற மொழிதல்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

நூல் வெளி

  • புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்த இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • இப்பாடலை படைத்தவர் தமிழழகனார்.
  • சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
  • இலக்கணப் புலமையும் இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

சொல்லும் பொருளும்

  • துய்ப்பது – கற்பது, தருதல்
  • மேவலால் – பொருந்துதல், பெறுதல்

பாட நூல் மதிப்பீட்டு வினா

குறு வினா

1. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்தக்காட்டுத் தருக.

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.

எ.கா.:-

சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான் – இத் தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.

  • சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.
  • சீனிவாசனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறார்.

சிறு வினா

தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.

பாடல் அடிகள்தமிழ்கடல்
முத்தமிழ் துய்ப்பதால்இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழாய் வளர்ந்தது.முத்தினை அமிழ்ந்து தருகிறது.
முச்சங்கம் கண்டதால்முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது. வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது.
மெத்த வணிகலமும் மேவதால் ஐம்பெருங்காப்பியங்கள் அணிகலனாய்ப் பெற்றது.மிகுதியான வணிகக் கப்பல்கள் வந்து சென்றது.
நித்தம் அணை கிடந்தே சங்கத்தவர் காக்கசங்கப் பலகையில் அமர்ந்து சங்கப் புலவர்கள் பாதுகாத்தனர்.தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காத்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. தமிழ், ஆழி இரண்டுக்கும் பொருள்படும் படியான இரட்டுற மொழிதலணி அமைய பாடிய ஆசிரியர் ……………….

  1. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  2. எழில் முதல்வன்
  3. தமிழழகனார்
  4. தேவநேயப் பாவாணர்

விடை : தமிழழகனார்

2. கடல் தரும் சங்குகளின் வகைகள் ………………

  1. இரண்டு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஐந்து

விடை : மூன்று

3. கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது?

  1. மணல்
  2. கப்பல்
  3. சங்கு
  4. மீனவர்கள்

விடை : சங்கு

4. முத்தினையும், அமிழ்தினையும் தருவதாகச் சந்தக்கவிமணி தமிழழகனார் குறிப்பிடுவது ………………..

  1. மூங்கில்
  2. மழை
  3. தேவர்கள்
  4. கடல்

விடை : கடல்

5. தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை ……………

  1. ஐம்சிறுங் காப்பியங்கள்
  2. ஐம்பெருங்காப்பியங்கள்
  3. சங்க காப்பியங்கள்
  4. நீதி காப்பியங்கள்

விடை : ஐம்பெருங்காப்பியங்கள்

6. இரட்டுற மொழிதல் அணியின் வேறுபெயர் …………………….

  1. சிலேடை அணி
  2. வேற்றுமை அணி
  3. பிறதுமொழிதல் அணி
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : சிலேடை அணி

7. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவது ………………..

  1. வேற்றுமை அணி
  2. பிறதுமொழிதல் அணி
  3. இரட்டுற மொழிதல் அணி
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : இரட்டுற மொழிதல் அணி

8. சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் ………………….

  1. ஆறுமுகம்
  2. சண்முகமணி
  3. ஞானசுந்தரம்
  4. சண்முகசுந்தரம்

விடை : சண்முகசுந்தரம்

9. தமிழழகனார் ………………. சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்

  1. 10
  2. 12
  3. 14
  4. 16

விடை : 12

10. முத்தமிழ் துயப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு ………………

  1. எட்டுத்தொகை
  2. பத்துப்பாட்டு
  3. தனிப்பாடல் திரட்டு
  4. சிற்றிலக்கியங்கள்

விடை : தனிப்பாடல் திரட்டு

வினாக்கள்

1. ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

2. தமிழ் எப்படி வளர்ந்தது?

தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது

3. தமிழ் எவற்றால் வளர்க்கப்பட்டது;

தமிழ் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது

4. தமிழ் எவற்றை அணிகலனாய் பெற்றது?

ஐம்பெருங்காப்பியங்கள் என அழைக்கப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றை அணிகலன்களாகப் பெற்றது

5. கடல் எவற்றையெல்லாம் தருகிறது?

  • முத்தும், அமிழ்தும் கிடைக்கிறது
  • வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று சங்குகள் கிடைக்கின்றன

6. கடல் எவை செல்லும்படி இருக்கிறது?

மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது;

7. இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன?

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.

8. சிலேடைகள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன?

சிலேடைகள் செய்யுள், உரைநடை, மேடைப்பேச்சு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

9. தமிழ் எவற்றோடெல்லாம் இணைத்து பேசப்படுகிறது?

தமிழ் விண்ணோடும், முகிலோடும், உடுக்களோடும், கதிரவனோடும், கடலோடும் இணைத்து பேசப்படுகிறது

10. தமிழழகனார் – குறிப்பு வரைக

  • தமிழழகனார் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
  • தமிழழகனாரின் வேறு பெயர் சந்தக்கவிமணி.
  • இலக்கணப் புலமையும், இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்றவர்.
  • பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

11. தமிழ் குறித்து தமிழழகனார் கூறுவன யாவை?

  • தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.
  • முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
  • ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
  • சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment